உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-022

விக்கிமூலம் இலிருந்து

1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள் இடம்

இடம் - காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண்.


காலம் - விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம்


செய்தி - விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்த றெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர்.

இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.

தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம்.

[1]கல்வெட்டு

1. தாரண வரு

2. ஷம் பங்கு

3. னி மாதம் 25

4. தேதி ஶ்ரீமந் ம 5. கா மண்ட

6. லேசுபர சீர

7. ங்கராயர் தே

8. வ மகாராய்

9. ர் அவர்கள் ரா

10. ச்சியம் பண்

11. ணுகையில்

12. சுவாமிக்கு

13. வெங்களப்ப னா

14. யக்கர் சீர்மையி

15. ல் குரமு கொண்

16. டா கற்தவாலத்து

17. குயீசன ராவுத்தர்

18. புண்ணியமாக

19. றகனா ராவுத்தர் ந

20. ல்லன் ராவுத்த

21. ர் அல்லி ராவுத்

22. தர் கான் ராவுத்

23. தர் யிவர்கள் நா

24. லு பேரும் சே

25. ர்ந்து விட்ட

26. தன்மம் எ

27. ங்கள் அ

28. மரக் கிராமம் நயி

29. னார் குப்பத்தி

30. ல் -

31. - ர் மக

32. மானிய

33. த்துக்கு

34. த் தோப்பு தெ

35. ன்ன மரமும் 36. மா மரம் பலா

37. மரம் மற்றும் உ

38. ள்ள பல விருஷ்

39. ஷமும் நிலமு

40. ம் தோட்டத்

41. திலே யிருக்

42. கிற குடியும்

43. செய்யூர் கந்தசுவா

44. மியாற்கு சறுவ

45. மான்யமாக சந்

46. திராதித்த வ

47. ரைக்கும் கட்ட

48. ளையிட்டோ

49. ம் யிந்த தன்மத்

50. துக்கு ஆதாமொ

51. ருவர் அகுதம் பண்

52. ணினவர்கள் தாய்

53. தகப்பன் குரு

54. வினையும் கெ

55. ங்கை கரையி

56. லே காராம்ப

57. சுவை கொ

58. ன்ற தோஷத்

59. திலே போக

60. கடவர்களாக

61. வும்

  1. * "கல்வெட்டு' . எண் 64, அக்டோபர் 2004: பக்கம் 5-7; தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு