தமிழ்ப் பழமொழிகள் 2/கி

விக்கிமூலம் இலிருந்து

கி

கிங்கிணிக்குக் கிங்கிணியும், மங்கிணிக்கு மங்கிணியும் கெட்டது.

கிட்ட உறவு முட்டப் பகை.

( + தூர இருந்தால் நீள உறவு.)

கிட்டக் கிட்ட வந்தாலும் எட்ட எட்டப் போகிறான். 8230


கிட்ட நெருங்க முட்டப் பகை.

கிட்ட வா நாயே, என்றால் எட்டி மூஞ்சியை நக்க வந்தாற் போல.

கிட்டாதாயின் வெட்டென மற.

(கிட்டாத ஒன்றை.)

கிட்டிற்று, முட்டிற்று, வடுகச்சி கல்யாணம்.

கிட்டினால் ராமா, கோவிந்தா; கிட்டாவிட்டால் ஒன்றும் இல்லை. 8285


கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மனையில் வை.

(கிழவியை, கிழவனை எடுத்து மடியில் வைத்துக்கொள்)

கிடக்கிறது எல்லாம் கிடக்கக் கிழவியைத் தூக்கி மணையில் வைத்தாளாம்.

கிடக்கிறது ஒட்டுத் திண்ணை; கனவு காண்கிறது மச்சு வீடு.

கிடக்கிறது கிடக்கட்டும்; கிழவனையும் கிழவியையும் உள்ளே விடுங்கள்.

கிடக்கிறது குட்டிச்சுவர்; கனாக் காண்கிறது மச்சு வீடு. 8299

(மச்சு மாளிகை.)


கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்.

கிடந்த பசியைக் கிள்ளிக் கிளப்பினானாம்.

கிடாக் கன்று போட்டது என்றால் பிடித்துக் கட்டு என்றானாம்.

கிடாரம் உடைந்தால் கிண்ணிக்கு ஆகும்; கிண்ணி உடைந்தால் என்னத்துக்கு ஆகும்?

கிடாவும் காளையும் பிணைத்தாற் போல. 8295

கிடைக்காத சரக்குக் கிடைத்ததைப் போல.

(கிடையா.)

கிடைக்குத் கிடை ஆடுதான்.

கிடை கிடந்த இடத்தில் மயிர் கூடக் கிடையாது.

கிடைப்பது குதிரைக் கொம்பு.

கிண்ட்யாய நம; 8300 .


கிண்டக் கிண்ட அம்பட்டன் குப்பையிலே மயிரே புறப்படும்.

கிண்டக் கிண்டக் கீரையும் மயிரும்.

கிண்டி விட்டுக் கிளறி வைக்கிறது.

(கிளறி விடு.)

கிண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது.

கிண்ணி பட்டாலும் பட்டது; கிடாரம் பட்டாலும் பட்டது. 8305


கிண்ணி வைத்துக் கிண்ணி மாற்றுகிறது.

கிணற்றில் அகப்பட்டது போல.

கிணற்றில் இருக்கும் ஆமைபோல் இருப்பவனுக்கு உலகம்

தெரியுமோ?

கிணற்றில் கல்லைப் போட்டது போல.

(கிணற்றில் தள்ளிக் கல்லையும் போட்டான்.)

கிணற்றில் தண்ணீர் உதித்தது. 8310


கிணற்றில் போட்ட கல் மாதிரி.

கிணற்றில் போட்டாலும் எண்ணிப் போடு.

கிணற்றில் விழுந்தவன் மறுபடியும் விழுவானா?

கிணற்றின் ஆழமும் கயிற்றின் நீளமும் பார்க்க வேண்டும்.

கிணற்று ஆழத்தைக் கண்டாலும் காணலாம்; நெஞ்சு ஆழத்தைக் காண முடியுமா? 8315


கிணற்றுக்குத் தப்பித் தீயில் பாய்ந்தான்.

(விழுந்தது போல.)

கிணற்றுக்குள் இருந்து பேசுகிறவனைப் போல் பேசுகிறான்.

கிணற்றுக்குள் இருப்பவனை விளக்கிட்டுத் தேடினாற்போல.

கிணற்றுக்குள்ளே கங்கை குதித்தாற் போல.

கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போகும்? 8320

 கிணற்றுத் தவளைக்குக் கிணறுதான் சமுத்திரம்.

கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

கிணற்றுத் தவளை தண்ணீர் குடித்ததைக் கண்டது யார்? கேட்டது யார்?

(குடியாததை.)

கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகுமா?

கிணற்றைக் கண்டு கடல் ஒதுங்கிப் போகுமா? 8325


கிணற்றைக் காத்தால் வயிற்றைக் காக்கும்.

கிணற்றைத் தூர்த்தால் வயிற்றைத் தூர்க்கும்.

கிணறு இருக்க மலை தோண்டாதே.

(கிடக்க மலை கல்லாதே.)

கிணறு இறைக்க இறைக்கச் சுரக்கும்.

கிணறு தப்பித் துரவில் விழலாமா? 8330


கிணறு மெத்தினால் கீழ்வரை பொசியும்.

கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற் போல.

கிணறு வெட்டித் தவளையையும் பிடித்து விடுகிறதா?

கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா?

கிரக சாந்திக்கு க்ஷவரம் செய்து கொள்கிறதா? 8335


கிராக்கி மொச்சைக் கொட்டை; வராகனுக்கு இரண்டு கொட்டை.

(பத்துக் கொட்டை,)

கிராம சாந்திக்காகத் தலையைச் சிரைத்துக் கொண்டானாம்.

கிராமத்தைப் பார்க்கச் சொன்னால் சேரியைப் பார்க்கிறான்.

கிராம தேவதை முதல் க்ஷாம தேவதை வரை ராம தேவனுக்குச் சரியாமோ?

கிரிசை கெட்டு வரிசை மாறுகிறது. 8340


கிரியை அற்றோன் மறை சாற்றுவது ஏன்?

கிரியை அறிந்து சொன்னால் கிழித்துக் கொள்கிறதா?

கிருக சாந்திக்கு க்ஷவரம் பண்ணுவதா?

கிருபா நிதியே கருணாநிதி.

(சருவா நிதி.)

கிருஷ்ண பட்சத்துச் சந்திரனைப் போல். 8345

 கிருஷ்ண வாத்தியார் திவசம் பண்ணுகிறதற்கும் கிழக்கு வெளுக்கிறதற்கும் சரியாய்ப் போகும்.

கிருஷ்ணா ராமா கோவிந்தா. கிழக்கு எப்போது வெளுக்குமடா?

கிலி பிடித்ததோ? புலி பிடித்ததோ?

கிழ ஓணான் மரம் ஏறாதா?

கிழக் கிடாவைப் புகழ்கிறது இகழ்ச்சி அல்லவா? 8356


கிழக்கிலும் மேற்கிலும் கருவிலும் கடன் படாதே.

(கொடாதே.)

கிழக் குடலுக்குச் சோறும் இடி சுவருக்கு மண்ணும் இடு.

கிழக் குரங்கு குட்டி போட்டாற் போல.

கிழக் குரங்குபோல விழிக்கிறதைப் பார்.

கிழக்கே கடன் கொடாதே. 8355

(செங்கற்பட்டு வழக்கு.)


கிழட்டுக் குதிரைக்குச் சவுக்கடி கொடுத்து போல்.

கிழத்துக்குச் சாதமும் முறத்துக்குச் சாணியும்.

கிழ நாய் குரைப்பதற்கும் காரணம் உண்டோ?

கிழப் பேச்சுக் கவைக்கு உதவுமா?

கிழம் ஆனாலும் கெட்டு ஆனாலும் கட்டிக் கொண்டவன் பிழைப்பான். 8360


கிழமைக்கு வைத்து அழுவது.

(8ஆம் நாளில் திருநெல்வேலி வேளாளர் இறந்தவன் விரும்பிய பொருள்களை வைத்து அழுவார்கள்.)

கிழவன் கொடுத்த பணத்துக்கு நரை உண்டா?

கிழவன்தான் நரை, கிழவன் கொடுத்த பணமுமா நரை?

கிழவன் பேச்சுக் கிண்ணாரக்காரனுக்கு ஏற்குமா?

(கிழவி பேச்சு. கேட்குமா?)

கிழவனுக்கு வாழ்க்கைப் படுவதிலும் கிணற்றில் விழலாம். 8865


கிழவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் கடைசி வரையில் சாப்பாடு.

கிழவி இருந்த வீடும், கிளி இருந்த காடும் ஈடேற முடியா.

கிழவி கிண்ணாரம் போடுகிறாள்.

கிழவி சொல்லக் குமரி கேளாள்.

(யாழ்ப்பாண வழக்கு)

 கிழவி தலை நரைத்தது என்ன? அதை மழுங்கச் சிரைத்தது என்ன? 8370


கிழவி திரண்டாளாம்; பஞ்சாங்கக்காரன் பிட்டுக்கு அழுதானாம்.

கிழவி பாட்டைக் கிண்ணாக்காரன் கேட்பானா?

(கிழவி பேச்சைக் கின்னரக்காரன்.)

கிழவி போன போது சுவர் இடிந்து விழுந்ததாம்.

கிழவியும் காதம் குதிரையும் காதம்.

(ஒளவையார் கூற்று.)

கிழவியும் காலை மடக்க மாட்டாள். 8375


கிழவியை அடித்தால் வழியிலே பேளுவாள்.

கிழவியை எடுத்து மணையிலே வைத்தாற் போல.

கிழவியைப் பாட்டி என்பதற்குக் கேட்க வேண்டுமா?

கிழிஞ்சாப்பிள்ளை மணியத்திலே நீட்டின விரல் அற்றுப் போம்.

கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான். 8380


கிழிந்த சேலை காசுக்கு இரண்டு.

கிழிந்த சேலையும் பேச்சுக் கற்ற வாயும் சும்மா இரா.

கிழிந்தது கிருஷ்ணன் வேட்டி; தைத்தது தாசன் வேட்டி.

கிழிந்த பம்பரம் காசுக்கு இரண்டு,

(கிழிந்த பட்டு.)

கிள்ளப் பழுக்குமாம்; கிளி இருந்து கொஞ்சுமாம். 8385 .


கிள்ளாவுக்குச் செல்லும் கெடி மன்னர் போல.

கிள்ளி எடுக்கச் சதை இல்லை; பேர் தொந்தியா பிள்ளை.

கிள்ளுக் கீரை போல் உள்ளத்தில் எண்ணாதே.

கிள்ளுக் கீரையா?

கிள்ளுகிறவனிடத்தில் இருந்தாலும் அள்ளுகிறவனிடத்தில் இருக்கக் கூடாது. 8890


கிள்ளுவார் கீழே இருந்தாலும் இருக்கலாம்; அள்ளுவார் கீழே இருக்க முடியாது.

கிள்ளை பழுக்குமாம்; கிளி வந்து கொஞ்சுமாம்.

கிளர்த்தும் கல்வி தளர்ச்சி படாது.

கிளி அருமையைப் பூனை அறியுமா?

கிளி அழுதால் பூனை விடுமா? 8395


கிளி போலப் பெண்டாட்டி இருந்தாலும் குரங்குபோலக் கூத்தியாள் வேணுமாம்.

கிளியைப் போலப் பேச்சும் மயிலைப் போல நடையும்.

கிளியை வளர்த்துக் குரங்கு கையில் கொடுத்தது போல.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_2/கி&oldid=1160274" இலிருந்து மீள்விக்கப்பட்டது