தியாக பூமி/இளவேனில்/பராசக்தி குழந்தை

விக்கிமூலம் இலிருந்து

பராசக்தி குழந்தை

அன்றிரவு உமா குழந்தையின் நினைவாகவே இருந்தாள். தூக்கத்தில் சாருவைப் பற்றித்தான் கனவு. மறுநாள் பொழுது விடிந்த பிறகும் அந்த ஞாபகம் மாறவில்லை. இப்படிப்பட்ட குழந்தையைப் பெற்ற பாக்கியசாலிகள் யாரோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். 'வக்கீலை விசாரிக்கச் சொன்னோமே, அவர் விசாரித்தாரோ என்னமோ தெரியவில்லையே?' என்று யோசித்தாள். காலை ஒன்பது மணி வரையில் தகவல் ஒன்றும் வராமல் போகவே, டெலிபோனை எடுத்து வக்கீலைக் கூப்பிட்டாள்.

வக்கீல், "யாரு? - ஓஹோ! நீங்களா? - நமஸ்காரம்" என்றார்.

"நேற்று ராத்திரி டான்ஸு பண்ணின குழந்தையைப் பற்றி விசாரிக்கச் சொன்னேனே, விசாரிச்சீர்களா?" என்று உமா கேட்டாள்.

"நீங்கள் ஒரு காரியம் சொன்னால் அதை நான் செய்யாமல் இருப்பேனா?" என்றார் வக்கீல்.

"அப்படின்னா ஏன் உடனே தெரிவிக்கலை?" என்றாள் உமா.

"இல்லை; வந்து... விஷயம் அவ்வளவு அவசரமாகத் தோணலை. அதனாலேதான் மத்தியானம் வந்து நேரில் தெரியப்படுத்தலாம் என்றிருந்தேன்."

"போகட்டும்; இப்பத்தான் சொல்லுங்கள்."

வக்கீல் தொண்டையைக் கனைக்கும் சத்தம் கேட்டது.

"என்ன ஸார்! ஆர்ப்பாட்டம் பலமாயிருக்கே. இதுவும் கேஸ் விசாரணையா என்ன? நிஜத்தைச் சொல்றதுக்கு இவ்வளவு யோசனை என்னத்திற்கு?"

"யோசனை ஒண்ணுமில்லை - வந்து பழம் நழுவிப் பாலிலே விழுந்ததுன்னு கேட்டிருக்கிறீர்களோல்லியோ?..."

"அதுக்கென்ன இப்போ வந்தது?"

"அந்த மாதிரி - நேற்று ராத்திரி நீங்க போனவுடனே தியேட்டரிலேயே விசாரிச்சுட்டேன். விசாரிச்சதிலே, ஒரு கல்லிலே இரண்டு பழம் விழுந்தாப்பலே ஆச்சு."

"விஷயத்தைச் சொல்லுங்கோ, ஸார்!"

"அதுதானே சொல்லிண்டிருக்கேன். நீங்க முன்னே சம்பு சாஸ்திரின்னு ஒருத்தரைப் பத்தி விசாரிக்கச் சொன்னீர்களோ, இல்லையோ?"

"ஆமாம்?" என்று உமா சொன்னபோது அவள் குரல் கொஞ்சம் நடுங்கிற்று.

"குழந்தையைப் பற்றி விசாரிச்சதிலே சம்பு சாஸ்திரியையும் கண்டுபிடிச்சுட்டேன். இந்தக் குழந்தை சாவடிக் குப்பத்திலே சம்பு சாஸ்திரிங்கறவர் வீட்டிலேதான் இருக்காளாம். அவர் தான் கார்டியனாம். வேறே தாயார் தகப்பனார் கிடையாதாம்."

"என்ன, என்ன! வக்கீல் ஸார்! நிஜமாவா சொல்றேள்?"

"நிஜமாத்தான் சொல்றேள். அந்த சம்பு சாஸ்திரிங்கறவரைக் கூடப் பார்த்தேன். நல்ல ஒண்ணாம் நம்பர் மடிசஞ்சிப் பிராமணன்!"

உமா தன் வாய்க்குள், "இடியட்!" என்று அழுத்தந்திருத்தமாய்ச் சொல்லிக் கொண்டாள். அது அந்த மனுஷர் காதில் விழுந்ததோ என்னவோ தெரியாது. உடனே அவள் உரத்த குரலில், "இந்த சமாசாரத்தை நேத்து ராத்திரிலேயிருந்து சொல்லாமலா வச்சிண்டிருந்தேள்? ரொம்ப பேஷ்! அவர் எங்கே இருக்கார்னு சொன்னேள்?" என்று கேட்டாள்.

"சாவடிக் குப்பத்திலே..."

உமா, டக்கென்று டெலிபோன் ரிஸீவரை வைத்துவிட்டு விரைவாகக் கீழே இறங்கினாள். "டிரைவர்! டிரைவர்! வண்டியை எடு ஜல்தி!" என்றாள். வண்டி வந்ததும், "சாவடிக் குப்பத்துக்குப் போ! சீக்கிரம்!" என்றாள்.

டிரைவர் சிறிது தயங்கி "சாவடிக் குப்பம் எங்கேயிருக்குங்க?" என்று கேட்டான். "சாவடிக் குப்பம் தெரியாதா உனக்கு? நீ என்ன டிரைவர்?" என்றாள் உமா. தர்வானை அழைத்துக் கேட்டாள். அவனுக்கும் தெரியவில்லை.

"சுத்த தடியன்கள்! ஏண்டா நிக்கறேள்? எங்கேயாவது போய் விசாரிச்சுண்டு வாங்கோ, சீக்கிரம்" என்றாள்.

வேலைக்காரர்களுக்கெல்லாம் ஆச்சரியமாயிருந்தது. அம்மாளுக்கு இவ்வளவு கோபம் வந்து அவர்கள் பார்த்ததேயில்லை. சாவடிக் குப்பம் எங்கேயிருக்கிறதென்று விசாரிப்பதற்காக அவர்கள் நாற்புறமும் ஓடினார்கள்.

உமா காரிலிருந்து இறங்கி உள்ளே சென்று மறுபடியும் டெலிபோனில் வக்கீலைக் கூப்பிட்டு விசாரித்தாள்.

கடைசியாக, சாவடிக் குப்பம் எங்கே இருக்கிறதென்பது தெரிந்து, வண்டி கிளம்பியபோது எஜமானியின் அவசரத்தையும் பரபரப்பையும் பார்த்திருந்த டிரைவர் வண்டியை வெகு வேகமாக ஓட்டினான். சற்று நேரத்துக்கெல்லாம் அம்மாள், "ஏண்டா இவ்வளவு வேகமாய் ஓட்டுகிறாய்? மெதுவாய்ப் போ!" என்று சொன்னதும், அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

உண்மை என்னவென்றால், இதற்குள் உமாவின் பரபரப்பெல்லாம் அடங்கிவிட்டது. அப்பாவிடம் என்ன பேசுவது, எப்படி நடந்துகொள்வது என்ற யோசனை மேலிட்டது. தன்னைப் பார்த்ததும் தான் சாவித்திரி என்பதை அவர் தெரிந்து கொள்வாரா? தெரிந்து கொள்ளாவிடில் தான் சொல்ல வேண்டுமா? "அப்பா! என்னைத் தெரியவில்லையா?" என்று அவர் காலில் விழுந்து கதறலாமா? -சீச்சீ! கூடவே கூடாது. தான் பெற்ற பெண்ணை அவருக்குத் தெரியவில்லையென்றால் இன்னும் கொஞ்ச நாள் தெரியாமலே இருக்கட்டும்! - ஆமாம்! அவருக்குத் தெரியாமல் இருப்பதுதான் நல்லது. தெரிந்தால், தன்னை ஏற்றுக் கொள்வாரோ என்னவோ? அவர் கல்யாணம் பண்ணிக் கொடுத்த அழகான புருஷனிடம் ஏன் இருந்து வாழவில்லையென்று கோபித்துக் கொண்டாலும் கொள்வார். தம் மகள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டாலும் படுவார்! அவருக்கு ஏன் அவ்வளவு சங்கடத்தை உண்டாக்க வேண்டும்? அப்பாவாம் அப்பா! பெண்ணைச் சந்தியில் விட்ட அப்பா! அவரிடம் போய் நான் உங்கள் பெண் என்று சொல்லாமற் போனால் தான் என்ன?

ஆனால், குழந்தை! என் குழந்தை! - அப்பா! உங்களை நான் நம்பியது வீண் போகவில்லை. இத்தனை நாளும் வளர்த்துக் காப்பாற்றினீர்களே! - சாரு! சாரு! நீ என் குழந்தையடி! அதனால் தாண்டி உன்னைப் பார்த்ததும் என் உடம்பு அப்படித் துடித்தது! - இதெல்லாம் நிஜமா? நான் காண்பது கனவில்லையா? உண்மையில் சாருவா என் குழந்தை?

இந்த மாதிரியெல்லாம் உமாவின் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதிக் கொண்டு எழுந்தன. அப்பாவிடம் உண்மையைச் சொல்வதா, வேண்டாமா என்ற யோசனை முடிவு பெறுவதற்குள் வண்டி சாவடிக் குப்பத்தில் வந்து நின்றது.

என்றும் இல்லாத அதிசயமாகக் குப்பத்தில் மோட்டார் வண்டி வந்து நிற்கவே, குழந்தைகளும் பெரியவர்களுமாய் வண்டியை வந்து சூழ்ந்து கொண்டார்கள். "சம்பு சாஸ்திரிகள் வீடு எது?" என்று உமா கேட்டுக் கொண்டிருக்கையிலேயே ஒரு குடிசைக்குள்ளிருந்து சாரு வெளியில் வருவதைப் பார்த்து விட்டாள். உடனே வண்டியிலிருந்து இறங்கி விரைந்து சென்றாள். குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு கரை காணாக் காதலுடன் அணைத்து முத்தமிட்டாள்.

சாரு, "மாமி! நான் உங்களைப் பத்தியே தான் நினைச்சுண்டிருந்தேன். நேத்திக்கு எனக்கு ரோஜாப் பூ மாலை போட்டேளோன்னோ? அதை ஜோராய்ப் போட்டுண்டு வந்து தாத்தா கிட்டக் காட்டினேன். தாத்தா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதை இன்னுங்கூட உள்ளே வச்சிருக்கேன்" என்று மூச்சு விடாமல் பேசினாள். பிறகு, உமாராணியின் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு கீழே இறங்கி அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, "தாத்தா! தாத்தா! இருபது டிக்கெட் வாங்கிண்டான்னு சொன்னேனே, அந்த மாமி வந்திருக்கா!" என்று கூவிக் கொண்டே உள்ளே போனாள். "சாவடிக் குப்பம் தெரியாதா உனக்கு? நீ என்ன டிரைவர்?" என்றாள் உமா. தர்வானை அழைத்துக் கேட்டாள். அவனுக்கும் தெரியவில்லை.

"சுத்த தடியன்கள்! ஏண்டா நிக்கறேள்? எங்கேயாவது போய் விசாரிச்சுண்டு வாங்கோ, சீக்கிரம்" என்றாள்.

வேலைக்காரர்களுக்கெல்லாம் ஆச்சரியமாயிருந்தது. அம்மாளுக்கு இவ்வளவு கோபம் வந்து அவர்கள் பார்த்ததேயில்லை. சாவடிக் குப்பம் எங்கேயிருக்கிறதென்று விசாரிப்பதற்காக அவர்கள் நாற்புறமும் ஓடினார்கள்.

உமா காரிலிருந்து இறங்கி உள்ளே சென்று மறுபடியும் டெலிபோனில் வக்கீலைக் கூப்பிட்டு விசாரித்தாள்.

கடைசியாக, சாவடிக் குப்பம் எங்கே இருக்கிறதென்பது தெரிந்து, வண்டி கிளம்பியபோது எஜமானியின் அவசரத்தையும் பரபரப்பையும் பார்த்திருந்த டிரைவர் வண்டியை வெகு வேகமாக ஓட்டினான். சற்று நேரத்துக்கெல்லாம் அம்மாள், "ஏண்டா இவ்வளவு வேகமாய் ஓட்டுகிறாய்? மெதுவாய்ப் போ!" என்று சொன்னதும், அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

உண்மை என்னவென்றால், இதற்குள் உமாவின் பரபரப்பெல்லாம் அடங்கிவிட்டது. அப்பாவிடம் என்ன பேசுவது, எப்படி நடந்துகொள்வது என்ற யோசனை மேலிட்டது. தன்னைப் பார்த்ததும் தான் சாவித்திரி என்பதை அவர் தெரிந்து கொள்வாரா? தெரிந்து கொள்ளாவிடில் தான் சொல்ல வேண்டுமா? "அப்பா! என்னைத் தெரியவில்லையா?" என்று அவர் காலில் விழுந்து கதறலாமா? -சீச்சீ! கூடவே கூடாது. தான் பெற்ற பெண்ணை அவருக்குத் தெரியவில்லையென்றால் இன்னும் கொஞ்ச நாள் தெரியாமலே இருக்கட்டும்! - ஆமாம்! அவருக்குத் தெரியாமல் இருப்பதுதான் நல்லது. தெரிந்தால், தன்னை ஏற்றுக் கொள்வாரோ என்னவோ? அவர் கல்யாணம் பண்ணிக் கொடுத்த அழகான புருஷனிடம் ஏன் இருந்து வாழவில்லையென்று கோபித்துக் கொண்டாலும் கொள்வார். தம் மகள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டாலும் படுவார்! அவருக்கு ஏன் அவ்வளவு சங்கடத்தை உண்டாக்க வேண்டும்? அப்பாவாம் அப்பா! பெண்ணைச் சந்தியில் விட்ட அப்பா! அவரிடம் போய் நான் உங்கள் பெண் என்று சொல்லாமற் போனால் தான் என்ன?

ஆனால், குழந்தை! என் குழந்தை! - அப்பா! உங்களை நான் நம்பியது வீண் போகவில்லை. இத்தனை நாளும் வளர்த்துக் காப்பாற்றினீர்களே! - சாரு! சாரு! நீ என் குழந்தையடி! அதனால் தாண்டி உன்னைப் பார்த்ததும் என் உடம்பு அப்படித் துடித்தது! - இதெல்லாம் நிஜமா? நான் காண்பது கனவில்லையா? உண்மையில் சாருவா என் குழந்தை?

இந்த மாதிரியெல்லாம் உமாவின் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதிக் கொண்டு எழுந்தன. அப்பாவிடம் உண்மையைச் சொல்வதா, வேண்டாமா என்ற யோசனை முடிவு பெறுவதற்குள் வண்டி சாவடிக் குப்பத்தில் வந்து நின்றது.

என்றும் இல்லாத அதிசயமாகக் குப்பத்தில் மோட்டார் வண்டி வந்து நிற்கவே, குழந்தைகளும் பெரியவர்களுமாய் வண்டியை வந்து சூழ்ந்து கொண்டார்கள். "சம்பு சாஸ்திரிகள் வீடு எது?" என்று உமா கேட்டுக் கொண்டிருக்கையிலேயே ஒரு குடிசைக்குள்ளிருந்து சாரு வெளியில் வருவதைப் பார்த்து விட்டாள். உடனே வண்டியிலிருந்து இறங்கி விரைந்து சென்றாள். குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு கரை காணாக் காதலுடன் அணைத்து முத்தமிட்டாள்.

சாரு, "மாமி! நான் உங்களைப் பத்தியே தான் நினைச்சுண்டிருந்தேன். நேத்திக்கு எனக்கு ரோஜாப் பூ மாலை போட்டேளோன்னோ? அதை ஜோராய்ப் போட்டுண்டு வந்து தாத்தா கிட்டக் காட்டினேன். தாத்தா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதை இன்னுங்கூட உள்ளே வச்சிருக்கேன்" என்று மூச்சு விடாமல் பேசினாள். பிறகு, உமாராணியின் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு கீழே இறங்கி அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, "தாத்தா! தாத்தா! இருபது டிக்கெட் வாங்கிண்டான்னு சொன்னேனே, அந்த மாமி வந்திருக்கா!" என்று கூவிக் கொண்டே உள்ளே போனாள். சாஸ்திரி பேசாமல் இருக்கவே உமா மறுபடியும், "என்ன யோசிக்கறயள்? நான் என்ன ஜாதிக்காரியோ, என்னமோன்னு பாக்கறயளா?" என்றாள்.

"அதெல்லாம் இல்லை, அம்மா! எனக்கு அந்த மாதிரி வித்தியாசமெல்லாம் ஒன்றும் கிடையாது. எனக்குக் காரிலே கீரிலே ஏறியெல்லாம் பழக்கமில்லை. பெரிய மனுஷாளோடே பழகவும் தெரியாது. அதனாலே தான் யோசித்தேன். ஆனால் நீங்கள் இவ்வளவு அபிமானத்தோடு கூப்பிடறதினாலே வந்துட்டு வர்றேன்" என்றார்.

அந்தச் சமயம் வாசலில் யாரோ பேசும் குரல் கேட்டது. அது உமாவுக்குத் தெரிந்த குரல். ஒரு நிமிஷந்தான் யோசிக்க வேண்டியிருந்தது. அது நல்லானுடைய குரல் என்று தெரிந்து போயிற்று. உமாவுக்கு திக்கென்றது. அப்பாவிடம் நன்றாக வேஷம் போட்டாயிற்று; ஆனால் நல்லானிடம் பலிக்குமோ என்னவோ? ஒரு வேளை ஞாபக மறதியாக ஏதாவது சொல்லி விட்டால்...?

உமா அவசரமாக எழுந்திருந்தாள். "சரி, சாஸ்திரிகளே! ரொம்ப நேரமாயிடுத்து. நான் போய் வர்றேன். கட்டாயம் நாளைக்கு நீங்கள் வரணும்! வண்டி அனுப்பறேன்" என்றாள்.

எல்லாருமாக வாசலுக்குச் சென்றார்கள்.

சாஸ்திரிக்காகக் கறிகாய் வாங்கிக் கொண்டு வந்த நல்லான் வாசலில் ஒதுங்கி நின்றான். உமா அவனைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டுப் போய் வண்டியில் ஏறிக் கொண்டாள். சாருவும் பின்னோடு போய் வண்டியின் பக்கத்தில் நின்றாள்.

"சாரு! நாளைக்குத் தாத்தா எங்காத்துக்கு வரப் போறார். நீயும் வர்றயோ இல்லையோ?" என்றாள் உமா.

"உங்காத்துக்கு நான் வந்தால் ஜில்லியோடே விளையாடலாமோ!" என்று சாரு கேட்டாள்.

"பேஷா விளையாடலாம். ஆனால், என்னையும் விளையாட்டிலே சேத்துக்கணும்; என்ன?" என்றாள் உமா.

"ஓ எஸ்!" என்றாள் சாரு.

உமா வண்டியிலிருந்தபடியே சாருவை எடுத்து மறுபடியும் முத்தமிட்டாள். அப்போது, பின் வரும் பேச்சு அவளுடைய காதில் விழுந்தது.

"மகாலட்சுமி மாதிரி இந்த அம்மாவைப் பார்க்கச்சே, நம்ம பெரிய கொழந்தை ஞாபகம் வருதுங்க. ஆனா, நம்மைத்தான் அது அடியோடு மறந்துட்டாப்பலே இருக்குங்களே!" என்றான் நல்லான்.

"அதை என்னத்துக்காக இப்போ ஞாபகப்படுத்துகிறே, நல்லான்! குழந்தை புக்காத்துக்குப் போன போது, உனக்கு இனிமே புருஷன் தான் தாயார், தகப்பனார், குரு, தெய்வம் எல்லாரும் என்று சொன்னேன். அந்தப்படியே அவள் இருக்காள். எப்படியாவது க்ஷேமமாயிருந்தா சரி!" என்றார் சாஸ்திரி.

உமா, குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு, டிரைவரிடம், "சலோ" என்றாள்.

வண்டி கிளம்பிற்று.

"இப்படியா எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள், அப்பா! தாயார், தகப்பனார், குரு, தெய்வமா? பேஷ்!" என்று உமா தனக்குள் சொல்லிக் கொண்டாள். அப்பாவின் மேல் அவளுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.