உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கை வழக்கம் (புகழேந்தி)

விக்கிமூலம் இலிருந்து

புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்.

காப்பு

[தொகு]

(நேரிசை வெண்பா)

சோணாடுந் தொண்டைவள தொல்நாடும் ஆளுடைச்செவ்
வேணாடும் தம்பியர்கை வீறுரைப்பச் - சேணாடு
காப்பான் பதம்புரப்பான் கைம்மா முகம்படைத்துக்
காப்பான் பத்ம்புரப்பான் காப்பு.

நூல்

[தொகு]

(கலிவெண்பா)

திருமால்முன் னாயபல் தேவர்அவுண் சூரால்
உருமாறிக் கைலைவரை உற்றே - பெருமாரி
பெய்யலென ஓலமிடப் பெம்மான் இரங்கிநுதல்
செய்யவிழி ஆறும் திறந்தருளி - வெய்ய
அனற்பொறியால் ஆறா னனனைத் தரஅக்
களற்பொறிக்கஞ் சுற்றெழுந்த கௌரி.