திருச்செந்தூர்த் தெய்வப்புகழ்

விக்கிமூலம் இலிருந்து

தெய்வப்புகழ் ( திருச்செந்தூர்)

தனதன தனதான தனதன தனதான  

      தனதன   தனதான   ... தனதான

டமருக திரிசூலம் அனலுடன் தினம்ஆடும்

  ஹரஹர சிவனாரின்   ...   குருநாதா

மலைமகள் சிவகாமி ஒளிமிகு அபிராமி

  உமையுடன் விளையாடும்  ... முருகோனே

நவமணி களின்மாலை   நறுமண மலர்மாலை

   தமியனின் கவிமாலை  ... அணிவோனே

அனுபவ அனுபூதி அனுபவ உபதேசம்

      அனுபவ அவிரோதம் ... அருள்வாயே

அழகிய ப்ரகலாதர் ஹரிஹரி எனவோத

நொடியினில் வரும்மாயன் ...  மருகோனே  

அதிசய வனமேவி சுவைமிகு தினைமாவும்

      அமுதென உணும்ஞான  ... வடிவேலா

டமடம எனமேளம் ஒலிதர ஜதியோடு

      திமிதிமி என ஆடும்   ...  மயிலேறி

குமுகுமு என ஓசை வரும்அலை நகர்மேவி

      அழகிய தமிழ் பேசும் ...  பெருமாளே