திருத்தணித் தெய்வப்புகழ்

விக்கிமூலம் இலிருந்து

தெய்வப்புகழ் ( திருத்தணி)

தனதன தான தனதன தான

    தனதன தான    ...  தனதான

மலர்இலை நாகம் மதிநதி சூடும்

பனிமலை நாதர் ... இடபாகம்

திகழ்மலை மாது தரும்திரு வேலை

  அசுரர்கள் மாள ... விடுவோனே

குளிர்மிக  வீசும் அவிர்மதி நாணும்

   திருமுகம் ஆறும்  ... உடையோனே

உலகமும் வாழ பசுமையும் ஆக

      மழைஎன நீயும்  ...  வருவாயே

டமடம வானம் இடிதர ஆடி

   மழைமுகில் காணும் ... மயிலேறி

குறவர்கள் வாழும் வனமிடை நாடி

  மரகத மானை ... அணைவோனே

திருமக ளோடு குழலினை ஊதும்

  மழைமுகில் மாயன் ... மருகோனே

புகழினை வோதும் மனிதர்கள் வாழும்

     தணிமலை மேவும்  ...  பெருமாளே