திருப்பரங்குன்றம் தெய்வப்புகழ்

விக்கிமூலம் இலிருந்து

தெய்வப்புகழ் (திருப்பரங்குன்றம்)

தனந்தன  தனந்தன

    தனந்தன  ... தனதான

வரங்களும் வழங்கிடும்

     சவுந்தரி ...  உமையாளும்

வழங்கிய தனம்தினம்

    அருந்திய  ... அழகோனே

தனந்தன திமிந்திமி

     நடம்புரி ... மயிலேறி

வளங்களும் நலங்களும்   

    வழங்கிட ... வருவாயே

டுடுன்டம எனும்பறை

     முழங்கிட ... உலகேழும்

நடுங்கிட ரதம்விடும்

    முகுந்தனின்  ... மருகோனே

அருந்தவர் வணங்கிடும்

        தலங்களில் ... முதலாகி

விளங்கிய பரங்கிரி  

        வரும்திரு  ...  முருகோனே