உள்ளடக்கத்துக்குச் செல்

திருவருட்பயன்/குறள்:81-100

விக்கிமூலம் இலிருந்து
(திருவருட்பயன்-குறள்:81-100 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவருட்பயன்-குறள்வெண்பா: 81 முதல்-100 முடிய

[தொகு]

ஆசிரியர்: உமாபதி சிவாச்சாரியார்

[தொகு]

9. அஞ்செழுத்தருள் நிலை

[தொகு]

குறள்வெண்பா 81 (அருணூலும் )

[தொகு]

அருணூலு மாரணமு மல்லாது மைந்தின் () அருள் நூலும் ஆரணமும் அல்லாது ஐந்தின்

பொருணூ டெரியப் புகின். (01) பொருள் நூல் தெரியப் புகின்.

குறள்வெண்பா 82 (இறைசத்தி )

[தொகு]

இறைசத்தி பாச மெழில் மாயை யாவி () இறை சத்தி பாசம் எழில் மாயை ஆவி

யுறநிற்கு மோங்காரத் துள். (02) உற நிற்கும் ஓங்காரத்து உள்.


குறள்வெண்பா 83 (ஊனநடனம் )

[தொகு]
ஊன நடன மொருபா லொருபாலாம்()ஊன நடனம் ஒரு பால் ஒரு பாலாம்
ஞானநடனந் தானடுவே நாடு.(03)ஞான நடனம் தான் நடுவே நாடு.


குறள்வெண்பா 84 (விரியமந )

[தொகு]
விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம்விரிய ம ந மேவி யவ்வை மீள விடா சித்தம்
பெரியவினை தீரிற் பெறும். (04)பெரிய வினை தீரில் பெறும்.


குறள்வெண்பா 85 (மாலார் )

[தொகு]
மாலார் திரோத மலமுதலாய் மாறுமோ<மாலார் திரோதம் மலம் முதலாய் மாறுமோ
மேலாகி மீளா விடின்.(05)மேல் ஆகி மீளா விடின்.


குறள்வெண்பா 86 (ஆராதி )

[தொகு]
ஆராதி யாதார மந்தோ வதுமீண்டுஆராதி ஆதாரம் அந்த அது மீண்டு
பாராது மேலோதும் பற்று. (06)பாராது மேல் ஓதும் பற்று.


குறள்வெண்பா 87 (சிவமுதலே )

[தொகு]
சிவமுதலே யாமாறு சேருமே றீரும்<சிவ முதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவமிதுநீ யோதும் படி.(07)பவம் இது நீ ஓதும்படி


குறள்வெண்பா 88 (வாசி )

[தொகு]
வாசி யருளியவை வாழ்விக்கு மற்றதுவேவாசி அருளியவே வாழ்விக்கும் மற்று அதுவே
யாசி லுருவமுமா மங்கு. (08)ஆசு இல் உருவமும் ஆம் அங்கு.


குறள்வெண்பா 89 (ஆசினவா )

[தொகு]
ஆசினவா நாப்பண் ணடையா தருளினால்<ஆசில் நவா நாப்பண் அடையாது அருளினால்
வாசியிடை நிற்கை வழக்கு.(09)வாசி இடை நிற்கை வழக்கு.


குறள்வெண்பா 90 (எல்லா )

[தொகு]
எல்லா வகையு மியம்புமிவ னகன்றுஎல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று
நில்லா வகையை நினைந்து. (10)நில்லா வகையை நினைந்து.


10. அணைந்தோர் தன்மை

[தொகு]

குறள்வெண்பா 91 (ஓங்குணர்வில் )

[தொகு]
ஓங்குணர்வி லுள்ளடங்கி யுள்ளத்தி லின்பொடுங்கத்<ஓங்கு உணர்வில் உள் அடங்கி உள்ளத்தில் இன்பு ஒடுங்கத்
தூங்குவர்மற் றேதுண்டு சொல்.(01)தூங்குவர்மற்று ஏது உண்டு சொல்.



குறள்வெண்பா 92 (ஐந்தொழிலும் )

[தொகு]
ஐந்தொழிலுங் காரணர்க ளாந்தொழிலும் போகநுகர்ஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும் போகம் நுகர்
வெந்தொழிலும் மேவார் மிக. (02)வெம் தொழிலும் மேவார் மிக.


குறள்வெண்பா 93(எல்லாமறியு )

[தொகு]
எல்லா மறியு மறிவுறினு மீங்கிவரொன்எல்லாம் அறியும் அறிவு உறினும் ஈங்கு இவர் ஒன்று
றல்லா தறியா ரற.(03)அல்லாது அறியார் அற.


குறள்வெண்பா 94 (புலனடக்கி)

[தொகு]
புலனடக்கித் தம்முதற்கட் புக்குறுவார் போதார்புலன் அடக்கித் தம் முதல் கண் புக்கு உறுவார் போதார்
தலனடக்கு மாமை தக. (04)தலம் நடக்கும் ஆமை தக.


குறள்வெண்பா 95 (அவனை )

[தொகு]
அவனையகன் றெங்கின்றா மாங்கவனா மெங்கு<அவனை அகன்று எங்கு இன்றாம் ஆங்கு அனாம் எங்கும்
மிவனையொழிந் துண்டாத லில்.(05)வனை ஒழிந்து உண்டாதல் இல்.


குறள்வெண்பா 96 (உள்ளும் )

[தொகு]
உள்ளும் புறம்பு மொருதன்மைக் காட்சியருக்உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சியருக்கு
கெள்ளுந் திறமேது மில். (06)எள்ளும் திறம் ஏதும் இல்.


குறள்வெண்பா 97 (உறுந்தொழிற்கு )

[தொகு]
உறுந்தொழிற்குத் தக்க பயனுலகந் தத்தம்< உறும் தொழிற்குத் தக்க பயன் உலகம் தம் தம்
வறுந்தொழிற்கு வாய்மை பயன்.(07)வறுந்தொழிற்கு வாய்மை பயன்.


குறள்வெண்பா 98 (ஏன்றவினை )

[தொகு]
ஏன்ற வினையுடலோ டேகுமிடை யேறும்வினைஏன்ற வினை உடலோடு ஏகும் இடை ஏறும் வினை
தோன்றி லருளே சுடும். (08)தோன்றில் அருளே சுடும்.



குறள்வெண்பா 99 (மும்மை )

[தொகு]
மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதறிவார்க்<மும்மை தரும் வினைகள் மூளாவாம் மூதறிவார்க்கு
கம்மையு மிம்மையே யாம்.(09)அம்மையும் இம்மையே ஆம்.


குறள்வெண்பா 100 (கள்ளத்தலை )

[தொகு]
கள்ளத் தலைவர் துயர்கருதித் தங்கருணைகள்ளத் தலைவர் துயர் கருதித் தம் கருணை
வெள்ளத் தலைவர் மிக. (10)வெள்ளத்து அலைவர் மிக.



உமாபதி சிவாச்சாரியார் இயற்றியருளிய திருவருட்பயன் முற்றும்.

[தொகு]

பார்க்க:

[தொகு]
திருவருட்பயன்-குறள்:1-20
திருவருட்பயன்-குறள்:21-40
திருவருட்பயன்-குறள்:41-60
திருவருட்பயன்-குறள்:61-80
திருவருட்பயன்
[[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=திருவருட்பயன்/குறள்:81-100&oldid=718584" இலிருந்து மீள்விக்கப்பட்டது