தைப்பாவாய்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
தைப்பாவாய்!
ஆசிரியர்
"எழுச்சிக் கவிஞர்"
வ.கோ. சண்முகம்
தொகுப்பாசிரியர்
எஸ். ராஜகுமாரன்
தமிழ்க்கூடம்
- தைப்பாவாய் Thaippava * ஆசிரியர் வ.கோ. சண்முகம் / Author:Vaa.Ko.Sanmugam * கவிதைகள்/Poems* தொகுப்பாசிரியர்: எஸ். ராஜகுமாரன் / Compiling Editor : S. Raaja kumaran * முதற்பதிப்பு: 1978 / First Edition 1978 மறு மதிப்பு 2007 | Re-edition 2007 * பதிப்பாளர் பரிமளா ராஜகுமாரன் | Publisher : Parimala Raajakumaran * அட்டை வடிவமைப்பு: சித்தன் கலைக்கூடம், / Wrapper Design : Sithan Kalaikkoodam * நூல் வடிவமைப்பு : இரா. செல்வ சுந்தரம் / Book Design : R.Selvasundaram * ஒளியச்சு: தமிழ்க்கூடம், சென்னை -17 | Laser Typeset: Thamizk kuudam, Chennai - 17.
- பக்கங்கள் 64 / Pages 64
- விலை ரூ. 33/- / Price Rs.33/
தமிழ்க்கூடம்
புதிய எண்.14, சிவாஜி தெரு, தி.நகர், சென்னை - 600 017.
செல்பேசி : 98401 24602
Thamizkkuudam, New No.14, Sivaji Street, T.Nagar, Chennai -17.
தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமை திட்டத்தின் கீழ்,
2007-2008 தமிழகஅரசு நிதிநிலை அறிக்கையின் வாயிலாக
‘எழுச்சிக் கவிஞர்’ மாவெண்கோ என்ற
வயலூர்சண்முகம் அவர்களின் நூல்களை நாட்டுடமை
ஆக்கிய தமிழக முதல்வர்
'முத்தமிழறிஞர்’ டாக்டர் கலைஞர்
அவர்களுக்கு நன்றி!
இயற்பெயர் | :வ.கோ. சண்முகம் |
புனைப்பெயர்கள் | : மாவெண்கோ, செம்மல்,வயலுார்சண்முகம் |
பிறப்பு | : 20.02.1924 |
பிறப்பிடம் | : வயலூர் கிராமம், திருவாரூர் மாவட்டம் |
பள்ளிக்கல்வி | : போர்டு ஹை ஸ்கூல் -திருவாரூர் |
கல்லூரிக்கல்வி | : இண்டர்மீடியட், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - சிதம்பரம் |
படைப்புகள் | :முரசொலி, திராவிட நாடு, அறப்போர், கலைக்கதிர் |
பிரசுரமான பத்திரிகைகள் | : பிரசண்ட விகடனர், கண்ணனி, விஜயா, தமிழ் சினிமா, கல்கி, கோகுலம், ஆனந்தவிகடன், மாதஜோதிடம், பால்யன் |
கவிதைகளின் காலம் | : மரபுக் கவிதைகள் - 1940 முதல் 1980 வரை |
: புதுக்கவிதைகள் - 1970 முதல் 1980 வரை | |
நூல் விவரம் | :1.தெற்கு ஜன்னலும் நானும் (மரபு மற்றும் புதுக் கவிதைகள் தொகுப்பு) |
:2.டாணா முத்து (சிறுவர் கதைப் பாடல்கள்) | |
:3. சின்னப்பூவே மெல்லப் பாடு (குழந்தைப் பாடல்கள்) | |
:4. எதைத் தேடுகிறாய்? (தத்துவக் கவிதைகள்) ! | |
:5. நடந்துகொண்டே இரு (இளைஞர் கவிதைகள்) ! | |
:6. மெழுகுச் சிறகுகள் (மரபுக் கவிதைக் கதைகள்) ! | |
:7. புதிய தெய்வம் (புதுக்கவிதை நாவல்) ! | |
:8. அண்னை ஒருத்தி (அஷ்டலட்சுமி காவியம்) ! | |
:9. உப்பு மண்டித் தெரு (புதுக்கவிதைச் சிறுகதைகள்) ; | |
:10. வென்றார்கள் நின்றார்கள் (பல்துறை சாதனையாளர்கள் பற்றிய கவிதைகள்) | |
:11. தைப்பாவாய் (மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்) | |
:12. பாருக்கெல்லாம் பாரதம்! |
இலக்கிய நண்பர்கள் | : தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், ‘உவமைக் கவிஞர்’சுரதா,கவி.கா.மு.ஷெரீஃப், திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ், 'டார்ஃபிடோ’ ஜனார்த்தனன், திரைப்படத் தயாரிப்பாளர் இராம.அரங்கண்ணல், ‘சின்னக்குத்தூசி’ தியாகராஜன் |
இறுதி வாழ்வும் மறைவும் | : 23.07.1983 தளத்தெரு கிராமம், காரைக்கால் (புதுச்சேரி மாநிலம்) |
பதிப்புரை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியப் பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டு தலை நிமிர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறது, 'செம்மொழி’ தமிழ் !
திருக்குறளுக்கு இணையாக, ஒட்டுமொத்த மானுட சமூகத்துக்கும் வாய்ந்த அறநூல் உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை என்கின்றனர் மொழியில் ஆய்வாளர்கள்.
'சங்க இலக்கியம்’ போன்ற செறிவான - தொன்மையான படைப்புத் தொகுப்பு, உலகின் எந்தமொழிக்கும் கிடைக்காத பெரும் பேறு எண்ணிப் பளகாங்கிதம் அடைகின்றனர் நம் தமிழ்ச் சான்றோர்!
சிறுகதை, நவனம். உரைநடை என நமது பல இலக்கிய வடிவங்களும் நமக்கு அnனிய சீதனமாக்க் கிடைத்தவையே! 'மரபுக் கவிதை' என்னும் இலக்கணக் கவிதை வடிவமே தமிழ் மொழியினர் தன்னிகரில்லா சொந்தச் சொத்து.
அவ்வடிவம் பண்டிதர்களால் நீர்த்துப் போகும் அவலம் கண்டுதான பாரதி 'பாட்டினில் புதுமை செய்!' எனறான புதிய சொல்லாக்கம், புதிய பாடுபொருள், புதிய புதிய கோணங்கள் என்று "எழுச்சிக் கவிஞர் வ.கோ. சண்முகம் 'தைப்பாவாய்' என்ற இந்தக் கவிதைத் தொகுப்பு வழியாக தமிழுக்கு புதிய அணிகலனைச் சூட்டியுள்ளார்!
நேசமிக்க...
எஸ்.ராஜகுமாரன்