நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/வியாபாரத்திலே நற்பெயர்
Appearance
மக்காவாசிகள் அந்தக் காலத்தில், தங்களுடைய மூலதனங்களைத் தொழில் தெரிந்தவர்களிடமும், நம்பிக்கையானவர்களிடமும் கொடுத்து, வேற்று நாட்டுக்குப் போய் வர்த்தகம் செய்யும்படி அனுப்புவார்கள். அதில் கிடைக்கக் கூடிய இலாபத்தை உரியவர்கள் பங்கு பிரித்துக் கொள்வது வழக்கம்.
பெருமானார் அவர்களும் இவ்வாறு பங்கு சேர்ந்து, வியாபாரம் செய்து வந்தார்கள். வியாபாரத்தை அவர்கள் நேர்மையாகவும், சிறப்பாகவும் செய்து வந்தமையால், மக்கா முழுவதும் அவர்களுடைய பெயர் பிரசித்தமாயிற்று.