நாடகத் தமிழ்/அனுபந்தம்

விக்கிமூலம் இலிருந்து

அனுபந்தம்

தோடயம்

இராகம் நாட்டை - தாளம் ஜம்பை

தடையிலனிதரு சோமா சகமகிழ் சகஸ்த்ர நாமா
தழையிதழி மலர்த்தாமா சரவசரபூமா-ஜெயஜெயா
விடையில் வரு மகதேவா விரிமறை கணமொழி நாவா
வினையினருள் பெறக்காவா விரைகொளடிபூவா-ஜெயஜெயா
இடைமருவு புலித்தோலா இலகுகரத்திரி சூலா
இனியகர மதில் நீல இறைவியொரு பாலா -ஜெயஜெயா
நடையுக நடையுலாசா கயிலைமலைதனில் வாசா
கருணையருளு மஹேசா கருதுமறை நேசா-ஜெயஜெயா


மங்களம்

இராகம் ஆநந்தபைரவி - தாளம் திரிபுடை


சிவநாதந்தனியாயுற்றுப் பரமோதந்தனயே பெற்றுக்
கலைமறிவாய் செறியாய் கதிர்மதி பிறிவாய் அறிவாயிலகிடு
மொளிவரு சித்திகள் பற்பலமகிமைகள் தருசிம் பரமுத்தியினிலைபெற
வரவர வருள் பெருகிட முடிமிசை நிதம் நடமிடும் நிருமலபொருட்டுகுறன்

எங்குந் தனிப்பரமாய் இலகிடுமெழிலார் கருணைக்கடலாகவே
தங்கும் மூலாதாரஞ்சாரும்-ஒரு கணபதி தனக்குந்
திருபெருதருள்-சேரும் தெய்வயானை வள்ளிக்கும்

திகழ்மாவடி வேலவர்க்கும்
(ம)


ஆதி பரமனுக்கும் அமுதகலைமதி ரவியழல்விழி
அடர்ந்தெழுஞ் சிறந்த புங்கவர் நிரந்தரம் பணிந்து துதிசெயும்
அகமதில் புறமதிலனுதினமுறை அருமறைமனிை முடியினில் தடமிடு
அற்புதச் சத்திக் கலையொடு புறம்வைத்துச் சுத்தச் சிவமெனுமொரு
ஆதி பரமனுக்கும் அரிய கலைமகட்கும்
நீதி திருமாலுக்கும் நிருத்தமலர் மாதுக்கும்
நிதமுறையும் அடியவர்க்கும் நிலைமைபெறுங் கலை சுருதிக்கும்
நிலைதரு மாமறை யவருக்கும் துறைதெரியுந் தலமுனிவர்க்கும்

நிமலனத் தண்டருக்கும் புகழ் நெடிய சிறுத் தொண்டர்க்கும்.
(ம)



கணபதி வருகிற தரு

இராகம் மோகனம்-தாளம் ஆதி



சுந்தரக் கணபதி வந்தார்-தொந்தோந்திந்தாவென
சுந்தரக் கணபதி வந்தார்.
சுரர்க்கும் நரரெவர்க்கும் தத்துவமெய்க்குயிராகியு

மலரவர்பெற நொடியிற்பலவென முடிவித்திடுதல
(சு)


அந்தரத்துமிருந்து துந்துமியே முழங்க
ஆகமவேதமநேகம் பணியிழைக்க
அடியவரிருவினை அடியொடி பொடிபட

வடிவுள கருணைசெய் திடுமொருகசமுக.
(சு)


"https://ta.wikisource.org/w/index.php?title=நாடகத்_தமிழ்/அனுபந்தம்&oldid=1540558" இலிருந்து மீள்விக்கப்பட்டது