நான்மணிக்குறள்/வான் சிறப்பு

விக்கிமூலம் இலிருந்து



                             2. வான் சிறப்பு
   1. ஐம்பூதச் சேர்க்கையால் ஆகும் உலகிற்குச்
     செம்பாகம் வானின் சிறப்பு. 
   2. உழவிற் குறுதுணை வானே அதுகண்
     டுழுவார் உயர்வர் உழைத்து.
   3. வான்தப்பிச் செய்யும் உழவு விளைபயனைத்
     தான்தப்பித் துன்பம் தரும்.
   4. மழைவரும் காலத்தை முன்னறிந்து சொல்லல்                      	
     பிழைவேண்டா ஆட்சியர்தம் பேறு.
   5. பெருமழையைத் தாங்குநற் பெற்றித்தாய்ச் செய்மை
     உருச்செய்த லாள்வோர்க் குயர்வு.
   6. வான்தவறும் போதும் வறட்சிவே ளாண்மைகள்
     கோன்சொல்ல வேண்டும் குறித்து.
   7. வேண்டுங்கால் வானீர்த்தும் வேண்டாக்கால்நீக்குவித்தும்
     காண்டல் அரசின் கடன்.
   8. பெய்யுங்கால் தேக்கியும் பெய்யாக்கால் பாய்ச்சியும்
     உய்வழிகாண் ஓங்கும் அரசு.
   9. இயற்கைக்கா டெல்லாம்தாம் காத்தும் புதிய
     செயற்கையும் செய்வ தரசு.
   10. வானமுதை மாசின்றிக் காக்கவழி செய்குடிகள்
      தேனமுதை உண்ணும் சிறந்து.