நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/13வது திருமொழி
Appearance
13ம் திருமொழி கண்ணனென்னும் அச்சுதன் அணிகளால் தன் வாட்டம் தவிர்க்க முயலுதல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை* புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின்று அழகு பேசாதே* பெண்ணின் வருத்த மறியாத பெருமான் அரையில் பீதக வண்ண ஆடை கொண்டு* என்னை வாட்டம் தணிய வீசீரே. 1 பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை* வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே* கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி* நீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே. 2 கஞ்சைக் காய்ந்த கருவல்லி கடைக்க ணென்னும் சிறைக்கோலால்* நெஞ்சூ டுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை* அஞ்சேல் என்னான் அவனொருவன் அவன்மார் வணிந்த வனமாலை* வஞ்சி யாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3 ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்* காரே றுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை* ஆரா வமுத மனையான்றன் அமுத வாயி லூறிய* நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை நீக்கிரே. 4 அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவனொருவன்* தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால்* தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமால் ஊதி வருகின்ற* குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே. 5 நடையொன் றில்லா உலகத்து நந்த கோபன் மகனென்னும்* கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு* புடையும் பெயர கில்லேன்நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்* பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா வுயிரென் னுடம்பையே. 6 வெற்றிக் கருள கொடியான்தன் மீமீ தாடா உலகத்து* வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே யாக வளர்த்தாளே* குற்ற மற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு* அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே. 7 உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ வென்னாத* கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால்* கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்* அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே. 8 கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்* இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்?* செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தா னேலும் ஒருஞான்று* மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே. 9 அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக்கு அணிவிளக்கை* வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை* வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும்* சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே. 10 ஆண்டாள் திருவடிகளே சரணம்