நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/14வது திருமொழி
Appearance
14ம் திருவொழி பட்டி மேய்ந்து பிருந்தாவனத்திலே பரமனைக் கண்டமை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்* இட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே?* இட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி* விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே. 1 அனுங்க வென்னைப் பிரிவுசெய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்* குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரே?* கணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல* வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே. 2 மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை* ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே?* மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்* மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே. 3 கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயி றுபடுத்தி* என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?* போர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றேபோல்* வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே. 4 மாத வன்என் மணியினை வலையில் பிழைத்த பன்றிபோல்* ஏது மொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரே?* பீதக வாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல்* வீதி யார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே. 5 தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல்* புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே?* உருவு கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல்* விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோமே. 6 பொருத்த முடைய நம்பியைப் புறம்போ லுள்ளும் கரியானை* கருத்தைப் பிழைத்து நின்றஅக் கருமா முகிலைக் கண்டீரே?* அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம்போல்* விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே. 7 வெளிய சங்கொன் றுடையானைப் பீதக வாடை யுடையானை* அளிநன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரே?* களிவண் டெங்கும் கலந்தாற்போல் கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்* மிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே. 8 சாற்றுப்பாட்டுக்கள் நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த நளிர்மா மலருந்தி* வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே?* காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன்மடிய* வேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே. 9 பருந்தாட் களிற்றுக் கருள்செய்த பரமன் தன்னை* பாரின்மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதைசொல்* மருந்தா மென்று தம்மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்* பெருந்தாள் உடைய பிரானடிக்கீழ்ப் பிரியா தென்றும் இருப்பாரே. 10 ஆண்டாள் திருவடிகளே சரணம்