நிகண்டுகள்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

தமிழில் தோன்றிய கருவி நூல்களாகிய நிகண்டுகள் என்பவையே, அகரமுதலி(அகராதி)களுக்கு ஆதார நூல்களாக அமைந்தன. தமிழ் நிகண்டுகளில், சில அச்சாகாமற் போக, அச்சிடப்பட்டவற்றுள்ளும், சில எங்கும் கிடைக்காத அளவிற்கு அருகிப் போய்விட்டன. சில நிகண்டுகள் மட்டுமே பலமுறை பதிப்பிக்கப் பெறுதற்குரிய பேறு பெற்றன. இந்திய மொழிகள் சிலவற்றுள் அகராதி வடிவில் செய்யப்பெற்ற நூல்களும் நிகண்டுகள் எனும் பெயர் பெற்றுள்ளன. எனினும் செய்யுள் வடிவில் இயற்றப் பெற்றனவே தமிழில் மொழி நோக்கிலன்றி, மருத்துவம், சோதிடம் போன்ற துறைகளிலும் நிகண்டுகள் தோன்றியுள்ளன. மொழிசார்ந்த நிலையில் 25 நிகண்டுகள் பதிப்பிக்கப் பெற்றன. இப்பணி 1819 முதல் இன்றுவரை நடைபெற்று வருகிறது. இத்துறையில் சேந்தன் திவாகரம், பிங்கலந்தை, உரிச்சொல் நிகண்டு, சூடாமணி நிகண்டு ஆகியன மட்டும் பல பதிப்புகளைப் பெற்றன. பெரும்பாலானவை ஒருமுறை மட்டும் பதிப்பிக்கப்பெற்றன. நிகண்டு பதிப்பித்தோருள் வையாபுரிப்பிள்ளை முதலிய மிகச் சிலரே சரியான பதிப்பு நியதிகளைப் பின்பற்றியுள்ளனர். மிகப் பெரும்பாலோர் தம் மனம்போனபோக்கில் நிகண்டுகளைப் பதிப்பித்துள்ளதால் நிகண்டுப் பதிப்புகளில் பலவகைப் பிழைகள் நேர்ந்துள்ளன. இப்பிழைகளைக் கண்டறிந்து நீக்குவது முதன்மைத் தேவையாகும்.

 1. அகராதி நிகண்டு - உ.வே.சா. நூல் நிலையம் 1983இல் வெளியிட்ட இந்நிகண்டே, அகராதி வடிவில் அமைந்துள்ளது.
 2. கந்தசுவாமியம் - 19ஆம் நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே அச்சானது.
 3. சிந்தாமணி நிகண்டு - 19ஆம் நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே அச்சானது. காண்க: விக்சனரியின் சிந்தாமணி நிகண்டின் சொற்கள்
 4. நேர்ச்சொல் நிகண்டு - 19ஆம் நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே அச்சானது.
 5. நவமணிக்காரிகை - 19ஆம் நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே அச்சானது.
 6. அபிதான தனிச் செய்யுள் நிகண்டு - 19ஆம் நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே அச்சானது.
 7. சேந்தன் திவாகரம் - பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகள் உள்ளவை
 8. பிங்கலந்தை என்னும் பிங்கல நிகண்டு - பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகள் உள்ளவை
 9. சூடாமணி நிகண்டு - பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகள் உள்ளவை (வீரைமண்டலவன் நிகண்டு=வேதகிரியார் சூடாமணி) காண்க: விக்சனரியின் சூடாமணி நிகண்டின் சொற்கள்
 10. பொருட்டொகை நிகண்டு - 1920ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பாக வெளிவந்தது. அதன் பதிப்பாசிரியர் சே.ரா. சுப்பிரமணிய கவிராயர் என்பார் ஆவார்.
 11. வடமலை நிகண்டு 1983 உ.வே.சா. நூல் நிலைய வெளியீடாக,. இரா. நாகசாமி அவர்கள் அதனைப் பதிப்பித்தார்.
 12. பொதிகை நிகண்டு
"https://ta.wikisource.org/w/index.php?title=நிகண்டுகள்&oldid=1489257" இலிருந்து மீள்விக்கப்பட்டது