நீலகேசி

விக்கிமூலம் இலிருந்து

கடவுள் வாழ்த்து[தொகு]

1 நல்லார் வணங்கப் படுவான்பிறப் பாதி நான்கு மில்லா னுயிர்கட் கிடர்தீர்த்துய ரின்ப மாக்குஞ் சொல்லான் றருமச் சுடரானெனுந் தொன்மை யினா னெல்லா முணர்ந்தா னவனேயிறை யாக வேத்தி.

2 அன்னான் பயந்த வறவாரமிர் துண்டு நின்றார் இன்னா ரினைய ரெனவேண்டுவ தில்லை யார்க்கும் பன்னாந் துணையும் பணிந்தாகிய பத்தி யினா னென்னா லுரைக்கப் படுகின்றதொன் றீங்கு ளதே.

3 பண்டாக மத்துட் பயிலாவுரை யென்று மிக்கார் விண்டீங் கிதனை வெகுளார்விடல் வேண்டு வன்யான் தண்டா மரைமே னடந்தான்றடந் தாள்வ ணங்கிக் கண்டேன் கிடந்தேன் கனவின்னிது கண்ட வாறே.

4 ஆய்நீல வுண்க ணவளாயடங் காமை செய்யும் பேய்நீல கேசி பெரியோனறங் கொண்ட பின்னைத் தீநீல வுள்ளந் திரிந்தேறு திருவத் தளாய் மாஞால மெல்லா மறமாற்றிய மாட்சி யளா.

5 தேவன் னுரைப்பத் தெளிந்தேன்பிற் றெளிந்த வெல்லாம் மாவென் றுகொண்டேன் மடனேவலி யாக நின்று நாவல் புலவ ரவைநாப்பண்ணி நாட்ட லுற்றேன் பாவின் னவென்று பழிப்பாரினி யில்லை யன்றே.

6 கண்டிங்கு நாளுங் கடல்வையகங் காதல் செய்யும் வெண்டிங்க டானும் விமலந்தனக் கில்ல தன்றே கொண்டென்சொ லெல்லாங் குணனேயெனக்கூறு கென்னே னுண்டிங்கோர் குற்ற மெனில்யானுமொட் டாமை யுண்டோ.

7 தெள்ளி நரைத்துத் தெருளாதுறு தீமை செய்யும் புள்ளி னுரையும் பொருளாமெனக் கோட லினா லெள்ளுந் திறத்த.: துரையென்றிது நீக்க லின்றாய்க் கொள்ளும் முலகங் குணமாணறம் வேண்டு மென்றால்.


கடவுள் வாழ்த்து[தொகு]

8 நாடும் மநாடா ளரசுந்நக ருந்நகர்சூழ் காடுங் கடவுள் புகனீக்குதல் கார ணம்மாத் தேடுஞ் சிறுபேய் பெரும்பேய்த்தியைச் சென்று பற்றும் பாடும் மவடான் பகைகொண்டுபல் கால்வெ ருட்டி.

9 தான்கண்ட வன்செய் தவந்தன்னைக் கலக்க கில்லா மான்கொண்ட நோக்கின் னவளாய்மற மாற்றி யபின் னூன்கொண்ட காட்சி முதலாக வுடைத்த தெல்லாம் யான்கண்ட வாறே யுரைப்பன்னவை யார்க் கிதனை.

தர்ம உரை[தொகு]

10 மாஞ்சோலை பொங்கி மருதங்கிளிப் பிள்ளை கள்வாய்த் தீஞ்சா றொழுகுந் திணையின்னணி தங்கி யேங்குந் தாஞ்சால வாழ்நா டளிரீனுந் தகைய துண்டு பாஞ்சால மென்று பலரும்புகழ் பார்த்தி நாடே.

11 வாடா வளத்தான் மலர்ஞால மதிப்பின் மிக்க நாடாவ தி·தா மதனன்னலஞ் சொன்ன லத்தாற் கூடா தெனினுஞ் சிலகூறலும் வேண்டு மன்றே பாடா விருந்தார் பரிவஞ்சும் படிய தன்றே.

12 வருபுனலன வளவயலிடை மறிவனவின வாளை மருவினியன மகிழ்தகையன மலர்சிறையன நாரை கருவரியன கடுநடையன கனைகுரலன கம்புள் திருவுருவின தெரிகதிரின திசைதிசைதொறு செந்நெல்.

13 பணைநிலையன கமுகொடுபடு பழமுதிர்வன தெங்க மிணைநிலையன சுளைகனியிவை யினியனபல வாழை மணனயர்வன மனையயலன மதுவிரிமணி நீலந் திணிநிலையன திரளரையன தெரிமலரன மருதம்.

14 கரைதழுவிய கழிமடலின கடிகமழ்வன கைதை புரைதழுவிய பொதியவிழ்வன பொன்மலர்வன புன்னை விரைதழுவிய விழைதகையன வெறிமலர்விரி ஞாழல் நிரைதழுவிய நெறிகழியிடை நிகரலரன நெய்தல்.

15 குருவுடையன கொடிமிடைவொடு குலைவிரிவன கோடல் தருசுடரன தளவயலின தகைமலரன தோன்றி யருகுடையன வணியுருவின வயலனவலர் காயா முருகுடையன முகைவிரிவன முறியலர்வன முல்லை.

16 நனைசினையன நகுவிரையன நலனுடையன நாகம் வினையுடையன பொழுதிவையென விரிவனகணி வேங்கை கனைசுடர்விடு கதிர்மணியறை களனயர்வன காந்த ளினியனபல சுனையயலன விறுவிரையன குறிஞ்சி.

17 ஆடலொடு பாடலவை தாமறுத லின்றிக் கேடில்புக ழாரவைகள் கண்டுமிசை கேட்டு மூடலொடு கூடலுணர் வார்கள்புணர் வாராய்ச் சேடரொடு சேடியருஞ் செல்வமிக நல்கி.

18 தானமொடு சீலமவை தாங்கிநல மோங்கி மானமொடு மாயமில ராயமனை யாருங் கானமொடு கல்லடரு ளில்லிடரு நீங்கி ஞானமொடு செய்வினைக ணையமுயல் வாரும்.

19 அந்தணரு மல்லவரு மாகியுட னாய மந்தமறு நால்வருண மாட்சியின ராகித் தந்தநெறி யிற்றிரித றானுமில ராகி நந்திமிசை சேறலுடை நன்மையத நாடே.

20 ஞாலமறி நன்மையுடை நாடதென லானு மாலுமழை மூன்றுமுடை மாதமென லானுங் காலமவை தாங்கடுமை காண்பருமை யாலும் பாலைநில மொன்றுமவ ணின்மை பழுதன்றே.

21 இன்ன தன்மையி னாடினி தாளுமம் மன்ன வன்னவன் யாரெனில் வானிடைச் சொன்ன நீர்மைச் சுரேந்திரன் போன்றிவட் டன்ன னாரில் சமுத்திர சாரனே.

22 ஆற்ற லாலரி மாவவ னாணையாற் கூற்ற மேயெனக் கூறலு மாங்குடி போற்ற றாயனை யான்பொருந் தார்கண்மேற் சீற்றத் தாற்றெறு தீத்திர ளேயனான்.

23 தீய தீரத் திருவிளை யாடிய தேயங் காவல னாய்த்திசை யாவினு மீய நீண்டகை யேந்த னகர்திசை போய புண்ட வருத்தன மென்பதே.

24 வளங்கெழு நெடுமதில் வாயில் யாவையு முளம்புக விழுங்கியிட் டுமிழ்வ வொத்துமேல் விளங்கிவெண் மதிசெலல் விலக்கி நீள்விசும் பளந்ததன் றுணைமையு மறிவ தொத்தவே.

25 விரைசெல லிவுளியும் வேழ வீட்டமு நிரைசெலற் கொடுஞ்சிநன் னேமி யூர்தியு மரசுடைப் பெருங்கடை நெருங்கு மார்கலி திரைபொரு கடலொலி யன்ன செம்மற்றே.

26 அகிற்புகை யளாவியு மணிகொள் வீதியிற் றுகிற்கொடித் தொகுதியுந் தூய சுண்ணமு முகிற்றலைக் கலலிவான் மூடி மாநகர் பகற்கிடை கொடாததோர் பான்மை மிக்கதே.

27 ஆங்க மாநக ரணைந்தது பலாலைய மென்னும் பங்கொள் பேரதவ் வூரது பிணம்படு பெருங்கா டேங்கு கம்பலை யிரவினும் பகலினு மிகலி யாங்கு நீர்வையத் தோசையிற் போயதொன் றுளதே.

28 விண்டு நீண்டன வேய்களும் வாகையும் விரவி யிண்டு மீங்கையு மிருள்பட மிடைந்தவற் றிடையே குண்டு கண்ணின பேய்களுங் கூகையுங் குழறிக் கண்ட மாந்தர்தம் மனங்களைக் கலமலக் குறுக்கும்.

29 ஈமத் தூமமு மெரியினு மிருளொடு விளக்கா வூமைக் கூகையு மோரியு முறழுறழ் கதிக்கும் யாமத் தீண்டிவந் தாண்டலை மாண்பில வழைக்கும் தீமைக் கேயிட னாயதோர் செம்மலை யுடைத்தே.

30 வெள்ளின் மாலையும் விரிந்தவெண் டலைகளுங் கரிந்த கொள்ளி மலையுங் கொடிபடு கூறையு மகலும் பள்ளி மாறிய பாடையு மெலும்புமே பரந்து கள்ளி யாரிடைக் கலந்ததோர் தோற்றமுங் கடிதே.

31 காக்கை யார்ப்பன கழுதுதங் கிளையொடு கதறித் தூக்க ளீர்ப்பன தொடர்ந்தபல் பிணங்களுந் தூங்கச் சேக்கை கொள்வன செஞ்செவி யெருவையு மருவி யாக்கை கொண்டவர்க் கணைதலுக் கரிதது பெரிதும்.

32 கோளி யாலமுங் கோழரை மரங்களும் குழுமித் தூளி யார்த்தெழு சுடலையு முடலமுந் துவன்றி மீளி யாக்கைய தாக்கியுண் பேய்க்கண மிகைசூழ் கூளி தாய்க்கென வாக்கிய கோட்டமொன் றுளதே.

33 இறைவி கோட்டத்து ளீரிரு திங்கள தகவை யுறையு ளாகவவ் வுறையருங் காட்டகத் துறைவான் பொறையு மாற்றலும் பூமியு மேருவு மனையான் தான். சிறைசெய் சிந்தைய னந்தமில் பொருள்களைத் தெரிந்

34 அத்தி காயங்க ளளவைக ளாலளந் தறிவான் குத்தி யாதிய குணங்களிற் பெரியவ னரிய பத்தின் மேலிரு தவத்தினிற் பவத்தொட ரறுக்கும் முத்தின் யான்முனிச் சந்திர னெனும்பெயர் முனிவன்.

35 அன்றக் கோட்டத்து ளறிவிலா மறிதலை யறுப்பான் சென்ற தெய்வதைக் கெனச்சிலர் சிறப்பயர் பொழுதின் நின்றக் கோண்மின மெனச் சொல்லி நெறியறி வுறுவோ னொன்றற் பல்வகை யுயிர்க் கொலை யுரைமின மெனவே.

36 பண்டிந்நின்ற பணைத்தோளி பாலற்பெ றாமையைக் கண்டியாமிக் கணமோடி தன்பாற்சொன் னோமாக வுண்டதாயிற் றோர்குழவி யென்னவுவப் பித்தற்குக் கொண்டுவந்தே மறியறுக்க வென்றார் கொலையாளர்.

37 ஊனுடம் போவுயிரோ வுறுகுழவி யாத றேனொடுங்குங் குழலாட்குத் தேவர்மன னுந்தந்த தூனுடம் பென்னி லுதிரமா முயிரென்னின் மானிடமாம் வினைமேலைச் செய்தன்றோ வந்ததென்றான்.

38 ஏறியானை யிருங்கலைக ணேர்ந்தா ரவையிவையென் றூறங்கி யுருவுருசெய் தாலுமுவந் தொழிபவான் மாறுகோ ளிலைமண்ணான் மறியுருசெய் தீந்தக்காற் பாறினீர்க் கும்மவர்க்கும் பழிபாவ மொன்றிலையே

39 கொன்ற வன்னே கொடியனென வுலகங் கூறு மதனாலு மொன்ற நூலா ருரைகளோ டொப்ப முடியு மதனாலு மின்றி னின்று மிதுவொழிதி ராயி னுங்கட் கிருமைக்கு நன்றி தென்றான் வெந்நரகம் புகுதல் விலக்கு நாவினான்.

40 கோறல் பொய்த்தல் கொடுங்களவு

   நீக்கிப் பிறர்ம னைகண்மேற்
   சேற லின்றிச் செழும்பொருண்மேற்
   சென்ற சிந்தை வேட்கையினை
   யாறு கிற்பி னமருலக
   நுங்கட் கடிய தாbமன்றான்
   நீறு மோடு நிழன்மணியும்
   பொன்னு நிகரா நோக்குவான்.

41 ஏத்து தற்கேற் றானிரங்கி யின்ன வைசொல் லக்கேட்டுப் பாத்தி யோயெம் பழவினையும் பாறு கென்று பணிந்துதாம் யாத்து நின்ற வம்மறியும் மறமு முடனே கொண்டுபோய்க் காத்து மென்றார் கருவினையு ணீங்கு நல்ல கருத்தினார்.

42 ஆய மெல்லா மதுசொல்லிப் போக வவணே வாழ்கின்ற பேயுங் கூடிப் பெரிதுமகி சூழ்ந்து தம்பெற் றிசொல்லி னாயு மாக்க ருத்துமில னாவ னிவனங் கட்கென்னிற் றீயு மன்னென் றேற்றகரு மையாலெனுஞ்சிந் தையிலவாய்

43 நிரந்து வெங்கதி ரெழுதலி னிற்றலை யிலதாய்க் கரந்த காரிருள் போற்கணங் காண்டலுக் கரிதாய்ப் பரந்த நாம்பல நாடுகள் பாடிக ணாடி (றெண்ணி) யிரந்தோர் வன்றெய்வங் கொணர்ந்திவற் கடிதுமென்

44 ஆசு மிங்கிருந் தினியென்னை எழுகவென் றயல காசி நாட்டினுஞ் சேடிய நாட்டினுங் காணா தேசந் தாம்பல திரியவத் தென்றிசை நீல கேசி மாதெய்வந் தலைப்பட்டுக் கிளர்ந்தின்ன வுரைக்கும்.

45 வலிசெய் தெம்மிடம் புகுந்தடு மடையொடு முடைசேர் பலியு மூட்டுதல் பாவமீ தெனப்பலர்க் குரைத்துக் கலிகொள் காடுதன் காற்பொடி யாகவுங் கருதா னலைசெய் தானெமை யாமுனக் கபயமென் றழுத.

46 அழுவ தென்செய அருந்தவம் வலித்தவ னிருந்து பொழுது போக்குதல் புரிந்தனன் பொருத்தம· துடைத்தே கழுகு தாமுணக் காட்டுவ னெனக்கைகள் புடையா வெழுக வென்றுசென் றிடுபிணப் பறந்தலை யிருந்தாள்.

47 இருட்டி ருட்டென நடந்துசென் றெழுந்தெழுந் திருக்கும் வெருட்ட லன்னினை விழுங்குவ னெனத்தன்னை வியக்கு மருட்டி றம்மில னறியினி யருவரை நெடுங்கோட் டுருட்டு வேனென வுயர்தவத் தவன்முன்னை யுரைக்கும்.

48 சீல நல்லன சினவரன் றிருமொழி தெளிந்தான் கால மூன்றினுங் கடையில்பல் பொருளுணர் வுடையான் மேலு மின்னபல் வியந்தரம் வெருட்டுத லறிவான் நீல கேசிதன் னெறியின்மை யிதுவென நினைந்தான்.

49 வெருட்டு மாகிலும் வெருட்டுக விகுர்வணை களினாற் றெருட்டு வேனிவ டிறமின்மை சிறிதிடைப் படலும் பொருட்டி றங்களைப் புலமையிற் புனைந்துரை பெறுமே லருட்டி றந்நல வறநெறி பெறுதலு மறிந்தான்.

50 மாக மேயுற மலையன்ன சிலையொடு சிலையா மேக மேயென விசும்பிடை வெடிபட விடியா நாக மேயென நாவினை நீட்டுவ காட்டாப் பாக மேயெனப் பலவெனச் சிலவென வுலவும்.

51 இலங்கு நீளெயிற் றிடையிடை யழலெழச் சிரியாக் கலங்கு மார்ப்பொடு சார்ப்படு மழையெனத் தெழியாப் பிலங்கண் டன்னதன் பெருமுழை வாய்திறந் தழையா மலங்க நின்றுதன் மடனெடு மயிர்க்கையிட் டுயிர்க்கும்.

52 பொங்கு பூமியுட்பொடிபட வடியிணை புடையாப் பங்க மேசெய்து படபட வயிறடித் திறுகி யங்கி போலவீழ்ந் தலறிநின் றுலறியங் காக்கு மெங்குந் தானென வெரிகொள்ளி வளையெனத் திரியும்.

53 கல்லி னாற்கடுங் கனலினுங் கடுகென வெடிக்கும் வில்லின் வாய்ப்பெய்து விளங்குவெண் பகழிகள் விடுக்கும் மல்லி னாற்சென்று மறித்திடு வேனென நெறிக்கும் பல்லி னாற்பல பிணங்களி னிணங்களைப் பகிரும்.

54 ஓடு முட்குடை யுருவுகொண் டருவென வொளிக்கும் பாடு பாணியிற் பலபல கலகல வொலியா ஆடு நாடக மரும்பசி களைகென விரும்பி ஊடு போவனென் றுரைத்துரைத் துள்ளஞ்செய் தொழியும்.

55 குஞ்ச ரம்பெருங் கொடுவரி கடுவிடை கொலைசூ ழஞ்சு தன்மைய வடலரி யெனவின்ன பிறவும் வெஞ்சி னம்பெரி துடையன விவையினும் வெருளான் றஞ்ச மன்றிவன் றவநிறை சுடுமெனத் தவிர்ந்தாள்.

56 அச்ச மேயுறுத் தழிக்குவன் தவமென அறியேன் விச்சை வேறிலன் விழுக்குண முடையனிவ் விறலோன் இச்சையாலன்றி யிவன்முன்னை நிலையெனக் கரிதா நச்சு மெய்யென நடுங்கும் னுடம்பென வொடுங்கி.

57 ஆற்றல் சான்றவ னருந்தவ வழலெனை யடுமான் மாற்று மாறென்கொ லெனநனி மனத்தினு ணினையாச் சீற்றந் தீர்ந்தென்செய் கருவினை தணிகெனப் பணிந்தாள் கூற்றம் போல்வதோர்கொடுமையையுடையவள் குறைந்தே.

58 சிந்தித் தாளிது செறியெயிற் றரிவைய துருவாய்ப் பந்தித் தாகிய பழவினை கெடுகெனப் படிற்றால் வந்தித் தியான்கொண்ட வடிவினின் மனநிறை யழித்தா னொந்தித் தீநிகர் நோன்புகை விடுமிவ னெனவே.]

59 யாம நீங்கலு மரசன்ற னொருமக ளுரைசால் காம லேகைதன் னுருவொடு திருவெனத் தோன்றித் தாமஞ் சாந்துதண் மலரின்ன பலகொண்டு துணைசால் சேமங் காவல சேவடி போற்றெனச் சென்றாள்.

60 வணங்கி வந்திடம் வலங்கொண்டு வழிபடு பொழுதில் கணங்க டாம்பல கடன்சொல்லிக் கலந்தெடுத் தேத்தித் துணங்கை யாடத்தன் றுகிலிடை மேகலை துளங்க வணங்கு மெய்யவ ளருந்தவ னுழைவர நினைந்தாள்.

61 காவ லாளகுங் கடையிறந் திவண்வர வொழிக வேவ லாளரு மிதற்கெய்து மியல்குறை முயல்க கூலி யான்குறை யுளதெனக் குறுகுமி னமரென் றோவில் பல்புக ழுறுதவ னறியநின் றுரைக்கும்.

62 ஆண்டைக் கோட்டத்தை அணைந்ததோ ரகலிலை யால மாண்டைக் காயதோர் மரமுத லிருந்தமா தவனைக் காண்டக் காயென்செய்கருவினை தணிக்கெனப் பணிந்தாள் வேண்டிக் கொண்டவவ் வியத்தகுவிளங்குரு வுடையாள்

63 வேண்டிய வுருவத னாலும் வேட்கைசெய் யுருவத னாலுங் காண்டகு மடவர லுருவங் காமுறு வதுநனி தாங்கி யீண்டிய மிகுகுணத் திறைவ னியல்பினை யெனையது நினையா நீண்டதோர் கொடியயற் கொடிபோ னிறைதவ வருளென நின்றாள்.

64 உடம்பொடு முயிரிடை மிடைந்த வொற்றுமை வேற்றுமை விகற்பிற் றொடர்ந்தபல் வினைகளைத் துணிக்குஞ் சுதநெறி முறைமையு மறிவான் படர்ந்ததன் யோகினை நிறுவிப்பணிந்தவரட் காசிடை மொழிந்தா னிடம்பக மகளிவள் பெரிது மிராசபுத் திரியல ளெனவே.

65 என்னைஈண் டைக்கு வரவென் றருந்தவன் வினவலு மெழிலார் பொன்னனாள் புடைபெயர்த் திட்ட பொலங்கல மனங்கலக் குவபோன் மின்னொளி யோடுற மிழற்றமிழற்றுவ கிளியென மொழிந்தாள் முன்னநான் பரவிய வரங்கண்முடிகுறை கொடுப்பதற் கெனவே.

66 யாதுநீ கொண்ட வரமென் றருந்தவ னியல்பினின் வினவ வேதினாட் டிறையெங்க ளிறைமே லியல்பின்றி யெழலொழி கெனவே போதுசாந் தவியொடு புகையும் பொருந்திய பொருந்தெய்வக் கெனலு மோதிஞா னியிது வாயி னுரையழ கீதென மொழிந்தான்.

67 தோடுகொண் டொருசெவி விளங்கத் துளங்குவ மகரமொன் றாடப் பாடுவண் டோடுசுரும் பரற்றப் பல்கலம் வயிரவில் வீச வாடுகொம் பனையவ ருரைக்கு மச்சமோ பெரிதுடைத் தடிகள் காடுகண் டாற்பிறர்க் கறியேன் கவற்றுவ தொக்குமீ தெனக்கே.

68 மணிநகு நெடுமுடி மறவேன் மன்னவன் மகளெனின் மடவாய் அணிநகை யாயமோ டாடி அரும்பெறற் சுற்றமோ டிருப்பாய் பிணிமிகு பேய்வன மிதனுட் போதுற லொருதலை பிறவோ துணிவொடு துறந்தவர்க் கல்லாற் றுன்னதற் கரிதிது பிறர்க்கே.

69 வேணுவோ டினையன பிறவும் வியப்புறு பெருவனம் வினவிற் பேணுதற் கரிதிது பெரிதும் பிணிதரு பேய்வன மெனவே வாணுதன் மயிர்குளிர்த் துரைக்கும் மாதவத் தடிகளென் றானுங் காணுதற் கரியன வுருவங் கண்டறி வனகளு முளவோ.

70 புக்கிருந் தொருமனை யுறைவார் போவதும் வருவதுங் கண்டான் மக்களுந் தாயரந் தம்முள் மருள்வதும் வெருள்வது முளதோ மிக்கபல் கதிகளு முயிரின் மெய்ம்மையு முணர்ந்தவர்க் கரிதே ஒக்குமற் றவையுள வேனு முரைப்பது பொருத்தமின் றெமக்கே.

71 சந்திர முனிவர னுரைப்பத்தளிரியல் சாவுகள் சாரா மந்திர முளதெனி னடிகள்மனத்தொடு பணிமின மெனவே யந்தரத்தவர்களும் வணங்குமருந்தவ னவையுனை யடையா இந்திரன் வேண்டினும் பேய்களென்னமற் றிலங்கிழை மடவோள்;

72 துப்படு துவரிதழ் துடிக்குந்துகிலிடை யகலல்கு றுளக்குஞ் செப்படு வனமுலை செறிக்குஞ்சிதரரி மழைக்கணுஞ் சிறைக்கு மொப்படு துடியிடை யொசிக்குமுவ்வுறு மதிமுக முழற்று மிப்படி யவளிவை செயலுமிவையெனை யெமக்கென வுரைத்தான்.

73 காதின கனகப் பைந்தோடுங்கைவெள் வளைகளுங் கழலத் தாதின வினமலர் பலவுந்தலையன நிலமிசை யுதிரப் போதன புணரரி நெடுங்கண்புனல்வரப் பூந்துகிற் புடையா வேதனை பெரிதுடைத் தடிகள்விளிகவிப் பிறப்பென வுரைத்தாள்.

74 பிறவியும் பிறவியுட் பிறக்கும் பிணியுமப் பிணியினைத் துணிக்கு மறவியின் மருந்துமம் மருந்தின்மாட்சியுங் கேட்குறின் மடவா யறவிய மனத்தினை யாகி அலங்கழித் தொழிலொழிந் தடங்கி உறவினை யோம்பினை யிருவென்றுயர்தவ னுரைத்தலு மிருந்தாள்.

75 நாற்கதி யுள்ள நரகரை நாஞ்சொல்லின் மூன்றுவகைக் காற்று வலையங்க ளேந்து நிரையக் கதிநிலந்தா மேற்ற நிகோதத்தி னிம்ப ரிருளி னிரளிருண்மே லாற்றப் புகையள றார்மணற் கூர்ம்பர லாய்மணியே.

76 ஏழா யவைவிரிந் தெண்பத்து நான்குநூ றாயிரமாம் போழா மவற்றப் புரையின் விகற்பமும் பொற்றொடியாய் கீழா ரலிகண் முழுச்செவி கிண்ணர்க ளெண்ணிகந்த வூழாம் பிறப்புமுவ் வாதமல் லாருரு வொப்பினரே.

77 விலங்கின் வகையும் விரிவன யான்சொல்ல வேண்டுதியே லலங்கலம் பூணா யிருவகை யாமவை யென்கொலென்னின் நிலங்களி னிற்பவுஞ் செல்பவு மாமென நிற்பனதா மிலம்பட லின்றியிவ் வையகத் தைந்தா யியன்றனவே.

78 இயங்கு வனவு மிருபொறி யையறி வெல்லையவாய் மயங்கியிம் மத்திம நல்லுல கத்தின மற்றிவற்று ணயம்படு நாவின் மூக்கில நந்து முரண்முதலா வயங்கியங் கோடிய வாயிரண்டாய அறிவினவே.

79 உண்ணி முகுட்டை எறும்பெறி தேண்முத லாவுடைய வெண்ணில் பல்கோடிய வாயவ் விரண்டொடு மூக்குடைய கண்ணிய மூவறி வாமவை பெற்றாற் கருணமிலா நண்ணிய வண்டொடு தேனீ யனையவு நாலறிவே.

80 இறப்பப்பல் காலின வெட்டி னிரண்டிரண் டேயிழிந்த பறப்ப நடப்ப தவழ்வன வூர்வன பற்பலவாச் சிறப்புடை யிந்திய மைந்தென வந்த செவியுடைய மறப்பில் கடலொடு தீவினு மல்கிய பல்விலங்கே.

81 வெப்பமுந் தட்பமு மிக்கு விரவிய யோனியவாய்ச் செப்புவ செப்பில் செய்கைக ளாற்றம செய்வினையைத் துப்பன போர்த்தும் பொடித்தும் பொரித்து முன்றோன்றுவன வொப்பவு மொப்பிலுடம்புடம் பேகொண் டுழல்வனவும்.

82 நல்லவர் தீயவர் திப்பிய ரொப்பில் குமானுயரோ டல்லவ ருள்ளுறுத் தாடவ ரைவரு ளாதியினார் சொல்லுக தன்மையென் பாயெனிற்சொல்லுவன் பல்வகையாற் புல்லிய போகப் பெருநிலந் தன்னைப் பொருந்தினரே.

83 தீமா னுயர்திறந் தேற்றிடிற் றீவின் சிறுநிலத்தார் கோமான் முதலார் குணங்களிற் குன்றிய குற்றத்தராய்த் தாமாம் பெரிய தவந்தலை நிற்பினுந் தன்மைபெறா ராமான் மடப்பிணை யன்னமென் னோக்கி யவரதிறமே.

84 திப்பிய ரென்னப் படுபவர் தீர்த்தந் திறப்பவரு மப்பிய புண்ணியத் தாழிய ராழிய ரையவரும் வெப்பிய வான் செலவ் விஞ்சையரெஞ்சலில் வெள்ளியரும் பப்பிய ரேயவர் பான்மை வினவினும் பைந்தொடியே.

85 கோலமி னோன்றற் குமானுயர் தம்மையுங் கூறுவன்கேள் வாலமுங் கோடும் வளைபல்லும் பெற்ற வடிவினராய்ச் சீலமுங் காட்சியுந் தீண்டலு ரந்தரத் தீவிலுள்ளார் நீலமும் வேலுங் கயலு நிகர்த்த நெடுங்கண்ணினாய்.

86 மானுய ரென்னப் படுபவர் தாமா விதையமென்னுங் கானுயர் சோலைக் கரும நிலத்தார் கருவினை போய்த் தானுய ரின்பந் தவத்தாற் றலைப்படுந் தன்மையினார் வானுயர் தோன்றல் வளர்பிறை யேசிய வாணுதலாய்.

87 தூமாண் பவணர் வியந்தரர் சோதிடர் கற்பருப்பால் வேமானியரென வைவரித் தேவர் விரித்துரைப்பிற் றீமாண்குமரரோ டீரைவர் முன்னவ ரன்னவர்பின் பூமாண் புனைகுழ லாய்க்கினிச்சொல்லற் பொல்லா துகொல்லாம்.

88 இன்குர லார்முத லாநும ரீறா விவருமெண்மர் பொன்பிதிர்ந் தன்ன பொறிசுணங் காகத்துப் பூண்முலையா யென்றலு மீரிழு தாரழ லுற்றாங் கினைபவளை நின்றிறம் பின்னறி வாமறங் கேளென நேர்ந்தனளே.

89 அந்தர வாழ்க்கையர் சோதிடர் தாங்களு மைவகையர் சந்திர சூரியர் கோளவர் நாளவ ரல்லவராய் மந்தர மாமலை தன்னை வலமுறை சூழ்பவருஞ் சிந்துபு நின்றுசெல் லாதே விளங்குந் திறலவரும்.

90 ஆரண னச்சுதன் சோதம னந்தமு மாதியுமாய்ப் பாரணை நல்ல பதினறு கற்பத் தவரவர்மே (வோர் லோரிண ராயமும் மூன்றொன்ப தைந்துக ளுள்ளுறை வீரியர் வைமா னிகரெனக் கொண்ணீ விளங்கிழையாய்.

91 இப்ப டிப்பி றவியு ளொப்பி றீய நாரகர் துப்ப ரிய மாதுயர் செப்பு வாஞ் சிறிதினி.

92 ஈரி ருள்ளி னார்கடம் பேர ளவ்வைஞ் ஞூறுவி லோரு மோச னையவை யூரும் வேத னையரே.

93 காள மான மெய்கடாம் வாள வாய்க ளாற்பல கீள வாப வாயினும் மீளு மேனி நீரினே.

94 மல்ல வர்ம றஞ்செய்துங் கொல்ல வாவ வல்லமெய் பல்ல வாவு முள்ளன சொல்ல வாவ வல்லவே.

95 பண்டை வோ¢ யர்கடாங் கண்டு கண்க னல்களாய் மண்டி மாம றஞ்செய்ப வெண்ட வப்ப லவுமே.

96 பேடி வேத னைபெரி தோடி யூறு மாதலாற் சேடி யாடு வன்மையிற் கூடி யாவ தில்லையே.

97 கொன்ற பாவ மென்றுமூன் றின்ற பாவ மென்றுதீச் சென்று வேவ வாயினு ணின்று கூவ வாக்குவார்.

98 உண்ண வாவ நீரெனக் கண்ண வாவ வாபவர் நண்ண லாவ வல்லதே ரெண்ண லாவ தில்லையே.

99 கரிவ கன்றி நின்றகம் பொரிவ பொங்கி வீழ்ந்தழைத் தெரிவ வின்ன மாதுயர் பரிப வரு மில்லையே.

100 அங்கு வெங்க னலினுட் டங்கி யுந்த லைத்தலை பொங்கி யும்பு கைபுக நுங்கி யுந்நு கர்வவே.

101 ஓச னைய பல்லுயிர் வீவி னையு றவருங் காய்சி னக்க டுவிடம் பேசி னார்க்க ருளுணா.

102 ஓச னைய பல்லுயிர் வீவி னையு றவருங் காய்சி னக்க டுவிடம் பேசி னார்க்க ருளுணா.

103 நலங்களில் பிறவியு ணஞ்சுணா ரகர்கள்பின் விலங்கின்வே தனைகளும் விரிக்கல்வேண் டும்மெனிற் கலங்கியொன் றொன்றினைக் கண்டுகாற் றென்னப்போ மலங்கிநின் றும்மனம் மன்னுமஞ் சுங்களே.

104 தண்ணென்மா மழையினாற் றாமழிந் துழல்பவும் புண்ணினா லழியமெய்ப் போரிடைப் புகுத்தவு முண்ணல்கா ரணத்தினா லோட்டியிட் டொறுக்கவு மெண்ணில்பல் வலையினு மிழக்குமவ் வுயிர்களே

105 வேதவா தியர்கடம் வேள்விவாய விட்டவும் பூததே வர்கட்கெனாப் புல்லியோர்கள் கொல்லவு மோதுநோய் மருந்தெனவ் வூட்டுதற் குரைப்பவும் சாதலால் வரும்மிடர் தாமெனைப் பலவுமே.

106 நடுக்கமுறு நாற்கதியு ணரர்கள்படுந் துன்ப மெடுக்கிலவை தாமிரண்டு பாகினவு மாகு மடக்கமிலர்க் காவனவு மன்றிப்பொது வென்றும் வடுப்பிளவு வாட்பகழி வாட்டியவொண் கண்ணாய்.

107 தீவினைசெய் வாயிலொடு செற்றமனக் குற்ற மாவினையி னாம்வெகுளி மானமொடு மாய மோவினையிற் பற்றவல மச்சமொடு மற்று மாவனவெ லாமடக்க மில்லவர்த நோவே.

108 இழுக்கலுறு தீக்கதியி லுய்க்குமென வெண்ணார் விழுக்குலங்கள் மாசுபடு மென்பதனை வேண்டார் புழுக்குலங்க ளானிறைத்த போர்வையென வோரா ரழுக்குடம்பிற் கேகெடுவ ராடவர்க ளந்தோ.

109 மதுவொன்றுங் கோதை மலரன்ன கண்ணாய் பொதுவென்ற நோயும் புணர்ந்திரண்டு பாகா மிதுவொன் றிடையூ றிரண்டாய் விரியு மதுவன்றி மெய்ப்பிணியு மூன்றா யலரும்.

110 பெடையூடு சாயற் பிணையன்ன நோக்கி யிடையூ றிரண்டு மினியாவை யென்னி னடையா வுயிரதுவு மல்லதுவு மன்ன நடையாய் முதலதுவு நாற்பூத மாமே.

111 பெருமழையு நீரும் பெரிதெறியுங் காற்றுங் கருமலையுங் கல்லுங் கடுநவையு நஞ்சுஞ் செருமலையும் பல்படையுஞ் செந்தீயும் வந்திங் குருமிடியு மெல்லா முயிரல்ல வூறே.

112 செத்துவங்க டாக்கிச் செயிரி னணங்குதலும் மக்கள் பலவகையின் மன்னு மலைகொலையுங் துக்கஞ்செய் பல்விலங்கிற் றோன்று மிடையூறு மொக்கவிவை மூன்று முயிருடைய வூறே.

113 தீர்வனவுந் தீராத் திறத்தனவுஞ் செய்ம்மருந்தி னூர்வனவும் போலா துவசமத்தி னுய்ப்பனவும் யார்வினவுங் காலு மவைமூன்று கூற்றவா நேர்வனவே யாகு நிழறிகழும் பூணாய்.

114 நல்லாய்நா ரின்றியே நாமுன் விரிசெய்த வெல்லா விமையோர்க்குமென்று மிறுதி சார்ந்த தல்லா லகன்றுன்ப மாகா நுமரன்றிப் பொல்லா தவர்களுறு மல்லைப் புகலுறுங்கால்.

115 தீயே யெனவெவர்க்குஞ் செல்லல் பலவாக்கி வேயே புரைதோளாய் மிக்க விடமெங்கும் பேயே யெனப்பட்டுப் பேணா தனசெய்வர் நீயே யெனினல்லை நின்போல்வ ரன்றோ.

116 பேர்தற் கரும்பிணி தாமிவை யப்பிணி தீர்தற் குரியதிரி யோக மருந்திவை யோர்தற் றெளிவோ டொழுக்க மிவையுண்டார் பேர்த்த பிணியுட்பிற வார்பெரி தின்பமுற்றே.

117 மானொத்த நோக்கிமருந் தென்றவைமூன் றினுள்ளும் ஞானத்தி னன்மைநனி கேட்குவை யாயினக்கா லூனத்தை யின்றியுயி ராதிய வுள்பொருள்க டானற் குணர்தலிது வாமதன் றத்துவம்மே.

118 காண்டலு மல்லதே யளவை காண்டன்முன் பூண்டவைம் பொறிமன மவதி புண்ணிய மாண்டகு மனப்பரி யாயங் கேவல நாண்டகு மரிவைய ருருவ நண்ணினாய்.

119 நினைவு மீட்டுணர் வூக நேர்தரு புனைவுசே ரணுமைபொய் யின்மை மெய்யுரை முனைவர்தம் மாகம மொழியு மாகுமென் றனையன காட்சியி லளவை யைந்துமே.

120 வைப்பு நயனள வைபுகு வாயிலென்றும் பொய்ப்பி லுயிரே பொருவில்குண மார்க்கணை செப்பி னிவற்றிற் றிரியாதுள் புகுபவாயி னொப்பில் பெருமை யுணர்விற்குயர் மாட்சியாமே.

121 காட்சி வகைதான் கடவுண் முதலாய மாட்சி யமைந்தபொரு ளெட்டு மனத்துவைத்து மீட்சியில தாய்விரிந் துந்திய வின்பவெள்ள வேட்கையது வாந்தெளி வென்றனர் வென்றவரே.

122 முந்துற்ற மூடப் புலிமூன்றும் பிழைத்த பின்னை யன்பச்ச மாசை யுலகோடிலிங் காத்த ரொப்பு மென்பெற்று மேத்த லிலராயெண் மயத்து நீங்க லின்புற்ற காட்சி யுடையார்க்கியல் பாகு மன்றே.

123 ஐயுற்றல் வேட்கை யுவர்ப்பேமயக் கியாது மின்மை செய்குற்ற நீக்க றிரிந்தாரை நிறுத்த லின்றிப் பொய்யற்ற காதற் பொருவில்லறங் காட்ட லெட்டுங் கையுற்ற வாயில் லதுகாட்சியின் மாட்சி யாமே.

124 நன்றாய காட்சி யுடனாகிய ஞானந் தன்னோ டொன்றாகி யுள்ளத் தொழியாமை யொழுக்க மென்ப குன்றாத வொன்றுங் குறைபாட்டதுங் கூறு பவ்வே வென்றார்த நூலின் விதிமெய்ம்மை யுணர்ந்த வரே.

125 போற்றல் செறிவே பொறையாதிய நல்ல றமு மேற்ற நினைப்போ டிருசார்வி ழுத்த வமு மாற்றல் பரிசை முதலாகிய வன்ன வெல்லாம் மாற்ற மறுக்கு மொழுக்கத்தின் மாட்சி யாமே.

126 யோக மிவற்றை யுடனுண்ட வுயிர்க ளெல்லாம் மாக விசும்பி னவர்தம்மொடு மன்ன ரும்மாய்ப் போக நுகர்ந்து பொருந்தாவினை புல்ல லின்றி யேகநல் லின்ப மியைந்தாலிழ வில்லை நல்லாய்.

127 பிறவியா மாறும் பிணியாந் திறமும் மறவிதா னில்லா மருந்தாம் வகையும் திறவியாள் கேட்டுத் தெரிந்துள்ளங் கொள்ள வறவியான் றானு மறவமிர்த மீந்தான்.

128 வண்டவாம் வார்குழலும் வாளெயிறும் பூண்முலையும் தொண்டைவாய் நன்னலமுந் தோளுந் துடியிடையும் கண்டவாங் காமுகரும் யாமுங் கணநரியும் விண்டவாக் கொண்டுணரின் வேறுவே றாமன்றோ.

129 கரையவா வாங்குங் கயமகன் கைத்தூண்டி லிரையவாப் பன்மீ னிடருறுவ தேபோல் நுரையவா நுண்டுகிலு மேகலையுஞ் சூழ்ந்த வரையவாய்ப் பட்டார்க்கு மாழ்துயரே கண்டீர்.

130 மட்டார் மலர்புனைவும் வாணெடுங்கண் மையணிவும் பட்டார் கலையுடையும் பல்வளையும் பைந்தோடு நட்டாரை யெல்லா நரகுக்கே யுய்க்கு நாய்க் கொட்டார்த்தார் செய்யும் கோலங்கள் வண்ணம்.

131 ஆடினாய் நான மணிந்தாய் கலன்மாலை சூடினா யேனுஞ் சுணங்கார் வனமுலையா யூடினா யாக வொழுக் கூற்றைப் பல்பண்டம் மூடினாய் தோலின் முகமனுரை யேனே.

132 மின்போ னுடங்கிடையும் வேயேய் திரடோளு மென்றே யிவை மகிழ்ந்தீங் கென்முன்னே வந்தாயாற் புன்றோலும் பல்லென்பும் போர்த்த புறங்காட்டு ளன்றே யுறைவ னவற்றான் மருள்வேனோ.

133 மெழுகுருகு மண்பாவை மேதையான் காய்த்தி யொழுகுருகு செம்பொன்னா லுண்ணிறைந்த தேபோல் புழுகுருகு மெய்காட்டிப் பொல்லாத போக்கி யழகுருவு கொண்டா ளறவமிர்த முண்டாள்.

134 காய்வ செயினுங் குழவிக்கட்கவன்று கழிகண் ணோட்டத்தாற் றாய்தன் முலையி லமுதூட்டுந்தகைய னறவோன் றானென்று மாய வுருவ மாறித்தன்மற்றை யுருவ மேகொண்டு பேயேன் செய்த பிழையெல்லாம்பெரும பொறுவென் றிறைஞ்சினான்.

135 முழங்கு முந்நீர் வையத்து முனிதக் கார்தம் முன்னின்று வழங்க வாட்ட மொழிவர்நமன்னும் பொறாத வகையுண்டோ வழுங்க லென்ற வறவோன்றனலர்கொள் பாதம் பெரிதேத்தித் தொழுங்கை யாளக் குணக்குன்றைத்துதிப்ப னென்று தொடங்கினாள்.

136 வெள்ள மாரி தரித்தோய்நீவினையின் வாயி லடைத்தோய்நீ யுள்ள மாட்சி யுடையோய்நீயுயப்போம் வண்ண முரைத்தோய்நீ நள்ளென் யாமத் தியான்செய்தநவைக ளெல்லா நனிகண்டு மெள்ள லில்லாப் பெரியோய்நின்னிணையில் பாத மணைவல்யான்.

137 மூட மூன்று முரைத்தோய் நீமுரண்செய் தோற்ற முனிந்தோய் நீ வீடுங் கட்டும் விரித்தோய் நீவினையி னின்பம் வெறுத்தோய் நீ காடு கிளர்ந்து காட்டியான் கலக்க வொன்றுங் கலங்காத பாடற் கரிய பெரியோய்நின்பழிப்பில் பாதம் பணிவல்யான்.

138 அல்லற் பிறவி யகன்றோய்நீஆசை வெவ்வே ரறுத்தோய்நீ வெல்லற் கரிய வனங்கனைமெய் வெண்ணீ றாக வெகுண்டோய்நீ கொல்லக் கருதி வந்தேனைக்குணங்க ளாலே வணங்குவித்த சொல்லற் கரிய பெரியோய் நின்றோமில் பாதந் தொழுவல்யாள்.

139 உடம்பின் மெய்ம்மை யுணர்ந்தோய்ந £யுறங்க லார்வ மறுத்தோய்நீ யிடங்கொ ளின்னா வினையெல்லா மெரிக்கும் வாயில் விரித்தோய்நீ யடங்க லில்லேற் கருளினாலறங்கூர் மாரி பொழிந்தோய்நின் றடங்கொள் செந்தா மரையடியென்றலைய வேயென் றலையவே.

140 தடம்படு மாரி தலைத்தலை நூற விடம்படு பல்லுயிர் மெய்வழி யேற வுடம்பொடு வேறெனு மோர்ப்பினை யாகி யடங்கிய நின்னடி யஞ்சலி செய்வேன்.

141 கல்லுரு கக்கடுங் காற்றெறி போதினி னல்லிருள் கூர்சுடு காட்டிட மாகப் பல்வினை யும்பறிப் போய்நின் பாதம் நல்வினை யிற்றொழு வேனினி நாளும்.

142 மங்குன் மழைபொழி மாரிபெந் நாளிற் கங்குலெண் ணில்லங் கவலைசெய் காட்டு ளெங்கு மியங்கல னென்றிருந் தோய்நின் பங்கயம் போல்வன பாதம் பணிவேன்.

143 இற்றவர் தம்முட றின்றிட யாமம் முற்ற நரிமுர லும்முது காட்டுட் பற்றற வேநினை வோயிரு பாதம் சுற்றுபு யான்விதி யிற்றொழு வேனே.

144 திண்டிறல் சேர்சிறு பேயறை கீறி வெண்டலை யால்விளை யாடிய காட்டு ளெண்டுக ளும்மெரிப் போய்நின பாதம் வண்டறை பூவொடு வந்தனை செய்வேன்.

145 பிணங்க ளிடையிடை போரழ லீமத் தணங்கு துணங்கைசெய் தாடிய காட்டுட் குணங்க ளுடையன குன்றுத லில்லாய் வணங்குவ னின்னடி வைகலி னாளும்.

146 நுனித்தகு நன்னெறி நோக்கின ளாகி முனிப்பிறை யோனடி மும்மையி னேத்திப் பனிக்கட லன்னதொர் பாவமுஞ் செய்தே னினிச்செய்வ தென்னுரை யாயெனக் கென்றாள்.

147 விலங்கு வெந்நர காதிக டம்முள்

   விளிந்து தோன் றிவிழு நோயொடு முற்றுக்
   கலங்கி யெங்குங் கண்ணில வாகிக்
   கவலைவெள் ளக்கட லிற்குளித் தாழு
   நலங்களில் லாவுயிர் தங்களுக் கெல்லா
   நடுக்கநீக் கியுயர் நன்னிலை யீயுஞ்
   சலங்களில் லாப்பெரி யோன்சரண் கொண்ணீ
   சனங்கட் கெல்லா மவன்சர ணென்றான்.

148 உய்தல் வாயுரைத் தாயதன் மேலு

   முயிருள்ளிட் டபல வுள்பொருள் சொன்னாய்
   நைதலில் லாத்தெளி வோடுநன் ஞான
   நானுங் கொண் டேனுன் னற்குண மெல்லாம்
   பெய்துதந் தாய் பிழைத் தேற்கினி தாவோர்
   பிராயச்சித் தம்பெரி யோயரு ளென்னச்
   செய்த தீமை கெடக்கட னாட்டிற்
   சினவ ரன்னெறி யேதெருட் டென்றான்.

149 யாஅ தடிக ளதருளா

   லருந்துய ரகல்வகை யதனான்
   மாஅ துடைஅடி யிவைதா
   மறவலெ னெனவலங் கொண்டு
   வேஎ தடவியன் மலைமேல்
   விரிகதிர் மணிவிளக் காதி
   தீஇ தடுதலை விலங்குஞ் சினகர
   முவகையிற் சென்றாள்.


குண்டலகேசி வாதம்[தொகு]

150 கொல்லை முல்லைபைங் கோங்குருந்தங் கோடறண் குரவ நல்ல மல்லிகை நறவம்ஞாழல் தாழைபுன் னாகம் பல்லி தழ்ப்பனிக் குவளை பானல் பாதிரி பிறவு மெல்லை யின்மல ரேந்தி றைவன திடவகைக் கெழுந்தாள்.

151 நீட்சி யோக்கமோ டகலநினையநின் றெங்கணு நோக்கி மாட்சி யால்வலங் கொண்டுமாதவத் திறைவனிற் பிழையாக் காட்சி யேனெனி லெல்லாக்கதவமுந் திறக்கெனத் திறப்ப வாட்சி மூவுல குடையவடிகட மடியிணை தொழுதாள்.

152 அத்தி யாளியோ டாமானட்ட மங்கல மரிய பத்தி பாவைபல் பறவைபயில்கொடி திமிசொடு பிறவும் வித்த கம்பெரி துடையவசித்திர வுருவநன் மலராற் சித்த நன்னெறி பயந்தான்திருவடிக்கு அருச்சனை செய்தாள்.

153 தூமஞ் சாந்தொடு சுண்ணந்துதியொடு பரவுபு தொழுதே தாமந் தாழ்தர நாற்றித்தத்துவ தரிசிய துருவே யாமென றையென வியந்தாங்கன்ன வாயிரத் தோரெண் ணாம நல்லிசை தொடுத்துநாதகீ தங்களை நவிற்றும்.

154 கன்று காலனைக் கடந்தாய்காதற் காமனைக் கடிந்தாய் தொன்று மூத்தலைத் துறந்தாய்தோற்ற மாக்கட லிறந்தா யொன்ற நோய்பகை யொருங்கே யுடைந்து வெங்களத் துதிர வென்றி ருந்தனை நீயே வீரர்தம் வீரர்க்கும் வீரா.

155 சாத னோய்சரை பிறவிதாஞ்செய் திவினைக் கடலுண் மாது யருழந் துறுநோய்மறுகு மன்னுயிர்க் கெல்லாந் தீதி னன்னெறி பயந்துதிரைசெய் நீள்கரை யொருவிப் போத ரும்புணை படைத்தாய்புலவர்தம் புலவர்க்கும் புலவா.

156 அரிய வாயின செய்திட்டமரர் துந்துபி யறைந்து புரிய பூமழை பொழியப்பொன்னெயில மண்டிலம் புதைந்த விரிகொ டண்டளிர்ப் பிண்டிமரநிழ லிருந்திரு வினையும் பிரியும் பெற்றியை யுரைத்தாய்பெரியவர்ப் பெரியவர்ப் பெரியாய்.

157 பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கார்நின் றிரட்டச் சிங்க வாசனத் திருந்துதெளிந்தொளி மண்டில நிழற்றத் திங்கண் முக்குடை கவிப்பத்தேவர்தந் திருந்தவை தெருள வங்க பூவம தறைந்தாயறிவர்தம் மறிவர்க்கு மறிவா.

158 ஊறி யாவது முணராயுறல்வகை யிதுவென வுரைத்தி கூறு வேனெனக் கூறாய்குரன்முர சனையதோர் குணத்தை செற லுள்ளமு மில்லையாய்த்திருமலர் மிசையடி யிடுதி தேறு மாறென்னை நின்னைத்தேவர்தந் தேவர்க்குந் தேவா.

159 கண்ணி னாலொன்றும் காணாய்காணவு முளபொரு ளொருங்கே பெண்ணு மல்லவுஞ் சாராய்பிரிதலில் போ¢ன்ப முடையை யுண்ணல் யாவது மிலையாயொளிதிக ழுருவம· துனதா லெண்ணில் யார்நினை யுணர்வா ரிறைவர்தம் மிறைவர்க்கு மிறைவா.

160 சொற்றி யாவதுங் கேளாய்சுதநயந் துணிவுமங் குரைத்தி கற்றி யாவது மிலையாய்க்கடையில்பல் பொருளுணர் வுடையை பற்றி யாவது மிலையாய்ப்பரந்தவெண் செல்வமு முடையை முற்ற யார்நினை யுணர்வார்முனைவர்தம் முனைவர்க்கு முனைவா.

161 அன்மை யாரவர் தாந்தாமறிந்தன வுரைத்த பொய்யாக்கி நின்மெ யாகிய ஞானநிகழ்ச்சி நீவிரித் துரைத்த சொன்மை யாரிடை தெரிந்தார்தொடர்வினை முழுவதுஞ் சுடுநின் றன்மை யார்பிற ரறிவார்தலைவர்தம் தலைவர்க்குந் தலைவா.

162 ஆதி யந்தளப் பரிய அருகந்த பகவர்த மறஞ்சால் சேதி யம்புக்க வர்தந்திருந்தடி களைப்பெருந் துதிசேர் போதி யிற்பணிந் திருந்தாள்புன்னெறி தாம்பல வவற்றுள் யாதுகொ றான்மு னென்னாலடர்க்கற் பாலது வென்றாள்.

163 ஊன்றின்ற லிழுக்கென்னானுயிரினையு முளதென்னா னோன்றலையு நோன்பென்னானோக்குடைய கணிகையரே போன்றிருந்து பொதியறுக்கும்புத்தன்றன் புன்னெறியை யான்சென்ற· தடிப்படுப்பறைக்கரும மிதுவென்றாள்.

164 மண்டலத்தி னோக்குவாள்யடுத்ததன தவதியால் கண்டனடான் காம்பிலிக்காவலன் கடைமுகத்தோர் தண்ட¨¡ய பொழில்நாவற்சாகைநட் டுரைபெறாக் குண்டலகே சிப்பெயரைக்குறியாக வேகொண்டாள்.

165 தருமத்திற் றிரிவில்லாடயாச்செய்தற் பொருட்டாக நிருமித்த வகையினதாநெடுநகரை வலஞ்செய்து திருமுத்தப் பீடிகைக்கட்சித்தரையுஞ் சிந்தித்தோர் பெருமுத்தப் பெண்ணுருவங்கொண் டியைந்த பெற்றியளாய்.

166 அந்தரமே யாறாச்சென்றழனுதிவே லரசர்கட் கிந்திரனே போன்றிருந்தவிறைமகன திடமெய்திக் கந்திருவ மகளேன் யான்காவலனைக் காண்குறுவேன் வந்திருந்த துரைவிரைந்து வாயிலோ யெனச்சொன்னாள்.

167 கருங்களிறுங் களிமாவுங் கந்தோடு பந்தியவே நெருங்குபுபோய் நீருண்ணாதேர்பண்ணா நெடுங்கடைக்குப் பெரும்படையுஞ் சாராதிப் பெண்பாவி மரநட்டிங் கிருந்ததன் றிறத்தினாலெனக்கரிது புகலென்றான்.

168 வாயிலோ னுரைகேட்டு வடிக்கண்ணாண் முகநோக்கி கோயிலையான் புகவிலக்குங்குறையென்னை முறைதிருத்தும் பூசலிங் குடையையோபொருளிழவோ வுயிரிழவோ நீயிலையார் புதனடற்குநிமித்தமிங் கென்னென்றாள்.

169 என்கருமம் வினவுதியேலிலிங்கியரு ளென்னோடு நன்குரைப்பார்த் தரவ்வேண்டிநாவற்கொம் பிதுநட்டே னுன்கரும நீ செய்வாய்நுழைந்தறிவு முடையையேல் மன்பெரியான் றிருந்தவையுண்மாற்றந்தா வெனச்சொன்னாள்.

170 அப்படித்தே யெனின்வாயிலடைப்பொழிக யானைதே ரெப்படியு மியங்குகநும்மிறைமகற்கு மிசைமினென் றிப்படியா லிவையுரையாவிலைநாவ லிறுத்திட்டா டுப்போடு கனிதொண்டை துயில்கொண்ட துவர்வாயாள்.

171 வேந்தனு மதுகேட்டே விம்முயிர்த்த வுவகையனாய்ப் பூந்தடங்க ணல்லார் புகுதுக வெனப்புகலும் போந்திருக்க வெனவிருக்கை பொருந்திய வாறவர்கட் கீந்துலகத் தியற்கையு மினிதினிற் செய்திருந்தான்.

172 முதலவனோ டவனூலுமந்நூலின் முடிபொருளு நுதலிய பொருணிகழ்வுந்நுங்கோளு மெமக்கறியத் திதலைமா ணல்குலீர்தெருட்டுமி னெனச்சொன்னா னதலையும் பெருங்கதவமடைப்பொழித்திட் டலைவேலான்.

173 நன்றாக வுரைத்தனைநீநரதேவ நின்னவையுள் வென்றார்க்கோர் விழுப்பொருளும்தோற்றார்க்கோர் பெரந்துயரும் ஒன்றாக வுரையாக்காலுரையேன்யா னெனச்சொன்னாள் குன்றாத மதிமுகத்துக்குண்டலமா கேசியே.

174 அறத்தகைய வரசனுமதுகேட்டாங் கவர்க்குரைப்பான் சிறப்பயர்வ னன்றாகவென்றார்கட் கின்றேயான் புறப்படுப்பன் றோற்றாரைப்பொல்லாங்கு செய்தென்றாற் கிறப்பவும் பெருதுவந்தாரிலங்கிழையா ரிருவருமே.

175 வேனிரைத்த விரிதானைவேத்தவையார் வியப்பெய்தக் கோனுரைத்த வுரைகேட்டே குண்டலமா கேசியுந் தானுரைத்தாள் தான்வேண்டுந்தலைவனூற் பொருணிகழ்ச்சி தேனிரைத்த கருங்குழலா டானும்பின றெருட்டினாள்.

176 ஆதிதான் பெரியனாயறக்கெடு மளவெல்லா மூதியமே யுணர்ந்தவனுறுதரும மேயுரைத்தான் யாதனையுந் தான்வேண்டானயலார்க்கே துன்புற்றான் போதியா னெம்மிறைவன்பொருந்தினா ருயக்கொள்வான்.

177 முந்துரைத்தான் முந்நூலு மந்நூலின் முடிபொருடா மைந்துரைப்பி லுருவுழப்பறிவோடு குறிசெய்கை சிந்தனைகட் செலவோடுவரவுமே நிலையில்லை தந்துரைப்பி னெரிநுதிபோற்றாங்கேடு நிகழ்வென்றாள்.

178 சொல்லியவந் நான்மைமேற்றுணிவினையுந் தான்பெயர்த்து நல்லவையை மனங்கொளீஇநான்மையின் முதல்வைத்த வெல்லையில் குணத்தலைவரிலக்கணமென் றெடுத்ததன்மேற் பல்வகைய பெருங்குற்றம் பதம்பதமாயக் கேளென்றாள்.

179 முன்னெனப் படுவதுதான்முதலில்லாத் தடுமாற்றம் அன்ன தன்கட் பெரியனேலறங்கொண்ட தவமாகும் பின்னதன்கட் பெரியனேற்பிறழ்வெய்துங் காலச்சொ லென்னென்றான் பெரியவாறிருமையினுந் திரிந்தென்றாள்.

180 பெருமைமுன் பெற்றனனேற்பின்னைத்தான் முடிப்பதோர் கருமமிங் கெவனாகுங்காட்டுதியேற் பெற்றிலன்முன் றருமந்தான் கருதிநீசொன்னாயேற் றலைவரே யொருமையா லறந்தெளிந்தவுழப்புலையர் முதலானார்.

181 தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க வென்பதனை யூன்கொடுமை யுரைத்தான்·துணர்ந்திலனே யாகாதோ தான்கெடு மளவெல்லாநினைந்துரைத்த தத்துவந்தான் மான்கடியு நோக்கினாய்வழியறக்கெட் டொழிவதோ.

182 வழிவாழக் கெடுகின்றார்மாந்தருள் மேலாயார் பழிபாவ மோராதான்பற்றினார்ப் பாழ்செய்வான் ஒழிபாவி தலைவனென்றுரைப்பதனை யுலகத்தார் கிழியோடு மாறாக்காசென்றான்சொற் கேட்பவோ.

183 நுனைத்தலைய நுண்மயிரைநுனியுறீஇ விதிர்த்திட்டா லனைத்துணைய தடங்கலுமறக்கிடந்த பிறந்துழப்பு நினைக்குங்காற் பிறர்க்கேயாமென்றியா னீயன்னா யனைத்துணைய பெரும்பாவமவன் செய்தா னாகானோ.

184 துன்பந்தான் றீவினையின் வழித்தோன்றுந் துன்பேயா மென்பதனை நுமரேடீ யெப்பொழுது முரைப்பவாற் பின்புந்தான் பிறர்பிறர்க்குப் பிறந்துழப்பே யாக்கினா லன்பினான் முன்செய்த தருவினையே யாகாதோ.

185 தனக்கொன்றும் பயனின்றித்தளையாளென் றான்வருந்தி யெனைப்பெருங் குப்பையுமெருச்சுமப்பாற் கண்டக்கால் நினைப்பதொன் றுடைத்தவன்செய்நெடும்பாவ நிச்சலும் மனக்கினிதா வவன்றன்னையாள்வார்மாண் புரையாயோ

186 அவ்வகையா லுழக்கின்றா னயலார்கள் படுகின்ற வுய்வகையில் போ¢டரையொழிப்பதன் பொருட்டாக விவ்வகையா லருள்செய்யு மென்பதனை யெடுத்துரைத்தாள் கொவ்வையந் துவர்ச் செவ்வாய்க்குண்டலமா கேசியே.

187 அருளினாற் பிறர்க்குழக்குமனனென்ற வவ்வுரையைப் புரளல்நீ பிறப்பொழியும்பொழுதின்க ணவ்வருளைப் பொருளன்மை கண்டானோபுற்கலர்தா முலர்ந்தாரோ தெருளநீ யுரைத்துக்காண்டிருந்தவையா ரிடையென்றாள்.

188 ஊடுபுக் குயிரடுந் துயரந்தா னொழிக்கின்றான். வீடுபெற் றிறந்தனனேல் விளிகவன தருள்பாவி யோடுகிற் றிலனொன்றுந் தாதையையே யுழப்பித்தோ னாடைபற் றெனவுரைத்த வவன்போன்றா னாகாதோ.

189 அங்கிருவ ருளரன்றோ வறப்போக்கிப் போவாரென் றிங்கிருந்து நீயஙரைத்தா லிவனருள்யார் தெளிகிற்பார் அங்கிருவ ருளரெனினு மவரின் முன் னவையீரே நங்கரும முலைப்பித்து நாம்போது மெனநக்காள்.

190 முன்கொன்றான் றன்றாயைமுழுமெய்யும் போர்த்திருந்து தின்கின்றான் பிணம்வீடுந்தெருட்டுங்காற் சூனியமே யென்கின்றா னிவன்போல்வாரிறைவரில் லெனவுரைப்பாய் தன்கன்று சாக்கறப்பான்றயாப்பிறிதிற் குடையவனோ.

191 கண்ணொடுகா திவையிலள்கரந்தன முலையிரண்டு முன்னும்வா யுதட்டோடுமூக்கில ளுறுநோய்த்தி பெண்ணழகிற் கிவள்பிறராற்பேசவும் படுவாளோ எண்ணுங்கா லென்பேதையெனவுரைக்கு மவனொத்தாள்.

192 பருவரலொன் றிலன்றாயைப்பழுப்பறித்தான் தலைவனிவள் கருவரைமேற் றன்கணவன்காலனையுங் கவிழ்த்திட்டாள் இருவரையும் போல்வாரிவ்விருநிலத்தின் மேலெங்கும் பெருவழியார் பேரருளார்பிறர்யாரே யெனநக்காள்.

193 ஒண்ணுதலா யுன்றலைவனொழிவின்றி யுணர்கலான் கண்முதலா வுரையவிக்கருவியிற் கண்டுகேட் டெண்ணியு முணர்தலாவிலைசுமக்கு மொருவன்போ னுண்ணுணர்வு தனக்கில்லானுரைத்ததுதா னூலாமோ.

194 ஐங்கந்த மெனல்பிழைப்பா மறிவினின்வே றாதலாற் சிங்குந்தன் குறியுழப்புச்செய்கையென் றிவைமூன்று மிங்கொன்று முருவினோடிரண்டென்னாய் மிகவுரைத்தாய் சங்கந்தா மல்லவேற்றத்துவமுந் தலைப்பட்டாய்.

195 முன்னைத்தன் முழுக்கேடுமுழுக்கேட்டின் வழித்தோன்றும் பின்னைத்தன் பிறிதறிவும்பெயர்த்துரைத்தல் பெரும்பேதாய் என்னொக்கு மெனினெருநலிற்புகுந்தா னிடையிராத் தன்னைத்தந் தெனைக்கொண்டுதான்சென்றா னெனலன்றோ.

196 கள்ளனுந் தானேயாய்க்கையாப்புண் டவனேபோ லுள்ளந்தா னின்றவற்றை யுணர்ந்தவற்றோ டறக்கெட்டிங் கெள்ளனைத்து மில்லென்றாலிறப்பறித லெவனாகுந் தெள்ளியாய் தெளிந்திருந்துசிந்தித்துக் காணாயோ.

197 கோன்பட்டான் குந்தத்தாற்கத்துண்டா னேனாதி தான்பட்டான் றளவீரன்தப்பியோ டவனருகே யான்பட்டே னென்பவன் போல்யாத்திருந்தே சொல்லுதியால் தான்பட்டான் பட்டார்க்குத் தன்பாட்டை யுரைக்குமோ!

198 பிறைப்பிறப்பும் பிள்ளைகடம்பிறப்பினையு மெடுத்துரைப்பின் மறைபொருள்கள் வெளிப்பட்டாமன்னுந்தாங் கருதுபவால் குறையென்னை வான்வயிற்றாற்குண்டலமா கேசியித் தறையகத்துப் பிறப்புரைத்தாள்றத்துவமாக் கொள்வாமோ.

199 பின்னசந் தானமும் பிறிதில் சந் தானமு மின்னவென் றிரண்டுரைத்தெத்துணையோ பொழுதோதிச் சொன்னதன் பொருளெல்லாஞ்சுவடின்றி யறக்கெடுத்தற் கன்னதே யெனிலாதனாழிநாட் டாகாதோ.

200 எண்ணிலாப் பலகந்த மிடையறா வென்றுரைப்பிற் கண்ணுறா தொன்றுதலாற்கலப்பிலவா மாகவே திண்ணிதா மிடையறவுதீண்டுமேற் றிரண்டொன்றா அண்ணறான் முடிந்தறக்கே டரியதே போலுமால்.

201 வாசனையி னாமெனினும் வழியதனின் முதலதொன் றாசனைத்து மில்லையே லறிந்துரைப்பு மரிதரோ பேசினைநீ உளதெனினும் பெருந்தாமத் துண்ணூல்போல் லோசனையி னெடியதோ ருயிருரைத்தா யாகாயோ.

202 பாதிரிப்பூப் புத்தோடு பாழ்ப்பினுந்தான் பல்வழியும் தாதுரித்தாங் கேடின்மை யென்பதுநுன் றத்துவமோ போதுரைத்த வோடுநீர் போலுடம்பு பொன்றிடினும் மூதுரைத்த வாசம்போன் முடிவுயிர்க்கே யாகாதோ.

203 சத்திதான் சென்றதே யென்றியே லைந்தன்றிப் பொத்திநீ யுரைக்கின்ற பொருளோடா றாகாவோ சத்திதா னதுவன்றி யைந்துமே யாயினும் பித்தியாய் முழுக்கேடு பேசினா யாகாயோ.

204 அலைபலவே யுரைத்தாளென்றருகிருந்தோர் கருதுதலுந் தலைவனூல் பொருணிகழ்ச்சிதங்கண்மேற் குற்றங்க ணிலைபெற வுரைத்தின்மைநிறுத்துவன்யா னென்றுதன் தலைவனீ பொருள்களேதானாட்ட லுறவினால்.

205 கண்கொடுத்தான் றடிகொடுத்தான்கயப்புலிக்குத் தற்கொடுத்தான் பெண்கொடுத்தா னுடம்பினையும் பிளந்திட்டுப் பிறர்க்கீந்தான் மண்கொடுத்தான் மகக்கொடுத்தான்மன்னுந்தற் சேர்ந்தார்க்கு விண்கொடுத்தா னவன்கொடுத்த விரித்துரைப்பன் கேளென்றாள்.

206 ஏதி லாரிடர் தீர்க்கு மெமவிறை சாத கம்மிவை யென்று தலைத்தலை யோகி னாணின் றொருபக லெல்லையுங் கோதை வார்குழற் குண்டல கேசியே.

207 நூலு நாரு மிசைத்தன வொத்தலா னீல கேசி நெடுங்க ணாள்சொல்லு மாலும் பேயு முடையவர் செய்கையே போலு நீ சொன்ன புத்தர் சரிதையை.

208 போழுங் கண்ணுந் தலையுந் தடிகளுந் தாழ மின்றி யிவைதம்மி னோவென வாழு மாந்த ருழைவரு வாரில்லை கூழன் றன்னுழை யேகொளச் செல்பவோ.

209 பிளத்த லுள்ளிட்ட வாய்ச்செல் வதிந்திர னளத்தற் கேலவன் றானறி யும்பிற னுளத்தை யோரல னேலவன் றேவனாக் கிளத்த றானோர் கிழமையும் போலுமே.

210 யாவ னாயினு மன்னவ னின்மையிற் றேவ னென்று தெளியுந் தெளிந்தபின் சாவ னென்பதோர் சங்கைய மின்றியே யீவ னென்பதோ ரிச்சையுந் தோன்றுமே.

211 உறுதி யல்ல துணர்வடையான்றனக கிறுதி யேலென்று மிந்திர னெண்ணலன் மறுதி யின்மையின் மாணிழை நீயெங்குப் பெறுதி முன்னெடு பின்னியை யாதவே.

212 ஆத னாற்குறந் தாங்கெழு வான்றும்ம வேத மில்சுட ரேற்றொரு தாமென்றான் சாத கம்மிவற் றானருள் சாதிப்பா னோதி னார்க்கு முணர்வொருப் பாயதே.

213 எருது பாலின்மை யெண்ணலன் றும்மலே கருது மாதனுங் கண் முத லாயின தருத லல்லது தங்குறை யீதெனார் மருதின் வாழ்பகை யானவிம் மாந்தரே.

214 பாக மேபிளந் தாற்பர காயமொன் றாகு மேயென வீவ· தாதன்மை காக மேயுண்ணுங் கண்ணுமற் றன்னதே யேக மெய்யும்விண் டாலியை யார்களே.

215 உள்ளந் தானிரு பாகினு முண்மையாற் கொள்கின் றானிவ னேகொல்லு வான்றனை யெள்ளி நேரு மறிவில்லை யேற்பிணங் கொள்ளென் றீர்ந்து கொடுப்பினுங் கூடுமோ.

216 கூறு கூறுசெய் தாலுடம் புள்ளுயிர் வேறு வேறு செலல்வெளி றாக்கொளாய் பாறு வாயுரைக் கும்பர மாத்தங்க டேறு வாருள ரோதெருண் டார்களே.

217 புத்த னார்வண்ணங் கண்ட புனையிழை சித்த னேயென்னைச் சேர்மின மென்றலி னத்த கன்னருள் செய்கல னாய்விடின் மத்த கம்பிளந் தானென்றன் மாயமே.

218 ஆவ தின்மை யறிந்து மவத்தமே சாவ தேயுங்கள் சத்துவர் சால்பெனிற் காவல் பூண்ட கணவனோ டீமத்தின் வேம வட்கும் விழுக்குண மாங்கொலோ.

219 சாந்தி யாகத் தரும முரைப்புழிக் காந்தி பாவியைக் கண்டு கலகன்றா னேந்தி வெம்படை யாலெறிந் தாற்கிடம் போந்து கொண்டதும் பொய்யினுட் பொய்யன்றோ.

220 யானை யுள்ளா செங்குள தங்கெலாம் வான நின்று வழிபடல் காண்டுமான் மீனு மல்லவும் வேதனை யெய்துழித் தான தாதற்றா தாகதர் தன்மையோ.

221 குரங்கு மாயவை கொல்லிய செல்வழி யிரங்கி யேயுயக் கொண்டது மென்றியாற் குரங்கு நேர்குதி யாக்குரங் கெங்குள மரங்கள் பாய்ந்திடு மாண்பின வல்லவோ.

222 சீல நல்லவர் நீள்குவர் சேணெனிற் கோல மில்குரங் காட்டிக் கொல் வார்களைக் காலுங் கையு மெழற்கெனக் காண்கிலான் வாலை நீட்டிக் கிடத்தறன் மாட்சியோ.

223 தாய்க்கொன் றான்றங்கு செங்குரு திப்புனல் பேய்க்கொன் றீதல் பெருங்கொடை யென்பதை வாய்க்கின் றாயினி மானுயர் மாசெலா நாய்க்கென் றாலிது நல்லற மாங்கொலோ.

224 யான்செ யும்பொரு ளென்றங்கொ ரேகாந்தன் தான்செய் திட்டனன் சாதக கற்பங்கள் மான்செய் நோக்கி மதிப்பொழி நீயெனக் கோன்சொ னானிது குண்டல கேசிக்கே.

225 முயலுரை யிதுவெனெ மூடிக் கொண்டிருக்ந் தயலார்க் குரைப்பவ ராத ரல்லரோ புயலிருங் கோந்தலி பொருந்தச் சொல்லினாள் வியலவ ருரையொடு விரோத மில்லையே

226 அரசிறை யிட்ஜுசொலவவை நார்களு முரைசெறி வுடையன வுரைத்த நீர்மைபூண் முரைசொடு நெடுங்கொடி முலூங்க நாட்டுக விரைவொடு படுகென வேந்த னேயினான்.

227 இருப்பதென் னினியன்னா யிதுநுமக் குரைத்தார்யார் சும்க்கினைக் கடிதாகச் சொல்லெளூக் கெனலோடுக் திருக்கிளர் மதிலுஞ்சை தென்றிசை யகனகரு ளம்க்கசந் திரனென்னு மவாச்சிய னெளூச்சொன்னாள்

228 கட்டுரை பலசொல்லிக் காவல் நெடுங்கடை நாவலைமுன் னட்டிவ ணகரிடை நகைசெய்து புகுந்தவிந் நன்னுதலை வட்டிகொள் பறைகொட்டி வழுவுரை பலசொல்லி (வாரலென்று பெட்டன பலசெய்து பெருநகர் வாயிலைப் புறப்படுத்தார்.

229 புனத்திடை நறுமலர்ப் பூங்கொடி யன்னதோர் பொற்பினளாய் எனைப்பல நூல்களு மியல்பினி னறிபவ ளேதமில்லாள் தனக்கினி யான்செயற் பாலதுதானென்னை யெனவுரைத்தான் இனத்தகை யேற்றரி யிடியுறுமேறெனு மிவற்றை யொப்பான்.

230 ஆண்டகை அரசிறை அதுசொல்லக்கேட்டவவ் வறத்தகையா டீண்டல னணிபிற புனைவெனுநினைவிலன் றினையனைத்தும் வேண்டல னிலனொடு விழுநிதியினையவும் விறற்றகையா யீண்டினி யறநெறி யுறுகெனவேந்திழை யியம்பினளே.

231 வந்தது மிதுபொருண் மன்னவயானென நன்னுதலா ளிந்திர னனையநின் னிறைமையினறநெறி யிகழலென்றாங் கந்தர நெறிசெலற் காயிழையரசனை விடுத்தருக்க சந்திர னிருந்தவத் திசைமுன்னித்தளிரிய றானெழுந்தாள்.


அர்க்க சந்திர வாதம்[தொகு]

232 உஞ்சை மாநக ரெய்தின ளாயத னிஞ்சி மாட்சியு மெல்லையில் செம்மலு மஞ்சு தோய்நெடு மாடமும் வீதியு மஞ்சி லோதி யவையவை கண்டபின்

233 பருக்கை மால்களி யானைப்பல் வேந்தரு மிருக்க போதக வென்னும் பெருமையான் றருக்க நீட்டமுந் தன்னிக ரில்லவ னருக்க சந்திர னென்னு மவாச்சியன்.

234 போதி சத்துவர் புத்த ரெனப்படு நீதி யிற்பெரி யாரன நீ¡;மையா னோதி நூன்மும்மை யொப்ப வுணர்ந்தவன் வாதி கட்கோர் வயப்புலி யேறனான்.

235 மாடமோங்கி மழைநுழைந் தின்குயில் பாடு பூம்பொழிற் பாங்கரோர் பள்ளியுட் பீட மேறிப் பெருந்தகை யார்க்கெலாம் வீடு பேறும் வினையு முரைப்புழி.

236 சென்று தானெய்திச் சிற்பிடத் தாற்புக்குத் துன்று நீண்மணித் தூணணிந் தெண்ணென நின்று நீலவைம் பாற்பெய ராளுமங் கொன்று பல்வகை யோத்துரை கேட்டனள்.

237 கொள்ளு மாறுந்தன் கோரகை யுட்கஞ்சி மொள்ளு மாறு முதுகு நெளித்துண்டு னள்ளு மாறு மணலெடுத் திட்டவை மெள்ள மெள்ள விழுங்கு மவைகளும்.

238 வழிக்கு மாறுந்தம் மண்டையி னுண்டுமன் ஒழிக்கு மாறும· தூட்டு மவைகளும் மழிக்கு மாறுந் தலைகளை மையிட்டு விழிக்கு மாறும் வினைய விதியினால்.

239 இனைய வேசொல்லி யிட்ட தலையராய் வினைய நூலை வியப்பெய்து வார்க்கெலா மனைய தேநு மறநெறி யென்றனள் முனைவன் றன்னெறி முன்ன முணர்ந்தவள்.

240 அவ்வு ரையம ரானுய ராசனச் செவ்வ ரைம்மிசைத் தீத்திரள் போல்பவ னிவ்வு ரையிவ ணென்னெனச் சொல்லினான் றெவ்வ ரைத்திறல் வாட்டிய திண்மையான்.

241 வீரஞ் செய்து விழியல் வினையநூல் பேர த·தேல் பெரிது மழகிதே யோரு ம·தோ ருறுவினை யென்பதைத் தேரச் சொல்லுநின் றிண்பொரு ளென்றனள்.

242 வினைய தாகிய பெற்றி விரித்துநீ தினையி னேரும் தெருட்டெனக் கென்னவே அனைய வவ்விர தத்தோ டறிசல மினைய கேளென் றெடுத்தன சொல்லுமே.

243 தன்னை யீந்ததும் தாரங்க ளீந்தது மன்ன தன்பொருள் கேட்டறங் கொண்டவன் மன்னு மில்லயன் மாந்தரைக் காணுமேற் பின்னைச் செய்வன பேசலு மாகுமோ.

244 காம மூரிற் கணிகைய ரோடன்ன தூய்மை யுண்மையிற் றோற்றங் கரந்தவட் சேம மாவகைச் செல்கமற் றென்பதும் வாம நூலின் மறைபொரு ளல்லவோ.

245 சிங்க தத்த ரெனப்படுந் தேரனார் சங்க போதியி லாள்கட் டயாச்செய விங்கி தென்னென வேழாய் தவசிகட் கெங்கெங் காமி லெனவுரைத் தானரோ.

246 யாது மில்லை யுயிரென் றறநெறி யோதி னானவ் வுயிரிலி தன்னொடு வேத னைதணிப் பான்வினை வீட்டிற்கும் சாத னைநிற்குஞ் சத்துவ னாமென்றீர்.

247 சித்த மோடிக் கலங்கித் திரியாத நத்தம் பெற்றது நற்றவ மேற்கொண்டான் பத்தின் மேலும் பழிசெய்யு மேற்பள்ளி வத்தன கண்டீ¡; வழக்கின்கட் கூரியீர்.

248 போதி யாருரு வெய்திய புற்கலர் வேதி யாற்கிடந் தாருள ராயினான் ஞாதி யாரென நாட்டிய கூட்டமும் ஓதி வைத்ததொன் றுண்மை யுணர்த்துமால்

249 ஆரம் பிச்சி யலிவிலங் கவ்வுருச் சீரிற் கொத்தாள் கணிகை தெருண்டாள்பெண் ஒரு மில்லா ளுயிரிலி யூமையுந் தார மாக்கொ·டி ரென்றல் சலமதோ.

250 பிறந்த வில்லினுள் வாழ்க்கை பிழைப்பெனு மறங்கொண் டான்கொண் டவாச்சிய வேடத்தாற் சிறந்த வல்லன சிங்கின வெங்கணுந் துறந்த வான்பொருள் சொல்லவும் வல்லையோ.

251 உரைப்ப பேரரு ளுண்பன மீனொடூன் றிரைப்ப மெல்லனை செய்வ விழுத்தவம் கரைப்ப தீவினை கண்டது சூனியம் புரைப்பின் மார்க்கம் பொருத்த முடைத்தரோ.

252 எல்லா மசுசியு மென்ப வனவா லல்லா லழுக்குற் றவனடிக் கேத்தலர் சொல்லார் சுகமுஞ் சுகத னவனென்று பல்லார் வருத்தம் பழுதெனப் பண்ணுப.

253 நிலையா வெனெச்சொல்லி நேர்ப்ப பொருடூயே மலையோ ரனையந்ன் மாட மெடுப்ப விலையே யுயிரென் றிறந்த நினைப புலைசே யமர்ந்தவர் புத்தியின் வண்ணமே

254 மயித்திரம் பாவித்து மற்றவற் றூனை யசிப்பன வேபோ லமர்ந்ததிருந்த துண்ணுஞ் சயித்தியங் காணித் தலையினை முட்டும் பயித்தியங் கொண்டவர் பண்புமா· தொக்கும்

255 புத்த ருருவுக்கும் போலிக்கும் போலியை மத்தகத் தேத்தி வணங்கி வழிபடுஞ் செத்த பொழுதினச் செந்தடி மென்றிடு மத்த னுடைய வருள்வகை வண்ணம்.

256 பேனறாக் கூறை பெருமுடுகுநாறுமேற் றுக்கந் துக்கம் மானறா நோக்கி மணற்சுமையுந்தான்பெரிதாற் றுக்கந் துக்கந் கூனிறாக் கண்டாலுங் கொள்ளமுடியாதேற் றுக்கந் துக்கந் தானறாப் ப·றொழிலுந் தான்றுக்கமாதலாற் சருவ்வந் துக்கம்.

257 பொய்பொத்திச் சொல்லினவும்போங்கூலி கொண்டனவும் வையத்தஞ் சுட்டனவும்வாழ்மருது கொன்றனவும் கையத்தி னூனுக்கேகன்றிக் கலாய்த்தனவு மையத்தை யின்றியடுப வாலோவழல்நரகத் துள்ளேயடுப வாலோ.

258 பற்றே மிகப்பெருக்கிப் ப·றொடர்ப்பா டேயாக்கி யற்றீர் போற் காட்டி யடைக்கலமே வவ்வுநீர் பெற்றீரே பேயுடம் பன்றேற் பெரும்பாலு மெற்றே யிருணரகிற் கீர்க்கு மாலோ விரக்கமொன் றில்லீரை யீர்க்கு மாலோ.

259 ஆங்கவ ளறங்கூறக்கேட்ட வவாச்சியன்றான் றேங்கம ழொலிகோதாய்சித்தமே யல்லதில்லை தீங்கொழுக் கென்றதெல்லாந்தீவினையென் னல்வேண்டார் பூங்கமழ் காராடைபோர்த்தவெம் புத்தரென்றான்

260 துத்தலே வேண்டிநின்றுதோந்தொடர்ப் பாடுநீக்காய் சித்தமே நல்லதென்றாற்றேற்றலு மாவதுண்டோ கத்திகொண்டில் லில்வாழ்பேய்காறலை வேறுசெய்து குத்தவதின் னும்போழ்திற்கூடுமோகன் மையேடா.

261 உள்ளமும் பாயிரம்மு மொக்குமேல் வீடுமுண்டாம் கொள்ளுமேற் குற்றம·தாக் கூடுமே பற்றுமாங்கண் விள்ளுமேல் வேறதாய வேடமு மன்னதேயாங் கள்ளமே சொல்லிநின்று கன்றினாற் காட்டலாமோ.

262 புனைந்துநீ சொல்லும் வீடும்போகவுண் டாக தந்தே நினைந்துநாங் காணி னெல்லாநின்றதொன் றில்லை யென்றாற் றுனைந்துதா னுண்மை நன்றுசூனிய மாதற் கென்றாட் கினைந்தினைந் தேங்கி நல்லாயென்செயற் பால தென்றான்.

263 செத்தவ ரப்பொழுதே தேவருட் செல்பவேனு மத்தலை யின்பநோக்கா ரஞ்சுவ மாக்களந்தோ தொத்துள வாகவென்னான் சூனிய வீடுசொன்ன புத்தனை நோதுமத்த புலம்பனீ போகவென்றாள்.

264 புன்னெறி யவைகளெல்லாம்போக்கிய பாக்கியத்தாய் நன்னெறி நன்ஞானங்காட்சியு நன்குகொண்டென் சொன்னெறி திரிவாயேற்சோர்வில்பே ரின்பமெய்தி மன்னுதி யென்றுமற்றுங்கூறினாண் மாதராளே.

265 காட்டுழல் களிநல் யானைகால்கையி னோர்ப்பித் தேறித் தோட்டியிட் டூர்வ தேபோற்சூரிய சோமன் றானும் வாட்டடங் கண்ணி நல்லாள்வாக்கெனுந் தூக்க யிற்றாற் பூட்டுபு கொள்ளப் பட்டான்போதியார்க் காதி யன்னான்.

266 அருக்கமா சந்திரனையறங்கொளீஇ யாங்கவனை யிருக்கும்வா யொருப்படுத்திங்கீதுநுனக் குரைத்தாரைப் பொருக்கநீ சொல்லென்னப்புத்தனார் முதன்மாணி முருக்குவாய்சென் றவனாம்மொக்கல னெனச்சொன்னான்.

மொக்கல வாதம்[தொகு]

267 நீவருத லொழியென்றுநிறைபதும புரத்துக்கே மாதிரந்தா னெறியாகமனம்போலச் சென்றெய்தி மூதுரையுங் காரணமுமுழுதெழுதி யழகிதாய்ப் போதுகளும் பொன்மணலும்புனைந்தினிய பொலிவிற்றாய்.

268 கொடிமகரக் கோபுரமும்நெடுமதிலுங் குடிஞைகளும் தொடிமகரத் தூணிரையுஞ்சொலற்கரிதாய்ச் சுவர்க்கத்தின் படிமகரப் படிமையதப்பள்ளிகண் டளியள்போய்க் கடிமகரக் கடல்கடந்துகலந்தந்த நலமென்றாள்.

269 ஒழுக்கமுங் கல்விகளுமுரைத்தனவே யொப்பனகள் இழுக்கில்லாப் பெருந்தவத்திலிங்கிகளைத் தான்கண்டு முழுத்தாள தாய்ப்பள்ளிமுற்றத்தோ ரரைமரத்தின் குழுக்கொம்பர் பிடித்தொருகாற்குஞ்சித்து நின்றுதான்.

270 துன்னஞ்செய் தாடையைத்துவர்தோய்த்துக் கொட்டியும் பொன்னஞ்செய் புத்தங்கப்புகையூட்டிக் கைசெய்து தன்னமு மளித்தாயதலைசொறியு மிடையிலையா லென்னவற்றி னாம்பயனையெனக்கறிய வுரையென்றாள்.

271 ஆங்கவ ளதுவுரைப்பவதற்குரிய மறுமாற்றந் தாங்களு மரைக்கில்லார் தலைசாய்த்தங் கிருந்தார் மூங்கைமையான் மொழிகொண்டேன்மொக்கலநற் றேரயான் பாங்கினால் வினவுவன்படிறின்றி யுரையென்றாள்.

272 வீடிற்கே யெனின் ஞானம்வேண்டாதே முடியுமாற் பீடிற்கே யெனினின்னிற்பெருஞ்செல்வர் திருந்தினார் மூடிற்றின் பயனென்னையெனவினவ மொக்கலன மூடிற்றுஞ் சிறிதுளதாலுருவறிதற் கெனமொழிந்தான்.

273 படைப்பெளிதாற் கேடறிதாற்பலகள்வர் நவையாரா லுடைக்கியைந்த வொலியற்றாலூன்றருவார்க் குணர்த்துமால் விடக்கமர்ந்த வுள்ளத்தாய்வேடமு மறிவிக்குந் தொடர்ப்பாடும் பெரிதன்றாற்றொட்டைந் பூணியோ.

274 பொன்கொண்டா ராயினும் போர்வைபூச் செனிற்புலையன் வன்கண்மை யாற்செய்தவஞ்சமே யெனவளைப்பர் தன்றன்மை யாகியதான்பழிப்பார் தாமுளரோ வெண்கண்டு வந்திங்கணிதுகொண்டா யெனச்சொன்னாள்.

275 உண்ணன்மை தவமென்றங்குறுப்பெல்லா மறைக்கின்றாய் திண்ணென்ற மனமிலைநீசிறைபலவுஞ் செய்தலால் பெண்ணென்றும் பிறவென்றுந்தானோக்கிப் பெரும்பேதாய் கண்ணன்றோ வுள்ளத்தைக்கலக்குவன வவைகாவாய்.

276 பெண்பாலார் கண்டக்காற் பேதுறுவ ரெனவுரைப்பாய் திண்பான்மை யவர்க்கழியச்சிதையுநின் றவமாயின் மண்பாலா ரவருள்ளமாண்புளதா யுரையாரா லெண்பாலும் படாதாகியிழுக்குநின் குணமந்தோ.

277 இழுக்கினு மிழத்தியாலிடறினு மதுவேயால் விழுக்கலமால் வினைபெரிதால்வினைக்கேடாந் தொழிறருமா லொழுக்கிற்கு முரித்தன்றூணோரிடையூ றுடன்கொடுக்கும் வழுக்கின்றித் தவஞ்செய்யின்மண்டையாற் பயனென்னோ.

278 நிறந்தூய்தா நீரினால்வாய்தூய்தாம் பாகாற் பறைந்துபோய் மெல்கோலாற்பல்லெலாந் தூயவாம் புறந்தூய்மை செய்தக்கால்புரிவள்ளந் தூய்தாமே லறந்தூய்மை கணிகையர்க்கேயாற்றவு முளதாமால்.

279 சவருடைய மனைவாழ்க்கையெனப்போந்து தவம்புரிந்தாய் பவருடைய விறகிறுத்துப்பலகலங்க ளொருப்படுத்துற் றுவரோடு பல்கூறையுடன்புழுக்கி யொலித்திடு நீ துவரடுதி பூவடுதிசோறடலே முனிந்தாயோ.

280 வண்ணாரம் துன்னாரம் மச்சிகமே கச்சாரஞ் சண்ணார மெனப்பிறவுந் தவத்துள் நீ கற்றனவா லெண்ணார்ந்த காரங்க ளில்லகத்தே பயின்றாயே லுண்ணாயே வயிறார வோர்ப்பொன்று மிலையேகாண்.

281 சிறந்தாய்க்கீ துரைக்கலாஞ்சிந்தனையை முடிப்பதே துறந்தார்க்குக் கடனாகிற்சோறலாற் பிறவேண்டா லிறந்தார்க்கு மெதிரார்க்குமிவட்காலத் துள்ளார்வான் பிறந்தார்க்கு மிதுவன்றிப்பிறிதொன்று சொல்லாயோ.

282 உண்டியா லுடம்புளதாலுடம்பினா லுணர்வாமென் றெண்டிசையும் பரந்திசைப்பவீதுனக்கே தெரியாதோ தண்டியாய்க் கழியாதுதவஞ்செய்த லுறுதியேற் பண்டியாற் போக்குநின்ப·றொடர்ப்பா டெனச்சொன்னாள்.

283 அருளுடையா ளுரைப்பக்கேட்டாங்காரித் தவனுந்தன் பொருளுடைமைத் தருக்கினும்புன்ஞானக் களிப்பினு மருளுடையார் மதிப்பினுமாற்றந்தான் செயற்பொருட்டா லிருளுடைந்த கூந்தலாளிட்டத்தை யெண்ணுவான்.

284 தரணென்று நன்றென்றாடன்றன்மை யுருவென்றாள் அரணென்னத் தெளிந்ததுதானாருகத மேமன்னு முரணின்ற துண்மையான்மொக்கலனு முனிந்துரைப்பா னிரணியனைப் போல்வந்திங்கிடர்ப்பட்டா யென்றானே.

285 என்னாலும் வெலப்பட்டாரிருவருள ரிங்கவரைச் சொன்னாலு மறிதிநீதுடிகடியு மிடையுடைய கொன்னாணு நெடுவேற்கட்குண்டலமா கேசியு மன்னாளுக் கறமுரைத்தவருக்கமா சந்திரனும்.

286 என்றாளை முகநோக்கியிதுபெரிதும் பொய்த்தனைநீ யொன்றாத கொள்கையாருலகினுள் யாவரையும் வென்றாள்மள் றிவள்சம்புவிரதியாய்த் திரிந்தெங்கும் நன்றாரம் பிறர்க்கீந்தான்றருமங் கொண்டென்றானாய்.

287 வேதியரை முதலாகவெலப்பட்டா ரிவரிவரென் றோதியாங் கவையவைதா மிவையிவையென் றுரைப்பக்கேட் டாதிகா லாவணத்துளார்கதரை வென்றதனை நீதியா லுரைத்தியேனின்னையான் வெல்லேனோ.

288 எனக்கேட்டாங் கெடுத்துரைப்பானிந்திரர்க டொழப்படுவான் றனக்காய தர்மமுமதர்மமுங் காலமுங் கனப்பாட்டிற் காயமேயுயிருருவே புண்ணியமே நினைக்குங்காற் பாவமேகட்டுவீ டெனநிறுத்தி.

289 இப்பொருட்க ணிகழ்ச்சியு மிவையிவையா மெனவிரித்துச் செப்பினா னாதன்றன் சிந்தைக் கெழுந்தவா றப்பொருளு மந்நிகழ்வு மவையவையா வறியாதை வப்பிள வனமுலையார் மணல்விளையாட் டதுவேபோல்.

290 மொக்கலனு மிதுகூற முல்லைநா றிருங்குழலா ணக்கனளா யிதுகூறு நாதன தியல்பறியா யிக்கிரமத் திந்திர னிருடிகளைத் தேவியரைத் தக்கதாத் தொழுதக்கா லவர்தலைவ ரெனலாமோ.

291 எந்தலைவ ரியல்பொடுநூ லின்னணமென் றறியாதாய் சிந்தனைக்க ணாயினுந் தீமையு முரைத்திலையாற் றந்துரைத்த தலைவனூற் றத்துவமா மாகவே முந்துரைத்த பொருணிகழ்வு பிழைப்பின்மை முடியாவோ.

292 அத்தியைந் தெனினல்லவறுபொருளு மவையாகா வுத்தியா வெடுத்தோதுமொன்பதனோ டொட்டலவாற் குத்¢ய பல்குறையே யன்றியுமிப் பொருளெல்லாம் பொத்தியுங் காட்டுவாய்பொருளியைவோ பெரிதென்றாள்.

293 சலம்படவே யுரைத்தனைநீதருமத்திற் செல்லுதுமென் றிலம்படுமே லியக்கில்லையென்பதெம் முரையென்போம் கலஞ்செல்லுங் கடலதனைக்காற்றேபோ லுந்தாதாம் பலம்படு முரைநினக்குப்மாம்புண்ட பாலேபோல்.

294 அல்லதற்க மப்படியேயாமென்ற லதுகொள்ளாய் செல்லவுஞ் செலுத்தவுநில்லவு நிறுத்தவுஞ் சொல்லியவாய் தேய்க்குறுவாய்சொல்லிக்கொள் வலியதனால் பல்லொடும் படத்தேய்த்தாற்பயம்பெரிதும் படுமன்றோ.

295 கடனிலமா காயமேயமையாவோ விவையிரண்டு முடனில்லை யாயினுமூனமிங் கெவனென்பாய் மடனுடையை நீபெரிதுமன்னுயிர்க்கும் புற்கலக்கு மிடனெல்லா வுலகி னெல்லையும் புறப்படுமோ.

296 பலசொல்லிக் குறையென்னைப்பஞ்சமா கந்தமே யலகில்லாப் பெரும்பரப்பினாகாய நினக்கில்லை நிலைசெலவிற் கிவை வேண்டாநின்பொருளு மிவையல்லா வுலகெல்லை யுரைப்பான்புக்குணர்வினையே வருத்துதியால்.

297 காலநீ வேண்டாயாய்க்கணிகமுங் கற்பமும் சாலமும் புனைந்துரைத்தி சமழ்ப்பென்னு மிலையாகிப் பாலமா பண்டிதனே பழநோன்பி யிவனென்பாய் மாலுமிங் குடையையோமயக்குவதொன் றுண்டனையோ.

298 இக்கோட்க ளெழனோக்கியிவையிவையோ யாமென்றா லக்கோட்க ளெழனோக்கியவையவையாக் கண்டிருந் தெக்கோளு மில்லென்பாயாண்டெண்ணி யேத்துதியான் மெய்க்கோளா லென்றியான்மிகைதெருட்டுந் திறங்காணேன்.

299 கருத்தினாற் பெற்றாமோ கண்கூடாக் கண்டோமோ பொருத்தனையென் றுரைக்கின்றாயுறுநோயைத் தீர்ப்பதோர் மருத்துநூ லில்லையான்மயங்கியே சொல்லாது திருத்தியநின் னுணர்வின்மைதெருட்டிக்கா ணெனச் சொன்னாள்.

300 பொறியுணர்வின் புலமாயபுற்கலமே யுயிரறியு மறிவினா லறியாதேயாமாகா தெனவுரைப்பாய் நெறியென்னை யிந்திரன்றன்நெடுநகரக் கவன்றேவி குறியளோ நெடியளோநூலொழிப்பாய் கூறிக்காண்.

301 மெய்யளவிற் றுயிரென்றுமெய்யகத் தடக்குரைத்தல் பொய்யளவைக் குடங்குடத்திற்புகலருமை போலென்பாய் மெய்யளவ்¢ன் மெய்யுணர்வைமெய்யகத் தடக்குரைத்தி யையனையே யடங்கானென்றதுவாதன் வண்ணக்கால்.

302 அருவாத லாலடங்குமுணர்வுதா னங்கென்னிற் பெருவாத மங்கில்லைபெற்றியொன் றறியாத திருவாள னுரைவண்ணந்தீட்டொட்டுக் கலப்பியாப் புருவாய வுடம்பினோடுணர்வினுக் குளதாமோ.

303 யாப்புண்டா லுழப்பதவ்வுயிரென்றேற் கதுவன்று போய்ப்பிண்டத் துழப்புழப்பப்புலம்புவ தென்செயலென்பா யேப்புண்பட் டான்படநோயேதிலர்க்காய்ச் சோமாகிச் சாப்புண்பட் டேனென்றுசாற்றுவதுன் றத்துவமோ.

304 உழப்புழப்பச் செய்கையானுறுதுயருற் றேனென்றல் பிழைப்பதுவாக் கருதாதேபெருவழியு ளிடறுதியா லுழப்பறிவு குறிசெய்கையொருவனவே யெனச்சொன்னார்க் கிழிக்குவதிங் கில்லாமையிதனாலே யறியனென்றாள்.

305 அருவாயில் யாப்பில்லையன்றாயிற் குறைபடூஉ மிருவாறின் கூட்டமுந்தீதென்ப தெம்மிடமே மருவாதா யுரைத்ததனைமனங்கொள்ளா யதுவன்றிப் பொருவாறொன் றுரைத்தாலுமொருவாறு முணராயால்.

306 அறிவெழுந் தவலிக்குமென்பதூஉ மதுவெழப் பிறிதொன்று பேதுறுமங்கென்பதூஉம் பெரும்பேதாய் குறிகொண்டா ருரையன்றாற்குற்றமே கொளலுறுவாய் பொறிகொண்டு காற்றினையும்போகாமற் சிமிழாயோ.

307 பிறன்சுமவான் றானடவான்பெருவினையு முய்க்கில்லா வறஞ்செய்தா னமருலகிற்செல்லும்வா யரிதென்று புறம்புறம்பே சொல்லியெம்பொருணிகழ்ச்சி யறியாயாற் கறங்குகளி மல்லனவுங்காற்றெறியத் திரியாவோ.

308 மகனேயாய்ப் பிறப்பினு மாதுயரங் கேடில்லை யவனாகா னாயினு மறஞ் செய்த லவமாகு மெவனாகு மென்றெம திட்டமே யுரைத்தியா னகைநாணி நீநின்னை நன்பகலே மறைக்கின்றாய்.

309 வீயுடம்பிட் டுயிர்சென்று வினையுடம்பு முளகாகத் தாயுடம்பி னகத்துடம்பு தான்வைத்த தின்றியே நீயுடம்பு பெற்றவா றுரையென்பாய் நிழல்போலும் டேயுடம்பு பிறிதுடம்பிற் புகல்பேதாய் காணாயோ.

310 எப்பொருளு மொன்றொன்றிற்கிடங்கொடுத்த விரும்புண்ணீர் புககிடங்கொண் டடங்குதலேபோலவும் தந்தைதாய் சுக்கிலமுஞ் சோணிதமுந்தழீஇச்சுதையு ணெய்யனைத்தா யொத்துடம்பி னகத்தடங்கியுடன்பெருக மெனவுரைத்தாள்.

311 செய்வினைதா னிற்பவே பயனெய்து மென்பதூஉ மவ்வினை யறக்கெட்டா லதுவிளையு மென்பதூஉ மிவ்விரண்டும் வேண்டுத லெமக்கில்லை யெடுத்துரைப்பி னைவினையி னிலைதோற்ற நாசந்தா னாட்டுங்கால்.

312 பைம்பொன்செய் குடமழித்து;பன்மணிசேர் முடிசெய்தாற் செம்பொன்னா னிலையுதலுஞ்சிதைவாக்க மவைபெறலு நம்பான்றிங் கிவைபோலநரர்தேவ ருயிர்களையும் வம்பென்று கருதனீவைகலும்யா முரையாமோ.

313 கொன்ற பாவமுண் டாயின் குறட்கண்ணும் ஒன்று மேயென் றுரைப்பனெப் பாரியார் பொன்றினும் புத்த ரேநீவி¡; சொல்லின சென்று சேர்தலைச் சித்தம தின்மையால்.

314 சொன்ன சூனைத் துறந்தவற் றட்டன பின்னை யுண்டல் பிழைப்புடைத் தென்றியா னன்னு தல்லைத் துறந்தவ ளட்டது தன்னை யுண்டுந் தவசியை யல்லையோ

315 கொன்ற பாவங் கெடுகெனக் கையிட்டு நின்ற தென்பது நீயுரைப் பாயெனி னன்று துன்னின தாதன்மை யாற்சொன்னாய் சென்றும் வந்துந் தியானம் புகலென்றாள்.

316 இன்ப துன்ப மிருவினைக் காரிய மென்ப வர்க்கென்னை யேதமுண் டென்றியேற் பின்பு பேணுந் தவத்தினி னாகிய துன்ப வர்க்குந் துதாங்கனத் தொன்றுமே.

317 செய்த தீவினை சென்றின்ப மாக்குமென் றி·து ரைப்பவ ரீங்கில்லை யாயினும் பொய்கள் சொல்லிப் புலைமக னேயெம்மை வைதல் காரண மாநின்று வைதியோ.

318 இந்திரி யங்களை வென்றற் பொருட்டென வந்து டம்பு வருத்தல் பழுதென்பாய் தந்து ரைத்த தலைமழி யாதிய சிந்த னைக்கிவை செய்வதெ னோசொல்லாய்.

319 புனைவு வேண்டலர் போக நுகர்விலர் நினைவிற் கேயிடை கோளென நேர்தலா லினைய வும்மல மேறினு மென்செய மனைய தான்மக்கள் யாக்கையின் வண்ணமே.

320 பாவந் துய்த்துமென் றோமல்ல துய்ப்பினு மாவ தின்மைக் கரசுரைத் தாயன்றோ வோவ லின்பந் தருமெ னுயிரென்பாய் தேவ னாகித் திரிந்துதான் காட்டிக்காண்.

321 அழிவு காலத் தறத்தொடர்ப் பாடெலா மொழியல் வேண்டுமென் றொற்றுமை தாங்கொளீஇ வழியுங் காட்டுமம் மாண்புடை யார்கண்மேற் பழியிங் கிட்டுரைத் தாற்பய னென்னையோ.

322 சிந்த னையினுந் தீவினை யாமென்பார்க் கைந்திற் காம மமையுமென் றீரென்பாய் சுந்த மாகச் சுவடறு வீரென வந்தி தோறும் புடைக்க வமையுமோ.

323 பெண்ம கள்ளிர் பிறகிட வுண்பவர் கண்ணி னாலில்லுட் கந்தியைக் காணினு முண்ண லம்மெனும் மோத்துடை யார்களைத் திண்ண தாவைது தீவினை கோடியோ.

324 பிள்ளை பெண்ணலி யாயினும் மாண்வயிற் றுள்ள தேயென் றொழுக்கங் கொடுத்தியாற் பிள்ளை பெண்ணலி யன்மையை யாதினா லுள்ளங் கொண்டிழ வூசி யுரைப்பதே.

325 மோனம் பொய்யஞ்சிக் கொண்டவன் மெய்யுரைக் கூனந் தோன்றி லுரைத்தன னென்றியேற் றானம் யாவர்க்குஞ் செய்வது நன்றனென்பா யீன மென்னோ தெருச்சுமக் கிற்றியோ.

326 உய்யக் கொள்வ னெனச் சொல்லி யுள்ளத்தாற் கையிற் காட்டல் கரவுள தாமெனிற் பொய்சி தைத்ததென் சொல்லிப் பெயர்ந்துரை பொய்யு ரைத்தில bனன்றல் பொருந்துமோ.

327 கொல்வினை யஞ்சிப் புலால் குற்ற மென்பதை நல்வினை யேயென நாட்டலு மாமென்னை வில்லினை யேற்றிநும் மெய்ம்மை கொளீஇயது சொல்லினை யாதலிற் சொல்வன் யானே.

328 புத்தர்கட் பத்தியிற் போதி மரந்தொழிற் புத்தர்கட் பத்தரை யேதொழு புத்தர்கட் பத்தியை யாக்கு மதுவெனிற் (பற்றிய) பத்தங் குடைசெருப் புந்தொழு பாவீ.

329 ஆங்கவர் போல வருள்செய் பவர்களை நீங்குமி னென்பது நீர்மை யெனினது வீங்கிதற் கெய்தா விடினிலை போதிக்கும் தீங்கே நுமர்செய்கை தேரமற் றென்றாள்.

330 பல்லுடை யான்றன்னைப் பண்டுகண் டேத்தினுந் தொல்லுரை கேட்டுறுப் பேதொழு தாலும்பி னல்வினை யாமென்று நாட்டுதி யாய்விடிற் கொல்வதுந் தின்பதுங் குற்றமற் றென்னாய்.

331 ஏத்தின ரேத்துக வென்றிறை போல்வன பாத்தில பைம்பொற் படிமைசெய் தாலவை யேத்துநர் பெய்தவ ரெய்துவ நன்றெனில் வீத்தவர் தின்பவர் வெவ்வினைப் பட்டார்.

332 வெற்றுடம் புண்பதும் வேலின் விளிந்தவை தெற்றென வுண்பதுந் தீமை தருமென்னை யொற்றைநின் றாடுணை யூறு படுத்தவட் குற்றமன் றோசென்று கூடுவ தேடா.

333 பிடிப்பது பீலி பிறவுயி ரோம்பி முடிப்ப தருளது போன்முடை தின்று கடிப்ப தெலும்பதன் காரண மேனி தடிப்பத லாலரு டானுனக் குண்டோ.

334 ஆட்டொரு கான்மயிற் பீலி யுகமவை ஈட்டுதல் போலுதிர்ந் துக்க விறைச்சியைக் காட்டியுந் தின்னுங் கருத்திலை நீ தசை வேட்டுநின் றேயழைத் தீவினை யாளோ.

335 மானொடு மீனில மன்னு முடம்பட லூனடு வாரிடு வாரை யொளித்தலிற் றானடை யாவினை யாமென்ற றத்துவந் தீனிடை நீபட்ட தீச்செய்கை யென்னோ.

336 குறிக்கப் படாமையிற் கொல்வினை கூடான் பறித்துத் தின்பானெனிற் பாவமாம் பூப்போற் செறிக்கப் படுமுயிர் தீவினை பின்னு நெறிக்கட் சென்றாறலைப் பாரொப்ப னேர்நீ.

337 விலையறம் போலு மெனின்வினை யாக்க நிலையுமீ றென்பது நேர்குவை யாயின் வலையினின் வாழ்நர்க்கும் வைகலு மீந்தாற் கொலையென்றும் வேண்டலன் றோகுண மில்லாய்.

338 நும்பள்ளிக் கீபொரு ளாலுணர் வில்லவ ரெம்பள்ளி தாஞ்சென் றெடுப்ப வெனினது கம்பலை யாம்வினை யில்கறிக் கீபொருள் செம்பக லேகொலை யாளரிற் சேரும்.

339 நாவின்கண் வைத்த தசைபய னேயென வேவினை நீயுமற் றின்பம· தாதலிற் றேவன்கண் வைத்த சிரத்தை செயலன்று தூவென வெவ்வினை யைத்துடைத் தாயால்.

340 கன்றிய காமந்துய்ப் பான்முறைக் கன்னியை யென்றுகொ லெய்துவ தோவெனுஞ் சிந்தையன் முன்றினப் பட்ட முயன்முத லாயின நின்றன வுந்தின நேர்ந்தனை நீயே.

341 தூய்மையி லாமுடை சுக்கில சோணித மாமது போன்மெனி னான்முலைப் பாலன்ன தூய்மைய தன்றது சொல்லுவன் சோர்வில வாம னுரைவையந் தன்னொடு மாறே.

342 மேன்மக்க ணஞ்சொடு கள்வரைந் தாரது போன்மக்க ளாரும் புலால்வரை யாரெனிற் றான்மெய்க்க ணின்ற தவசிமற் றெங்குள னூன்மெய்க்கொண் டுண்பவ னுன்னல தென்றாள்.

343 பார்ப்பனி யோத்துநின் னோத்தும் பயமெனி னீப்பவுங் கொள்பவு நேர்து மவையவை தூப்பெனு மில்லன வேசொல்லி நிற்குமோர் கூர்ப்பினை நீயென்றுங் கோளிலை யென்றாள்.

344 தூவினி னுண்புழுத் துய்ப்பனென் னாமையிற் றீவினை சேர்ந்திலன் றின்பவ னென்னினு மோவெனு முன்விலை வாணிக ரென்றினர் மேவினர் தாம்விலை யேவினை வேண்டார்.

345 அடங்கிய வம்பு பறித்தன் முதலா வுடங்குசெய் தார்வினை யொட்டல ரென்பாய் மடங்கினர் வாழ்க வெனுமாற் றார்போற் கடஞ்சொல்லித் தின்பதிங் கியார்கட் டயாவோ.

346 தின்னு மனமுடைப் பேயெய்துந் தீவினை மன்னு மிகவுடைத் தாய்வினைப் பட்டில்லா ளென்னு முரைபெரி தேற்கு மிகழ்ச்சி தன்னை வினைப்பட நீசொல்லி னாயால்.

347 அறஞ் சொல்லக் கொள்ளு மறமென் றறிந்தாங் கறஞ்சொல்லி னார்க்கற மாமென் றறியாய் புறஞ்சொல்லி தன்று புலால்குற்ற மென்று துறந்தொழிந் தாற்கொலை துன்னினர் யாரோ.

348 அறந்தலை நின்றாங் கருளொடு கூடித் துரந்தனள் யானென்னுஞ் சொல்லு முடையாய் மறங்கொண்டி துண்டென்னை மன்னுயிர்க் காமே சிறந்ததுண் டோவிது சிந்தித்துக் காணாய்.

349 பேயொப்ப நின்று பிணங்கிக்கண் டார்க்கெனு மாயத்தி னூனுண்ண மன்னு மருமையி னாயொப்பச் சீறி நறுநுத லாளொடு காயக் கிலேசத்திற் கட்டுரைக் கின்றான்.

350 வெயிறெறவ் வுணங்கியும் வெள்ளிடைந் நனைந்துமூன் டயிறலிற் பட்டினிகள் விட்டுமின்ன கட்டமாய்த் துயிறுறந் திராப்பகற் றுன்பவெங் கடலினார்க் கயிறெறுந் நெடுங்கணா யாவதில்லை யல்லதும்.

351 காயம்வாட்டி யுய்த்தலிற் கண்டநன்மை யுண்டெனின் தீயினாற் சுடுதலுந் தெற்றியேறி வீழ்தலு நோயினாற் றிரங்கலுந் நோன்மையென்ன லாம்பிற நீயனா யிதற்கினி நேமியென்று சொல்லென.

352 புண்ணினைத் தடிதலும் போழவாற்றி நிற்றலும் கண்ணினைக் கழிகள்ளான் மிண்டிக்கொண்டு நீட்டலும் விண்ணுயர் நெடுவரைவ் வீற்றுவீற்று வீழ்தலும் அண்ணலார்தஞ் செய்கையு மாவதில்லை யல்லதும்.

353 தூக்கடம்மை யாக்கலே தொல்லைநல் லறம்மெனின் நாக்களைப் பறித்தலுந் நான்றுவீழ்ந்து பொன்றலுந் தீக்கள் பாய்ந்துசாதலுந் தீயசெங் கழுவ்வின்மேன் மேக்கினைக்கொண் டேறலு மேன்மையென்ன லாம்பிற.

354 தானஞ்சீல மும்பொறை தக்கதாய வீரியம் மூனமில் தியானமே யுணர்ச்சியோ டுபாயமும் மானமில் லருளினைவ் வைத்தலேவ லிம்மையுஞ் ஞானமீரைம் பாரமீதை நாடுங்கா லிவைகளும்.

355 விருக்கமூலி யாகலும் வெள்ளிடை யுறைதலும் மிருத்தனிற்ற லன்றியு மிட்டகூறை யெய்தலும் மருக்கையின் மயானத்துட் சேக்கையும் மனைகளை வருச்சியார் புகுதலும் மற்றவற்றொ டுண்டலும்.

356 அத்திட்டாடை கோடலும்மமையுமென்ன நீங்கலும் பெற்றதன்னிற் சேக்கையும்பேர்த்துண்ணா தொழிதலும் குற்றமென்னப் பிச்சையுங்குறித்துழிப் புகாதுதான் றுற்றியுய்த்த றன்னொடுதுதாங்கென்றாத்தர் சொன்னவே.

357 பாரமீ துதாங்கொடு பற்பல கிலேசமும் நேருமனையி லுண்மையா னீரும்வேண்டி னீரெனக் கூரிமம் வெயில்பசி கூடலுங் கூடினாற் சேர்தலில்லை நல்லறஞ் சிந்தையென்று செப்பலும்.

358 அருந்தடிக ளீரவும் மறஞ்செய்வாளிற் போழவும் வருந்தவான துள்ளநீ மாட்சிநன்று மென்றியா லிருந்துநின்று நன்னெறிக் கிடைப்படாத சிந்தையாற் பெருந்தவங்கள் செய்ந்நரைப் பேசுவாயோர் பேதையே.

359 புத்தராகு மாண்பினா போதிகத்து வர்கட்காம் பத்துமாய பாரமீதை பாரவட்ட மென்றலும் சித்தராகு மாண்பினாற் சீலமும் வதங்களும் மெத்துணையும் மாயிரம்மா மென்றுமியாமு மென்றனள்.

360 உடம்பினுள்ள பல்லுயிர் சாவவூனுண் மானுக்குத் தடங்கொண்மா வரைமிசைத் தன்னையீத னன்மையேற் படம்புனைந்த வர்கடாம் பலருமுண்ணு நீரினுள் விடம்பெய்தாற்கு நன்றுகொல் வியாதியாளன் றீர்கென.

361 அல்லவர்கள் சாதலை அறிந்தனன் னவனெனில் நல்லதில்லை நஞ்சினா லென்றுநாட்டு வாயெனி னெல்லையில்ல பல்லுயிர் தன்கணுள்ள வெஞ்சலுங் கொல்லவந்த வூன்களும் குற்றமென்ற வாறுகொல்.

362 நீட்சி திரிவா மயிருகி¡; காட்டினை மாட்சியில் லாமயிர் மன்னுயி ருள்வழித் தாட்க ணிமிருந் தலைநிமி ராவெழல் காட்சி மரத்திற்குக் காறலை யெங்கம்.

363 மரங்கள் வளருமென மன்னுங் கூம்பி விரிந்த விலையின் வேற்றுமை சொன்னாய் பொருந்து மிவையு மல்லவு மன்றோ வொருங்கிவ் வுலகத் துயிர்களு மென்றாள்.

364 வயாத்திரு வாக்கி வளர்பூ சணிக்குத் தயார்செய்கை தீதென்னுந் தத்துவங் கண்டா யுயாப்பிழைத் தாய்மெழு கூனொடு பட்ட வயாவதற் கீண்டுப் பயத்தலி லன்றே.

365 யாதினு மாழ்குமம் மாழ்கியு மென்றுழி நீதின்னுந் தோலை நெருப்பொடு கூட்டத்தி னோதினை தேறுற நீர்க்குரைத் தாய்மற்றுஞ் சேதனை யில்லாய் திரிவென்னை வண்ணம்.

366 அரும்பு மலரு மரும்பிணி தீர்வு மொருங்குதங் காரணத் தாக்க முணர்த்து மரங்களு மன்னுயி ரெய்தின வென்ன விரும்பொடு காந்த மியைவி றிரிவே.

367 ஒப்ப மரங்கட் குயிருண்மை யாமினி யிப்படித் தோன்று மிருதுக்கள் சார்ந்தெனச் செப்பிய வேதுத் திரிவெனக் காட்டிய வெப்பங் குளிரவை தாமவை யேயால்.

368 மரங்களை யொப்புமை யாலுயி ரென்னக் கிரந்தியும் வெப்பங் கிளக்குவை யாயி னிரந்த வுடம்பின் விகார நினக்குப் பரந்துண ருண்மையைப் பார்ப்படுத் தாயால்.

369 வாட்டங்க ளுண்மையின் வாழ்மரஞ் சேர்ந்தவை நாட்டிய வாதலி னல்லுயி ரோவெனக் காட்டிய தோலொத் திராமையும் வாடுமத் தோட்டஞ்செய் சேம்புயிர் தொன்முடி வன்றோ.

370 அற்ற வுடம்புக ளாறுத லான்மரந் தெற்ற வுயிருண்மை செப்பத்தி னாமெனப் பெற்ற பிழைசொல்லிப் பித்தெழுந் தாரொப்பக் குற்ற மிவையெனக் கூறிதி யன்றோ.

371 காட்டின மண்ணை முதலா வுடையன வோட்டி யுரைத்த வுயிரென வொட்டலர் நாட்டினுள் வாழ்பவ ரின்னரென் றாவந்த நாட்டை யவரென்ன நாட்டிய வாறே.

372 தாவர மாய மரமிவை தாமென யாவருஞ் சொல்லுப வ·து மறிந்திலை நீவி ரெவர்சொல்லச் சொல்லினீ ரென்றுநின் சீவரம்போற் கட்டில் செப்புவ தென்னோ.

373 மக்களுட் டோன்றிய போழ்த மரவுயிர்க் கொப்ப வுடம்பறி வன்றியொன் றில்லெனிற் றக்கதன் றன்மையுடைப் போதி சத்துவன் மிக்கதென் னோதிக்கு வேற்றுமை வேண்டார்.

374 நாண முடைய மரமுத லியாவையும் மூணின வாழ்ந்துமுண் ணாவிடிற் சாதலைக் காணவும் பட்டது கஞ்சியோ டல்லதை யாண மிலாப்பொரு ளாட்சியர் போன்றே.

375 மயக்குடை மாட்சியி னார்க்கு மரங்கட்கு மன்னுயிர்தாம் பயப்பட வொக்கு மெனவே யெனமன்னும் பற்றிலனாய் வியப்புடை யாகம மீதென நீயும் விரித்துரைக்கு நயப்பிர மாணங்கண் மேற்குற்ற நாடுவன் யானெனவே.

376 நிற்றலுங் கேட்டினோ டுண்மையு மின்மையு நேர்தலினு மொற்றுமை வேற்றுமை தம்மையு மொட்டப் படுதலினுங் குற்ற மிவையிவை யாதலைக் கேளெனக் கூறினனே முற்ற மவளது பக்க மறிதலில் மொக்கலனே.

377 வேயொத்த தோளி நிலையுதல் வேண்டப் படுதலினாற் காயத்தின் றன்மைய வாயெக் கருமமுங் காண்பரிதா நாசத் தவமெனிற் றோன்றுவ தாமு நவநவமாம் தோசத்த வாநின் பொருளெனக் கேட்டிது சொல்லினனே.

378 நின்றன வேயென்று நில்லலவேயென்று நேர்பவர்க்கு மொன்றென வேயும்பின் வேறெனவேயுந்தம் முண்மையின்கட் சென்றன வேயென்றுஞ் செல்லலவேயென்றுஞ் செப்பினர்க்கே அன்றென லாமோ வறைந்தபல்குற்ற மவையவையே.

379 நின்ற குணங்களி னித்தியமென்று நிலையிலவா மென்ற குணங்க ளநியத மென்று மியம்புதலாற் சென்ற குணங்க ளிருமையு மல்ல தவற்றினிற்றீர்ந் தொன்றங்கு நின்ற பொருளுள்ள தேலா தெனவுரைத்தான்.

380 கேடில வாய குணத்தி னிலையுங் கெடுங்குணத்தி னீடில வென்பது நேர்ந்தினி யப்பொரு ணேர்தலில்லாய் மூடலை யாவதன் காரண மென்னை முடிகுணத்திற் கூடல தாய குணிப்பொருள் கூறினர் யாவரென்றாள்.

381 குணங்களல் லாற்பொருள் வேறில்லை யாயிற் குறிப்பொருளாம் பிணங்கல வாகிப் பிறபிற வாயிற பிறபொருளா முணர்ந்தன தாமிகு சொல்லினு மொன்றெனி னொன்றவையா நுணங்கிய கேள்வியி னாயொன் றுரையென நோக்கினனால்.

382 நிலையா தெனவு முயிரில்லையென்று நெறிமையினாற் றொலையாத் துயரொடு தூய்தன்மையென்றின்ன தொக்குளவாக் கலையா விழுப்பொருட் கந்தங்களைந்திற்கும் காட்டுதலான் மலையா திதுநுங்கண் மார்க்கத்தொடென்றனள் மாணிழையே.

383 ஆரிய சத்தைய லாற்கந்தம்வேறில்லை யேற்குறியா மாரிய சத்தையுங் கந்தமும்வேறெனின் வேறவையாம் போ¢வை தாமிரண் டொன்றினுக்கேயெனி னொன்றவையாங் கூரிய சிந்தையி னாயொன்றுசொல்லென்று கூறினளே.

384 சொல்லலன் யானெனச் சொல்லுவையாயினுஞ் சொன்மலைவாம் சொல்லல னென்ன வினவினுமென்னினுஞ் சொல்லிலையாம் சொல்லுவ னல்லன் ஒருவகையாச் சொலினவ் வகையாற் சொல்லிய குற்றங்க டுன்னுமெனவது சொல்லினனே.

385 தன்மையி னன்மையுந் தன்னல்பொருள்களி னுண்மையுந்தம் பன்மை யுடையவப் பண்புகளெல்லா முடனுரையுஞ் சொன்மை யுணரா தவர்கட்குத்தான்சொலற் பாடின்மையாற் புன்மை யுடைய புறத்தீருரைக்கு முரையுமென்றாள்.

386 சேற்பொருள் போலரி சிந்தியகண்ணாய் சிதர்ந்துரைக்கு நூற்பொரு டாம்பரி ணாமத்திரிவென நோக்குதியேற் பாற்பொரு டான்றயி ராயபொழுதின்கட் பாழ்த்திலதேற் பாற்பொரு ளேயின் றயிரெனச்சொல்லப் பழுததென்றான்.

387 உருவப் பிழம்பப் பொருளென்றுரைப்பனிப் பாறயிர்மோர் பருவத்தி னாம்பரி யாயப்பெயரென்பன் பாலழிந்து தருவித் துரைத்த தயிருருவாய்மும்மைத் தன்மையதாந் திருவத்த தென்பொரு ளாதலைத்தேர தெளியிதென்றாள்.

388 பெற்றது தானுங்கும் மாயத்திரிபு பயற்றியல்டே யிற்ற திதுவென திட்டமென்பாயிவ் விரும்மையினுந் தெற்றெனத் தீர்ந்தோர் பொருளென்னைதேற்றினித் தேற்றிலையேன் மற்றது வாமை மயிரெனச்சொல்லுவன் மன்னுமென்றான்.

389 கெட்ட திரிட்சியுந் தோன்றியசாந்தும் பொருளெனவும் பட்டன வப்பொருள் பையைகளேஎன்னும் பான்மையினால் விட்ட திரள்வினுந் தோன்றியசாந்தினும் வேற்றுமையாம் நட்டமுந் தோற்றமு நாட்டேனுருவிற்கு நானுமென்றாள்.

390 திரியும் பொருள்க டிரிந்தாம்பயறுகும் மாயமுமாய் விரியும் மெனவது வேண்டுகின்றாயறக் கேட்டமைக்கேற் கரியும் முடையன் பயறொடுநீருங் கலந்துபெய்தா லெரியுறு கின்றதன் றேயிதுவோவொப்ப விற்றதென்றான்.

391 பருமை யுடைய பயற்றின்வழியொன்று பாவியுண்டா யருமை யுடையவந் நீருக்குமாவியன் றோவதன்றி யிருமையுங் கெட்டுட னாயிற்கும்மாயமு மில்லற்கனும் பெருமையி னாலொன்று பெற்றொன்றுபேறின்மை பேதைமையே.

392 கெடுவன தோன்றுவ நிற்பன தாமுங் குணமென்றியேற் கெடுவன தோன்றுவ நிற்பன தாங்குண மாயினற்காற் கெடுவது தோற்ற நிலையுத றானப் பொருளெனவும் படுவ· தாக வுரைப்ப தியாதின் பவத்ததென்றான்.

393 கூறிய தெக்குண மக்குணந்தானக் குணிப்பொருளே தேறிய தெக்குணி யக்குணிதீர்ந்தில பல்குணமும் வேறென வொன்றென வில்வகைவேண்டுகின் றேற்கவைதா மாறென்னுங் கொள்ளா முடிபுமொழிநின் மயக்கமென்றாள்.

394 புற்கல மாய முதற்பொருடத்தமுட் புல்லினவாய்க் கற்களு நீருந் நிலத்தொடுகற்றழ லென்றினைய பற்பல கூற்றாற் பிறங்கிப்பரக்குந் தியமென்னையோ வுற்றவை யொன்றொன்றி னுட்புகுமோத்துடை யாய்க்கெனலும்.

395 யாத்தற் கமைந்த குணத்தின வாய வணுப்பொருள்க ணீத்தற் கரியன நீத்த வருக்க நெறிமையினா லேத்தற் கியைந்த விரண்டணு வாதியி னின்னணமா மோத்திற்கிடந்த வகையிது கேளென் றுரைத்தனளே.

396 இரண்டணு வாதியி னின்னணமேறுநின் கந்தமெனிற் றிரண்டன வாய்த்தம்முட் சென்றுடன்றீண்டு மிடத்தவைதா முருண்டன தாமொன்றி னுள்ளும்புடையு முடைமையினாற் றெருண்டனம் பாகுபா டுற்றற்குமென்றனன் றேரனுமே.

397 ஓரிட மாய முதற் பொருட் குள்ளும் புடையுஞ்சொல்லிப் போ¢ட மாக்கிப் பிளப்ப னெனவும் பிதற்றுகின்றா யாரிட மாய வறிவிற்கு மின்னண மாதலினா னோ¢டத் தாற்பன்மை யெய்தி யுருவா நெறியுமென்றாள்.

398 வண்டாயுங் கோதாய் வரைநெல்லியின் காய தங்கை யுண்டாய போதே யுறையூரகத் தில்லை யென்பாய் கண்டாயிம் மெய்ம்மை பிறர்காண்டற் கரிய தென்றான் பெண்டான மீயு மறங்கொண்ட பெருமை யினான்.

399 வெய்தாய தீயுங் குளிராகிய நீரும் விண்டோய்ந் தைதாய காற்று மவையாரு மறிப வென்றாற் பொய்யாகு மென்னா யவைபுத்த வசன மென்பாய் செய்தாய் முழுக்கூ ழதுபோலச் சிதைக்க வென்றான்.

400 கந்தின்கட்ட காணாய் களியானையை யில்லை யென்பாய் வந்திங்க ணின்ற பொழுதுண்மை மறுக்க லாமோ தந்திங் குரைத்த வுரைதானுங் கெடுக வென்றான் வெந்திங்கு வித்தின் னனைத்தாகிய வீடு கண்டான்.

401 ஆண்டில்லை யென்பன் னதுவுள்வழி யுண்டு மென்ப னீண்டின்மை யுண்மை யிவையாக விசைத்து நின்றேன் வேண்டி யனவே முடிப்பாய்விரி பொன்னெ யிலு ளீண்டி யிமையோர் தொழுவானெம் மிறையு மென்னாய்.

402 கொல்லேற்றின் கோடு குழக்கன்றது வாயி னக்கா லில்லாகு மென்றி யிவையிங்ஙன முண்மை யின்மை சொல்லேனு மல்லே னதுசொல்லுவன் யானு மன்னாய் கொல்லேற தாகப் பொழுதேயுடன் கூறு கென்றான்.

403 ஏறாய காலத் தெழினல்லது வத்து பேதங் கூறாரெ ழாத குழக்கன்றினுக் கின்மை முன்னா வீறாகி நிற்கும் முதலுண்மையிற் கின்மை யெங்கு மாறியாது மில்லை கலைக்குண்மையு மற்றுமென்றாள்.

404 கன்று முயலுங் கழுதைப்பெயர் பெற்ற னவுங் குன்றுந் தலையுட் பெறப்பாடெய்தல் கோடு றுப்பா வென்றும் மவற்றுக் கெழலில்லைநின் பேத மென்றாற் சென்றுஞ் சிலவிற் சிலவின்மையு மாகு மென்றான்.

405 இல்லாத கோட்டை யுளதாக வெடுத்து மென்று சொல்லார்கள் பேதம் சொலவேண்டுவை யாயி னக்காற் புல்லாது நில்லாப் பொருடங்களுக் குண்மைக் கின்மை கல்லாது நீயுங் கழுதைக்கருள் செய்தி யென்றாள்.

406 இல்லை வலக்கை யிடக்கைவகை யால தென்றுஞ் சொல்லின் னதற்கு மதுவேயெனுஞ் சூழ்ச்சி மிக்கா யொல்லை யிரண்டு முளவாக வுணர்ந்தனை நீ நல்லை பெரிதும் மெனமொக்கல னக்க னனே.

407 இக்கை வகையா லதுதானுள தாயி னக்காற் றொக்க விரண்டும் முடனாதலிற் றூய்தொ ருபால் பக்கம் மதுவும் படுபாழினிக் காலு மற்றாய்ச் செக்கின்கணைபோன்றினிச் சென்றுருள் சேம மென்றாள்.

408 கைகால் வகையால் பெறப்பாடிலை காலு மற்றாய் மெய்தா மொழிய வவைபாறெய்தல் வேண்டு தலாற் கொய்தார் நறும்பூங் குழலாய்குழ மண்ணர் களாச் செய்தா யுலகிற் சிறுமானுயர் தம்மை யென்றான்.

409 கால்கால் வகையா லுளகைகளுங் கையி னற்றாய்ப் பாலாய் முடியு மவைபண்டை யியல்பி னாலே யேலா திவைதா முளவெத்திறத் தானு மென்னி னாலாவ தான முடிவி னாயொடு நண்டு மொத்தாய்..

410 அல்லென் றுரைத்த வுரைதானுமெம் மாக மத்து ளில்லென்ற வாறென் றிவையிங்ஙனம் வேண்டு கின்றாய் சொல்லன்று நாயைந் நரிதானென்னச் சொல்லு கின்றா னில்லென்ற வாறோ நரிதன்னையு மென்ற னனே.

411 நாய்கொன் னரிகொல் லெனத்தோன்றுமுணர்வு நண்ணி யாய்சொல் லிரண்டின் னுணர்ந்தல்லதுவன்மை யென்றாய் நீசொல் லறியா யறிவார்நெறிநேடு கில்லாய் பேய்சொல் லுபவே பலசொல்லிப்பிதற்ற லென்றாள்.

412 பேரும் உணர்வும் பொருளில்லதற் கில்லை யென்றி சார்வும் மகல்வுந் தலைப்பெய்தலோ டுள்ள மின்மை நோ¢ங் கிவையு முணராமையிற் கென்ற னனாய்த் தேரன் சிறிதே தெரிகோதையை நக்க னனே.

413 ஆத்தன் னுரைத்த பொருடன்னையவ் வாக மத்தாற் சாத்தன் பயின்றா லறியாவிடுந் தன்மை யுண்டோ வீர்த்திங் குரைத்த பலதம்முளொன் றின்ன தென்னா யோத்தின் வகையாற் பெயரோடுணர் வின்மைக் கென்றாள்

414 ஒன்றி னியற்கை யொருவான்பொருட் கில்லை யென்றே யென்று முரைத்தி யிரும்பெய்திய வெம்மை யந்நீர் சென்றும் மறுகித் தீக்குணஞ் சேர்ந்த தற்றேற் குன்றும் பிறவோ வினிநீண்ட கோளு மென்றான்.

415 கொண்ட வுடம்போடுயிர் தானுடன் கூடி நின்றாற் கண்டு முணர்ந்து மவையாவதென் கல்வி யில்லா யுண்டங்க ணின்ற வுயிர்க்காக வுரைப்ப தொக்கும் பிண்டந் நிகழ்ச்சி பிழைப்பாகு நினக்கு மென்றாள்.

416 மெச்சி யிடத்தாற் பிறிதின்மை விளம்பு கின்றாய் பிச்சை முதலாப் பெரிதாவறஞ் செய்த வன்றா னச்செல் கதியுள் ளமரன்னெனப் பாடு மின்றே விச்செய்கை யெல்லா மிகழ்வாம்பிற வென்ற னனே.

417 ஊனத்தை யின்றி வழங்காவுழல் கின்ற போழ்து மானத்தி னீங்கி வதங்காத்து வருந்தும் போழ்தும் வானத்த தாய பொழுதுமன் னுயிர தென்றா டானத்தி னுண்மை யிதுதத்துவ மாக்கொ ளென்றாள்.

418 காலம் பிறிதிற் பொருளில்லெனக் காட்டு கின்றாய் ஞால மறியத் தவஞ்செய்தவ னல்லு யிர்தா னேலங்கொள் கோதா யெதிர்காலத்தி னின்மை யாமேற் சீலங்கள் காத்தல் வருத்தஞ்சிதை வாக வென்றான்.

419 ஆற்ற வருந்தித் தவஞ்செய்து மரிய காத்துந் நோற்றும் பெரிதுந் நுணுகாநின்ற பொழுதி னானும் மேற்ற முடைய விமையானெனப் பட்ட போழ்துஞ் சாற்றி னுயிர்தன் பொழுதே யுண்மை தங்கு மென்றாள்.

420 நூறா னிரும்பாய் நிகழாமை நொடிதி யாங்கே பாறான் றயிரா மெனநின்று பயிற்று தியான் மாறா னுடையா ருரையொக்குநின் மாற்ற மென்னாத் தேறார் தெருண்டா ரெனச் சொல்லினன் றேர னும்மே.

421 தத்தந் நிமித்தந் தலைப்பெய்துதங் காரி யம்மா யொத்த பொருள்க ணிகழ்வாக்க முரைத்து நின்றேன் பித்தனி னோப்பப் பிறிதிற்பிறி தாமென் பனோ வித்தின் வழியா னுரைநீயும்வெள் யானை யென்றாள்.

422 கூடா பொருள்கள் பிறிதின்குணத் துண்மை யென்பாய் பாடாஅலப் புட்பத் தனவாகிய பண்பு நாற்றம் மோடாவ தெய்திற் றெனவையமுரைக் கின்ற த·தா னாடாது சொன்னா யதனன்மை யொழிக வென்றான்.

423 போதுக்க வாசம் புதுவோட்டைப் பொருந்தினாலும் மேதக்க நாற்ற மிதுபூவின தென்ப மிக்கார் தாதுக்க நின்று மவைபோக்குந் ததாக தற்கென் றேதுக்கள் காட்டி முடித்தாளிணை யில்ல நல்லாள்.

424 வீட்டிட மென்று நின்னால்வேண்டவும் பட்ட தன்னை நாட்டுவ னதுவு நாயிற்கென்றுநன் றென்றி யாயிற் சூட்டடு நரகந் தானுஞ்சுடர்ந்தநற் சுவர்க்கந் தானும் பூட்டின முரைத்த வக்காற்போந்ததங் கென்னை யென்றான்.

425 கதியின வகைய வாறுங்கந்தபிண் டங்கள் சொன்னான் பதியின வென்ன நின்றாய்பாக்கனாய் காட்டு தீயால் விதியினின் விளையட் டார்தம்வீட்டிட மின்ன தென்றாற் கதுவென்னை யென்னச் சொன்னாலாகம மல்ல தாமோ.

426 பேர்த்தினவண் வார லில்லாப்பிறவியாந் தான மென்னிற் றீர்த்திவண் வார லின்மைசேர்விடக் குண்மை யாமோ கூர்த்தலில் வினையி னின்மைகூறுவ னென்றி யாயி னார்த்துள னவனே யாயினண்ணுமே வினையு மென்றான்.

427 பிறப்பதை வீடு மென்னேனவ்விடம் பேர்ப்பின் றென்னே னுறத்தகு வினைக டாமுமுண்மையா லொட்டு மென்னேன் மறத்தலில் யோக பாவமாசதா மீட்டு மென்ப திறப்பவும் வேண்டு கின்றேற்கெய்தல நின்சொ லென்றாள்.

428 பிறக்குந்தன் ஞானத் தாலும்பின்னுந்தன் னுண்மை யாலும் புறப்பொருள் கொண்டு நின்றுபுல்லிய சிந்தை யாலுஞ் சிறப்புடை வீடி தென்றுசெப்புநீ தீவி னையைத் துறக்குமா றில்லை நல்லாய்சொல்லுநீ வல்ல தென்றான்.

429 நன்றியில் கார ணங்கணாட்டிநீ காட்டி னவ்வு மொன்றுநா னொட்டல் செல்லேன்யோடுகொடு பாவ நின்றாற் குன்றினிற் கூர்ங்கை நாட்டாற்கூடுநோ யாதிற் குண்டோ வொன்றுநீ யுணர மாட்டாயொழிகநின் னுரையு மென்றாள்.

430 கருவிதா னொன்று மின்றிக்கடையிலாப் பொருளை யெல்லா மருவிய ஞானந் தன்னாலறியுமெம் மிறைவ னென்பாய் கருவிதா னகத்தி னாயகடையிலா ஞான மன்றோ மருவியார்க் கமிர்த மொப்பாய்மாற்றந்தா விதனுக் கென்றான்.

431 வினையுமவ் வினையி னாயவிகலஞா னங்க டாமு மினையவே கருவி யென்றாலிங்குநின் னுள்ளம் வையாய் முனைவனாய் மூர்த்தி யல்லான்மூடுமே மாசு மென்பாய் கனைகட லென்லை காணுங்காக்கையொத் தாங்கொ லென்றாள்.

432 கொண்டதன் கரணந் தானுமில்லையேற் கூற்று மில்லை மண்டினர் வினவு வார்க்குமலைச்சிலம் பனைய னென்றா லுண்டுதன் கரணந் தானுமுரைக்குநர்க் குறுவ னென்னிற் பண்டுசெய் நல்வி னையைப்பகவனே யென்று மென்றான்.

433 தனுவெனுங் கருவி தன்னாற்றன்னடைந் தார்க டன்னை வினவின வுணர்ந்து சொல்லும்வினையினுக் கின்ன துண்டோ சினவினுந் தேர வொன்றுசெப்புவன் செல்க தீயுட் கனவினு நின்ன னாரைக்காணல னாக வென்றாள்.

434 முறையினா லறிய லன்னேன் மூத்தலே யிளமை சாக்கா டுறையல வொருவன் கண்ணே யுடனவை யாக வொட்டி னிறைவனா ருணர்வு தானுமின்மைமே லெழலும் வேண்டி யறைதுநா மன்ன மன்னா யன்னண மாக வென்றான்.

435 சீலவான் றெய்வ யாக்கைதிண்ணிதா வெய்தி நின்றார் காலமூன் றானு முய்த்துக்காட்டலுங் காண்டு மன்றோ ஞாலமூன் றானு மிக்கஞானவா னான நாதன் போலுமென் றோர்தல் செல்லாய்போர்த்தனை யகமு மென்றாள்.

436 நாளெல்லா மாகி நின்றநன்பொரு டம்மை யெல்லாங் கோளெல்லாந் தானொ ருங்கேகொள்ளுமே லீர்ங்கு வள்ளைத் தாளெல்லாந் தானொ ருங்கேதானுநல் லானோர் நல்ல வாளினா லேறு முண்டேல்வாய்க்குநின் னுரையு மென்றான்.

437 நீருநீர் தோறு முவ்வாநலையிற்றே திங்க ளென்று மூரினூர் தோறு மொவ்வாவொளியிற்றே ஞாயி றென்றும் யாரின்யார் கேட்ட றீவாரன்னனே யண்ண லென்றார் தேரனீ சொன்ன தன்னம்சேரல வாக வென்றாள்.

438 அளவிலாப் பல்பொ ருள்கட்காகுபண் பாகி நின்ற வுளவெலாப் பொதுக்கு ணத்தானொருங்குகோ ளீயுமென்னிற் பிளவெலா மாகு மன்றேபெற்றிதா மொத்த லில்லேற் கொளவெலா ஞானந் தானுங்கொள்ளுமா றெவன்கொ லென்றான்.

439 ஒன்றல்லாப் பலபொ ருளுமொத்தொவ்வாப் பெற்றி யாலே நின்றுகோட் செய்யு மென்றானீடிய குற்ற மாகா தென்றலா லின்ன தன்மையிறைவன தறிவு மெய்ம்மை யின்றெலாங் கேட்டு மோராயேடனீ யென்று சொன்னாள்.

440 எல்லையில் பொருள்க டம்மை எல்லையி லறிவி னாலே யெல்லையின் றறியு மெங்க ளெல்லையி லறிவ னென்பாய் எல்லையில் பொருள்க டம்மை யெல்லையின் றறியி னின்ற வெல்லையி லறிவு தானு மெங்ஙன மெய்து மென்றான்.

441 துளக்கில்லாப் பலபொ ருளுந்தொக்கதன் றன்மை யெல்லாம் விளக்குமே ஞாயி றொப்பவென்பது மேலுஞ் சொன்னேற் களக்கிவர் தன்ன மன்னாயாத்தன தறிவு மென்றென் றிளக்கிநீ யின்னு ம·தேசொல்லுதி யேழை யென்றாள்.

442 ஓதலி லுணர்வு மின்றேலூறவற் குண்டு மாகு மோதலி லுணர்வு முண்டேலொன்றுமே பலவும் வேண்டா மோதலி லுணர்பொ ரூடாமுள்ளவும் மில்ல வும்மே லேதமா மில்பொ ருண்மேனிகழ்ச்சிதா னிறைவற் கென்றான்.

443 சென்றவக் குணங்க டாமுஞ்செல்லுமக் குணங்க டாமு மன்றையக் குணங்க டாமுமப்பொருட் டன்மை யாலே நின்றதன் ஞானந் தன்னானிருமல னுணரு மென்றாற் பொன்றின வெதிர்வ வென்றல்பொருள்களுக் கில்லை யென்றாள்.

444 பிறவிதா னொன்று மில்லான்பெரியனே யென்று நின்றான் மறவிதா னில்லை யோனிமன்னுநான் கென்னு மில்லா னறவியா யுந்த நூலுள் ளாத்தனா மாயி னக்காற் புறவினிற் புரளுங் கல்லும்புண்ணிய னாக வென்றான்.

445 பிறத்தலே தலைமை யாயிற்பிள்ளைக ளல்ல தென்னை யறக்கெட றான தென்னிலட்டக வித்து வெந்தாம் புறப்படும் போர்வை யாலேற்புண்டொழு நோய ராகச் சிறப்புடை யண்ண றன்னைக்கல்லெனச் சொல்லு வாய்க்கே.

446 அடைவிலா யோனி யானாயாருமொப் பாரு மின்றிக் கடையிலா ஞான மெய்திக்கணங்கணான் மூன்றுஞ் சூழ்ந்து புடையெலாம் போற்றி யேத்தப்பொன்னெயிற் பிண்டி மூன்று குடையினா னிறைவ னென்றாற்குற்றமிங் கென்னை யென்றாள்.

447 கோதியிட் டுள்ள தெல்லாங்குண்டல கேசி யென்பா ளாதிசா லாவ ணத்துளார்கதர் தம்மை வென்ற வீதியீ தென்று சொல்லிவீழ்ந்தனை நீயு மென்றா ணீதியாற் சொல்லி வென்றநீலமா கேசி நல்லாள்.

448 பேதைக ளுரைப்பன வேசொல்லிப்பெரிதலப் பாட்டினைநீ பேதைமற் றிவன்பெரி தெனப்படும்கருத்துடை மிகுதியினாய் தாதையைத் தலைவனைத் தத்துவதரிசியைத் தவநெறியி னீதியை யருளிய நிருமலன்றகைநினக் குரைப்ப னென்றாள்.

449 பகைபசி பிணியொடு பரிவின பலகெட முகைமலர் தளிரொடு முறிமரம் வெறிசெய மிசைநிலம் விளைவெய்த விழைவொடு மகிழ்வன திசைதொறு மிவைபிற சுகதன செலவே.

450 குழுவன பிரிவன குறைவில நிலையின எழுவன விழுவன விறுதியி லியல்பின வழுவலில் பொருள்களை மலர்கையின் மணியென முழுவது முணருமெ முனைவர னறிவே.

451 நிறைபொறி யுளவவை யறிதலி னெறிமைய முறைபொரு ணிகழினு முறைபடு மறிவிலன் மறைபொரு ளுளவவ னறிவினை மறையல விறைபொருண் முழுவது மறிதிற மிதுவே.

452 பிணிதரு பிறவிய மறுசுழி யறுவதொர் துணிவிது வெனநம துயர்கெடு முறைமையு மணிதரு சிவகதி யடைதலு மருளுதல் பணிதரு பரமன தருள்படு வகையே.

453 சொரிவன மலர்மழை துளிகளு நறுவிரை புரிவன வமரர்கள் புகழ்தகு குணமிவை விரிவன துதியொலி விளைவது சிவகதி எரிவன மணியிதெ மிறைவன திடமே.

454 அரசரு மமரரு மமர்வனர் வினவலின் வரைவில பிறர்களு மனநிலை மகிழ்வெய்த உரைபல வகையினு முளபொரு ளுணரவொர் முரைசென வதிருமெ முனைவரன் மொழியே.

455 வினையிரு ளடுவன விரிகதி ரியல்பொடு கனையிருள் கடிவன கடுநவை யடுவன மனையிரு ணெறிபெற மதிகெட வடைவன வினையமெ யிறையவ னிணையடி யிவையே.

456 ஆத்த னிவனென் றடிக ளிடமிசைப் பூத்தனைத் தூவிப் பொருந்து துதிகளி னேத்துநர் கண்டா யிருவினை யுங்கெடப் பாத்தில் சிவகதிப் பான்மைய ரென்றாள்.

457 ஏந்த றிறங்க ளிவையே லமைந்தன போந்த வகையாற் பொருளும் பிழைப்பில வீந்த விவற்றினின் வேற்றுமை வீட்டிற்கு மாய்ந்த வகையா லறிவிமற் றென்றான்.

458 வித்தென்றும் வெந்தால் முளையல தாயெண்மை யொத்தினி துண்டா முயிரும் பிறப்பின்றிச் சித்தி யகத்துச் சிதைவிலெண் டன்மையி னித்திய மாகி நிலையுள தென்னாய்.

459 ஒக்கு மிதுவென வுள்ளங் குளிர்ந்தினி

மொக்கலன் சொல்லுமிம் மோக்கத்தைப் பாழ்செய்த தக்கில தாகுந் தலைவ ரியல்பென நக்கன னாய்க்கென்று நன்னுத லென்றான்.

460 பண்டே யெனக்கிம் மயக்கம் பயந்தவன் கண்டார் மயங்குங் கபில புரமென்ப துண்டாங் கதனகத் தோத்துரைக் கின்றனன் றண்டா தவனொடு தாக்கெனச் சொல்லி.

461 சிறப்பின தென்பதைச் செப்பலுந் தெற்றெனப் பிறப்பறுத் தின்பெய்தும் பெற்றியின் மிக்க வறப்புணை யாகிய வாயிழை யாயான் மறப்பில னென்று வலஞ்செய் தொழிந்தான்.

462 அருளே யுடைய னறனே யறிவா டெருளா தவரைத் தெருட்டல் லதுவே பொருளா வுடையாள் புலனே நிறைந்தாள் இருடீர் சுடர்போ லெழுந்தா ளவன்மேல்.


புத்த வாதம்[தொகு]

463 அணிநா டிவைதா மறல்யா றிவைதாம் பிணிநா டிவைதாம் பெருங்கா டிவைதாம் மணிமா மலைதா மெனவே வருவாள் அணியார் சுகதன் நகரெய் தினளே.

464 அறையும் கடலும் அரவக் குரலும் பறையின் னொலியும் படுகண் டிகையுஞ் சிறையின் மிகுமா லிதுசெம் படர்கள் இறைவன் னுறையு மிடமா மெனலும்.

465 மழைசேர் நகரம் மலைபோன் றனவே கழைசேர் கொடியுங் கதலிவ் வனமே விழைதா ரவரும் விரிகோ தையரும் முழைவாழ் புலியே மயிலே மொழியின்.

466 நெடுவெண் டிரைமே னிமிருந் திமிலுங் கடுவெஞ் செலவின் னுலவுங் கலனும் படுவண் டறையும் பொழிலும் மெழிலார் மடுவுந் திடரும் மணல்வார் புறவும்

467 கயன்மீ னிரியக் கழுநீர் விரியும் வயன்மாண் புடைய வளமைத் தெனவும் முயன்மீ னெறியு முறியுங் கறியா தயன்மே யுறையா தணியிற் றெனவும்.

468 கழுகின் னினமும் கழுதின் னினமும் முழுதும் மறுவை பலமூ டினரும் கொழுதின் னிணனும் பிணனுங் குலவி இழுதென் னெலும்பா ரிடுகா டெனவும்.

469 சாதியே மிக்க தடுமாற்ற வெந்துயர மோதியே வைத்தாரவ் வோத்தெலா மீக்கிடந்த வீதியே காணலா மென்றாளா னின்றாரும் போதியா ரீண்டைப் புலால்பழியா ரென்றலும்.

470 அங்காடிப் பண்டவூன்றின்ன வறமுரைத்தார்க் கிங்காடி வாழ்வனவுமூனாய்வந் தீண்டியவாற் கொங்காடத் தேனறையுங்கொய்ம்மருதம் பூவணிந்த பொங்காடை போர்த்தார்க்குப்பொல்லாதே யென்னீரோ.

471 விலைபடைத்தா ரூன்வேண்ட வவ்விலைதான் வேண்டி வலைபடைத்தார்க் கெம்முயிரை வைக்கின்றா மின்ன கொலைபடைத்தா னோகொடிய னென்பனவே போலத் தலையெடுத்து வாய்திறப்ப தாமிவையோ காணீர்.

472 தன்றார மீந்தான் றனக்குறுதி யாவதனை யொன்றானும் வேண்டான் பிறர்க்கே யுழந்தானூன் தின்றானுந் தீவினையைச் சேருமெனச் சொன்னாற் பொன்றாவாய்ப் பல்விலங்கும் பூமிமேல் வாழாவோ.

473 உரிதா வுணர்ந்தானொன் றோரா துரையான் பரிவே யிதுவுந்தன் பாலரோ டெல்லா மெரிதோய் நரகம்பா ழேற்றுவா னேயாம் பெரிதா மளியன் பெருந்தகைய னேகாண்.

474 கொடைக்கொட்டி விற்பானுங் கொள்வானு மன்றி யிடைச்செட்டி னாற்பொருளை யெய்துவான் போல முடைக்கொட்டி முத்துரைத்து மூடிக்கொண் டேகுங் குடைச்சிட்ட னாருயிர்க்கோர் கூற்றமே கண்டீர்.

475 ஆடுவார் காண்பா ரவரருகே தான்சென்று தோடுவார்ந் தாலொப்பச் சொல்விரிப்பான் போற்பாவம் கூடுவார் கூடாதார் கொன்றார்தின் றாரென்னும் சேடனார்க் காண்டுநா மென்றுதான் சென்றாளே.

476 அணிசெய் கோழரை யரைநிழ லழகனைப் பொருந்தி மணிக டாம்பல கதிர்விடு மலருடை மணைமேற் றுணிவு தோற்றினை யெனச்சிலர் துதியொடு தொழுது பணிய யாதுமோர் பரிவிலன் படம்புதைத் திருந்தான்.

477 ஆத்த னேயெனத் தெளிந்தவ ணமர்ந்திருந் தவர்க்குச் சூத்தி ரம்மிது வினையமு மிதுவிது பிறிதாஞ் சாத்தி ரம்மிவை மூன்றென வன்றவத் தோன்றல் பாத்து ரைக்குந்தன் பதப்பொருள் பலவகைப் படவே.

478 கந்த மைந்திவை கணிகத்த வாமெனக் கரைந்து முந்தி நாடினோ ருணரவல்ல தில்லையென் றுரைத்தும் புந்தி யாலங்கோர் புற்கல னுளனெனப் புணர்த்து மந்தி லாற்சொலாப் பாட்டினோ டியாதுமில் லெனவும்.

479 தத்து வம்மிவை தாமெனத் தமர்களுக் குரைக்கும் புத்த னார்தம்மை புயலிருங் கூந்தலி பொருந்திப் பித்தர் போற்பல பிதற்றினீர் பிதற்றிய விவைதா மெத்தி றத்தினு மிசையின்மை யிசைக்குவ னென்னெவெ

480 ஓதி னீர்சொன்ன கந்தமைந் துளவெனி னுருவே வேத னையொடு குறிசெய்கை யிலவென விரிப்பும் போதியா லங்கோர் புற்கல னுளனெனப் புணர்ப்பும் யாது மின்மையோ டவாச்சிய மறும்பிற வெனவே.

481 ஐந்தில் யான்சொன்ன பலகளு மமைவில வெனினும் கந்த முண்மைக்கட் கருத்துள தாம்பிற வதனாற் சிந்த மாயவு முளவெனத் தெளியினி யெனலும் நந்த னார்க்கற முரைத்திர்நீ ரோவென நக்காள்.

482 இட்ட நீபல வுரைத்தனை யிவற்றுளொன் றொழிய நட்ட மாயினு நன்மையை நின்வயிற் றருவோய் குட்ட மேமுழு மெய்யினு மெழுந்தவன குடுமி தொட்டி யானெனி னுந்தூய னோவது மாமோ.

483 நல்ல வேயென நாட்டிய கந்தமிவ் வைந்து மில்ல வேயெனத் தெருட்டுவ னெடுத்துரை யெனத்தான் சொல்ல வேதுவ ராடைகண் மூடிய சேடன் மெல்ல வேயிவை கேளென விரித்தவ னுரைக்கும்.

484 உருவே திரிவே தனையா றுணர்வும் மருவா தனமாண் குறியத் துணைசெய் இருவே றவைசெய் கையிரு பதுமாந் திருவே யிவையெம் பொருடே ரெனவும்.

485 முறைசெப் பியவைந் தினுண்முன் னையுரு வரையிற் பலவட் டகமுள் ளுறுத்த விறைபட் டனவெட் டெனவொட் டினகே ணறையிற் பொலிகோ தைநறுந் நுதலே.

486 நிலநீ ரெரிகாற் றோடுரு விரதந் நலமா கியநாற் றமொடூ றிவைதா மிலவே யவையெட் டினும்விட் டதிறஞ் சொலவா முடன்கேட் டொடுதோற் றமுமாம்.

487 வலிதா நிலமை யதுநீர் வெய்துதீக் கலியே தருகாற் றியக்கம் கருமப் பொலிவேற் பொறையயர்த் தல்புலர்த் துளர்த்தன் மலிபூ தங்கணான் கின்மாண் பின்னவையே.

488 இனிவே தனையா வனவின் படுமொடு துனிவே தருதுன் பமுமா மிடையுன் நனிதா நலதீ வினையன் மையினாம் பனிவே யிணைபன் னியதோண் மடவாய்.

489 அறிவா வனதா மினியா வெனினைம் பொறியோ டுமனம் மிவைபுல் லினவேற் குறிதா மிவையா றினுங்கூறுவதென் னெறியா மிவைநீ லநிகர்த் தகணாய்.

490 குயலா குயலம் மெனக்கூ றும்வினைப் பயனாற் பலபா கெனப்பட் டவைதா மயலா மனமே வசிகா யத்தினா மயலா ரிதாவை மினியா ரறிவார்.

491 கடனா கியகந் தமிவைந் துகளும் உடனே யவைதோன் றியொரு கணத்துட் கெடுமே யவைகேட் டினும்வாட் கணல்லாய் சுடர்மே யசுடர்ந் நுதிபோன் மெனவும்.

492 கவையொப் பனவை விரலைந்து களும் இவையிப் படிக்கைப் படியென் றதுபோ லவையப் படிக்கந் தங்களைந் துகளும் நவையைப் படுநல் லுயிரா மெனவும்.

493 அவைதா நிலையா துயரா மசுவம் நவையா ருயிர்நாட் டிலங்காட் டமிலை யிவைநான் மையென்வாய் மையிவ்வா றுணர்வா ரெவையே செய்துமெய் துபவீ டுமென்றான்.

494 பல்லியல் பாகிப் பரந்தவைங் கந்தமுங் கந்தங்கடாம் புல்லிய வொற்றுமை யிற்குறி யாகிய பொய்யுயிருஞ் சொல்லிய கேட்டவள் வேட்டக் குரம்பை சுடுபவர்போ லல்லியங் கோதைநின் காட்சி யழித்திடு வேனெனத்தான்.

495 பிண்டம் பிரிவில வேயெனச்சொல்லுத லாலவற்றுக் குண்டங் கொருகுணி யாங்கவை தாங்குண மாகுமன்றேல் விண்டங் கவையவை வேறுளதாதலும் வேண்டுமன்றோ பண்டங்கு நீசொன்ன முட்டியிற்பஞ்சாங் குலிகளும்போல்.

496 பூதன்கும் புகுந்தே தெருல்லலுற் றயவற்றுக் கேதமி றன்மை கரும மிரண்டா வியைந்தவை பேதமு மாமென்ற பெற்றியி னாற்பொரு ளிற்றென்றலாற் சாத மாமுயிர் தன்மையிற் றேற்ற தவறெவனோ

497 நின்சொல்லப் பட்ட வலிப்புந் தரிப்பு நிலத்தினவே லென்சொல்லப் பட்ட வுணர்வொடு காட்சி யுயிரனவா முன்சொல்லப் பட்ட நிலந்தா முடியின் முடிவுளதாம் பின்சொல்லப் பட்ட வுயிரும் பெரிய பிரச்சையினாய்.

498 வற்பமல் லானில மில்லெனச் சொல்லுவ னாங்கதுபோற் பொற்ப மிலாவுயிர் தானுமில் புத்திய லாலெனலும் வற்பமலா நிலமன்னுந் தரிக்குமென் பாயல்லையோ கற்பமெல் லாம்பிறர்க் கேநின் றுழந்த கருணையினாய்.

499 உரிய வலிமையல் லானில மோரல னென்றிருந்தாற் பெரிய நிலத்தை யறிவிக்கும் பெற்றியில் லாய்பெரிது மரிய வுயிரை யறிவுறக் காட்டென்றி யெப்பொருளும் தெரியக் குணமுகத் தாலன்றி யென்றுந் தெருட்டுளதோ.

500 விருத்த நிலைமையும் வேண்டலம் யாமென வேண்டுகின்றீ ரருத்த மெனக்கொண்ட வட்டகம் யாவையும் விட்டில றிருத்தமி றீவயி னீருறை திட்ட விரோதமன்றோவாற் பொருத்தம லாதன வேசொல்லும் புத்தநின் புத்தியிதோ.

501 தன்மை கரும மவற்றன வேயென்ற றானென்னைவே றின்மை முடியினெ னிட்டமுரைப்பினுங் கெட்டதென்னோ மன்னுமந் நான்கு மறுதலை தத்தமு ளாதலினா லென்னு மியல்பும் பயனு மழிக்குமென் பேனல்லனோ?

502 ஊரிது காடிது தானென லென்னை யொருங்குளவே னீரிது தீயிது தானென லாமோ நிகழ்வுடனே யாரிவை கேட்டறி வாரவை யட்டக மென்னினலாற் போ¢து வேயெனச் சொ;லுத றானும் பிழைக்குங்கொலோ.

503 தொக்கவை யாயுட னேயவைநிற்பினு மாங்க வற்றுண் மிக்கத னாற்பெயர் சொல்லுவன்யானென்று வேண்டுதியேற் புக்கன தாம்பொறி யானின்புலமன்றிப் பொய்யெனத்தா னக்கனர் சாக வெனுநீயுரைக்கு நயங்க ளென்றாள்.

504 உருவுடை யட்டக மன்றியுமைந்தினுட் பட்டவெல்லாம் மருவொடு கூடியுந் தீண்டியுமாக்குந் திறமரிதான் மருவுடை யார்களை மாயங்கள்சொல்லி மருட்டியண்ணுந் திருவுடை யாயவ காயத்துத்தேரை யடித்தெருட்டாய்.

505 திரிவே தனைகளுந் தீராநுமக்குள வாதலன்றே கரிவே தனையவர் காமுறுகாமங் கடிந்ததுதான் பரிவே பெரிதுடை யீர்முன்னுரைத்தபல் செய்கைகளின் விரிவே யவையோரின் வேதனைவேறில்லை யாம்பிறவே.

506 உணர்ச்சியி னாற்செய்கை யாக்கியச்செய்கையி னாலுழப்பாம் உணர்ச்சியி னாங்கோர் பொருட்சுவடுள்ளது போல்கின்றதா லுணர்ச்சியொ டல்லன வொன்றொன்றில்நோக்கில வாமெனினு மிணர்ச்சி யிழந்து பிறபிறவாகிப் பெறலிலவே

507 ஆறினி னொறே நிகழும்பொழுதினல் லாவுணர்வு தேறின வாறவற் றுண்மையெனக்குத் தெருட்டனலிந் தாறின வோவில்ல தாழ்ச்சியினாலுள தாமெனினீ கூறிய வாற்றா லுயிருண்மைகூறலுங் குற்றமென்னோ.

508 ஓருணர் வுள்ள பொழுதினொழிந்த வுணர்வுகடம் பேரு முணரப் படாமைபெற்றாமென்னும் பேச்சுமுண்டா லீருணர் வில்லை யிருமூன்றொருங்குள வென்றுரைக்கு மோருணர் வேயுடை யீர்சொற்களொன்றொன் றழிப்பனவே.

509 ஒன்றே யுணர்வாய் நிகழற்குக்காரண மவ்வுணர்வாய் நின்றே யறிவான் றனிமையினாலெனத் தோ¢னிநீ யன்றே யெனினவை யாறுந்தமுண்மையின் வேறென்னலாற் சென்றே புலந்தலைப் பெய்தலறிவுடன் சீர்க்குமன்றே.

510 இச்சையில் லாமையி னெல்லாமொருங்குண ராவெனினு மிச்சையெல் லாத்திற்கும் வேறேலொருங்குட னெய்துமன்றி யிச்சையெல் லாத்திற்கு மொன்றேற்குணிப்பொரு ளிச்சையென்றாய் தச்சனஞ் சிச்சா ரகழ்கள்வனென்கின்ற தன்மையினாய்.

511 பிறந்து பிறந்துநி னிச்சைகெடலன்றிப் பின்னொன்றின்மேற் சிறந்து சிறந்தாங் குணர்ச்சிவிரியுந் திறமரிதாற் கறந்த கறந்த கலஞ்சுவைத்திட்டாற் கறைக்கலங்க ணிறைந்த நிறைந்தவை பாறயிர்மோரெனத் தானென்னையோ.

512 எல்லா வுணர்ச்சியு மிச்சைவழியா லெழுமெனலா லில்லாம் பிறநுன திச்சையுமிச்சைமு னின்மையினால் வல்லா யிதற்குமுண் டாயின்வரம்பின்மை யாமதனாற் சொல்லா விடுந்திற மென்னோவிரிவிற்குச் சூனியமே.

513 வெளிப்பட்டு நின்றதொன் றன்றியொழிந்தவிஞ் ஞானங்கடாங் குளித்தன தாங்கொள்ளப் பாடின்மையாலின்மை கூறிநின்றேற் களித்தவை தங்களுக் காலயமாலய மாமெனநீ யொளித்தனை கொள்ளலுற் றாயுயிர்தன்னையோர் பேருரைத்தே.

514 இருளுடை மாலைக்கண் டோன்றாதெனக்கென நண்பகலே பொருளுடை யார்பொருள் கொள்வானகழுநன் போன்றிலையோ வருளுடை யார்சொல்லு மாருயிராலய மென்றிருக்கும் மருளுடை யாய்நின் மாண்பழிந்தெற்றான் மயங்கினையோ.

515 மூக்கொடு நாமெய்யும் மூன்றுந்தம்மூன்று புலன்களையும் தாக்கிய போழ்தே யறிதலுந்தத்துவ மாமென்றியா லாக்கிய மூன்றி லறிவுமரூவா லவையொருவாப் பாக்கியஞ் செய்தாய் பரிசங்கள்கொள்ளும் பரிசென்னையோ.

516 உற்றில வாயொலி கொள்ளுஞ்செவியென வோதுகின்றாய் கற்றிலை மெய்ம்மைநீ கட்புலந்தன்னோடோர் காலத்தினாற் பெற்றில நாமதன் பின்கொளறானும் பெருந்தவத்தாய் மற்றிது தான்றன் பொறியுறுகாறும் வரலினன்றே.

517 வாய்த்துரை யீதென வாமனிதுசொல்லும் வந்துறுமேற் சேய்த்தெனக் கோடலுஞ் சேராதொலிசெவிக் கண்ணதெனி னீத்தன தாமல வாயினுநீசொல்லு முற்றறிவின் றீத்தனைப் போலவுந் தேறென்றவனைத் தெருட்டினளே.

518 பெற்ற வெழுத்தேற் பிரிவின்கணாறாம் பெயர் நுனது முற்ற வுணர்ந்து முடித்துரையென்னை முதலெழுத்துப் பற்றின சித்தம் பலவுணர்ந்தேயவை பாழ்படலாற் கற்றினி யெல்லாக் கணக்குங்கலந்துரை காண்பென்னையோ.

519 ஓதிய கந்தங்க ளொற்றுமையாலுயி ரென்றதுபோற் போதிய னாய்நின்னைப் புத்தனென்றாலது பொய்பிறவோ வாதியி னாம்புத்தி யாவதல்லாலந்தத் தன்களையா நீதியி னாற்சொல்லி நின்றுநின்பேறு முணர்விலையே.

520 அன்றியு நின்சொ லறிபொருடானில வாதலினா லொன்றி யுரைத்த வுனக்குமெனைத்து முணர்வருமை யென்றினி யாமுந் தெளிந்தோமிதனா லெனவுரைத்தாள் வென்றி யுடையன வல்லதுசொல்லா விரிகுழலே.

521 ஆறுகுறி யாவனவு மாயபுலந் தாமும் கூறுகுறி மாறுமவை கொள்ளும்வகை தாமும் மாறுகுறி மாறிக்குறி யென்றுமயக் காதே வேறுகுறி தாமுணர்வின் விள்ளுவ லினிக்கேள.

522 கண்ணின்குறி மூக்கின்குறி மெய்யின்குறி செவியி னண்ணுங்குறி நாவின்குறி காடின் மனத்தோடு மெண்ணுங்குறி யாவனவிவ் வாறுமெனக் கொண்ணீ பண்ணின்குறி யேசுமொழிப் பாவையெனச் சொல்லும்.

523 அறிவுகுறி யென்பனவி னாயபுல மொன்றே லறிவுகுறி யென்பனவு மாகுமவை யொன்றே பிறிதுகொளு புலமுள்ள தாகுமெனிற் பேதம் சிறிதுநெறி காட்டினது செல்லுமெனச் சொல்லும்.

524 உண்மைகுறி கொள்ளுமுணர் வின்புலம தெய்தா தெண்ணினுணர் வோடுகுறி யிவ்வகைய வென்னி லுண்மையுணர் வின்புலமோ டொன்றெனில தொன்றே நண்ணலில வேலுணர்வி னாயபுல னின்றே.

525 ஒருங்குகுறி யோடுணர்வுதோன்றியுடன் கொள்க வொருங்குபுலந் தோன்றியவையொத்தகெட லானா லொருங்குகுறி யோடுணர்வுதோன்றலில வாமே லொருங்குபுலந் தோன்றுதலினொன்றுமுணர் வில்லை.

526 உள்ளுஞ் சொல்லுடம் பென்றிவை மூன்றினாற் கொள்ளு நுங்குச லாகுச லங்கடா மெள்ளி னேரு மிவையின்மை காட்டுவே னுள்ளக் காக வுரைத்தவம் மூன்றினுள்.

527 வேண்ட லேயென்றும் வெ·குத லாயினா லீண்டி நின்றநி னித்தொடைப் பாடெலாந் தீண்ட லன்னெனத் தீண்டிய வந்தவோ வீண்டை யேநிற்ப வி·து மறிகிலை.

528 நன்மை வெ·குதல் நன்றெனச் சொல்லுலு மனமை வெ·குத லன்றெனக் கூறலு மின்மை யால்வெ·க லென்றதுந் தீமையி னின்மை யாய நெறிமொழி நீயினி.

529 தீய வாய வெகுளியை யொப்பன மாய மான முலோப மனத்தன காய்வு செய்திலை கண்டுநின் கள்ளமே நீய வையவை நேர்தலி னாம்பிற.

530 காட்சி நல்லன் காண்ட லனைத்தினு மாட்சி யாமெனின் மன்னும· தொட்டுவேன் வேட்கை யாலிது நன்றென வேண்டினு மாட்சி யொட்டி வழித்தன னல்லனோ.

531 பொய்கு றள்ளே கடுஞ்சொற் பயனில்கொ னைத லில்லன நான்கிவை நாவினாஞ் செய்கை தீயன வாமெனச் செப்பினீ ரைய நன்மையென் றீரவற் றப்புடை.

532 மண்டை கெண்டிகை மாட மடாமனை கொண்டை குண்டிகை கூறை குடங்கடை யுண்டி கட்டி லுடம்புயி ராதிய பிண்ட மாய பிறபிற யாவையும்.

533 கூட்ட மான குறியெனி னலதை பூட்ட லங்கோர் பொருளின்மை வேண்டியு மீட்டு மீட்டிவை சொல்லின மெய்யுரை நாட்டு மாறென்கொ லோவிளி நாசநீ.

534 நிலம்பொய் நீர்பொய் நெடுநகர் தாமும்பொய் கலம்பொய் காற்றொடு தீயும்பொய் காடும்பொய் குலம்பொய் யேயெனக் கூறுஞ்செங் கூறையாய் சலம்பொய் யன்றிதொன் றேநுங்கள் சத்தையே.

535 குற்ற மென்ற குறளையே யொப்பன மற்றுஞ் சால வுளபிற மாண்பில வொற்றைப் பெண்ணுரை யாடுதல் போகங்கள் கற்ற லேகடுஞ் சொல்லின்ன காத்தலும்.

536 பையச் சொல்லுத னல்வினைப் பாலென்றா லெய்யக் குற்ற வெறியப்புணர்க்குங்கால் வையத் தீயாவரு மந்திர மாமவை செய்யச் சொல்லுநர் செவ்விய ராபவோ.

537 கடுக்கத் தாமடி கள்ளெனக் காய்ஞர்யா ரொடுக்கச் சாம்பிவை தாலுவப் பாரில்லை கொடுக்க வென்றல் குசலமன் றென்பதோ படுக்க லுற்ற பதகநின் பாடமே.

538 ளபாவ மாம்பய னில்லன சொல்லலேற் பூவ மேபொருள் கைக்கொண்டு புற்கலர் சாவச் சொல்லுவ தத்துவ மாம்பிற வேவ னன்றென்றி யொப்பவொன் றில்லையேல்.

539 காயத் தாற்கொலை காமங் களவென நீயத் தாசொன்ன நேருந் திறமென்னோ மாயத் தான்மன மின்றி யவையவை தேயத் தியாருளர் செய்பவை ரென்பவே.

540 வழிமுள் ளூன்றன் மனைசுடன் மாந்தரைக் குழியு ளுந்துதல் கோயிற் கலஞ்செய்த லொழிவில் யானைமுன் னோட்டலோ டின்னவும் பழியும் பாவமு மாக்குவ வல்லவோ.

541 ஒன்றி நின்ற வுயிரை யுயிரிது வென்று சிந்தித் தழிப்ப னெனவெண்ணி நன்றி யி·றொழி றேற்ற நவையினாற் கொன்ற தேகொலை யென்றைந்திற் கூறினாய்.

542 தேவ னையிவன் றேவ bனனவெண்ணிப் பாவனையிற் பணியு மனத்தனாய்த் தூவென மும்மையே தோற்றித் தொழானங்கோர் தாவ னைதொழு தான்றவ றெய்துமோ.

543 ஒத்த வன்றனை யுறுபகை யேயெனக் குத்தி னாற்குங் கொலைவினை யில்லைனப் புத்த னீருரைத் தீரங்கோர் புற்கலன் செத்த வாறது சிந்திக்கற் பாலதே.

544 கொன்ற பாவமுண் டாயின் குறட்கண்ணும் ஒன்று மேயென் றுரைப்பனெப் பாரியார் பொன்றினும் புத்த ரேநீவி¡; சொல்லின சென்று சேர்தலைச் சித்தம தின்மையால்.

545 பட்டி லன்பகை யாலெய்து பாவமங் கொட்டி நீயவ் வுயிர்க்கொலை யாலென்னில் துட்டனைத் தொழு தோன்றுறந் தானெனக் கெட்ட னன்னிது கேட்க வினைநிலை.

546 ஆய்ந்த வைந்தினு மாம்வினை யார்ப்பெனின் வீய்ந்த தின்மையின் வெய்ய வவீசிதான் காந்தி பாலி யிரங்கக் கலகனைப் போழ்ந்து கோடல் பொருந்தல தொக்குமே.

547 கொல்வ னென்றவன் கூர்ம்படை குன்றினுஞ் செல்வ னென்றய லார்மனைச் சோ¢னுங் கல்லு வானொ டெல்லார்க்குங் கருவினை சொல்லு வானோ டுலகமுஞ் சுற்றமே.

548 துப்பி னால்வினை சொல்லலன் யானென்று வப்பி னார்முலை காய்வது வாமனீ யிப்ப லாரிடை யென்னையி தென்பதோ செப்பி னாலுஞ் சிதைகின்ற தில்லையால்.

549 பண்டு தான்வைத்தப் பண்டத்தை யொப்பதொன் றுண்ட தாயி னதுவது வேயெனக் கொண்டு போகினுங் கொள்ளினுங் குற்றமில் கண்ட போழ்துங் களவன்ற தென்றலால்.

550 பஞ்சி மெல்லடி நோவப் பகனடந் தஞ்சி லோதியு மல்க வவளெனத் துஞ்சு மில்லுடை யாளைச் சுமந்துபோய் வஞ்சி யான்கொள்க வாழ்கபுத் தன்னென.

551 கந்த மாவன காகதந் தம்மெனப் பந்த மின்மையிற் பாழ்செய்திட் டேனினி யந்தி னீசொன்ன வாரிய சத்தையுஞ் சிந்தை யுஞ்சிதைப் பேன்சில சொல்லினால்.

552 பிண்டமொன் றாயினும் பிரியநோக் கின்னது கொண்டுநின் றாம்பிற கூறினைந் தேயெனக் கண்டநா மெய்ம்மையுங் காட்டுவா யீங்கெனி னுண்டுதா மாகுல முணர்வுதான் கூறுவோம்.

553 முழுதுந்துன்பம்மென மொழியின· தாகிய பொழுதினா னல்லவும் புல்லுமா மாதலாற் பழுதுதா னவ்வுரை பன்மைதா னின்மையில் இழுதையா னான்குள வென்றுசொன் னாயென.

554 உழப்புமூன் றும்முட னொக்கநோக் கின்னது வழுக்கில்லா வாய்மையேல் வாய்மை சொல்லியினி யிழுக்கினாய் நீபிறர்க் கின்பமீந் தேனெனல் பழுக்களே காய்வது ண்டுமுண் டேபிற.

555 துக்கமே யாயினாற் றொழிலுமொன் றாய்ப்பய மொக்கவே வேண்டுமா லுயர்விலாக் கீழ்க்கதி புக்குவீழ்ந் தார்பிறர் பொங்கிநின் றாரெமர் மிக்கதே யென்னெறி யென்றுவேண் டல்லெவன.

556 உறுதிகூ றல்லொழி யொழுக்கங்காத் தல்லொழி யிறுதியி· றுன்பமே யின்பமில் லாயினாற் சிறிதுநீ தீப்புகாய் சேர்வதென் னைந்நிழல் இறுதியில் லாத்துய ரின்னசெய் யாயினி.

557 தூய்மை யில்லை முழுவது மென்பதை வாயும் நீசொல்லும் வாய்மைய தாயினாற் றாமஞ் சாந்தம் புனைபவர் தாமெலாம் ஏம நன்னெறி கண்டில ரேபிற.

558 ஓது மோத்து மொழுக்குநின் னுண்டியுங் கோதில் தூய்மைய வாமெனக் கூறியும் யாது நீயசு வாமெனச் சொல்லுவாய் நாத னீபிற நன்கறிந் தாயவை.

559 நீயி னேசொன்ன மெய்ம்மையை நோக்கிலார் தூய்மை யாம்பிறர் தூய்மை யிலரென்று காய்ப வேகவி மண்டைகள் என்றனள் வேயி னன்மை விலக்கிய தோளினாள்.

560 சென்ற சென்றுன செந்நெறி கண்டவர் பின்றைத் தூய்மை பெறுவது மில்லையே லின்று மின்று மியல்வது வாக்கொள்வாய்க் கின்றித் தூய்தன்மை யென்னை யிழைத்ததோ.

561 அழுகு பூசுமி னங்கண மாடுமின் கழுகு ணூத்தையோ டேனவுங் கவ்வுமின் மெழுகு மின்னிடை மெச்சிய மல்லதின் முழுதுந் தூய்தன்மை சொல்லிய மூடர்கள்.

562 நில்லா வென்னி னில்லன்மையாலும் நில்லாவா யில்லா மென்ற லின்புறு மேற்கோ ளிழுக்காகு மெல்லாந் தானே யென்றலி னேன் விழவெய்தி நல்லாய் சொன்ன நான்மையை நாட்டுந் திறமென்னோ.

563 உழுவார் வணிக ரென்றிவ ருள்ளிட்டுலகத்துள் வழுவார்க் கீய வான்பொருள் வேறாய் மறியும்மே வழுவார் தமையுங் காண்டும· தாமாறுரையீரோ புழுவாழ் கென்று புனன்மழை தந்த புகழுள்ளீர்.

564 தெய்வத மென்று தேறினர் செய்யுஞ் சிறப்பென்றும் கையது வீயக் காமுறு தானக் கலப்பென்று மெய்தல் ரேயின் னிவையிவை யெல்லா மிழுக்காவோ மெய்பிளந் திட்டு வேண்டுநர்க் கீயும் விழுமிய்யீர்.

565 ஒள்ளிழை யாரே யுறுபொருள் பிச்சைக் குரியார்கள் தள்ளின போழ்தின் னவையவை தன்னைத் தலைநிற்பார் கள்ளர்க ளன்மை காட்டலு மாமோ கருணையாற் பிள்ளைக ளேங்கப் பிறர்களுக் கீந்த பெருமைய்யீர்.

566 நில்லா தாகக் கூறுத றன்னை நெறியென்றீர் பல்வகை யானும் பாழ்செய்து பின்னே பரிகாரஞ் சொல்லுவி ராயிற் சொல்லிய மெய்ம்மை துறவாமன் கொல்சின வேழங் குறிநிலை செய்த குணத்தின்னீர்.

567 ஓதி யாது முயிரில்லை யென்ப துரைத்து நின்றாயேற் கோதி லங்கோர் குறியுயிரே கொள்ளி னுங்கோளழிவாம வேதி லார்சொல் பரிகற்ப னையி னாலின் மைசொல்லி னீதி யாநின் கருத்தினா லுண்மை யுந்நேர்ந் தாயன்றோ.

568 ஒன்று மில்லை யுயிரென்றுரைத்தநீ யுண்மை யின்மை நின்ற வாறே நெறியாகநேர்கின் றாய்நீ யாவனோ வன்றி முன்சொன் னவத்திறமெத்திறத்தா னும்மா காமையா லின்றுந் நின்றுந் நீமொழிந்தாயெம்மிறை யேயிறை யாகவே.

569 போற லானு மதுபோ லாதென்றும்பு னைவினாலும் வேறல் லதில் லையெனவும் வினைவலியும்யோ கின்னாலும் தேறி நின்ற பொழுதோடிவ்வேழாந்திறத்தி னாலுங் கூற லாமோ மீட்டுணர்வுகொண்டு ணர்வா னில்லாக்கால்.

570 நாம சீவன் முதலாய நான்மை களின்முன் மூன்றிலுந் தூய்மை சீவனுடைத்தாகு மன்றே னின்சொன் மாறுமாந் தாம சீவன் முழுவது மென்று தருக்கு கின்றாய் வாம சீவ னிவற்றினா லுண்மை மறுக்க லாகுமோ.

571 அறியும் மெய்ம்மை யும்மைங்கந்தம்மாட சிய்யு மல்லவையுஞ் சிறிதும் மென்முன் னிலையின்மைகாட்டிச் சிதைத்தே னாலினிப் பிறிதொன் றுண்டே லுரைய்யெனவுரைத்தாள் புத்தன் றான்பெரிதும் மெறிபட் டென்னெ றியினாலேயடக்கு வன்னி னையுமென்றான்.

572 ஆதி யலாத வகன்றடுமாற்றமுஞ் சாதி யறுக்குந் தகையு மிவையென வோதி வினைப்பயத் தொப்புரைப் பார்க்கன்றி நீதி யிலாநெறி நேரல னென்றாள்.

573 வித்தின் வழிவழித் தோன்றும் முளைகிளை சத்தியி னாயசந் தானத்தை மாற்றென்பன் வெத்தவ வித்தினின் வேறன்று வீடிது தத்துவ மாக்கொ டளிரிய லாயே.

574 வினையு முளது பயனு முளது தினையனைத் தாயினுஞ் செய்ஞ்ஞன மில்லை யெனையவுங் கந்த மருகண நில்லா நினையின்மற் றென்றா னெறிபயந் தானே.

575 குணம்பொரு ளென்றி கொடைபொரு ளென்றி யுணர்ந்துசெய் துண்பா னொருவனி லென்றி கணந்தனி லேநிலை கந்தமு மாயக்காற் பிணங்குவ தொக்குநின் பேரெமக் கென்றாள்.

576 தீதுள்ள மேலது தீயழப் பேசெய்யும் யாதுள்ள மாண்புள மேலின்ப மாமென்னை மாதுளம் பீசமுண் மாணரக் கின்னிறம் போதுள்ளங் காண்பது போலமற் றென்றான்.

577 எட்டி னியன்ற விரண்டினு ளாங்கவை யட்ட வரத்தமு மல்லது மாய்ப்பய மாட்டார் மலர்க்கண்ணுஞ் செம்மையு மற்றுமா விட்டமுங் காடம்டுவ னீங்கிது போல.

578 ஐந்தி னியன்றவர் பிண்டத்த ராகிய மைந்த ரிருவர் குசலா குசலத்தர் சிந்தையி னல்லவன் றன்வழித் தேவனும் வெந்தொழி லான்வழி வீறி னரகனும்.

579 பீச மெனப்பட்ட தெட்டே பிறிதங் கொன் றாசொன்று மில்லைய வைந்திற்கு மன்னது நீ சொன்ன வாறிது நேருந் திறமென்னை யேசுவன் கேள்யா னெடுத்தினி யென்றாள்.

580 அயலரக் கட்டக பீசமுண் டாங்கு வியலகத் தைந்திற்கும் வேறொன்று காட்டாய் குயலமு மல்லது மாயினன் றாகும் மயல்படைத் தாயொழி மாதுளங் காட்டல்.

581 பூவின்கட் காட்டல் பொருந்தா ததன்வழி மாவின்க ணாக மகன்செய் வினைப்பயன் தேவன்கட் போலத் திருந்திய மாதுளஞ் சாவின்கட் செய்கையுஞ் சாங்களைந் தாயோ.

582 வித்தொடு பூவின்கண் வேற்றுமை காட்டினும் துத்தல் குழவி கிழவன்கட் சொல்லென்பன் பித்துடை யார்போற் பிதற்றி வினைப்பய மெத்திறத் தின்னு மியைத் துரைக் கில்லாய.

583 அங்குரந் தன்கண்ணுஞ் செல்லா தரக்கொடு மங்கின பீசத் துருவ மலரின்கட் டங்கின வென்னுஞ்சொற் றத்துவ மாக்கொண்ட வங்குலி மாரனை யாதன்மற் றென்னாய்.

584 அப்படி யாலரக் காமது போன்மெனிற் றப்படை யானுழப் பெய்வழித் தங்குத றுப்புடை யான்சுர னாகிய வன்றுய்க்க லிப்படி யாயினீ யென்றுரை யாயோ.

585 எம்மை யுவப்ப வினைவழித் துப்பெனின் ¦ச்மை வழியது தீஞ்சுவை யென்றில்லை யெம்மை வினைவினை யாக்குநின் பூவுரை யிம்மையோ டும்மை யிவையிலை யாலோ.

586 உண்டது போலு முறுபயன் பன்மலர் கண்டது காரண மாகக் கருதினு மண்டையா மான்றசை மீன்றடி தோன்றிய வண்டுண வாகலு மாமத னாலே.

587 தீயுழப் பேசெயுந் தீவினை யென்பது வாயுழப் பாம்வழி யேபுகுந் தாயினி நோயுழப் பாகிய நுஞ்செய்கை யாவையும் நீயுழப் பாய்பிறர்க் கேயுழந் தாயால்.

588 உள்ளம் வினையென வோதினை யேற்செய்கை யெள்ளின் றுணையும· தின்மை யினைந்தெனக் கொள்ளுந் திறமென்னை கூறாய் குணந்தினிக் கள்ளமல் லாலென்றுங் கட்டுரை யாயால்.

589 நின்னுடை யுள்ளமுஞ் செய்கையு மொன்றெனிற் றன்னிடை யெய்துந் தரும தருமிமற் றென்னிடைக் கொண்டிலை யெங்குப்பெற் றாயிது முன்னுடம் பாட்டின் முரணுள தாமால்.

590 சித்தமுஞ் செய்கையும் வேறென்றி யேயெனி லொத்த வினையுடன் பாடின்றி யாமினித் துத்த லையாதின் வழித்தெனச் சொல்லுதி யொத்திய வல்ல துரையலை யாயால்.

591 கண்டுணர்ந் தார்வத்தி னாற்செய்கை யாதலை யுண்டெனி னாற்குண மொன்றினுக் கொட்டினை பிண்டிநீ ழலவன் பேரறஞ் செர்தலிற் கொண்டநின் கோளின்கட் குற்றமுண் டாமோ.

592 விளைவத னால்வினை யாக்குமென் பார்சொ லுளைவதிங் கென்செய வோவுணர் வில்லாய் தளைபெய்து வைத்தென்னைத் தம்பொறி யெல்லா மளைவது நன்றிது தானற மாமேல்.

593 ஆர்வத்தி னால்வினை யாக்கு மெனச்சொல்லி னார்வத்தைச் சித்தமென் றாருரைப் பாரினிச் சேர்வித்த துப்பினிற் செய்கையு மாதலை நேர்வித்த வாறது நீயறி யாயால்.

594 உணர்வினை ஆர்வ மெனவுரைப் பாயேற் புணரும் பிறர்கடம் பொற்றொடி யார்மே லுணர்வன்ற தார்வ முழப்பெனச் சொல்லி னிணர்பிரி யாத்துப்பி னால்வினை யன்றாய்.

595 சித்திமுடைச் செய்கை செய்வினை யாதலின் சித்த முடைத்துப்புஞ் செய்வினை யாம்பிற சித்தம் வினையெனச் செப்புத லாலெங்குச் சித்தமுண் டவ்வழிச் செய்கையு முண்டே.

596 செய்கையி னாற்றுப்பு மாக்கியத் துப்பினிற் செய்கையு மாம்வகை செப்புவித் தேனினிப் பொய்கைசெய் தேசொன்ன பூவொடு வித்துரை வைகவென் றாண்மல ருண்கண் மடவாள்.

597 இருவகைப் பீசத் தியல்வு மழித்துத் திருவகைத் தேவொடு பூவுஞ் சிதைத்தே மருவுகை யாய்நின் மதுரஞ்செய் மாவும் தருவனை யாயிற் றகரு மதுபோல்.

598 வலிசெய்து பீசத்தின் மாண்பு மழித்திட் டலிசெய்து விட்டே னமையு மதன்மேற் பலிசையி னீசொல்லும் பாடங்க ளெல்லாம் நலிவனொன் றொன்றா நடுவுணர்ந் தென்றாள்.

599 பிறந்தவப் பிண்டம் வினையினோ டாங்கே யிறந்தன வெத்திறத் தின்னுமற் றென்றாற் சிறந்தவத் தேவெய்திச் சேர்தலுஞ் சீரா தறஞ்செய் தறானு மவம்பிற வன்றே.

600 உரந்தனை யாது மொடுக்ககி லாகிச் சுரந்தபல் குற்றஞ் சொலக்கேட் டிருந்தான் பரந்தினி நீசொன்ன பல்வழி யெல்லாங் கரந்தனை போதலைக் காட்டுவன் கேணீ.

601 அரக்கொடு பீச மறக்கெட்ட வாற்றல் கரப்பது போலிடைக் காண்பரி தாகி மரத்திடை சென்று மலரின்கட் டோன்றிப் பரக்குமென் றேன்பயம் பைந்தொடி யென்றான்.

602 அன்னணஞ் செய்தா னறங்கெட் டவன்வழித் துன்னுஞ் சந்தானத் தொடர்ச்சி நிகழ்ச்சியிற் பின்னை யதுபெறு மாதலின் யான்கண்ட நன்னெறி நின்னா லறிவரி தென்றான்.

603 கந்தங்க ளெல்லாங் கடையறக் கெட்டக்க ணந்தமி லாக்குற்ற மாமெனச் சொல்லுஞ் சந்தங்க டம்முட் சவலைச் சந்தானமும் வந்த· தெவன் செய்யும் வாமமாற் றென்றாள்.

604 ஆற்ற மகன்கெட்ட போழ்தே யமரிற் றோற்றமு மென்னை துடித விமானத்து ளேற்ற தவத்தவன் றேவென லென்கொல் சாற்றுஞ்சந் தானத்தைச் சந்தித்துக் காட்டாய்.

605 மக்க ளுடம்பொடு தேவ ருடம்பிடை மிக்க விடம்பெரு வெள்ளிடை யாலிது புக்க தொடர்வில்லை யாதலி னீகொண்ட பக்க முடன்கெடு மாலென்னை பாவம்.

606 புளிபொறி வாழ்நிழ றண்மதி யின்ன தெளிவுள தாஞ்செல வின்முடி வென்னில் விளிபவ னுளபொழு தேவினை துய்க்கு மொளிகிளர் தேவ னுளமென்னு மாறோ.

607 சென்றில தேலிடை யற்றுழிக் தோன்றுக வென்றலு மிங்குள தோவது தானெனி னொன்றல பல்பொரு டாமொளி யாதிய நின்றல வோவுல கெங்கும் நிறைந்தே.

608 தண்மதி கெட்டதன் சாயை யுடன்பெற லுண்மை யுண்டாயினி னொத்துரை யொட்டுவன் கண்மதி யாததெங் காரிய மேயின்ன வெண்மதி யாயை விலக்குநர் யாரோ.

609 மதியென்று மில்லெனி னில்லொளி தானும் புதியதும் பாழது பொன்றிய போழ்தே கதியினை நாட்டிய காட்டி யெமக்கிங் கதுவென்னை சொல்லிய வாறுரை யாத்தா.

610 அடியொடு பூவி னிடையற வின்றி நெடியதோர் கொம்பினை நீமறந் தாயோ மடியிலார் செய்த மானுயர் தெய்வப் படியிது வென்றிடை பாழ்செய்திட் டாயால்.

611 தோற்ற மிடையற வில்லாத் தொடர்ச்சியைச் சாற்றுதும் யாமுஞ்சந் தான மெனவென்னிற் காற்றுஞ் சுடருங் கரகத்துட் டாரையு மேற்றன வல்ல விரண்டுண்மை யாலே.

612 பித்தொடு கனவிடைப் பேயின் மயங்குநர்க் கொத்த வுணர்வுண்மை யொட்டல தென்செய தத்துவ மாயசந் தான முளதெனிற் புத்தநின் சொற்கள் பொருளில வேயால்.

613 மூத்தல் வகையு முதலத னைம்மையு மாத்த கணந்தோ றலர்ந்த நிகழ்ச்சியுஞ் சாத்திரத் தாலத் தவிரன்கட் டாழ்ச்சியும் போத்தந்து காட்டுந் திறமென்னை புத்தா.

614 கப்பம் பலபல கண்ணிமை யானுக்குத் துப்பு முரைத்தென்னை தோன்றிய வக்கணத் தொக்க விளைவுரைப் பாய்பின் வழிவழிச் செப்புதி யேற்செய்கை சென்றுசென் றுண்டே.

615 காரண மென்னினுஞ் சென்றின்மை யாலில்லை ஏரண தேவ விழுதைமை சொல்லுதி யூருணி நீர்நிறை வுண்டோ யுறுபுனல் வாரண வாய்க்கால் வரவில்லை யாக்கால்.

616 நில்லா தறக்கெடுந் தோன்றிற்றுந் தோற்றமு மெல்லா வகையினு மில்லதற் கேலில்லை சொல்லாய் தொடர்ச்சி தொடர்ச்சியென் றேநின்று பல்லார் களையும் படுத்துண்ணும் பண்பா.

617 சுடருடைத் தோற்றத் தொடர்ச்சியைச் சொல்லி யிடருடைத் தாக விவையிவை காட்டி யடர்படுத் திட்டாட் கதற்கொன்று நாடிச் சடருடை வாசனை சாதிக்க லுற்றான்.

618 கெட்டபி னாற்றல்க ளெல்லாம் வழியதற் கொட்டு நறுமலர் வாசமோ டோட்டின்கட் சுட்டுவ தொப்ப வெனச்சொல்லு நீகண்ட விட்ட மிவற்றோ டியையல தென்றாள்.

619 முன்னைய துள்ள பொழுதத்து மற்றதன் பின்னைய தில்லை யதுபெற்ற போழ்து தன்னையு மில்லை யெனச்சொல்லின் வாசனை யென்னை யியையுந் திறமிவை தானே.

620 ஓடு மலரு மொருங்குள வாதலிற் கூடும் வாசமுங் குற்றமொன் றில்லெனிற் கேடும் பிறப்பு முடனில்லை யாதலிற் கூடல வென்பது கூறின மன்றே.

621 கெடுவத னுண்ணின்று தோன்றுவ தன்கண் வடுவறச் செல்வது வாசனை யென்னப் படுவதொன் றன்றுநின் பக்கத்தை யெல்லாஞ் சுடுவதோர் கொள்ளி சுவடித்த வாறே.

622 போதின்க ணின்றும்புத் தோட்டிற் பொருந்திய தாதின நாற்றந்தண் ணீருக்குச் சொல்லுதி யோதன கந்த முடன்கெடின் வாசனை யாதின தாகு மறிந்துரை யேழாய்.

623 வாசனை வாசனை யென்று வழிவழி நீசொன்ன நீசொன்ன நேர்வதிங் கென்செய்ய பாசன மாகிய பாதிரிப் பூவினைப் பூசின தெப்பொருள் போத்தந்து காட்டாய்.

624 பூவின்கட் கேடும்புத் தோட்டின்கட் டோன்றியு மேவிய வாசனை யெங்குமுண் டாமெனின் சோபன மாகச் சுவாகதம் போந்ததென் றேவன் றிருந்தடி சிந்திமற் றென்றாள்.

625 அதற்கு மறக்கே டுளதெனின் வாச மதற்குமுண் டாயினி யெல்லையின் றோடு மிதற்கெண்ணு மில்லெனி னில்லை யதற்கு முதற்சொன்ன குற்றம் முடிந்தன வாமே.

626 சென்றதென் றாலதன் கேடின்மை யாஞ்செல வின்றதென் றாலத னாற்றமு மில்லற்க நன்றிதென் றேசொல்ல நல்லது நாமறிந் தன்றிதென் றென்முனே யாருரைக் கிற்பார்.

627 கேடது தான்முழு தாதலி னீசொல்லும் வீடது வாகலும் வேண்டும் விழுத்தவம் கூடு பவர்க்குங் குணமில் லவர்க்கு நீடல தேயுள தாநிரு வாணம்.

628 தோற்றம் வழியென்று சொல்லுத லாற்றட மாற்ற மதுவிதன் மார்க்கத்து மாண்பெனச் சாற்றுதி யேலுந் சவறது வாதலைத் தேற்றுவன் கேணீ தெருண்டிருந் தென்றாள்

629 தன்வழித் தோற்றிக் கெடுமோ வதுகெடப் பின்வழித் தோற்றம் பெறுமோ விரண்டனு ளென்வழித் தோற்றம· தாமா றிருளற நின்வழித் தோற்றத்தை நீயுரை யென்றாள்.

630 வழியொன்று தோற்றிக் கெடுமேன் மகப்பெற் றழிகின் றவள்போ லணைவுள தாகு மொழிகின்ற தேயது காணல தென்னிற் கழிகின்ற கன்னிக்கோர் காதலற் காட்டாய்.

631 பிறப்பித்துக் கேடும்பின் றோற்றக் கெடலும் இறப்பவுங் கூடா திருதிறத் தானுந் துறப்பித்த வாறிது தூவெனக் கேட்டை மறப்பித் துரைத்ததுண் டோசொல்லு வாம.

632 சுலாப்பல சொல்லிச் சுழன்று விடாதே துலாத்தலைத் தூக்கமு மோக்கமுங் காட்டி னிலாத்தலை யல்லா விரண்டு ளொன்றுண்டா யிலாத்தலை யில்லே லமைவது மன்றே.

633 இல்லதற் கோயில்லை கேடென்னை காக்கையின் பல்லதற் கோதார் பருமையு நுண்மையுஞ் சொல்லிதற் காவதுண் டேலெனச் சொல்லின ணல்லதற் கல்லது நாப்பெய ராதாள்.

634 துலாமில்லை யட்டக மேயது தானு மிலாமிரு பாற்றலை யேதலை தாமு நிலாம்வகை யில்லுயர் வோடிழி வெங்கும் கலாமவை யாய்க்கடை கண்டது பாழே.

635 ஓல குளவி குருட்டெண் ணெய் வாணிச்சி கோலஞ் சிதையுமென் றெண்ணெயட் டாளென்னும் பாலகர் பாட்டுரை போன்றது மற்றுநின் நூலுரை யெல்லா நுழைந்துணர் வார்க்கே.

636 கோற்றிர ளொன்றா யதன்றலைக் கேயுட னாற்றியு மோக்கமு நாட்டினை ய·தொப்பத் தோற்றமுங் கேடுந் தொகுபிண்ட மொன்றிற்குச் சாற்றுதி யாய்விடிற் றக்கதென் னேனோ.

637 தலையன தாழ்ச்சியு மெழுச்சியு மன்றி நிலையிலை கோலிடை நீக்கலு நீங்கு மிலையென வெட்டி னிடுகுறி யொன்றெனிற் பலவினி யிங்குப் படுவன கேணீ.

638 கோலுந் தலையு முடனில்லை யாமெனின் மேலு முரைத்தன மேயதன் மேற்பழி வாலுந் தலையு நடுவு மவையின்றிப் பாலும் படுவதோ ராவுள தென்னாய்.

639 புணரிய தாமவை பொய்யெனச் சொன்னேற் குணர்வதங் குண்மையு மொட்டுவை யாயிற் குணகுணி யாயு மவயவி யாயும் பிணபிணக் கெய்துமப் போ¢டர் செய்தாய்.

640 இருபிண்ட முப்பிண்ட மெண்ணில்பல் பிண்டம் வருபிண்ட மேற்பல மற்றவை நீங்க வொருபிண்டங் கொண்டாங் குயிர்க்குறுதி யிட்டுத் திருவுண்ட செய்கையிற் செய்தவ னாக.

641 வினைசெய்தான் றுய்க்குமோ வேறொருவ னேயோ வனைவரு மோவில்லை யோசொல்லா யோவென்னக் கனைகடலி னுண்மணலிற் கண்ணினையு மீந்தா னினைவகைய கேளென் றெடுத்துரைக்க லுற்றான்.

642 அவனேயு மென்னேன் பிறனேயு மென்னே னவனும் பிறனு மவரேயு மென்னே னெவனேயு மெய்தா னெனலேயு மாகா வெவனோ விதுதுய்ப்பா னின்னணங்கே ளென்றான்.

643 அதுவேயு மென்னேன் பிறிதேயு மென்னேன் அதுவும் பிறிது மவையேயு மென்னேன் அதுபோன்ற வல்ல ததன்வழியின் மற்றொன் றிதுபோல வென்பே னெடுத்துரையுங் கேணீ.

644 இடுபீச மன்றா லிறுங்காதி யன்றால் வடுவாய வவ்விரண்டும் வந்தனவு மன்றால் நெடிதாய தீங்கரும்பு நெல்லுமே போல நடுவாக நோக்காய் நறுநுதலா யென்ன.

645 ஆத்தாவ தன்றேற் பிறிதா மரும்பெற னாத்தான் வருத்த நீ நாட்டியதியாங் காணேன் போத்தாகா தேற்குதிரை பெட்டையது போலென் சாத்தாகு மாகாமை சாதிக்க வல்லையோ.

646 அவன்போற லானு மவனன்மை யானு மவன்றன் வழியா னவனாத லானு மவன்றான் பிறனே யவனென்ற லானு மவன்றான் பிறனே யெனவழிவ துண்டோ.

647 கண்போலக் கயலெனினுங் காடன்றித் தூறெனினும் பெண்பாலாற் பல்கியும் எல்லாம் பிறவேயாம்.

648 அயலானே துய்க்கு மவன்றுவ்வா னென்பாய் முயலானு மில்லான் முகஞ்சிறிதே யொப்பான் வயலாமை போல்வதோர் மக்குளி யிலானென் றியலா தனவே யெடுத்துரைத்தி யென்றாள்.

649 அயற்பிறனு மல்ல னவன்றானு மல்லன் புயற்றிறலைங் கூந்த லிதன்போலப் பிறனுக்கேல் முயற்பிறவி மேயினீர் முன்செய்தா னங்கோர் பயப்பெறுவ தில்லையேற் பாழ்பயனி தென்னோ.

650 தற்பிறிதே யாகிப் பிறபிறிது தானல்லா நெற்பிறிது போன்மெனவு நீயுரைத்தா ய·தொழிந்து சொற்பிறிது சொன்னாய் சுவர்க்கத் தவர்க்குரைப் பிற்பிறனே யாகிப் பெறப்பிறனே யாகானோ.

651 நெல்லின் வழிக்கரும்பு நீள்கரும்பி னானெல்லுஞ் சொல்லுநீ சொல்லாயேற் சொல்லியநின் சொல்லெய்தா வல்லனாய்ச் செய்த மகன்வழியி னான்மகன்றா னல்லனாய்ச் சொல்லின் னுலங்கரு வாமே.

652 செய்தானுஞ் செய்தானே துப்பானுந் துப்பானே யி·தாலென் மெய்ம்மை கிடந்தவா றென்றானுக் கெய்தார் பிறவோ விருசார் வினைப்பயனுஞ் செய்தார்க டாமெனலுஞ் சிந்தித் திருந்தானால்

653 கண்ணுந் தலையும் பிறவுங் கருந்தடியும் பெண்ணுங் கொடுத்துப் பிறர்க்கே யுழந்தாய்முன் னெண்ணுங்கா லின்னுநீ யெவ்வினையுஞ் செய்தாரை யுண்ணுந் திறமொன்று மோதா தொழிந்தாயோ.

654 எனைத்துணையு நீவருந்தி யெத்துணையோர் கால நினைத்திருப்பி னல்லது நின்காட்சி தன்னால் வினைப்பயத்தின் கூட்டம் விரித்துரைப்ப னென்னிற் றினைத்துணையு மாகாமை தோ¢துநீ யென்றாள்.

655 முழுக்கேடு வேண்ட¡யேன் முன்ன¢ன்ற துண்ட¡ம் வழுக்குமே லவ்வுரைக்கு மாறுகோ ள¢·த ¡ மிழுக்காமை புத்த£ ரெனைப்பலருங் கூடிக் குழுக்கள¡ய் வந்துநுங் கோள¢றுமி னென்றாள்.

656 நின்றே நிலையுமென¢ ன¢த்த¢யமே யாயொழியு மன்றேய· த¡யி லநித்த¢யமா மவ்விரண்டு மென்றே யுரைக்கில¢ரு வழிக் குற்றமுமா மென்றே யுரைக்கின்றா யேகாந்த ன¡குத¢யோ.

657 உச்சேதந் த¡னு மொருவகையா லவ்வகையே யச்சேத மின்மையு மவ்விரண்டு மாய்நிகழ்ந்து பொய்ச்சேத மல்ல¡ப் பொருண் முடிபொன் றுண்ட¡க மெச்சாயே நீயெனயான் மெச்சுவனே யென்றான .

658 இறைவன்ற னூலுணரி னெவ்வுருவி ன¡ரு முறையின¡ லெய்துவர்த¡ முன்ன¢ய வீடென்றாள் மறையின¡ ல¡யினு மற்றொருவா றேனு நிறையின¡ற் செல்லென்று நோ¢ழையுஞ் சென்றாள்.


ஆசீவக வாதம்[தொகு]

659 கண்ணார் சிறப்பிற் கபில புரங்கடந்து விண்ணாறு செல்வாள் வியன்மலைபோற் றோற்றத்தாள் உண்ணால் வினையு மொருவி யொளிர்மேனி யெண்ணா துணர்ந்தானை யேத்தத் தொடங்கினாள்.

660 அங்கம் பயந்தா னறைந்த சுதக்கடலுள் பங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லுளவோ பங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லேபோற் புங்கவன்றன் சேவடியைச் சேராத பூவுளவோ.

661 பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுள் சார்த்திப் பிறவாத் தவநெறிக டாமுளவோ சார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற் றீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளவோ.

662 புலவ னுரைத்த புறக்கேள்வி சாரா துலக நவின்றுரைக்கு மோத்தெங் குளதோ வுலக நவின்றுரைக்கு மோத்தேயு மன்றிப் பலவும் பகர்வாப் பயந்தனவே யன்றோ.

663 அலரோடு சாந்த மணிந்தெம் மிறைவர் மலரடியை யல்லதியா மற்றறிவ தில்லை மற்றறிவ தில்லாத வெம்மை மலரடிகண் முற்றவே செய்து முடிவிற்க மன்றே.

664 புனையுலகிற் காதிய புங்கவ னார்த மிணையடியை யல்லதியா மின்புறுவ தில்லை இன்புறுவ தில்லாத வெம்மை யிணையடிக டுன்புறவி லக்கதியுட் டோற்றுவிக்கு மன்றே.

665 இரவிடைநன் மணிபோலு மண்ணா துணர்ந்தான் திருவடியே யல்லதென் சிந்தனையி லில்லைச் சிந்தனையொன் றில்லாத வெம்மைத் திருவடிக ளந்திணையில் பேராற்ற லாக்குவிக்கு மன்றே.

666 தொக்குட னாயவென் றொல்வினை தீர்கென முக்குடை யானடி மூன்றினும் வந்தித்துக் குக்குட மாநகர் நின்று கொடிமினிற் றக்கதிற் றான்போய்ச் சமதண்டம் புக்காள்.

667 ஈண்டி யிருந்த விலிங்கியர் தங்கட்கு மாண்ட துகிலல்குல் மாதரிது சொல்லும் காண்டற் கினிதே கடிமலர்ப் பூம்பள்ளி யீண்டுறை வாரிவர் யாவர்கொ லென்றாள்.

668 காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற் பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன் பூரண னென்பான் பொருவறக் கற்றவ னாரணங் கன்னாட் கறிய வுரைக்கும்.

669 புயலிருங் கூந்தற் பொலங்கொடி யன்னா யயலியர் தாமல்ல வாசீ வகர்கள் வியலிடத் தியாரும் வியக்குந் தகையார் மயலறு காட்சியிம் மாதவ ரென்றான்.

670 ஆத்தனு நூலும் பொருளு நிகழ்ச்சியும் பாத்தன சொல்லப் பயம்பெரி தாகலி னோத்துரை யேயிங் குரையென் றுரைத்தனள் சாத்திரம் யாவையுந் தன்னிக ரில்லாள்.

671 என்றலு மற்கலி தானே யிறையினி ஒன்பது வாங்கதிர் நூல்யா முடையன மன்பெறு நுண்பொரு ளைந்தியல் பாயவை யென்ப நிகழ்ச்சியுங் காழ்ப்பா டெனச்சொல.

672 அறிந்தா னிறைவ னவனா குதலாற் செறிந்தான் பெரிதுஞ் செறியா துரைப்பி னெறிந்தா னனைய வியல்பா குதலான் மறிந்தான் றடுமாற் றகத்தே மயங்கி.

673 உரையா னிறைவ னுணலு மிலனாய்த் திரையா னரையான் றெரிவில் லுருவம் வரையா வகைவா னிடுவில் லனையன் புரையா வறிவிற் புகழ்பூ ரணனே.

674 அடங்கல் குறிக்கோண் முதலா யினவாய்க் கிடந்த கதிருட் கிளந்த பொருளுந் தொடங்கி யுரையாந் தொகையா குவதே யுடங்கே யுணுவைந் துருவா யுளவே.

675 நிலநீ ரெரிகாற் றுயிரி னியல்பும் பலநீ ரவற்றின் படுபா லவைதாம் புலமா கொலியொன் றொழிய முதற்காஞ் சலமா யதுதண் மையையே முதலாம்.

676 எறித்தன் முதலா யினதீ யினவாம் செறித்த லிரையோ டிவைகாற் றினவா மறித்தல் லறிதல் லவைதா முயிராம் குறித்த பொருளின் குணமா லிவையே.

677 அணுமே யினவைந் தவைதா மனைத்துங் குணமே யிலவாங் குழுவும் பிரியு முணன்மே யினுமுள் புகுதல் லுரையேங் கணமே யெனினும் மொருகா லமிலை.

678 இவையே பொருள்கள் இவற்றி னியல்பும் சவையே அறியச் சிலசாற் றுவன்கேள் சுவையே யுடையம் மெனநீ யிகழல் லவையே பிறராலழிதற் கரிய.

679 அண்ணலு நூலும் பொருளுநிகழ்வு மிவையெனலு மெண்ணினு மேனை யெழுத்தினுமிக்காங் கிருந்தவர்முன் கண்ணினு மன்றிக் கருத்தினும்வேறெனக் காட்டலுற்றுப் பண்ணலங் கொண்டசொல் லாளவைபேர்த்தும் பகர்ந்தனளாய்.

680 முற்ற வறிந்துரை யாதவன் மோனாந் திருந்தனனேற் செற்றம் பெரிது முடையனச் சீவன்க டம்மொடெல்லா மற்ற முடையவர் சொல்லின வாகம மன்மையினாற் பெற்ற வகையென்னை பேதாயதனைப் பெயர்த்தெனவே.

681 ஒக்கலி யோகலி யென்றிரு தெய்வ முரைத்தனவேன் மற்கலி யார்போ லறிந்தன வாயிற் செறிந்தனவாம் தக்கில வேயறி யாதன சொல்லுத றத்துவத்தை யிக்கலி யாள ருரைத்தவு மேதமெ னாய்பிறவோ.

682 அறிந்தா னறிந்தன தான்சொல்லினார்வச் சினத்தனனா யெறிந்தா னனையதோ ரேதத்தையெய்துமவ் வேதத்தினான் மறிந்தா னகன்றடு மாற்றத்தகத்தெனின் மாண்புணர்ந்தாய் செறிந்தாங் கிருக்கிற்பி னீயுஞ்சிற்றாத்தனை யாகிற்றியே

683 ஆத்த னறிந்தன யாவையுஞ்சொல்லல னாய்விடினிச் சாத்தனும் யானு மவன்றன்னிற்சால விசையுடைய நாத்தனை யாட்டியோர் நன்மைகண்டாலு நினக்குரைத்து மீத்தன முண்டு மிருமைக்குமேத மிலம்பிறவோ.

684 வானிடு வில்லின் வரவறி யாத வகையனென்பாய் தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனா மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற் றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே.

685 முற்ற வறிந்தனன் யானென்றுமோனங்கொண் டேயிருந்தா னற்ற மகலவென் றானீயறிந்தமை யாதினினாம் பெற்ற வகையெனப் பேச்சின்மையாலெனிற் பிள்ளைகளும் மற்றிம் மரமு மலையுமம்மாண்பின வாம்பிறவோ.

686 முடக்கு மெனினு நிமிர்க்குமெனினுந்தன் மூக்குயிர்த்து நடக்கு மெனினு மிருக்குமெனினுந்த னல்லுறுப்பி னடக்கு மியல்பல்ல னன்னவற்றார்வத்த னாகுமன்றி யுடக்கு மிவையில்லை யேலுயிர்தானுண்மை யொட்டுவனோ.

687 நிலப்பாலு நீர்ப்பாலுந் தீப்பாலும் காற்றின் புலப்பாலு நெட்டுயிரின் போக்கில்லாப் பாலும் சொலற்பால வல்லாத சொல்லுதலால் யானு மலப்பா தொழியேனிவ் வாசீ வகனை யருகிருந்தார் தாமறிய வாசீ வகனை.

688 வண்ணாதி யெல்லாம் வகுப்பின் னிலப்பாலாம் நண்ணாத மூன்றிற்கு நன்பால் பிறவாகிக் கண்ணாதி யாலவற்றைக் காணப்பா டில்லையா யெண்ணாதே யிந்தியக்கோ ளெய்தாமை வேண்டும் எனைத்தும் பெறப்பாடு மில்லாத வேண்டும்.

689 நீர்ப்பாலுந் தீப்பாலு நில்லா வளிப்பாலும் பேர்ப்பாலே பற்றிப் பிறப்பிறவா நீபெருக்கி யோர்ப்பி யாதுஞ்செய்யா துரைத்தா யுரைத்தமையிற் கூர்ப்பியாது மின்றிநின் கோளழியு மன்றே கொணர்ந்துநீ யைந்தென்ற கோளழியு மன்றே.

690 பொருடாமி வைந்தொழியப் போத்தந் துரைப்பா யிருடாமி வைந்தனு ளெக்கூற்ற தாமோ விருடாமி வைந்தனுளு மெக்கூற்று மில்லை லருடாழ்ந்து நீயிருப்ப தியாதின்பா லாமோ அணுமயமாங் கந்தங்க டாமனந்த மன்றோ.

691 பலவாக நீசொன்ன பாலெல்லாந் தம்முட் கலவாவா யப்பொருளே யாதலையுங் கண்டா லுலவாதோ வொற்றுமையும் வேற்றுமையு மென்றாற் சலவாதி யொன்றுஞ் சமழலையே கண்டாய் சமத்திடை யொன்றுஞ் சமழலையே கண்டாய்.

692 பாறாம் பலவாகிப் பாலாகு மப்பொருளே வேறாது மில்லை யெனவே விளம்புவாய் நீறாக நின்ற நிலப்பால் பெறவேலா நாறா வகையெனக்கு நன்குரைக்கல் வேண்டும் நலிந்தாற் பிறபொருட்கு நாட்டலே வேண்டும்.

693 இன்றேய தாயி னிவைபா லிவைபொருள்க ளென்றே பலவா வெடுத்துரைப்ப தென்செய்யக் குன்றோ மலையோ குவடோ வடுக்கலோ வன்றோவ தன்றால· தியாப்பாதல் வேண்டூம் அவையவையே சொன்னால· தியாப்பாதல் வேண்டும்.

694 நோயில்லை வாழி கடவு ளெனவுரைத்தா னாயினோ யின்மையினேர்ந் தாய வழியொருநாட் டீயினும் வெய்யநோய் சேர்தலையுங் காண்டுநீ சாயினும் தத்துவத்தைச் சாராதா யன்றோ தடுமாற்றக் காழ்ப்பாடந் தாமுளவே யன்றோ.

695 கடுங்கதிரோன் மீதூரக் காணாக்கோ ளெல்லாம் படும்பொழுது மெழுச்சியினுந் தம்பயனே செய்யு நெடுங்காலம் பல்பிறவி நின்றன வெல்லா மொடுங்காதே மேய்ந்துண் டுழிதரலே வேண்டும் உதவாத வார்தலையு மொட்டலே வேண்டும்.

696 எப்பாலுந் தான்கெடா வில்லனவுந் தோன்றாவென் றொப்பியாது மில்ல துரைத்தளியின் றானுண்ணும் துப்பாயதூச் சோற்றுத் தூய்தல்லா தாழ்ந்துளதென் றிப்பாவி செய்யு மிழிதகவி தென்னோ விழுதைதான் செய்யு மிழிதகவி தென்னோ.

697 நின்றீக கொண்டீக வுண்டீக தின்றீக வென்றிவைகள் கூறி யிடுவார்க் கறம்வேண்டான் கொன்றீகை தீதென்றுங் கொல்பாவ மில்லென்றுந் தன்றீகை யுண்ணாதான் றான்கண்ட தென்னோ தவத்தினு மில்வாழ்க்கை தான்கண்ட தென்னோ.

698 இல்லாத தோன்றா கெடாவுள் ளனவென்பாய் சொல்லாயே நெய்சுடராய்ச் சுட்டிடுமா றென்றேனுக் கல்லாந் தயிர்த்தோடி யாழ்மிதப்புச் சொல்லுதியா லெல்லாமொன் றொன்றிற் கிடங்கொடா வன்றே யிழிவுயர்ச்சிக் காரணமு மில்லாதா யன்றே.

699 ஓட்டுங் குதிரையு மொன்றே யெனிற்குதிரை யூட்டம் பொழுதொடுதான் புல்லுண்ணும் போழ்தின்கா னாட்டிய வீதி யதிசயத்தை நீயெமக்குக் காட்டி யுரைப்பினின் காட்சியைக் கோடும் கடவுட் குழாத்தார்தம் காழ்ப்பெலாங் கோடும்.

700 வண்ண முதலா வுடைய குணமெல்லாம் எண்ணுங்கா லப்பொருளே லீந்தி னிளங்காய்க்கட் கண்ணினாற் கண்ட பசுமை கனிக்கண்ணுந் திண்ணிதாக் காட்டிற் றெருண்டாயே யென்றும் திரிந்தொழிந்த காட்டினாற் றேவனே யென்றும்.

701 வட்ட முதலா வுடைய பொருளெல்லா மொட்டிநீ யப்பொருளே யொன்றும்வே றில்லென்பாய் தட்ட மழித்தோடஞ் செய்தா லதன்கண்ணும் விட்ட வடிவு விரித்துநீ காட்டாய் விகார மனைத்தும் விரித்துநீ காட்டாய்.

702 மிதப்பனவு மாழ்வனவும் வேண்டுவனயா னென்னிற் பதப்பொரு டானான்கின் பன்மைமுடித் தாயா மிதப்பனவே யாழ்வனதாம் வேறியாது மில்லே லுதப்பேனு நின்சொ லுதவலவே கண்டா லுடனேநின் பக்க முடைத்திட்டாய் கண்டாய்.

703 தொழிற்சொற் குணச்சொல் வடிவுச்சொன் மூன்றும் பிழைப்பில் பதமாப் பிரிவிடத்துக் காண்டு மிழுக்கில் பொருளோ டியைத்தக்காற் சந்தி யெழுத்தியலிற் கூட்டமு மெப்பொழுதுங் காண்டு மிலக்கண நின்சொ லியையலவே கண்டாய்.

704 அதுவா வதுவு மதுவாம் வகையு மதுவாந் துணையு மதுவாம் பொழுதுஞ் சதுவா நியதத் தனவா வுரைத்தல் செதுவா குதலுஞ் சிலசொல் லுவன்யான்.

705 அரிவை யவளாங் குழவி யவளை யுரிய வகையா லுவந்தாங் கெடுத்தா லரிய முழமூன் றளவாம் பொழுதும் வரிசை யுரைத்த வருட மதன்பின்.

706 குழவித் திறமுந் துறவா ளவளும் முழுவித் ததுவும் முளையா துளதா மிழவெத் துணையு மியல்பேன் முடியா தழிவித் திடுவே னயநீ விரையல்.

707 முலையும் மகவும் முறுவல் லவையும் தலையுண் மயிரும் முகிரும் முடனே நிலையில் லமையு மிலதா மெனினே யலையுந் நினகோ ளுடனே யெனலும்.

708 உளவே யெனின்முன் னுரைத்தந் தியதங் களவே யெனலாங் கடையா மெனநீ கிளவா தொழியாய் கிளந்த குழவிக் களவே முழமா வவைதாம் பலவால்.

709 உடையள் ளிவடன் னுதரத் தொருபெண் ணடையு மவளுக் கவளவ் வகையாற் கடையில் குழவி யவைதன் னியல்பா நடையு மதுவே னகையாம் பிறவோ.

710 இனியாம் வகையு மிசைத்தி யெனினுந் நனிகா ரணமாய் நடுக்கு நினகோட் டனிகா ரியமும் முளதேற் றவறா முனிலா மொருவன் பொழுதும் முடிவாம்.

711 நியதந் நிகழ்ச்சிந் நியதா வுரைப்ப தயதி யெனினீ யமையுஞ் சலமேல் வியதி யெனினும் வெகுளல் இழுதை பயதி யெனினு நினக்கோர் பயனே.

712 பாலைப் பழுத்தி னிறத்தன வாய்ப்பல மாட்டொடுகண் ணாலெத் துணையு மகன்றைந்து நூறாம் புகையுயர்ந்து ஞாலத் தியன்றன நல்லுயி ரென்பது நாட்டுகின்றாய் மாலித் துணையுள வோநீ பெரிதும் மயங்கினையோ.

713 ஒன்றினு ளொன்று புகலிலவென்ற வுயிர்களெல்லா நின்றன தந்த மகலமுநீளமும் பெற்றனவாய் நன்றுநீ சொல்லுதி நாந்தொக்கிருந்துழி நல்லுயிர்க டுன்றின வென்பது சொல்லாதினியென்ன சொல்லுதியோ.

714 தானுள தாய வழியதன் றன்பா லியல்பெனலா மூனுள தாய வுயிர்ப்பிர தேச முணர்வதுபோல் வானுளம் போயுழி மன்னு மறிவிலை யேலதனை நானுள தென்றுரை யேனதற் கியாரினி நாட்டுகிற்பார்.

715 ஒன்றென நின்ற உயிர்தானுருவின தாதலினாற் பொன்றுந் துணையும்பல் போழெய்தும்பூசணிக் காயினைப்போ லின்றெனி னாகம மாறதுவாமினி யவ்விரண்டு மின்றெனிற் சால வெளிதாம்பிறவத னின்மையுமே.

716 எண்டனை யாக்கி யிடவகை யுட்பொரு ளீறுசொல்லி மண்டல மாக்கி மறுத்துங் கொணரு மனத்தினையேற் கண்டிலை நீமெய்ம்மை காழ்ப்பட்டு நின்ற கனவுயிர்க்கெண் ணுண்டெனி னில்லை யகன்றடுமாற்ற முலப்பின்மைபோல்.

717 மேற்சீர தீயோ டுயிர்காற்று விலங்கு சீராம் பாற்சீர நீரு நிலந்தானும் பணிந்த சீரா மேற்சீர மேற்போம் விலங்கோடு விலங்கு சீர்கீ ழாற்சீர வீழும் மவையென்னினு மாவ தென்னோ.

718 தீயு முயிருந் தமக்காய திசையி னாலே போயு மொழியா திவணிற்றல் பொருத்த மன்றால் வீயும் வகையும் வினையாக்கும் திறமு மெல்லாம் நீயு மவற்றை நினைவாயுள வாக வன்றோ.

719 தென்றை யதுளையத் திசைதானுறப் போய காற்றேற் பின்றை யொருநாட் பெயராததோர் பெற்றி ய·தான் முன்றை தழுவி முனிவாக்கும் வடந்தை யத்தா வின்றைப் பகலே யிதன்மெய்ம்மை யிசைக்கிற்றியோ.

720 முன்சென்று வீழுந் நிலநீரை முகிலு ணின்று பின்சென்று பெய்யுந் துளிதானும் பெருந்த வத்தா யென்சென்ற தெய்துந் திறந்தன் னையெனக் குணர நின்சென்ற வாற்றா லுரைத்தானெறி யாற்ற நன்றே.

721 பாலெங்கு மோதப் படுகின்ற பதப்பொ ருட்குக் காலங்கள் சொல்லா யதுதானுன் கணக்கு மென்றாற் சீலங்கள் காத்துக் குணனின்மையைச் செப்பு கின்றாய் மாலிங் குடையை யதுதீர்க்கு மருந்து முண்டோ.

722 நோயுற்ற நுன்போற் குணமொன்றில னாய யானும் பேய்மற் றிவடா னெனக்கண்டோர் பெரிய வன்றா னீமற்றி துண்ணென் றறநல்க விளங்கப் பெற்றேன் வாமத்து ணீயும் மதுபோலு மருந்தில் லையே.

723 நோயைத் துணிந்தே யுறுநோய்முத னாடியந்நோய்க் காய மருந்தே யறிந்தூட்டும· துண்டு காட்டிற் பாய மறுக்கும் படியாமது பல்லு யிர்க்கும் கூயத்தி னென்னை குரவருப தேச மென்றாள்.

724 சாதி முதலாப் பிணிதாமிவை யப்பி ணியிற் காதி யறியில் லவைதீவினை யூண தனாற் றீதின் றிதனில் லழுந்தல்திரி தோடத் தினால் வேத னையது தீர்ப்பது மெய்யுணர் வாமே.

725 மானின்ற நோக்கின் மறவேனெடுங் கண்ணி னல்லாய் மேனின்ற வெல்லா மிகநல்லவிம் மெய்யுணர்ச்சி தானின்ற தன்மை தவிராதுரைக் கிற்றி யேனின் னூனின்ற வாறே பொருணோக்குவன் யானு மென்றான்.

726 நின்ற விரலுந் நிலையாழ்ந்து முடங்க லாயிற் சென்றவ் விரலும் மெனத்தானின் கூற்ற தாயிற் றொன்றவ் விரலே யுறலுண்மையு மின்மை யும்மா மென்றவ் விரலே யிதுவென்றனள் வேற்க ணல்லாள்.

727 ஆழ்ச்சி யொருபா லதுவல்லன தம்மோ டாழா தேழ்ச்சி யொன்பா லதுதன்னொடு மின்ன தென்னச் சூழ்ச்சி யமைந்த துணைத்தோளியர் சொற்க ளென்று தாழ்ச்சி மனத்தா லிதுதத்துவ மென்ற னன்னா.

728 பொய்ந்நின்ற வெல்லாம் புரைத்தாயினிப் பூர ணன்னே மெய்ந்நின்ற பெற்றி யறிந்தாயிதன் மேலு நன்றாக் கைந்நின்று முண்டுங் கடைப்பள்ளி வழியு மாக்கிச் செய்ந்நின்று நீசெய் தவந்தானெனச் செப்பி னளே.

729 கல்லா தறிந்த கடவுள்ளிறை யாகு மெய்ந்நூல் சொல்லானு மல்ல னவன்சொல்லின தாகு மும்மூன் றெல்லாப் பொருளுந் தம்பான்மை யியல்பு மேன்று பொல்லாத போக்கி யினிப்பூரண சென்மி னென்றாள்.


சாங்கிய வாதம்[தொகு]

730 ஆங்கவன் சொல்லவவ் வத்தின புரத்து ளோங்க வொருகொடி நட்டுரைக் கிற்பவ னாங்க ணெவர்க்கு மறையென் றிருந்தவச் சாங்கியன் றன்னைத் தலைப்பெயச் சென்றாள்.

731 சென்றா ளவன்றன் சிரத்தையைக் கண்டோத நின்றா ளவன்றா னெறிபகர் கின்றனன் பின்றான் பிரளையத் தாக்கமும் பேர்ச்சியு மொன்றா வகையா லுரைகளை யொட்டா

732 பாலொத்து நின்ற பரமாத் துமனொடு மூலப் பகுதியு மல்லாப் பகுதியு மேலொத் தியன்ற விதிவிகற் போடு நூலிற் கிடந்தவ நுண்பொரு ளன்றே.

733 ஒருங்கிருந் தார்கட் குடனவை யெல்லாம் பருங்கினன் மெய்யும் பராசரன் றன்னை விரும்பினள் போல வினவின ளன்றே யருங்கல மாய வறிவினுள் மிக்காள்.

734 என்னைப் பயந்தீரி· தென்னெனக் கேட்டன ணன்னுத லாயிது வென்னெறி யென்றன னன்னன· தாயி னறிவி யெனச்சொல வின்னன கேளென் றெடுத்தனன் சொல்லும்.

735 மன்னுயிர் தெற்றென வில்லது மான்செருக் கென்னவு மிந்திய மைந்தைந் தொருமன மன்னதன் மாத்திரை யைந்தைந்து பூதமும் பன்னிய வையைம் பதப்பொரு ளென்றான்

736 எத்திறத் தின்னுஞ்செய் யான்குண மொன்றிலன் றத்துவ னின்பன பேதன லேபக னித்திய னெங்கு முளனெடுங் காட்சியன் றுத்த லுடையனென் றோன்றலு மென்றான்.

737 நின்று பரந்தரு வாய்ப்பொறி யேதுமிக் கொன்று கிரிகையின் றப்பியத் தம்மது சென்று செய் மானிற் செருக்கத்தி னீரெட்டு மன்றியு மைவகைப் பூதமு மன்றே.

738 நின்று பரந்தரு வாய்ப்பொறி யேதுமிக் கொன்று கிரிகையின் றப்பியத் தம்மது சென்று செய் மானிற் செருக்கத்தி னீரெட்டு மன்றியு மைவகைப் பூதமு மன்றே.

739 கதக்களி யானைமுன் கல்லெறிந் தாற்போற் பதப்பொரு டம்மைப் பழுதென் றுரைப்ப மதத்தினின் மிக்கவன் மாதரை நோக்கி யுதப்பென்னுங் குற்ற முரையெனக் கென்ன.

740 செய்யா துயிரெனச் செப்புகின் றாய்நின்னை வையா யுயிருள தன்றெனின் வாக்கிவை மெய்யாம் பிறசெய்கை யாதலி னாலிவை மையா மினிநின்றன் மார்க்கமு மன்றே.

741 எத்திறத் தின்னுஞ்செய் யானவ னென்றலிற் றத்துவஞ் சொல்லுந் தலைமக னாகிய சித்தியு மில்லாந் திருட்ட விரோதமும் பொய்த்தலுள் ளிட்டவும் புல்லுமற் றென்ன.

742 பெருமை யுயிர்க்குரை யேன்செய்கை பின்னும் இருமை யுயிரென தாமிடை யொன்றுங் கரும வுயிரு மிவற்றினி னன்றே யருமை யுடைச்செய்கை யாக்கமு மென்றான்

743 செய்யு முயிர்களுஞ் செய்யா வுயிர்கனும் மெய்யி னுளவெனின் மேற்கோ ளழிதலும் பொய்யும் பொதியறை மையுமற் றல்லவு மெய்து மிதற்கினி யென்செய்தி யென்றாள்.

744 சோம்பன் குணமிலன் றோன்றா வொளிப்பின னோம்பற் கருமையி னுண்ணுமாற் றானுயி னாம்பின்னைச் செய்ததெ னன்கவ னின்றியும் போம்பொழு தேலவ னாற்பொரு ளென்னோ.

745 ஆண்டரு வாய்த்தொழில் யாதுமில் லாயின் வேண்டின்மெய் யாகி விகிர்தி விகற்பொடு தீண்டலு மொட்டலுந் தோ¢னி லாதவன் காண்டற்குந் துத்தற்குங் காரண மென்னோ.

746 முத்தாத் துமனை முனிந்தோ வதுவன்றிப் புத்தாத்து மாக்கட் புரிந்தோ விரிந்தெங்குஞ் சித்தாத் துமனாய்த் திரிவின்றி நின்ற சுத்தாத் துமைச் சுழற்றுவ தென்றாள்.

747 பரமாத் துமனைப் பளிங்கடை போல வருமாத்து மாக்களின் மன்னும் விகாரம் தருமாத் திரையன்றித் தக்கதொன் றாக வொருமாத் துமனை யுரைத்திடு கென்றாள்.

748 செல்லு மெனினுஞ் சிதையுஞ் செல்லானென்று சொல்லு மெனினுமுன் சொல்லிய தாமெய்தும் பல்லுநுன் னாவும் பதையா துரையன்றி யெல்லுந் துணையு மிருவினை யென்றே.

749 யானென தென்னுஞ் செருக்கினை யீன்பது மானெனப் பட்டது மன்னுமோர் சேதனை தானினை யாக்குத றக்கின்ற சேதனை மேனினைத் தானுரைத் தானல்ல னென்றாள்

750 மான்றான் பகுதி வழித்தோ வழித்தன்றித் தான்றான் பிறிதோர் பொருளோ யிரண்டொடு மூன்றாவ தொன்றினி யின்றா விருந்தவிச் சான்றா ரறியவுஞ் சாற்றினி யென்றாள்.

751 முதற்பொரு ளேயாங் குணமது வாகின் அதற்பிறி தென்னி னதுமனனு முண்டா லிதற்கினி நீசொலற் பாலதென் னென்றாள் சுதப்பொருண் மேனன்றுஞ் சொல்லுதல் வல்லாள்.

752 அருவாய காரண மாயவ் வியத்த முருவா மறுதலை யொப்பிக்கு மென்பாய் மருவாத சொல்லினை மாதிரந் தானே பருவாய்ப் பதக படைத்திடு மென்னாய்.

753 பகைக்குண மாகிய பகுதி விகுதி மிகைக்குணந் தோன்றுநின் மேற்கோ ளழித்துத் தொகைக்கணம் யாவையுஞ் சூனிய மாமா நகைக்குண மல்லது நம்பலை யென்றாள்.

754 புத்தேந் திரியமுங் கம்மேந் திரியமும் பத்தேந் திரியத்தோ டொன்றாய்ப் படைத்தனை பித்தேந் திரியமும் பேயேந் திரியமும் குத்தேந் திரியமுங் கொண்டிலை யன்றே.

755 தந்திர மாவன தாமிடைத் தோன்றுவ வந்தர வாத்துவ னைந்தென வேண்டினை சிந்தனை யுள்ளிட்டுச் சீவன் குணமெனி னிந்திரன் றானு மிணைநுனக் காமோ.

756 கைகளுங் காலு மிருசா ரிடக்கரு மெய்திய வாக்குமற்றிந்திய மாமெனிற் செய்யும் புலனு மறியு மறிவுமற் றெய்த வுணர்ந்திங் கெடுத்துரை யென்றாள்.

757 காட்டிய வாறுங் கருமத்தி னாமெனி னூட்டு முலையு முதடும் புருவமு மாட்டுங் கவுளு மறமெல்லும் பற்களும் கூட்டி மிடறுங் கொளக்குற்ற மென்னோ.

758 ஐந்துதன் மாத்திரை தாமணுவாற் றொடர் கந்தங்க ணாதியிற் காம்புல னேயவை வந்துபெருகி வரிசையி னான்மிகும் புந்தியி னால்வகைப் பூதமு மென்றாள்.

759 ஒன்றாய்ப் பரந்திவ் வுலகு மலோகமுஞ் சென்றாய்க் கிடந்த தசேதனை தானென்று மன்றா யருவா யதுவவ்வா காயமு மென்றா ளெழினெடுங் கண்ணிணை நல்லாள்.

760 தானரு வாய பொருளது வாமொலி மேன்மரு வாதுரு வாதலி னான்மெய்ம்மை நூன்மரு வாதுசொன் னாயிது வென்றனள் மான்மரு வாவந்த நோக்கு மரியாள்.

761 பகுதியின் மானில்லை யி·தினு ம·தில்லை தொகுதிசெய் பல்குணந் தோற்றமு மில்லா மிகுதிசெய் பூதத்து மெய்ம்மை பெறாமற் றகுதியின் றத்தநின் றத்துவ மென்ன.

762 குருடனும் பங்குவுங் கூட்டத்திற் கூட்டிப் பொருடம் தாக்கமும் போத்தந் துரைப்பிற் றெருட லிலையவர் செய்கையிற் செய்கை யிருடன்னை யின்றி யிவையெய்து மென்றாள்.

763 எவ்வகை யின்னும் விகார மிலாப்பொருட் கிவ்வகை தம்மை யெடுத்துரை யென்செயும் மெய்வகை யாலொப்பின் மேற்கோண் முதலிய வவ்வகை யெல்லா மழிவுள தாமே.

764 கூடியு மாகாக் குணத்தின் நீயவட் பாடி யுரைத்த வுயிரும் பகுதியும் பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையை நாடியுங் காணென்று நன்னுத னக்காள்.

765 இல்லுளி யின்றிமற் றெங்கு மிவைமுன்னும் புல்லின வேயாற் புணர்ச்சி புதிதெனச் சொல்லின தென்செயத் தோற்றப் படுபொருள் பல்லன தாமவை பண்டு முளவே.

766 ஆட லழித்தல் படைத்த லடங்குதல் வீடுபெற் றாங்கண் விளங்க நிலைமையுங் கூடிய வைந்து குணத்தின னாதலி னாடிய குற்றங்க ணண்ணல வென்ன.

767 ஓதிய வெல்லா மொருவனி னங்கொரு நீதி வகையா னெறிமைப் படுதலும் வாதுசெய் வார்கள் பிறராய் வருவது மூதிய மில்லை யொழியென் றுரைத்தாள்.

768 யானை குதிரை முதலாப் படைகுடி யேனைய தாங்களு மெல்லா மவனெனிற் றானென்று மாள்வது தன்னை யெனினங்கள் கோனிவ னாமெனக் கூறினார் யாரோ.

769 என்னை யொழித்தினி யெல்லா மவனெனச் சொன்ன முறைமைய னாகு மவனெனிற் றன்னை யொழித்துத் தபுத்துடன் றின்றிடிற் பின்னை யவனையோர் பித்தனென் னாமோ

770 தன்கையிற் றன்கண்ணைத் தானே பொதக்குத்தி யென்செயக் குத்தினை யென்பார் பிறரில்லை தன்கையிற் றன்கண்ணைத் தான்பொதக் குத்துவ தென்செய வோவிதன் காரணஞ் சொல்லாய்.

771 தன்னைப் படைப்பின்முன் றானின்மை யாலில்லை பின்னைப் படைக்கிற் படைக்கப் படுவதின் முன்னைப் படைப்பென் முடிவில்லை மூடனே நுன்னைப் படைத்தவர் யாரினி நோக்காய்.

772 கொன்றுகொன் றிட்டுத் தவஞ்செய்யி னத்தவம் பொன்றுமற்றாதலி ன·தும் பொருத்தமின் றின்றிதின் றிட்டுப் படைப்பிற் றெருட்சிமற் றென்று மிலன்பெரி தேழையு மாமே

773 ஓர்ப்பவன் சொல்லவ னூனவன் றீனவன் றீர்ப்பவ னோயவன் சீறு மவனுயிர் நீப்பவன் சாபவ னீப்பவ னேற்பவன் பேர்ப்பவ னாயும் பெறுகின்ற தென்னோ.

774 நாயாய்க் கடிக்கு நரியாய்ப் பலகொல்லும் பேயாய்ப் புடைத்துண்ணும் பெற்றமு மாய்க்குத்து மீயாய் நலியு மெறும்பாய்த் தெறுமெங்கும் தீயா னொருவனின் றேவனு மென்றாள்.

775 வீடு தலைபெற வெந்துநெஞ் சாண்டிடத் தாடி தவஞ்செய்த தன்கா லழித்திடப் பாடிய கையிற் படைக்கு மிவனெனின் மூடர்கட் டேற்ற முடிவுமுண் டாமோ.

776 நித்திய மாய பொருணின வாதலின் வித்தினு ளுண்டென வேண்டுதி நீள்பனை யெத்துணை யோவது வென்னினு நுன்கைக்கு மித்துணை யுண்டென்ப தென்னைகொ லேழாய்.

777 இப்பொழு தில்லை யெதிரதற் குண்டெனி னப்பொழு துண்மையு மின்மையு மாக்கி னெப்பொரு டாங்களு மின்னன வேயெனச் செப்பினள் தத்துவஞ் சேயரிக் கண்ணாள்.

778 உருவோ டருவமா காயமு மூன்று மிருபதின் மேலுமைந் தாக விசைத்தனை யருவோ டலோக மசேதன மூன்றிற் செருவோ டுரிமையிற் சேர்பவு மன்றே

779 ஒன்றொன்றி னொன்றி யுலகுள் வழியெங்குஞ் சென்றவ னுண்மை பகுதி யிதுமன்னு மென்றனை யெண்முறை யறிமற் றீண்டுபு நன்றன வீறா நிலமுத னான்கே.

780 பத்தனை யாய்நின் பரமாத் துமனையுஞ் சித்தனை யாகக் கருதியல் சீவன்கட் கத்தன்மை ஞானமு மென்னா யவனுக்குத் துத்தலுங் காண்டலுஞ் சொல்லினை யன்றோ.

781 வண்டார் குழற்பெயர் மாணிழை யிற்றெனக் கொண்டே னெனவவன் கூறினன் கூறலும் பண்டே லறியெனப்பராசர நீயினிக் கண்டா யெனச் சொல்லிக் காட்சி கொடுத்தாள்.

782 ஐந்து மிருபது மாகிய சொற்பொரு டந்திவை யல்லது தத்துவ மில்லென்ற சிந்தை யொழித்துச் சினவரன் சேவடி வந்தனை யேசெய்து வாழிநீ யென்றாள்.


வைசேடிக வாதம்[தொகு]

783 ஆட்டினா ளவனையு மாக்கிச் செல்பவள் வீட்டினார் நெறியென விரித்த மேலையோர் காட்டினார் பலருளுங் கணாத னேயெனு மீட்டினா னுலோகன திடத்தை யெய்தினாள்.

784 வனப்புடை மாதரைக் கண்டு மாதவன் சினப்புடைக் கருத்தின ளென்னச் சிந்தித்தே நினக்கினி நெறிவயி னின்ற மெய்ம்மையை மனக்கொளக் கிளக்குவேன் மன்னுங் கேளென.

785 நெறியெனப் படுவது நின்ற மெய்ம்மையங் கறிதலுக் கரியன வாறு சொற்பொருள் செறியயான் சொலிற் றிரப்பியங் குணந்தொழில் பொறியினாய் பொதுசிறப் புடன் புணர்ப்பதே.

786 பூதமைந் தொடுதிசை மனம்பொ ழுதுயி ரோதினப் பொருள்கடா மொன்ப தாமவை நீதியிற் குணமவற் றியல்பு செய்கையும் போதரும் பொருட்புடை பெயர்ச்சி யாகுமே.

787 பெரியதும் பின்னது மாய தப்பொது உரிதினிற் பொருள்களைச் செலுத்து மொற்றுமை தெரிவுற வருவது சிறப்ப தாங்குணக் கிரியைக ளிதற்கெனக் கிளத்தல் கூட்டமே.

788 ஆறின் முதன்மூன் றத்தி மற்றவற் றீறின் மும்மையு மின்மையை யெய்தின கூறின பொருள்களுங் குணனுஞ் செய்கையும் வேறென விரித்தனன் விசேட வாதியே.

789 தத்துவ மிவையெனத் தலையுந் தூக்கினாட் கொத்ததன் றோவென வுரைநல் லாயினி யித்தவ மிப்பொரு டேறி யான்செயிற் பொய்த்தவ மாதலிற் போவ னென்னவே.

790 மெய்ந்நெறி யிதுவென விரிப்பக் கேட்டிருந் திந்நெறி யமைதியின் றென்னுஞ் சொல்லினாய் பொய்ந்நெறி யாதலைத் தேற்றிப் போகெனக் கைந்நிறுத் தாளது காட்டக் கேளென.

791 நிலமுதற் பூதமாய் நின்ற நான்மையுங் குலமுதன் மூர்த்தியாய்க் கூறி னொன்றவை யலமுதற் பொருள்களாய்ப் பன்னி னாயவை வலமுறை யிடமுறை வருதல் காட்டுகோ.

792 உரியதோர் நீரணைந் துப்ப தாகுநெய் யெரியெழு முளர்ச்சியா லிரைக்குங் காற்றதாம் பெரியதோ ருருமுநீர்ப் பிண்டம் வந்துநீ¡; வரிசையிற் படலமாய் வந்த வல்லவோ.

793 ஒலியதன் குணமென வுரைத்தி யாதலால் வலியுடை நிலையில மற்றெப் பூதமும் ஒலியொடு முதறம்முட் புல்ல லின்மையாற் கலிசெய லொழிகநின் காய மென்றனள்.

794 சுட்டின திசைத்திறஞ் சொல்லிற் சூரியன் பட்டது மெழுந்ததும் பற்றி நான்குமாய் யெட்டெனப் பலவென வின்ன தன்மையாற் கட்டினர் வழங்கினுங் காய மெய்துமே.

795 மண்டிலம் பலரையு நிறுவி மத்திமங் கொண்டுநின் றான்றிசை கூறு மின்னென வெண்டிசை யவன்வயிற் பிறக்கு மென்பவேற் கண்டில நின்பொருள் காட்ட வல்லையோ.

796 அத்திசை யவனுமா யல்ல னும்மென வெத்திசை யவர்களு மிசைப்பி னேகநீ பத்திசெய் தினியென்னைப் பரமன் பாதமே சித்தியு முடிவெனச் சேர்ந்து வாழ்தியே.

797 மன்னுமம் மனமெனப் படுவ தாவதே யின்னுயி ருருவினோ டியைந்த வொற்றுமை யின்னுமக் காலமு மிருமைத் தாகலி னின்னுடைப் பொழுதவ ணிற்ற லில்லையே.

798 குணங்களுந் தொழில்களுங் கூறி வேறெனிற் பிணந்தனைச் சீவனாய்ப் பெற்ற தென்னையோ வுணர்ந்தில னுரையுமொன் றிலனெனி னுறுதிநாம் புணர்ந்தில மவன்வயிற் போந்த தில்லையே.

799 எப்பொரு ளெக்குணத் தானு மில்லையே லப்பொரு ளக்குணத் தயல தாதலாற் செப்பிலக் குளிரினாற் றீய துண்மைபோற் றுப்பெனப் பொருள்களுந் தோற்ற மில்லையே.

800 குணத்தொடு குணிகளைக் கூறி வேறெனப் புணர்ப்பதோர் பொருளினை வேண்டிற் பொய்யெனிற் குணத்தொடு குணிகளுங் கூட்ட மின்மையா லுணர்த்துதற் கரிதவை யுளவு மல்லவே.

801 ஒன்பதுந் தத்தும துண்மை யாற்பல வென்பது மெனைத்தென வெண்ணப் பட்டதும் வன்பிதன் குணமிது வென்னப் பெற்றது மன்பதற் குடைமையி னறியப் பட்டதே.

802 அதனது குணமதற் கயல தாதலா லிதனது குணமென விழுக்கிற் றென்னையோ உதனமு முணர்விலை யொன்ற தென்றக்கால் விதனமும் படாயது மெய்யு மாகுமே.

803 கெடக்கெடும் பொருளெனிற் கேடு முண்டெனப் படப்பெறு மதற்குநி பரிவ தென்னையோ வடக்குந்தன் றோற்றமு மொட்டி மும்மைய மடக்கிலு மதுபெரி தழகி தாகுமே.

804 குணங்கடாங் குணியெனுங் கூற்று முண்மையிற் பிணங்கலாய்ப் பொருள்வயிற் பேறு முள்ளதே யிணங்கலா யிருமைய தின்மை யுண்மையும் வணங்கலாம் வகையதோர் மாட்சி மிக்கதே.

805 பண்பினாற் பொருள்களுக் காய பல்பயஞ் செண்பினா னறிவினான் செறிவி னானென மண்பொனாற் குணநிலைக் காய மாட்சியா நண்பினா னல்லது நடத்த லில்லையே.

806 விலைபெறு நன்மையால் வெறுப்ப தீமையால் கொலைபெறுங் களவினாற் குணத்தி னக்குண நிலைபெறும் பொருளினா னின்ற வொற்றுமை யலைபெறும் வேறெனி னாவ தில்லையே.

807 நல்வினைப் படுதலுந் தீவினைப் படுதலும் பல்வினைப் பாகினாற் பயங்க ளெய்தலு மில்வினைக் குணங்கடா மென்றும் வேறெனிற் சொல்லில சுழற்சியும் வீடுந் தோற்றமே.

808 ஆட்டுடை யாடன வாட றாங்களு மோட்டுடைக் குதிரையு மோட்டு மென்றின்ன கூட்டிய வப்பொருட் கொடைய வாதலான் மீட்டவை யொன்றென வேண்டல் வேண்டுமே.

809 கூத்த ராடலுங் குதிரை யோடலு மோத்துரை யுள்பட வொழிந்த யாவையு நீத்தன வேயல்ல நிலையு முண்மையிற் போத்தரல் வேண்டினப் பொழுதி னாகுமே.

810 பிணங்கல வாய்த்தம்முட் பிறக ளாகிய குணங்களுந் தொழில்களுங் குழுமிக கெட்டன புணர்ந்துடன் பொருள்வயிற் போந்த வாறுநீ யுணர்ந்திலை யதுவுநின் னுடைய தேபிற.

811 பாதுவெலாப் பொருளொடும் பொருந்தி நின்றதே லதுவெலாப் பொருள்களை யாக்கு மொற்றுமை யிதுவலா லவைதம்மு ளியைத லில்லையேல் செதுவலாம் பிறவது சென்ற தென்றலே.

812 அன்றியும் பொதுவது வந்தமில் பொருட் சென்றதே யென்றலாற் சிதர்ந்து பன்மையாய்க் குன்றியுங் கூடியு நின்றுங் கொள்பய மின்றியும் போதலா லென்னை யாயதோ.

813 பொதுவெனப் படுவதோர் போலி யாதலாற் பொதுவெனப் படுவன போன்ற தாங்களே யதுவென மீட்டிருந் தாறென் றெண்ணுவா யிதுவென வென்னையிங் கிதனோ டேழெனாய்.

814 சிறப்பெனப் படுவது தெரியி னப்பொரு ளறப்பெற நின்றவக் குணம தாதலின் இறப்பவு மிதுதன தின்மை யேயினாய் புறப்படுத் திடுவனுன் பொருள ளெண்ணலே.

815 கூட்டினா லல்லது கூட்ட மில்லையேற் கூட்டுவான் செல்வதுங் கூட்ட மில்லையே பாட்டினாற் பலவுமாம் பயமி லாதன மூட்டினா லுரைத்தியோ முனிவு போக்கிதோ.

816 கொக்கொடக் கருமையைக் கூட்டு வித்தலுஞ் சுக்கொடத் துவர்ப்பினைத் துன்னு வித்தலுஞ் சிக்கென வேற்றுமை தீர்ப்பி நீயென நக்கன ளளியனோ நயவ னென்னவே.

817 என்றுமப் பொருள்களு மியல்புந் தங்களோ டொன்றென வருதலா லொன்று மாகுமே யென்றலி லிருமையுந் தெரியி னின்மையா லின்றினிக் கூட்டுவ தில்லை யில்லதே.

818 ஒன்றுநற் பொருள்கடாங் குணங்க டாம்பல வென்றுநீ யேகம் வேறென்ப தென்னெனப் பொன்றுமக் குணமெனிற் பொருட்கு மாமென நன்றினிக் குணமுண்மை நாட்ட மாமென.

819 குணிக்கணா னோக்கினாற் குணங்க ளில்குணத் தணிக்கணா னோக்கினா லதுவு மன்னதே பிணிக்கலாம் பிரிக்கலாம் பெற்ற நான்மையிற் றுணிக்கலாந் துருநெறி துன்னு நன்மையே.

820 இல்லையக் குணங்குணிக் குண்மை தானெனச் சொல்லினக் குணிகுணத் தொன்று மாதலா லல்லதக் குணங்களு மவைக ளாமென நல்லதித் துணிவென நயத்தி லெய்தினான்.

821 பொருளொடக் குணந்தொழிற் குண்மை யொன்றெனத் தெருள்வது மும்மையிற் றெரிய வைப்பது மருளுடை யறநெறி யண்ணல் சேவடி யிருள்கெட நினைத்தலு மினையை யாகென.

822 ஓம்படுத் துலோகனை யொழியச் சொல்லியான் காம்புடைக் கடநெறி கடப்ப னென்னவே பேம்படுப் பவரொடும் பிரிவின் னாமையைத் தேம்படு கிளவிநீ சிந்தி யென்னவே.

823 ஒக்குமவ் வுரையென வுள்ள தேயென நக்கன ளாகிய நாதன் சேதியஞ் சிக்கென வேத்துதல் சிறந்த தென்னவே தக்கதென் றவன் சொலத் தானு நீங்கினாள்.


வேத வாதம்[தொகு]

824 காதம் பலவும் கடந்தபின்காகந்திக் கடிநகருள் வேதமு மங்கமும் விச்சைகணிலைமையும் வேண்டுநர்கட் கோதவுங் கேட்பவு முரைத்தலினுலகினு ளறியப்பட்டான் பூதிக னெனப்படு மந்தணனோத்திடம் புக்கனளே.

825 என்னை யிங்குநும் பொருளெனவினவலு மிவ்விருந்த வன்னைதன் வரவிதே லாதியிலருமறை யதுமுதலாப் பின்னைவந் தனகளு மிவையெனப்பையவே யெர்த்துரைத்தான் முன்னமங் கிருந்தவோர் முதுமகனவைதன் முறைமையினே.

826 நாத்திக மல்லது சொல்லலையாயின்மு னான்பயந்த சாத்திர மாவது வேதமன்றோவது தான்சயம்பு சூத்திரி நீயது வல்லையலாமையிற் சொல்லுகிறாய் போத்தந்தி யோவதன் றீமையென்றான்பொங்கிப் பூதிகனே.

827 பூதிகன் றானது சொல்லலும் யானது வல்லனெல்லாம் சாதிகண் டாயெனத் தான்றள ராது சாற்றுகென்றாட் காதியென் றானுமோ ரந்தமென்றானுமுண் டேலதற்கு நீதியி னாலுரை நீயினி யானது நேர்வ னென்றான்.

828 செய்கையும் புதுமையு முடைமையிற்றிருட்டத்தின் மறுதலையிற் பொய்யொடும் பொருளொடுங் குவகொடுஞ்சாலவும் பொருந்துதலின் மையறு மயக்கமு மாற்றொடுகொலைமன்னு மருவுதலின் ஐயமி றீக்கதிச் செலுத்துவததுவென்னை யாவதென்றாள்.

829 யாரது செய்தவ ரறியிலிங்குரையெனி லங்கொருவ னூரது நடுவணொ ருஐறயுளில்மலம்பெய்திட் டொளித்தொழியிற் போ¢னு முருவினும் பெறலிலனாதலின் றாக்குறித்துத் தோ¢னு மினியது செய்தவரில்லெனச் செப்புவவே.

830 தோற்றமு நாற்றமுஞ் சுவையுடனூறிவற் றாற்றொடங்கி யாற்றவு மாயிரு வேதம்வல்லார்கள· தறிந்துரைப்ப மேற்குலத் தாரோ டிழிந்தவரென்பது மெய்ம்மைபெறா நூற்றிறஞ் செய்தவ ரறிகுவர்நுழைந்தறி வுடையவரே.

831 முயற்சியி னிசைத்தலி னெழுத்தினிற் பதத்தினின் முடிவதனால் செயற்பட லுடையத னியற்கையிற்செய்தவர் பெயர்பெறலா லியற்கைய தன்றுநின் வேதமென்றேதுவி னெடுத்துரைத்தாள் புயற்றிற லிகலிய கூந்தலின்பெயருடைப் புலமையினாள்.

832 கதியவர் தம்பெய ரின்னவைசுட்டின காட்டலினு முதியவர் நாள்களொ டொப்பிலவிப்பொழு தொத்தலினும் விதியது வாதலின் வேதத்தையாஞ்சொல்லுங் கீதத்தைப் போற் புதியது வேயெனச் சொல்லுதுநாமது பொருந்து மென்றாள்.

833 கொல்வது தீதெனப் பொருள்வழிவேள்வியிற் கொலப்படுவ வெல்லையொன் றிலதென்ப விணைவிழைச்சொழிகென்ப வம்முகத்தாற் செல்கதி யுளதென்ப தீர்த்துகநெறியென்றுந் தீயவென்று பல்லவர் துணிவுமெம் வேதத்தினுளவெனப் பயின்றுரைப்ப.

834 சாதிக்கட் பயவா தவப்பயந்தருமெனத் தந்துரைப்ப வாதிக்க ணான்வழி நால்வரதமைதியை யமர்ந்துரைப்ப சூதித்த தோற்றமும் பிழைப்பெனச்சூத்திரப் பிறவிகொள்ளார் வாதித்த வாறென்று தெருண்டவர்க்கிவையிவை மயாமயக்கே.

835 மறுதலை தத்தமு ளாக்கிமயக்கமுஞ் செய்தமையாற் பெறுதலை யென்னைகொ றத்துவந்தனையன்று பறுமுண்டே யுறுதியுஞ் சால்பு முடையனயாவையு முண்மையினாற் செறுதலை யேவில்லை சீர்த்தனசெய்விக்குஞ் சிட்டிதுவே.

836 வசுக்களொ டுருத்திரர் பிதிரரோடிவர்முத லாப்பலர்க்கும் பசுக்களோ டெருமைகள் குதிரைகள்புலியொடு நாய்முதலா விசுக்கிழிந் தனபல கொலைகளுமிரங்கலிர் கொன்றவரை யசிப்பவர் போன்றனி ராயினுமருவினை யாநுமக்கே.

837 தேவரும் பிதிரரும் நுதலிய கொலைகளிற் றீவினைதா மேவர வல்லன வேண்டுவல் யானென வேண்டுதியேல் யாவரையு நுதலியு மவரவர் செய்தன வவரவர்க்கே யாவரி னடையுமவ் வருவினை நுமக்கறி வரியதென்றாள்.

838 ஊட்டுதும் யாமென் றுமர்களைநுதலியோர் சாலைவைத் தால் வீட்டினங் கிடலின்றி வினைநிலைநுமக்கறி வரியதுபோல் கூட்டிமற் றவர்களை நுதலியகொலைவினை தங்களையுங் காட்டுகில் லாரவர் தாமவையறிவதோர் கணக்கிலரே.

839 சிறந்தவர் தங்களுக் கெய்துகசென்றென்னுஞ் சிந்தையரா யறம்பல செய்தவர்க் கல்லதங்கவர்களுக் காகுமென்றாற் றுறந்தவர் வீடுபெற்றார்களைநுதலிய தொடர்வினையும் பிறங்கியிப் பிறவியிற் போக்குமற்றிவையென்ன பேதைமையே.

840 நண்பரை நுதலியும் பகைவரைநுதலியு மமிர்தொடுநஞ் சுண்பவர்க் கல்லதற் கவர்களுக்காமென வுரைக்குநர்யார் பண்பிலி தேவரை றுதலியகொலையினிற் பல்வினைதா னுண்பல வகையினி னடைந்தவைவிளையுங்க ணுமக்குமென்றாள்.

841 கொன்றவர்க் கல்லது நுதலப்பட் டார்களைக் கூடலவேற் றின்றவர்க கியாவையுந் தீவினைசேரல தேவர்க்குப்போ லென்றுரைப் பாய்க்கெய்து மேழைமையுண்குவ வேலிமையார்க் கொன்றுவி யேனல னோவினையூன்றின்பவர்க் கொப்பவென்றாள்.

842 ஈகளு நாய்களுங் கொன்றவரீவகண் டின்புறலிற் றீயவை யேசெய்யுந் தேவரத்தீவினை தீர்க்கிற்பவோ நோய்களும் பேய்களு மொழிக்குவமெனினவை நுங்களுக்கு மாய்விடி னுணரின· தாம்வினையகற்றுதற் கரியதென்றாள்.

843 நம்முறு துன்பங்க ணாமொழிக்கல்லலம் பிறருறுப வெம்முறை யாயினும் போக்குதற்கரியவிங் கிவர்களைப்போற் றம்முறு துன்பமும் தாமொழிக்கில்லலர் பிறர்களையே லெம்முறை நோய்களுஞ் செய்குபவவரென விகழ்ந்தனளே.

844 நாங்கொன்று கொடுக்குமவ் விலங்கினைநலிவதோர் பசியினரேற் றாங்கொன்று தின்குவ ராய்விடினவர்களைத் தவிர்க்குநர்யார் தீங்கொன்று முரையன்மின் தேவர்தம்மூணினைச் சேணின்றுதாம் வாங்குத லல்லது முடையொடுசோறுண்ணும் வயிற்றினரே.

845-851 - 845-ம் செய்யுளிலிருந்து 851-ம் செய்யுள் முடியவுள்ள செய்யுள்களும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.

852 பொய்த்துரை யாநன்மை போதுவ தேலில்லை பூதிகனே சத்திய மேயுரை நீயெனத் தானும· தேயுரைத்தா னெத்திசை யார்களு மேத்துதற் கேற்றன னிவனுமென்றார் தத்துவ ரேநின்று தத்துவ ரெனப்படுந் தன்மையினார்.

853 நன்பொரு ளாவன விவையெனவவனோடு நகரத்துள்ளா ரின்புறும் வகையினி னெடுத்தன ளுரைத்தபின் விடுக்கலுற்றாட் கன்புபட் டவர்களு மறநெறியறிவித்த வார்வத்தினாற் பின்புசென் றொழிதுமென் றதுசெய்துவலங்கொண்டு பெயர்ந்தனரே.

பூத வாதம்[தொகு]

854 வேத வாதம் வெளிறுசெய் தாளங்கோர் பூத வாதியும் பொங்கினன் மேற்செல வாத வாதி யிவனை யடக்கினா லேத வூதிய மில்லென வெண்ணித்தான்.

855 நில்லப் பாவினி நீகண்ட தத்துவஞ் சொல்லற் பாலையிங் கென்னலுஞ் சொல்லுவான் மல்லற் றானை மதனசித் தன்னெனுங் கல்லொத் தோங்கிய தோட்களி யானையான்.

856 அணிகொ ளாரத் தரசவை கேட்கெனப் பிணிகொள் மூஞ்சிப் பிசாசகன் சொல்லுவான் குணிகு ணம்மெனுங் கூற்றில னாலதென் றுணிவைம் பூதங்க ளேதொழில் சொல்லுவேன்.

857 தண்ணென் றீநில நீர்வளி காயத்தாற் கண்ணு மூக்கொடு நாமெய் செவிகளாய் வண்ண நாற்றஞ் சுவையினொ டூறொலி யெண்ணுங் காலை யியைந்துழி யெய்துமே.

858 ஐந்துங் கூடிய றிவின்ப மாதியாய் வந்து தோன்றி மதுமயக் காற்றலி னந்தி நாளுங் குடஞ்சுடர் நாட்டம்போற் சிந்தி னாலவை சென்றினஞ் சேருமே.

859 உலகெ லாமவை யேயுயி ருண்டெனச் சொலவ லாரன சொற்றெளிந் தேநின்று பலக லாங்களுஞ் செய்வ பயனிலார் புலவ ராவதன் றோவங்குப் போந்ததே.

860 சென்ற காலத்துஞ் செல்கின்ற காலத்து நின்ற காலத்தி லும்மிந் நிகழ்ச்சியே யென்று மிவ்வுல கித்தன்மைத் தேயிது வன்ற தென்றுரைப் பாரயர்ப் பார்களே.

861 இட்ட மாவ திதுவெனக் கேட்டவள் சிட்ட ரன்றியுஞ் சென்றிருந் தார்க்கெலா மொட்டி மீட்டு முரைத்துளந் தான்கொளீஇக் கட்டு ரைய்யெடுத் தாள்கயற் கண்ணினாள்.

862 வினையி னீங்கி விளங்கிய ஞானத்தோர் முனைவ னின்மையி னான்முதல னூலில்லை யனைய மாண்பின தாகம மாதலாற் புனைவ னின்னுரை பொய்யெனச் சொல்லியே.

863 கவைத்த கோலொடு கட்டில் கடிஞைகாத் தவத்திற் கொத்தன தாங்கினித் தாபதம் அவத்த மேபிற வாருயி ரில்லையேற் சுதத்தி னாலுய்த்தல் சூதது வாகுமே.

864 பூத மல்லது பொய்பிற நூலென்று வாதஞ் செய்து வருந்தி முடிப்பதென் நாத னன்னெறி நல்வினை நற்பயன் யாது மில்லை யெனின· தவத்தமே.

865 யாது மில்லை யுயிரிவை யாஞ்சொல்லும் பூத மேயெனப் போந்திருந் தென்னொடு வாதஞ் செய்கின்ற பூதமவ் வாதமோ யாதைம் பூதங்க டம்முள்ளு ம·தினி.

866 அளித்த வைந்திற் கறிவின்ப மாக்குவான் களித்தற் காற்ற லுடையன காட்டினாய் களித்தற் காரண காரிய மூர்த்தியா லொளித்து நின்ற வுணர்வுரு வென்றியோ.

867 உருவின் காரிய மேலுரு வென்றுண ரருவின் காரிய மேலவா காயக்கா மொருவன் காரிய மன்றுணர் வென்கின்றாய் மருவுங் காரண காரிய மற்றெனோ.

868 வையு மண்ணு மயிரு மலமுமோர் பையுள் வைக்கப் பளிங்கும் பயக்குமோ பொய்யைம் பூதம் புணர்ந்துணர் வோடின்பம் செய்யு மென்பது சிந்திக்கற் பாலதோ.

869 கள்ளப் பூதமுங் காமிக்கும் பூதமும் வள்ளற் பூதமும் மல்லவு மல்லவா லுள்ளப் பூதமொன் றாக்குவ துண்மையைக் கொள்ளப் பூதக் குணமவை யல்லவே.

870 பொறியைந் தாலைந்து பூதத்தி னாகிய வறிவைந் தாலைந்து மவ்வைந்திற் காகுமோ பிறிதொன் றோபொருட் பெற்றிமற் றிற்றெனக் குறிகொண் டாயொன்று கூறெனக் கென்னவே.

871 ஒன்றன் காரிய மொன்றென வொட்டினுஞ் சென்றெ லாமவை சேதனை யாகுமே யன்றெ லாமவை யாக்கமொன் றேயினி யென்ற லானும· தின்னுயி ரெய்துமே.

872 அனைத்துப் பூதமு மேயறி வாக்கினான் மனத்துக் கின்னுமோர் பூதத்தை மன்னுநீ நினைத்துக் காணன்றி நேடியுங் காணையா வெனக்கு நீசெய்வ தித்துணை யேயினி.

873 பிண்ட மாகிப் பிறந்தன யாவையும் உண்டுங் கண்டு முணர்ந்தவுஞ் செய்தவுங் கொண்டு மீட்டவை கூறுதல் கூறுங்கால் கண்ட பூதத்துக் காரிய மென்றியோ.

874 பிறந்த நாள்களுட் பிள்ளையு மல்லவு மறிந்து தாய்முலை யோடல்ல வுண்டிக ளறிந்த வாறென்கொ லோவைந்து பூதமுஞ் செறிந்த நாள்களுட் செய்வன வல்லவால்.

875 புத்தி யானின்றிப் பூதத்தி னாயவேற் பத்து மல்லவும் பன்றிக்கு நாய்கட்கு மொத்த தன்மைய பன்மைய குட்டிகள் வித்தி னாய வினைவிகற் பாம்பிற.

876 குறைந்து பூதங்கள் கூட்டமுண் டாமவ ணுறைந்த பூதத் துணர்வல்ல தின்மையா லறைந்த பூதங்க ளைந்துமங் கில்லெனின் மறைந்த பூதத்தி லுண்மைவந் தெய்துமால்.

877 நீருங் காற்றுமல் லானில மில்லையோ வூருஞ் சங்கினோ டூர்மச்சி மூக்சில தோ¢ யுண்டலிற் றீயுமுண் டில்லைகண் காரி யஞ்செவி காணலங் காயக்கென்.

878 ஒன்றொன் றாக வுணர்ச்சி முறைமையாற் சென்று பூதங்கள் சேர்வதற் கேதுவென் குன்றித் தத்தமுள் யாவையுங் கூடுமே னின்ற மெய்ம்மை நினதென நேர்வல்யான்.

879 ஐந்து பூத மவற்றவற் றாலைந்து மிந்தி யங்க ளியையு மிவையெனுஞ் சிந்த னையொழி நீயெனச் செப்பினா ளுய்ந்து வாழு முயிருண்மை யொட்டினாள்.

880 உணர்வு மின்பமு மோரறி வாதிக்கட் புணரு மேயெனிற் பொய்தொகைக் கண்ணென லுணர்வு மின்பமு முள்வழி யேயுயிர் புணரு மென்றனள் போதன கண்ணினாள்.

881 காற்றி னாலுடம் பாமெனிற காற்றினே தோற்றி னாலுயிர் தான்றொகை யென்செயு மாற்றிவ் வைந்தினு மாருயி ராமெனு மாற்ற மாயின் மனங்கொளற் பாலதே.

882 வேறு வேறைந்து பூதமு மெய்ம்மையா லீறுந் தோற்றமு மில்லுயி ராயின பாறி யாவையும் பாழ்த்தொழி யும்மெனக் கூறி னாயது குற்ற முடைத்தரோ.

883 குழவிக் காலத்துக் கூறின யாவையுங் கீழவுக் காலத்துக்கண்ணவை கேட்டலா லிழவெக் காலு மிலானினி யார்களைத் தொழுவிப் பானங்கோர் தோன்றலுந் தோன்றுமே.

884 துன்பந் தூய்மையுந் துட்கென வுட்கலும் அன்பு மானமு மாயமு மாண்மையு மின்பு மென்றிவை யாக்கிய தீதென முன்பு நின்று முறுக்கவும் வல்லையோ.

885 கனவு மந்திரம் சிந்தனை வாழுநாள் வினவு சோதிடங் கேட்டுரை புட்குரல் அனகள் யாவையு மென்னைநின் பூதங்க ளனகொ னீயிங் கறிந்தனை சொல்லென.

886 வைத்த வத்து மறுபிறப் பிற்றமர்க் குய்த்துக் காட்டுத லேலுல கொட்டுமா லெத்தி றத்தினு மில்லுயு ரென்றிநீ செத்து வம்மெய்திற் சில்லைமை செய்பவால்.

887 பேயு மில்லை பிறப்பது மில்லென்பாய் வாயுங் கிள்ளிப் புடைப்ப வருவதென் மாயத் தாலன்றி மந்திரத் தாற்றெய்வங் கூயக் காலறங் கோடலை யொட்டென.

888 ஒட்டி னேனென் றுரைப்ப வுணர்விலா முட்டை காண்கென முனகை முறுக்கியே சுட்டி னாளங்குத் தோற்றமு நோக்கென விட்டுத் தான்றன் விகுர்வணை காட்டுவாள்.

889 கழுதுங் காணலராகிக் கலங்கியே யழுதுஞ் சாப வகலிடத் தாரிவன் முழுதுங் காணின் முடியு மெனமுன்னி வழுவில் வாயும் வளைபல்லுந் தோற்றலும்.

890 கண் புதைத்துக் கவிழ்ந்தனன் வழவே திண் பதத்திற் றெருட்டி யெடுத்திரீஇப் பண்பு தக்கன சொல்லிப் பரியனின் நண்ப தென்று நடுக்கமுந் தீர்த்தபின்.

891 பேய்கண் டாயதன் பெற்றி யுரையென வாய்கண் டேனென்னை வாழ்க்கை வலியன்மின் நோய்கொண் டேனென வஞ்ச னுனக்கவ டாய்கண் டாயென்றுஞ் சாதலில் லையென.

892 பெற்ற பேரும் பிசாசிக னென்பதே யற்ற மின்றி யவட்கு மகனைநீ குற்ற மில்லறங் கொள்ளின்மற் றெம்மொடு சுற்ற மாதலிற் சொல்லெனச் சொல்லுவான்.

893 பிறப்பும் பேயு முதலாப் பிறகளுந் திறத்தி னீசொன்ன யாவையுந் தேறிநின் றறத்தை யானு மமைவரக் கொண்டனென் மறக்க லேனினி மன்னுமை யானென.

894 பேந்தரு தோற்றப் பிசாசிக னிற்றென வேந்துமவ் வேத்தவை யாரும் வியப்பெய்தி யாய்ந்த கேள்வியி னாளை யையா யென மாந்தர் யாரு மதித்தன ரென்பவே.


நீலகேசி முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=நீலகேசி&oldid=8051" இலிருந்து மீள்விக்கப்பட்டது