பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அகத்திணைக் கொள்கைகள் விட, தோழியும், கதிரவன் மறைந்தான்; இரவும் வந்துவிட்டது; இனி இவ்விடம் காவலுடைத்தாகும்; நும்மிடமும் சேய்த்து எம் ஐயன்மாரும் கடியர், யான் தாழ்ப்பின் அன்னையும் முனியும்; நீரும், போய் நாளைவாரும் என்று கூறி மறுப்பாள். இதனைத் தலைவன், இங்ஙனம் இவள் இங்குள்ள நிலைமையை எனக்கு மறையாது கூறினது என்பாலுள்ள அன்பினாலன்றி வேறில்லை; இத்துணை அன்புள்ளவள் என்குறையினை முடித்துத் தருவது உறுதி, என்று எண்ணி அவள் கூறியவாறே திரும்பி மறுநாள் செல்வான். இங்ஙனம் பேராவலுடன் சென்றானுக்கு, ஐயனே, யான் குற்றேவல் மகளாதலால் நீங்கள் கூறும் இவ்வரும் பெரும் மறை பொருட் செயலை அவட்குக் கூறும் வலியுடையேன் அல்லேன்; ஆகவே நீங்களே சென்று உரைத்துக் கொள்ளுவீர் களாக என்று தான் உடம்படாது மறுத்து விடுவாள். இதைக் கேட்ட தலைவன் மிகவும் வருந்துவானாதலின் அவனை ஆற்று வித்தற்கு எண்ணி, யான் சிறியேன். நீங்கள் பெரியீர்; ஆதலால் நீங்களே சென்று உரையாடினால் உங்கள் விருப்பம் நிறைவேற லாம் என்று தான் முன்னுரைத் தற்கோர் ஏது கற்பிப்பள். இதுவே குலமுறை கூறி மறுத்தல் ஆகும். இதுவே மேற் குறிப்பிட்ட நற்றிணைப் பாடலில் வேறு விதமாகக் கூறப் பெற்றிருத்தல் நோக்கத் தக்கது. ‘நம்மைப் பெருமையாகவேதான் இவள் கருதியுள்ளாள்; எப்படியாயினும் நம்குறையை முடித்தே வைப்பள்’ என்று நினைத்துத் தலைவன் ஆற்றினானாக, அவன் நிலையைத் தோழியுணர்ந்து நகையாடி மறுத்தும், இரங்கி மறுத்தும், எங்கள் குன்றிலுள்ள மாம் பூக்களும் சுனைப் பூக்களும் எங்கள் தலைவியின் வடிவழகுக்கு அஞ்சி மலர்ந்தறியாவாதவின், நீங்கள் கொணர்ந்த இச்சிறப்பில்லாத பூத்தபூ எங்கள் தமர்களால், மலர்ந்த பூக்களே இங்கு இல்லையாக இஃது யாண்டையதோ? என்று ஐயுறுமாறு செய்யும் என மொழிந்து அவன் கொணர்ந்த மாமலரின் சிறப்பின்மை கூறி மறுத்தும் அவனோடு இவ்வாறே நெடுக சொல்லாடுவாள். இவை யாவும் சந்தனத்தழை தகாதென்று மறுத்தல் நிலத்தின்மை கூறி மறுத்தல்’, ‘நினைவறிவு கூறி மறுத்தல்', 'படைத்து மொழியான் மறுத்தல்', 'நானுரைத்து மறுத்தல்', 'இசையாமை கூறி மறுத்தல்', 'செவ்வியிலள் என்று மறுத்தல்', 'காப்புடைத் தென்று மறுத்தல்’, ‘நீயே கூறு என்று மறுத்தல்’, ‘குலமுறை கூட மறுத்தல் நகையாடி மறுத்தல் ,