பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


146 - அகத்திணைக் கொள்கைகள் பொருளாமாறும் ஆண்டுக் காட்டப்பட்ட உதாரணத்தான் உணர்க’ என்று உரைப்பர். r தலைவன் களவொழுக்கத்து நீட்டித் தொழுகிய நிலையில் இவ்வாறு குறிப்பாகச் சொல்லாது வெளிப்படையாக மறுத்துரைத் தலும் உண்டு என்பது தொல்காப்பியனாரின் கருத்துமாகும். இதனை அவர், வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல் மரீஇய மருங்கின் உரித்தென மொழிப.* (கிளந்தாங்கு - பட்டாங்கு, மரீஇய மருங்கு - மருவிய' பக்கம்; அதாவது களவொழுக்கம் நீட்டித்த இடம்) என்று குறிப்பர். எடுத்துக்காட்டாக, கொடிச்சி யின்குரல் கிளைசெத் தடுக்க பைங்குரல் ஏனல் படர்தருங் கிளியென துப்

காவலும் கடியுநர் போல்வர் மாமலை நாட வரைந்தனை கொண்மோ' |செத்து கருதி, பைங்குரல் ஏனல் - பசுமையான கதிரினை யுடைய தினை; வரைந்தனை கொண்மோ - வரைந்து கொள்வாயாக! என்ற ஐங்குறுநூற்றுப் பாடலில் தலைவன் களவு நீட்டித்தவழித் தோழி பட்டாங்கு கூறி வரைதல் வேட்கையை உணர்த்தியதை அறிக. இதில் காவலும் கடியுநர் என்புழி உம்மை அவளே முன்னரே ஐயுற்று இற்செறித் தோடமையாது திணைகாத் தலையும் விலக்குவள் என்று இறந்தது தழிஇயது. இனிக் கொடிச் சியின் குரலைத் தம்மினமாகிய கிளியின்குரல் என்று கருதி ஏனலிலே கிளி படரும் என்றது, குறிப்பாகத் தலைவி தினை காத்தற்குச் செல்வின் நின்போல்வார் அவளைக் கருதி ஆண்டு வருதலும் கூடும் என்று எண்ணியே அவளை அத்தொழிலில் விடாராயினர் என்பதும் உணர்த்தியபடியாம். இவ்வாறு கொள்ளும் பொருள் இறைச்சியின்பாற் படும். - அகப்பொருள் விளக்க நூலார் வரைவுகடாதலைப் பொய்த்தல், மறுத்தல், கழறல், மெய்த்தல் என்று நான்கு வகை யாகப் பாகுபடுத்திப் பேசுவர். 135. டிெ-16 (இளம்) ஐங்குறு - 239