பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயல்-1

தோற்றுவாய்
அமிழ்தினும் இனிய தமிழ் மொழியின் தனிச் சிறப்பு அதில் அமைந்துள்ள பொருள் இலக்கணம் ஆகும்.பிறமொழிகள் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் கொண்டனவேயன்றி மக்கள் வாழ்வியலை ஆராய்ந்த பொருள் இலக்கணமும் கண்டவை அல்ல. பொருள் இலக்கணமும் அகம் புறம் என்றும் இருதிணை வடிவு அமைந்ததாகத் தமிழ் மொழி ஒன்றின் கண்ணே தான் நின்று இலங்குவதாகப் பன்மொழி அறிஞர்களும் ஒரு முகமாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த இருதினையுள்ளும் புறத்திணைப் பொருளான வீரம், கொடை முதலியவை மக்களுள்ளும் சிலரிடமே காணப் பெறுபவை. அகத்திணைப் பொருளான காமமோ பருவம் நிரம்பிய உயர்திணை அஃறிணை உயிர்க்கெல்லாம் பொதுவாய் அமைந்து கிடப்பது. . . .
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்

என்று ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியர் சுட்டியவாறு பிறவியிலேயே உடம்போடு ஒட்டிய இயல்புடையது.இத்தகைய இன்ப உணர்வை-காமத்துடிப்பை-நெறிப்படுத்திய பொருளாகக் கொண்டவை அகத்தினைப் பாடல்கள்.வாழ்க்கை நெறியுடன் வாழ்ந்த சங்கப் புலவர்கள் மன்பதையை அந்நெறியில் வாழ் விக்க விரும்பியே உலகம் நீடுநின்று வாழ உயிர்க் கொடையாகத் திகழும் காம உணர்ச்சியைச் சிறப்புடைய பொருளாகக் கொண்டு பாடல்களை யாத்தனர்.'தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற குறிக்கோள் நெறியுடன் வாழ்ந்தவர்கள் சங்கப் புலவர்கள்.

அகத்திணையின இன்றிமையாமையையும் சிறப்பினையும் புலப்படுத்தவே பொருளிலக்கணம் கண்ட தொல்காப்பியர
1.பொருளி-21 (இளம்)