பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இல்லற நெறி 231 தோளிலும், 9ಠಗೆ - வலத்தோள் மற்றவர் இடத் தோளிலும் பொருந்தத் தழுவுதல் இப்பாடலில் தலைவியுடன் இன்புற்று இல்லறம் நடத்தும் தலைவன், அத்தலைவியினால் வரும் இன்பம் எப்பொருளினும் இறப்புடையதென்று தோழி முதலியோர் அறியும்படி கூறுவதாக வந்துள்ளதைக் காண்க. இதுவே நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சி யாகும். இாண்டு : அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருள் என்பது. தலைவி தன் துன்பந் தீர ஆர்வமொடு பொருந்தச் சொல்லப்பெற்ற பொருண்மை என்று இதற்குப் பொருள் கூறுவர் இளம்பூரணர். அஃதாவது, களவுக் காலத்தில் வருந்திய வருத்தம் தீரத் தனது காதல் மிகுதி தோன்றச் சொல்லும் பொருள் இது. - யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் ម្រឹត្តៅវិញុំ யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் ததுவே." |யாய்-என் தாய்; ஞாய்-நின் தாய்: எவ்வழி-எவ்வாறு: செம்புலம்,செம்மண் நிலம்) களவுக் காலத்து வருந்திய வருத்தம் தீரத் தன் காதல் மிகுதி தோன்ற இனித் தம்மிடையே பிரிவு நேராது என்று தலைவன் புலப்படுத்தித் தலைவியின் அச்சத்தை நீக்கியதை இதில் காண்க. நெஞ்சம் தம்மிற் கலந்ததனால் இப் புணர்ச்சி தெய்வத் தானாயிற்று எனத் தலைவன் தெருட்டியதும் உணரத் தக்கது. மூன்று : - சொல்லென ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவும் தொடுதல் என்பது. தலைவன் யாதானும் ஒன்றை நுகருங்கால் தலைவியை நோக்கி, நீ கையால் தொட்டது வானோர் அமிழ்தத்தை 10. ഒു.-40