பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/289

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கைக்கின்ளே இ#1 என்ற தொடர்களுடன் வைத்தெண்ணினால் இது தெளிவாகும். சங்கஇலக்கியம் முழுவதும் துருவி ஆராயின் நான்கு பாடல்களே இத்துறை பற்றியனவாகக் காணப்பெறுகின்றன. இந்நான்கு பாடல்களும் கலித்தொகையில்தான் உள்ளன. இவற்றுள் மூன்று கபிலர் பாடியவை; ஒன்று நல்லுருத்திரனார் பாடியது. மேற்கு றிப்பட்ட நூற்பாவில் காமஞ் சாலா இளமையோள்: என்ற தொடரின் பொருள் சிந்திக்கத் தக்கது. இத்தொடர் இருவகையான கருத்து எழுவதற்கு இடந்தருகின்றது. ஒன்று: ஒருவன் பெண்ணொருத்தியைக் கண்டு காம உணர்வு கொண்டான். ஆனால், அவளிடத்து யாதொரு குறிப்பும் புலனாகவில்லை. அதனால் இப்பெண் காமம் எழுவதற்குரிய பருவம் நிரம்பாத பெண் எனத் தெரிந்து கொண்டான். குமரி என எண்ணித் தன் காதலை அப்பெண்ணிடம் புலப்படுத்தினான் எனவும், அவளிடம் உடன்பாட்டிலோ எதிர் மறையிலோ யாதொரு எதிர்வினையும் (Rea.tion) தோன்றாததால் இவள் பக்குவப் படாத கன்னி எனத் தன் காதல் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டான் எனவும் இதனால் தெளியப்படும். இரண்டு: வயதிற்கு வராத பெதும்பை எனத் தெரிந்தே ஒருத்தியை ஒருவன் காதலித்தான். அவள்பால் காதல் உணர்ச்சி எழாததால் தன் உணர்ச்சியைத் தடுத்து நிறுத்திக் கொண்டான் என்பது. இப்பொருளையே எல்லோரும் கருதி எழுதியும் வருகின்றனர். வயதுக்கு வராதவள் என்று தெரிந் திருந்தும் வேண்டுமென்றே காதல் விளையாட்டுப் புரிந்தான் என்ற கருத்து இந்நூற்பாவில் வரும் பின்வரும் தொடர்களுடன் பொருந் தவில்லை. ஆகவே, முதற்பொருளைக் கொள்வதே ஏற்புடைத்து. இதற்கு மேலும் விளக்கம் தேவைப் படுகின்றது. கைக்கிளை என்பது, வயது வந்த இளைஞனொருவனுக்கும் தோற்றத்தால் எடுப்பே இல்லாத மிகச்சிறிய பெண்ணுக்கும் நிகழும் காதல் நிகழ்ச்சி யைக் கூறும் திணை அன்று. இளைஞன் காதலித்த பெண் பூப்பெய் தாதவள் என்பது உண்மையேயாயினும், அணிமையில் வயதுக்கு வரக் கூடிய பெதும்பைப் பெண் என்பது அறியத் தக்கது. மின்னினழ நறுநுதல் மகள்மேம்பட்ட கன்னிமை கழியாக் கைக்கிளைக் காமம்’ معمم محسن يعمم 2. கலி-56,57, 58, 10. 3. பரிபாடல் அடி - 135 - 36,