பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/317

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெருந்திணை 299 அகல்கின்றான் தலைவன்; அது மூண்டு நீண்ட எரியாகி அவளது நற்பண்புகளையெல்லாம் அழிக்கின்றது. ஊராருக்கெல்லாம் கேட்கும்படி கதறுகின்றாள்; பல்லெலாம் தெரியக் காட்டிச் சிரிக் கின்றாள்; கண்களில் நீர் பெருக அழுகின்றாள். ஒண்ணுதல் ஆயத்தார் ஒராங்குத் திளைப்பினும் முள்நுனை தோன்றாமை முறுவல்கொண்டடக்கித்தன் கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண்ணின்றி யாவரும் தண்குரல் கேட்ப நிரைவெண்பல் மீயுயர் தோன்ற நகாஅநக் காங்கே பூவுயிர்த் தன்ன புகல்சால் எழிலுண்கண் ஆயிதழ் மல்க அழும்." . [துதல்-நெற்றி ஆயம்-தோழியர் கூட்டம்; திளைத்தல்கூடிவிளையாடுதல், முள்நுனை-கூரிய நுனி, முறுவல்-புன் சிரிப்பு; நிரை வெண்பல்-நிறைந்த வெள்ளிய பல்; மீயுயர்மேல் எயிறு; பூ உயிர்த் தன்ன-பூவெடித்த தன்மையை யொத்த, எழில் அழகு இதழ்-இமைi . என்ற பாடற் பகுதியில் நல்லந்துவனார் ஐந்திணைத் தலைவி பெருந்திணைத் தலைவியாக மாறும் நிலைகளைப்புலப்படுத்துவர். இதனால் நாணமும் காம அடக்கமும் ஐந்திணைப் பண்புகள் எனவும், நாணாமையும் அடக்காத் தன்மையும் பெருந்திணைப் பண்புகள் எனவும் தெளிகின்றோம். நிறையாப் புணர்ச்சியும் புணர்ந்தும் ஆராமையும் இம்மாற்றத்திற்குக் காரணமெனவும் நுண்ணிதின் உணர்கின்றோம். திருமணம் ஆன ஒர் ஐந்திணைத் தலைவியின் ஆராக் காம வுணர்வே, மனநிறைவு பெறாத ஏக்கமே, பெருந்திணைப் பொருளாகின்றது. மணந்த அணிமையிற் பிரிவது மனைவியின் உள்ளத்தை மிகவும் வாட்டும். ஆறுவாள், ஆற்றப்படுவதால் அடங்குவாள்' என்று எந்த அறிவுடைக் கணவனும் பிரியான். குழவி ஈன்ற மனைவிகட தலைவனது பிரிவுக்கு இசையாள் என் பதைப் பல சங்கப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. ஐங்குறு நூற்றுத் தலைவன் ஒருவன் கார்ப்பருவத்தில் ஏதோ ஒரு நிமித்த மாகப் பிரியக் கருதுகின்றான். அவன் மனைவியோ பால் மணம் மாறாப் பச்சிளங் குழவியின் தாய். இந்நிலையிலும் தோழி தலை வனது அகற்சியைத் தடுக்க முனைகின்றாள். . புறவணி நாடன் காதல் மடமகள் ஒண்ணுதல் பசப்ப நீசெலின் தெண்ணீர்ப் 33. ബ്രൂ.-l42.