பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/358

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


340 அகத்திணைக் கொள்கைகள் பொம்மல் ஒதியைத் தன்மொழிஇக் கொளிஇக் கொண்டுடன் போக வலித்த வன்கண் காளையை ஈன்ற தாயே." (விறல் - வெற்றி, பூ - நெய்தல் பூ ஆயம் - தோழியர் கூட்டம்; விதுப்பு - துன்பம்; பொம்மல் பொலிவு பெற்ற, ஒதி - கூந்தலையுடையாள்: மொழி - பொய்மொழி; கொளிஇ கூறி, வலித்த - அழைத்துச் சென்ற; வன்கண் . வன்கண்மை: காளை - தலைவன்) இதில் விழாக்கள் மலிந்த இவ்வூரில் என் மகளுடன் கூடி விளை யாடும் ஆயத்தாரைக் காணும் பொழுதெல்லாம், நடுக்கமுற்றுத் துன்புறும் என்னைப் போன்றே என் மகளைப் பலவாய மாயப் பொய்மொழிகளைக் கூறி மருட்டித் தன்வழி ஒழுகச் செய்து, தன்னுடன் அழைத்துச் சென்ற வன்கண்மை மிக்க அக்தாளை போன்றானை ஈன்ற தாயும் நடுத்தமுற்றுத் துன்பம் அடைந்து அழிவாள்க’ என்று கூறிப் பழிப்பதைக் காண்க. இவற்றைத் தவிர, வேறு குறிப்புகள் இல்லை என்றே தோன்றுகின்றது. அக இலக்கண இலக்கியங்களைப் பயிலும் நாம் இவர்களின் இயல்பு, இவர்கள் தலைமக்களின் வாழ்வில் கொண்டுள்ள பங்கு ஆகியவை பற்றிய குறிப்புகளை ஆங்காங்குக் காண்கின்றோம். இங்ஙனம் சிதறிக் கிடக்கும் செய்திகளை ஈண்டு ஒருவாறு தொகுத்துக் கூறுவோம். (i) நற் றாய் அகப்பொருள் இலக்கியங்களில் வரும் நற்றாய் என்பவள் தலைவியைப் பெற்றெடுத்த தாய். அக இலக்கியங்களில் இவளு டைய பங்கு மிகக் குறைவாகவே காணப்பெறுகின்றது. இவள் தன் மகளுடைய கரந்த வொழுக்கத்தைச் செவியுற்றதும், அவ் வொழுக்கத்தின் போக்கையும் தன் மகள் தேர்ந்தெடுத்த தலைவ னுடைய பொருத்தத்தையும் தன் தோழியுடன் (செவிலியுடன்) ஆராய்ந்து வருவாள், o 2. நற். - 293