பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/367

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் உறவுடையோர் 349 தண்துறை ஊரன் வரைசு - எந்தையும் கொடுக்க ......" என்ற ஐங்குறுநூற்றுப் பாடலாலும், வேங்கைக் கண்ணியன் இழிதரு நாடற்கு இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து எந்தையும் எதிர்ந்தனன் கொடையே’ என்ற அகப்பாட்டடிகளாலும் இந்தமரபுஉள்ளமை மேலும் வலியுறு கின்றது. அன்றியும், தலைவியின் பிறப்பிடம் தந்தைக்குரிய நாடே என்று இலக்கியங்களில் குறிப்பிடப்பெறுவது இதற்கு மேலும் அரண் செய்வதாகும் 'நன்மலை நாடன் காதன் மகளே' " "நுந்தை நும்மூர் வருதும்' 'சுடர் துதல் தந்தையூரே...' என்ற இலக்கியக் குறிப்புகளைக் காண்க. - பெற்றோர்கள் தம் மகளைக் கண்ணெனப் போற்றி வளர்க்கும் பொறுப்பில் தந்தைக்கும் பெரும் பங்கு உண்டு. தலைவியின் இச்செறிப்பினைக் குறிப்பிடும் அகப்பாடலில், எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடிசிவப்ப எவனில குறுமகள் இயங்குதி என்னும்' என்ற அடிகளால் தலைவி கால் நிலந்தோய நடப்பதையும் பொறுக்காத தந்தையைக் காண்கின்றோம். ஐங்குறுநூற்றுப் பாடலொன்றால் தனக்குப் பெண்மகவு வாய்க்க வேண்டும் என்று இறைவனை வழிபடும் தந்தை காணப்படுகின்றான். குன்றக் குறவன் கடவுட் பேணி இரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள்' என்ற பாடற்பகுதியால் இஃது அறியப் பெறும். இதனை எண்ணியே கவிமணியும், மங்கைய ராகப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமம்மா’’ 30. ஐங்குறு-6. 31. அகம்-282. 32. நற்-44. 33. இங்குறு-92. 34. டிெ-94. 35. அகம்-12 36. ஐங்குறு-254. 37. ஆசிய ஜோதி