பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/417

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் தொடர்புடையோர் 399 நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் யாண ரூரன் வாழ்க பாணனும் வாழ்க எனவேட் டேமே.”* tநனைய-பூக்களையுடைய, சினைய-முட்டைகளையுடைய: வேட்டேம்-விரும்பியுறைந்தேம்.) தலைவி மாபெருந்துயரத்தைத் தன்னுள் அடக்கிக் கொண் டிருந்தாள் என்பதனை அவள் வாயல் முறுவலே தமக்குக் காட்டலின், எம்பெருமான் தி நெறியிலிருந்து உய்தல் வேண்டுமே என்று தெய்வத்தை நினைந்து வாழ்த்தியிருந்ததாகக் கூறுபவள் ‘யாம் ஊரன் வாழ்க என வேட்டேம்’ என்றும், தலைவன் இங்ஙனம் தி நெறிக்கண் ஒழுகக் காரணம் ஆன காரணம்பற்றி பாணனும் வாழ்க’ என்று இகழ்ச்சிக் குறிப்பாள் ஒதினள் என்றும் உணர்த்துவதைக் காண்க. மேலும், இதன்கண் நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் ஊரன் என்றது உள்ளுறை, நறுமணம் கமழும் மலருடைய காஞ்சியையும், புலால் நாறும் சிறுமீனையும் ஒருங்கே உன்னுரர் உடைத்தாயிருத்தல் போன்று நீயும் இத்தகைய மாண்புடைய தலைவியையும் இழிகுணமே நிரம்பிய பரத்தை யரையும் ஒப்ப மதித்து ஒழுகா நின்றனை' எனத் தலைவனின் கொடுமை உள்ளடக்கிக் கூறப்பெற்றிருத்தல் உய்த்தறிந்து மகிழத் தக்கது. தலைவனின் பரத்தைப் பிரிவுக்குக் காரணமாயிருந்த பாணன் தலைவியுடன் கூட்டிவைப்பதற்கும் வாயிலாக வருகின்றான். தலைவி வெகுளுவதனை அறிந்த தோழி வாயில் மறுக்கின்றாள். அப்பொழுது அவ்வழியே ஊரில் திருவிழா நடப்பதனை ஊரார்க்குத் தெரிவிக்குமாறு போந்த குயைைன நோக்கிப் பேசுவ தாக அமைந்த நற்றிணைப் பாடல் இது: ...அகனெழுந் தெருவில் சாறென நுவலும் முதுவாய்க் குயவ! இதுவும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ ஆம்பல் அமன்ற தீம்பெரும் பழனத்துப் பொய்கை ஊர்க்குப் போவோய் ஆகிக் கைகவர் நரம்பிற் பனுவற் பாணன்


سی-سیسی سے۔م۔مام مس.

24. ஐங்குறு-1