பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28. அகத்திணைக் கொள்கைகள் வாறே கூறிக் கொள்ளலாம். இவற்றால் முல்லை குறிஞ்சி என்று கூறப்பெற்ற ஒழுக்கங்களால் காடு மலை முதலியவை அப் பெயர் பெற்றன என்பது அவ்வுரையாளரின் கருத்தெனத் தோன்றினும் அவ்வொழுக்கத்தான் அவ்வாறு பெயர் பெற்றதன் சாரணம் என்னை? என்ற வினா திரும்பவும் எழக்கூடியதாகின்றது. அதனால் நிலங்கள் முற்குறித்தபடி பூக்களின் அடிப் பெயர் பெறாது போயினும், அந்நிலத் தொழுக்கங்களேனும் அவையடி யாக வழங்கலாயின என்று கூறுதல் வேண்டியதாகின்றது. ஆயின், நச்சினார்க்கினியர், இவ்வாறன்றி முல்லை முதலியபூவாற் பெயர் பெற்றன. இவ்வொழுக்கங்களெனின், அவ்வந் நிலங்கட்கு ஏனைய பூக்களும் உரியவாகலின்,அவற்றால் பெயர் கூறுதலும் உரிய எனக் கடாயினாக்கு விடையின்மை உணர்க” என இக்கொள்கையை மறுத்திட்டனர். ஆயினும், ஒவ்வோர் ஒழுக்கத்தை உணர்த்தற்கு ஒவ்வொரு பூவை அடையாளமாகக் கொண்டொழுகுவது பண் டைத் தமிழரது பழக்கமே யாகும். இது புறத்திணை யொழுக்கமாகிய நிரை கவர்தல், மீட்டல் முதலிய வற்றிற்கு வெட்சி, கரந்தை முதலாகிய பூக்களை அறிகுறியாகக் கொண்டமையானும் உறுதிப்படும். நச்சினார்க்கினியரும், 'இதற்கு (வெட்சிக்கு) அப்பூச் சூடுதலும் உரித்தென்று கொள்க’ என்றும்.’’ 'தும்பை என்பது பூவினாற் பெற்ற பெயர்' என்றும், கூறுதல் ஈண்டுஅறியத்தக்கவை. எனவே, அகத்திணை ஒழுக்கங்கட்கும் அங்ங்ணம் பூக்களை அடையாளமாகக் கொண்டு முன்னோர் வழங்க, அவற்றினடியாக இருத்தல் முதலிய ஒழுக் கங்கள் முல்லை முதலாகப் பெயர் பெற்றன என்று கொள்ளுதல் அமைவுடையதேயாகும். 'வில்வி’ என்ற வெள்ளை மலரைக் கற்புக்குக் குறியாக வழங்கி வருதலானும், இயேசுப் பெருமானின் அன்னையின் கரத்திலுள்ள லில்லி மலர் அவளது கற்பின் தூய்மையைக் குறிப்பதாலும், ஐரோப்பியரிடை யேயும் பண்டும் இன்றும் பூவால் கருத்துகளை குறிக்கும் வழக்கம் இருப்பதை உணரலாம். அன்புடையார் இருவர் பிரியுங்கால் அப் பிரிவைக் குறிக்க பர்கெட்-e-நாட் (Forget-ne-not) என்ற பூவைக் கொடுத்தலும், துக்கமிகுதியை வீப்பிங்-வில்லோ (Weeping willow) என்ற பூவாற் குறித்தலும் இன்றும் ஐரோப் பியர் வழக்கங்களாக இருத்தல் ஈண்டு ஒப்பு நோக்கி அறியத் தககவை. ii. புதித்திணை-1 இன் உரை. 12. டிெ-14 இன் உரை,