பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/470

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


452 அகத்திணைக் கொள்கைகள் என்றால் நம் பெருமானும் ஆற்றுகிலான். தவிர, புதுவதோர் இடையூறும் இன்று தோன்றியுள்ளது. நீ அதனை அறியின் ஆற்றுகிலாய். அஃது ஒரு நாணழிவு ஆகும். தலைவி : அடி பாவி, அஃதென்ன கேடு? விரைந்து நுவல்யாக, மகளிர்க்கு நாணம் உயிரினும் சிறந்ததன்றோ? நாணம் அழிந்தபின் உயிர் வாழ்தலும் கூடுமோ? புதுவதாக நிகழ்ந்த தனைக் கூறுவாயாக. தோழி : நேற்றிரவு நம் பெருமான் ஈண்டுப் போந்தபொழுது வானம் மின்னிக் கொண்டிருந்ததை நீ அறிவாயல்லா? தலைவி ஆம். அப்பொழுது சாளரத்தின் வழியே நம் பெருமான் வருகையை நோக்கிய வண்ணம் இருந்தேன். ஒரு கொடி மின்னல் தோன்றியது. அதன் ஒளியில் நம் பெருமான் வருகையைக் கண்டு மகிழ்ந்தேன். வேறென்ன நிகழ்ந்தது? தோழி : அதனை நினைந்தால் எனக்கு நகைப்பு வருகின்றது. கேட்டால் நீயும் சிரித்து விடுவாய். தலைவி : அது கிடக்கட்டும். சுற்றி வளைக்காமல் நிகழ்ந்ததனை விரைந்து சொல்லுவாயாக. தோழி : சொல்லுவேன். நம் பெருமான் வருகையை யானும் மின்னொளியில் அறிந்து கொண்டேன். அவன் தடையின்றி இல்லத்தினுள் வரும்பொருட்டு ஒசையின்றித் தாழ் நீக்கிக் கதவினைத் திறந்து வைத்துவிட்டுப் படப்பையுள் இறங்கி இல்லத்தின் குறிய இறப்பின்கீழ் மறைவாக நின்றேன் அல்லவா? தலைவி ஆம்; அப்படித்தான் நின்றாய். யானும் சாளரத்தின் அருகே நின்று மின்னுந்தோறும் அவன் பேரழகைக் கண்டு மகிழ்ந்து நின்றேன். அப்பொழுது!... தோழி : நம் பெருமான் படப்பையுள் புகுந்து நம் வரவேற்பினால் மெய்ம்மலி உவகையனாய் இல்லத்தினுள் புகுமுன்பு ஒரு முறை மின்னல் தோன்றிற்று. அப்பொழுது நம் அன்னை... தலைவி : அன்னையா! ஏடி, அவள் என்ன செய்தாள்? தோழி : அம் மின்னல் ஒளியிலே நம் பெருமான் நின்றதனைப் படப்பைக்கு அப்பால் நின்று நம் அன்னை கூர்ந்து நோக்கி னாள். ஒரு நொடிப் பொழுதில் இருள் கவிந்து கொண்டது.