பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/509

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இறைச்சிப் பொருள் 491 டிருத்தல் போன்று இவளும் அவ்வின்பங்கள் அனைத்தையும் தன் பாலுடையளாயினள் என்று கருதுவோன் தொண்டியன்ன அரிவை என்றான். தொண்டியன்ன அரிவை, பனைத்தோள் அரிவை, ஒண்தொடி அரிவை எனத் தனித்தனி இயைத்துத் தலைவன் கருதும் இறைச்சியின் நுட்பத்தை அறிந்து மகிழ்க. (3) தலைவியொருத்தி தலைவன் ஒருவனுடன் களவு முறை யில் கற்புக் கடன் பூண்டுவிடுகின்றாள். பெற்றோர் இதனை அறிந்திலர். நொதுமலர் அவளை மணம் பேச வருவதை அவள் அறிகின்றாள்; மிகவும் வருந்துகின்றாள். இதனை அறிந்த செவிலி தோழியை நோக்கி, 'இவள் இவ்வாறு வருந்துவதற்குக் காரணம் என்ன?’ என்று வினவுகின்றாள். தோழி அறத்தொடு நிற்றல் முறையில் இதனைச் செவிலிக்கு உணர்த்தும் முறையில் அமைந்த பாடல் இது. - அன்னாய் வாழிவேண் டன்னையென் தோழி நனிநாண் உடையள் நின்னும் அஞ்சும் ஒலிவெள் அருவி ஓங்குமலை நாடன் மலர்ந்த மார்பின் பாயல் துஞ்சிய வெய்யள் நோகோ யானே." (தோழி - (இங்கு) தலைவி, நனி - மிகவும்: நின்னும் - உனக்கும்; அஞ்சும் - அஞ்சுபவள்; ஒலி - ஆரவாரிக்கின்ற: ஓங்கு - ஓங்கி நிற்கும்; துஞ்சிய - இன்துயில் கொள்ள: நோகு - நோகின்றேன்) - - இந்தக் குறிஞ்சித் திணைப் பாடலில் வெளிப்படையாகத் தெரியும் பொருள் இது: 'அன்னையே, நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக. நின் அருமை மகள் மிகவும் நாணம் உடையவள்; அவள் நினக்கு மிகவும் அஞ்சுபவள் என்பதையும் நீ நன்கு அறிவாய். இவ்வாறிருந்தும் மலைநாட்டுத் தலைவன் ஒருவனின் விரிந்த மார்பில் இன்துயில் கோடற்குப் பெரிதும் விருப்பமுடைய வளாய் மெலிந்து போகின்றாள். யானும் இவள் நிலைபற்றி மிகவும் வருந்துகின்றேன்' என்பது. தோழியின் கூற்றில் அடிப்படையாகவே மற்றொரு கருத்து உள்ளது. அது இது: "மலைநாடன் ஒருவனுக்கு இவள் களவு 11. ஐங்குறு - 205