பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திணை மயக்கம் 37 குறிஞ்சி நிலமல்லாத முல்லை மருதம் நெய்தல் நிலங்களில் வாழும் ஆண் பெண் பாலார் தமக்குக் கூட்டம் வேண்டும் பொழுதெல்லாம் அக்கூட்டம் நிகழ்தற்குரிய குறிஞ்சி நிலத்திற்கே வரற்பாலர் ஆத லாலும், அங்ங்ணம் அவர் வருதல் என்பது எப்பொழுதும் இயலாத தொன்றாகலானும், குறிஞ்சி நிலத்தில்தான் அக் குறிஞ்சி யொழுகத்திணை நிகழ்த்துதல் வேண்டுமென்பது இயற்கையொடு பொருந்தாத செயலாதலாலும் அது பொருந்தாது. இங்ஙனமே நெய்தல் நிலத்தில் நெய்தல் ஒழுக்கமும், மருத நிலத்தில் மருத ஒருக்கமும், ஏனைய நிலங்களில் ஏனை யொழுக்கங்களும் நிகழ்தல் வேண்டும் என்று எதிர்பார்த்தலும் பொருத்தமன்று. இது கருதியே உரையாசிரியர்கள் சிறுபான்மை எல்லாப் பொருளும் எல்லாத் திணைக்கும் உரித்தாகவும் கொள்ளப்படும்' என்றும், உரி மயங்கி வருதல், கலி முதலிய செய்யுளகத்துக் கண்டு கொள்க' என்றும் கூறிப் போந்தனர், + 13. டிெ (இளம்),உரை காண்க