பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/583

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் - - 567 இடையீடுபடாமல் தழுவுகின்றான்; வேட்கை தணியானாய் கூட்டத்தால் தாழ்ந்த கூந்தலைக் கோலஞ் செய்கின்றான்; நீவிக் கொடுக்கின்றான். இனிப் பன்னாள் புணர்ச்சியின்பம் கிடைக்காதே என்ற ஏக்கத்தால் மீதுTர்ந்த இன்பச் செய்கைகளில் ஈடுபடு கின்றான். கணவனுடைய கழிபெருங் களிப்பு பிரிவுக் குறிப் புடையது என்பதனைத் தலைவியும் உணர்ந்து கொள்கின்றாள். ஓங்கல் வெற்பிற் சுரம்பல இறந்தோர் தாம்பழி யுடைய ரல்லர், நாளும் நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா வயங்குவினை வாளேர் எல்வளை நெகிழ்த்த தோளே தோழி தவறுடை யவ்வே.* (ஓங்கல் வெற்பு - உயர்ந்தமலை; சுரம் - காடு; இறந்தோர். கடந்து சென்றவர்; நாளும் - எஞ்ஞான்றும். நயந்தோர் - விரும்பி வந்தவர்; பிணித்தல் தேற்றா - விடாது பற்றிக் கொள்ளுதலை அறியாத வினை - தொழில் திறம் வாய்ந்த} இதில் பிரிவோர் பழியுடையரல்லர்; அவரைப் பிணிக்க அறியாத என் தோள்களே தவறுடையன’ என்று தலைவி வாயால் அமிழ்தம் பொழியா நிற்பர் கவிஞர். - பொருள்வயிற் பிரிதலுக்குத்தான் காதலி இசையாள் என்பதைத் தெரிந்த தலைவன் சொல்லாதே செல்லத் துணி கின்றான். இக் குறிப்பினை அறிந்த தோழி, யாழின் நரம்பறுந் தால் நல்லிசை நின்று விடும்; ஊழ் மாறினால் பெருந்திருவும் ஒரு நொடியில் அழிந்துபடும்; தலைவனது மனம் மாறின் அரசியல் மதிப்பு ஓடிப் போகும்; ஆகவே, அழியும் செல்வத்தை ஆர்வத் தோடு காமப் பருவத்துத் தேட முனையற்க' என்கின்றாள். தன்னகர் விழையக் கூடின் - இன்னுறல் வியன்மார்ப அதுமனும் பொருளே’ விருந்தினரைப் பாதுகாத்துத் தலைவியுடன் கூடிய வாழ்வே நீடிய பொருள் என்ற தோழியின் அறிவுரை கேட்டுத் தலைவன் செல வழுங்கினான். முன்னொரு காலத்தில் பொருள் முற்றி வந்த தலைமகன் பின்னும் பொருள் தேட விரும்பிய நெஞ்சிற்குச் சொல்லுகின்றான்: 82. அகம்-267 83. கலி-8