பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/618

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


602 அகத்திணைக் கொள்கைகள் (iv). நெடுவெண் நிலவினார் களவுக் காலத்தில் தலைவனொருவன் இரவில் வந்து தலைவி யிடம் அவள் தமர் அறியாமல் பழகிக் கொண்டிருந்தான் அவனை எப்படியாவது தலைவியை விரைந்து வரைந்து கொள்ளச் செய்துவிட வேண்டும் என்பது தோழியின் எண்ணம். இரவில் வரும் தலைமகன் வேங்கை மலர்கள் உதிர்ந்து புலிகளைப்போல் தோன்றும் பாறைகளைக் கண்டு பழகியவனேனும், ஒருநாள் உண்மையான புவியையும் இரவு மயக்கத்தால் வேங்கை மலர் உதிர்ந்த பாறை எனக் கருதிவிடுதலும் கூடும். அப்படிப்பட்ட நிலை ஏற்படின் தலைவியின் நிலை என்னாகும் என அஞ்சுகின்றாள். முன்னிலைப் புறமொழியாக நிலவிடம் பேசுவதுபோல் இரவுக் குறியை மறுக்கின்றாள். வரைந்து கொள்ளலே நேர்வழி என்று குறிப்பால் புலப்படுத்துகின்றாள். இந்நிகழ்ச்சியைச் சித்திரிக்கும் அழகிய குறுந்தொகைச் சொல்லோவியம்: கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டின் எல்லி வருநர், களவிற்கு நல்லை யல்லை, நெடுவெண் நிலவே!" (கரு கால்-கரியஅடி, வீ-மலர், உகு-உதிர்ந்த துறுகல்குண்டு கல்;இரு-கரிய, குருளை-குட்டி:எல்லி-இரவின்கண்; நல்லை-நன்மைத் தருவாய்) இதில் தோழி நிலவினை நோக்கி. நிலவே, தலைவர் தலைவியைக் காண அரிய காட்டைக் கடந்து வந்துள்ளார். அவர் தலைவியை அடைந்து இன்புறாவாறு இடையில் தடையாய் நின்று காய்கின் றாய். ஒளி வீசத் தொடங்கிய நீ விரைவில் மறைந்தாவது போவாய் என்றால் நீண்டு கொண்டே போகின்றது நின் ஒளி. ஆகவே, தலைவருக்கு நீ நல்லது செய்கின்றாயல்லை' என்று பேசு கின்றாள். - இங்கு நிலவு உண்மையில் தலைவனுக்கு இடையூறாய் இருந்தது என்றாலும், அது இரண்டு வகையில் தலைவனுக்குத் துணைபுரிகின்றது. ஒன்று: காட்டில் புலி எது, துறுகல் எது என்பதை அறியத் துணைபுரிகின்றது. இரண்டு; தலைவியின் 6. டிெ-47