பக்கம்:அகத்திய முனிவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அகத்திய முனிவர். மன்னும் அகத்தியன் யாழ் வாசிப்ப” (திருக்கைலாய ஞானவுலா) 'இனிய பைந்தமிழின் பொதியமால் வரைபோல் இசைக் கு.உருகாது, இமமலையின் தனையையின் தீஞ்சொற்கு உருகுறுஞ் சோணசைலனே கைலை நாயகனே' (சோணசைலமாலை) 'அன்ன ளிருப்ப அவள்பாங்கி சென் று, மலை முன்னுள் உருக்கும் முனிநிகர்வை" (திருவெங்கையுலா) 'இராவணனைப் பிணிக்கக் குறுமுனி பாடும் இசைக்கு உருகிய பொதியின் மலை’ (தஞ்சைவாணன்கோவையுரை.) பொதியின் கண் இருந்து இராவணனைக் காந்தருவத் தால்பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி' (தொல்காப்பியப் பாயிரவுரை.) நம்முனிவர்பெருமான் மூவுலகிற்கும் தனிநாயகய்ைகின்ற இராவணனை இசையால் வென்று இங்கிலத்துக்கு இனிமை செய்த உண்மையை மேற்குறித்த நால்கள் விளக்கி நிற்பன காண்க. சேரமான் பெருமான், இளங்கோவடிகள், இளம் பூரணர், மாங்குடி மருதனுர், சிவப்பிரகாசர் முதலிய பெரி யாரெல்லாரும் இவர் இசைமை செய்து இங்கிலம் நலமுறப் பொதியிலின்கண் இனிதிருந்தமையை கினைந்து மனமகிழ் ந்து கூறியுள்ளார். -- பல்கலைக் குரிசிலாய் நல்லிசைபரப்பி இங்கனம் இவர் நண்ணி யிருக்குங்கால் பல திசைகளிலுமிருந்து நாளும் அறி ஞர்பலர் குழுமி வந்து இவரைத் தொழுதுசென்ருர், சிலர் ஆண்டுக் தங்கி அடிபணிந்து கின்று அருங்கலை பயின்ருர், அங்ஙனம் அமர்ந்து பயின்றவர்க ளுக்குள் பன்னிருவரே இயற் புலமையில் மிகச் சிறந்து விளங்கினர். அவராவார்