பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௩௦

அகநானூறு

[பாட்டு


(சொ - ள்.) ௯. தோழி -,

க-௩. நீ - நீதான், தண் கயத்து அமன்ற - குளிர்ந்த குளத்தில் நிறைந்த, வண்டு படு துணை மலர்ப் பெருந்தகை இழந்த கண்ணினை - வண்டுகள் படியும் தமக்குத் தாமே நிகராய மலர்கள் போலும் பெரிய அழகினை இழந்திட்ட கண்களை யுடையை யாகி, பெரிதும் வருந்தினை - மிகவும் வருந்தினை, வாழியர் - வாழ்வாயாக;

க0-ரு. சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல் - சூரபன் மாவினையும் அவன் சுற்றத்தினையும் தொலைத்த ஒளிபொருந்திய இலைத்தொழிலையுடைய நெடிய வேலினையுடைய, சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து - சினம் மிக்க முருகனது தட்பம் வாய்ந்த திருப்பரங்குன்றமாகிய, அந்துவன் பாடிய - நல்லந்துவனார் பாடிய, சந்துகெழு நெடுவரை - சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலையில் உள்ள, இன் தீம் பைஞ்சுனைத் தண் நறுங் கழுநீர் - இனிய தீவிய பசுமை வாய்ந்த சுனையில் உள்ள தண்ணிய நறிய குவளைப் பூவுடன் இயன்ற, ஈரணிப் பொலிந்த - பெரிய ஒப்பனையாற் பொலிவுற்ற, செண் இயல் சிறுபுறம் - கொண்டை அசைதலையுடைய முதுகினை, தாம் பாராட்டிய காலையும் உள்ளார் - நம் தலைவர் தாம் பாராட்டிய காலத்தினையும் நினையாராய்,

க௬-அ. வீங்கு இறைப் பணைத்தோள் நெகிழ - பருத்த இறை யினையுடைய மூங்கில்போலும் தோள் மெலியும்படி, சேய்நாட்டு அருஞ்செயற் பொருட்பிணி முன்னி - தூரநாட்டிற் சென்று செய்யும் அருஞ்செயலாகிய பொருளீட்டலை நினைத்து, நப் பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறு - நம்மைப் பிரிந்து சேணின் கண் உறைகின்றவர் போன வழியின் கண்,

௩-௯. வடாது வண்புனல் தொழுநை வார்மணல் அகல்துறை-வடக்கின் கண்ணதாகிய நீர்வளம் அறாத யமுனை யாற்றின் நெடிய மணலையுடைய அகன்ற துறையில் நீராடிய, அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் - ஆயர் மகளிர் தண்ணிய தழையை உடுத்திக் கொள்ள, மரம் செல மிதித்த மாஅல் போல - குருந்த மரம் வளைந்திட மிதித்துத் தந்த கண்ணன் போல, களிறு புன் தலை மடப்பிடி அங்குழை உணீஇயர் - களிறு மெல்லிய தலையினையுடைய இளைய பெண்யானை அழகிய தளிர்களை உண்ணற்கு, நெடுநிலை யாஅம் ஒற்றி-(முன்னர்) உயர்ந்த நிலையினையுடைய யாமரத்தினை வளைத்துத் தந்து, நனைகவுள் படி ஞிமிறு கடியும்-மதத்தால் நனைந்த கன்னத்தில் படியும் வண்டுகளை ஓட்டா நிற்கும்; (அவர் இது கண்டு வருவர்.)

(முடிபு) தோழி! நீ தலைவரைப் பிரிந்து பெரிதும் வருந்தினை, வாழியர்! நின் செண்ணியற் சிறுபுறம் பாராட்டிய காலையு முள்ளார் தோள் நெகிழ பொருட் பிணி முன்னிப் பிரிந்து சேணுறைநர் சென்ற ஆற்றிலே களிறு பிடி குழை உணீஇயர் யாஅம் ஒற்றி, ஞிமிறு கடியும்; (அவர் அது கண்டு வருவர்.)

(வி - ரை.) துணைமலர் - இரண்டாகிய மலருமாம். 'வண்புனல் ... மால்போல' என்பதிற் குறித்த வரலாறு, ஆயர் பெண்கள்