பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

களிற்றியானை நிரை

௧௩௫


(மே - ள்.) 1‘நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, இவ்வகப்பாட்டினுள் மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தாரே துறக்கம் பெறுவரெனத் தன் சாதிக்கேற்பத் தலைவன் புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலைத் தோழி கூறினாள் என்றார் நச்.



62. குறிஞ்சி


[அல்லகுறிப்பட்டுழித் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]


அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப்பொலிந் திலங்கும் எயிறுகெழு துவர்வாய்
ஆகத் தரும்பிய முலையள் பணைத்தோள்
மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன

ரு) மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு
பேயும் அறியா மறையமை புணர்ச்சி
பூசல் துடியில் புணர்புபிரிந் திசைப்பக்
கரந்த கரப்பொடு நாஞ்செலற் கருமையின்
கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று

க0) நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல
நடுங்கஞர் தீர முயங்கி நெருநல்
ஆகம் அடைதந் தோளே வென்வேல்
களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியலகம் பொற்பக்

௧ரு) கடவுள் எழுதிய பாவையின்
மடவது மாண்ட மாஅ யோளே.

-- பரணர்.

(சொ - ள்.) கஉ-௬. வென்வேல் - வெல்லும் வேலினையும், களிறு கெழு தானைப் பொறையன் - யானைகள் மிக்க படையினையு முடைய சேரனது, கொல்லி ஒளிறு நீர் அடுக்கத்து வியல் அகம் பொற்ப - கொல்லி மலையின் விளங்கும் அருவி நீரினையுடைய பக்க மலையின் அகன்ற இடம் அழகுற, கடவுள் எழுதிய பாவையின் - தெய்வமாக அமைத்த (கொல்லிப்) பாவையினைப் போன்ற, மடவது மாண்ட மாயோள் - மடப்பத்தாற் சிறப்புற்ற கரியளாய தலைவி,

க-ரு. அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன - நீரில் வளர்ந்த பைஞ்சாய்க் கோரையின் குருத்தினை யொத்த, நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர்வாய் - ஒளியாற் சிறந்து விளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும், ஆகத்து அரும்பிய முலையள் - மார்பில் தோன்றிய முலையினையும் உடையளும், பணைத்தோள் - மூங்கில் போன்ற தோளினையும், மா தாள் குவளை



1. தொல், அகத். ௪௪.