உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

களிற்றியானை நிரை

௧௬௫


(யாங்கள்) கூத்தாட, தண் துறை ஊரன் எம் சேரி வந்தென . தண்ணிய நீர்த்துறையையுடைய ஊரன் எம் சேரிக்கண் அதனைக் காண வந்தனனாக (அவ்வளவிற்கே),

௩-௬. அவன் பெண்டிர் - அவன் பெண்டிர், இன் கடுங் கள்ளின் அஃதை - இனிய கடிய கள்ளினை யுடைய அஃதை என்பானது, களிற்றொடு நன்கலன் ஈயும் நாண் மகிழிருக்கை - யானைகளையும் நல்ல அணிகளையும் (பரிசிலர்க்கு) வழங்கும் மகிழ்ச்சி பொருந்திய நாளோலக்கத்தையுடைய, அவை புகு பொருநர் பறையின் - அவையிற் புகும் பொருநரது பறையைப்போல, ஆனாது கழறுப என்பஒழியாது என்னை இகழ்வர் என்று கூறுவர் ;

எ-க௩. கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன் - கச்சினையும் கழலினையும் தேனொழுகும் தாரணிந்த மார்பினையும் உடையவனும், வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் - கூறுபாட்டின் அமைதியோடு விளங்கிய அழகு அமைந்த மாலையை யுடையவனும் ஆகிய, சுரியல் அம் பொருநனை - குழன்ற மயிரினையுடைய அழகிய கூத்தினனாகிய ஆட்டனத்தியை, காண்டிரோ என - கண்டீரோ என்று (வினாவி), ஆதிமந்தி பேது உற்று இனைய - அவன் காதலியாகிய ஆதிமந்தி மயக்கமுற்று வருந்திட, சிறை பறைந்து உரைஇ - கரையினை மோதிப் பரவி, செங்குணக்கு ஒழுகும் - நேர் கிழக்கே ஓடும், அம் தண் காவிரிபோல- அழகிய குளிர்ந்த காவிரி தன் திரைக்கையால் வௌவிக் கொண்டமைபோல; கொண்டு கை வலித்தல் -சூளினை மேற்கொண்டு கையாற் பற்றிக் கோடலை, யான் சூழ்ந்திசின் - யான் எண்ணியுளேன்.

(முடிபு) ஊரன், யாங்கள் முழவொடு தூங்க, எம்சேரி வந்தென, அவன் பெண்டிர் பொருநர் பறையின் ஆனாது கழறுப என்ப; ஆதிமந்தி பொருநனைக் காண்டிரோ எனப் பேதுற்று இனைய, குணக்கு ஒழுகும் காவிரிபோலச் சூள்மேற் கொண்டு கைவலித்தலை யான் சூழ்ந்திசின்.

(வி - ரை.) கனைதல் - செறிதல்; ஒலித்தல் எனக் கொண்டு, மார்ச்சனை யமைந்து ஒலிக்கும் எனலுமாம். தூங்கல் - ஆடுதல்.. பெண்டிர் என்றது தலைமகளை.

அந்தில் : அசை. கச்சினன் கழலினன் மார்பினன் என்னும் குறிப்பு முற்றுக்கள் எச்சமாய்ப் பொருநன் என்னும் பெயர் கொண்டு முடிந்தன. பொருநன் - ஆட்டனத்தி. இதனை, 1'ஆட்ட னத்தி நலனயந் துரைஇத், தாழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின், மாதிரந் துழைஇ மதிமருண் டலந்த, ஆதிமந்தி' என்பதனா னறிக.

உரைஇ - பரந்து. காவிரிபோல - காவிரி தன் திரைக்கையால் வௌவிக் கொண்டமைபோல; இது தொழிலுவமம்.

ஆடற் றகையானாதல் பாடற்குரலானாதல், பெற்றேனென்று சொல்லுவா ளாயின், யான் இப்படிச் செய்வேன் என்றாள்.


1. அகம். உஉஉ.