பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௦௨/202

அகநானூறு

[பாட்டு


லுள்ள இழிந்த இயல்புடைய பெண்டிர் கூறுவனவாய இன்னாத சொற்கள்,

க௩--ரு. புரைய அல்ல என் மகட்கு என - என் மகளுக்குப் பொருந்துவன அல்ல என்று, பரைஇ - தெய்வத்தைப் பரவி, நம் உணர்ந்து - நமது களவொழுக்கத்தினை உணர்ந்து வைத்து, ஆறிய கொள்கை அன்னை முன்னர் - அமைதியுற்றிருக்கும் கொள்கையினை யுடைய நம் அன்னை முன், யாம் என் இதற் படல் - யாம் இக் களவொழுக்கத்திற் பட்டு ஒழுகல் எங்ஙனம் இயலும்?

(முடிபு) தோழி! வாழி! என் நுதலும் பசந்தன்று; மேனியும் ஐதாகின்று; அவலமும் திகழ்தரும்; (இவை) உயிர்கொடு கழியின் அல்லதை நினையின் எவனோ? சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார் கெளவை மேவலராகி நிரையப் பெண்டிர் இன்னா கூறுப, என் மகட்குப் புரைய அல்லவென, பரைஇ ஆறிய கொள்கை அன்னை முன்னர் யாம் இதற்படல் என்? -

(வி - ரை.) பசந்த என்னும் பாடத்திற்கு, பசந்த நுதலும் ஐதாகின்ற மேனியும் திகழ்தரும் அவலமும் எனப் பெயரெச்சத் தொடர்களாகக் கொள்க. இதற்கு ஆகின்று என்பது விகாரம், அல்லதை - அல்லது ; ஈறு திரிந்தது. பசப்பு முதலியன உயிர் கொண்டே கழியும் என்பது கருத்து. வீயை எண்கின் கிளை கவரும் என்க. ஈன்ற கரடிகள் சீறும் இயல்பினவாகலின் வம்பலர் அழுங்குவர் என்க. புரைய அல்ல - உயர்வாவன அல்ல எனலுமாம். பரைஇ - தெய்வத்தைப் பராவி. அன்னை, தன் மகள் பழியொடு படாத இன்ப வாழ்வு பெறல் வேண்டுமெனத் தெய்வத்தைப் பரவினள். நமது ஆற்றா நிலைமை யுணர்ந்து நம்மைச் சினவாது அமைந்துள்ள அன்னையின் முன்பு நாம் மேலும் இவ்வாறு ஒழுகுதல் பொருந்தாது என்றாள்.

(மே - ள்.) 1'எஞ்சி யோர்க்கும் எஞ்சுத லிலவே' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இது, போக்குடன் பட்டமை தலைவி தோழிக்குரைத்தது என்றனர் நச்.



96. மருதம்


[தோழி வாயின் மறுத்தது.]


நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப்
பூட்டறு வில்லில் கூட்டுமுதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி
ரு) அருவி ஆம்பல் அகலடை துடக்கி

அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை
விசைவாங்கு தோலின் வீங்குபு ஞெகிழுங்


1. தொல். அகத். சஉ.