107
களிற்றியானை நிரை
௨௨௫/225
(உ - றை.) முதுமையால் பறக்கமாட்டாத சிரல், மீனுக்கு அண்மையிற் பாசடை மீதிருந்தும் அதனைக் கவரமாட்டாமலும் ஏனை யிளஞ் சிரல் கவர்தற்குப் பொறாமலுமிருத்தல் போல், முதுமையால் எழுச்சி குன்றிய தலைவி, தன் மனையகத்தே கணவனைக் கொண்டிருந்தும் அவனை வளைத்துக்கொள்ள மாட்டாமலும், ஏனை யிளம்பருவமுடையார் தழுவுதற்குப் பொறாமலும் இருக்கின்றாள் என்பது,
(மே - ள்.) 1'பரத்தை வாயில்' என்னுஞ் சூத்திரத்து, 'செறிதொடி. தெளிர்ப்ப வீசிச் சிறிதிவண் - உலமந்து வருகஞ் சென்மோ தோழி' என் றக்கால் தலைவிக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லிக் கூறல் வேண்டு மென்பது என்றனர் பேரா.
[தோழி தலைமகள் குறிப்பறிந்துவந்து தலைமகற்குச் சொல்லியது.]
நீசெல வயரக் கேட்டொறும் பலநினைந்
தன்பின் நெஞ்சத் தயாஅப்பொறை மெலிந்த
என்னகத் திடும்பை களைமார் நின்னொடு
கருங்கல் வியலறைக் கிடப்பி வயிறுதின்
ரு) றிரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்
நெறிசெல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்
ஒலிகழை நெல்லின் அரிசியொ டோராங்
கானிலைப் பள்ளி அளைபெய் தட்ட
வானிணம் உருக்கிய வாஅல் வெண்சோறு
க0) புகரரைத் தேக்கின் அகலிலை மாந்தும்
கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்
வல்லாண் அருமுனை நீந்தி அல்லாந்து
உகுமணூ றஞ்சும் ஒருகாற் பட்டத்
தின்னா ஏற்றத் திழுக்கி முடங்கூர்ந்
கரு) தொருதனித் தொழிந்த உரனுடை நோன்பக
டங்குழை இருப்பை அறைவாய் வான்புழல்
புல்லுளைச் சிறாஅர் வில்லின் நீக்கி
மரைகடிந் தூட்டும் வரையகச் சீறூர்
மாலை இன்றுணை யாகிக் காலைப்
உ௦) பசுநனை நறுவீப் பரூஉப்பர லுறைப்ப
மணமனை கமழுங் கானம்
துணையீ ரோதியென் தோழியும் வருமே.
- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
(சொ - ள்.) தலைவ,
உஉ. துணை ஈர் ஓதி என் தோழியும் - கடையொத்த குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழியும்,
1. தொல். செய், ககக. 15