பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110]

களிற்றியானை நிரை

௨௩௩(233)


தெய்வம் நோக்கி - வளைந்த சுழிகள் மேவிய புகாரிடத்துள்ள தெய் வத்தை நோக்கி, நினக்குக் கடுஞ் சூள் தருகுவன் - நினக்குக் கடிய சூள் செய்து தருவன்.

(முடிபு) கானல் தொடலை ஆயமொடு வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது இருந்தனம்; ஒருவன், அசைவு மிக உடையேன், விருந்துண்டு இச் சிறு குடி தங்கின் எவனோ என மொழிந்தனன்; இழிந்த கொழுமீன் வல்சி என்றனம்; நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு ஒழிகோ யானென அழிதகக் கூறி, யான் பெயர்க என்ன, கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் இன்றும் என் கட்கே ; (இதனை) அன்னை அறியினும் அறிக ; சேரி கேட்பினும் கேட்க. பிறிதொன்றின்மை அறியக் கூறிப் புகார்த் தெய்வம் நோக்கி நினக்குக் கடுஞ்சூள் தருகுவன்.

(வி - ரை.) அன்னை என்றது நற்றாயை. சேரி - ஆகுபெயர். தலைவியுற்ற நோய்க்குக் காரணம் பிறிதொன்று மின்மையை என்க. பிறிதொன்றும் என்னும் முற்றும்மை தொக்கது. மற்றெவனோ: மற்று யான் என்னூர்க்குச் செல்லுவதொழிந்து எனப் பொருள் தருதலின் வினை மாற்று. என்னே - என்னையே. கூறி, கூற எனத் திரிக்க. நின்றோன் போலும், நின்றோன் என முற்றாக்கி அந்நிலையே போலும் என விரித்துரைக்க. என்று மென் மகட்கே என்பது பாட மாயின், அங்ஙனம் நின்றவனே என்றும் என் மகட்கு உரியன் போலுமென அன்னை அறியினும் அறிக என இயைத்துரைக்க.

கடுஞ்சூள் என்பதனை, கடி என்னும் உரிச் சொல் முன்றேற்றுப் பொருளில் வந்ததற்கு எடுத்துக் காட்டி, முன்றேற்று, புறத்திலன்றித் 1'தெய்வ முதலாயினவற்றின் முன்னின்று தெளித்தல் என்பர் சேனா.

மேலெல்லாம் ஆயத்தாரையும் தலைவியையும் உளப்படுத்திக் கூறிய தோழி பின்னர் 2'நில்லாது பெயர்ந்த பல்லே முள்ளும்' என்னாது, பல்லோருள்ளுமெனத் தன்னை வேறு பிரித்துக் கூறியது அவ ரெல்லாம் தலைவனுக்கு இரங்காது சென்றமையும் தான் மட்டும் தனித்து நின்றமையும் தோன்றக் கூறியதாகும் என்பர் நச்.

(மே - ள்.) 3'மாயோன் மேய' என்னுஞ் சூத்திரத்து, நெய்தனிலத்தில் நுளையர்க்கு வலைவளம் தப்பின் அம் மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக் கோடு நட்டுப் பரவுக் கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும் என்று கூறி, கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவல் என வரும் என்றும், 4'மெய் தொட்டுப் பயிறல்' என்னும் சூத்திரத்து, 'மெல்லிலைப் பரப்பின் விருந்துண்டியானுமிக், கல்லென் சிறுகுடித் தங்கின் மற்றெவனோ' என வருவது, 'ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் . . . கூறி என்ற சூத்திரப் பகுதியில், பிறவும் என்றதனாற் கொள்க என்றும், அச் சூத்திரத்துத் 'தண்டாது இரப்பினும்' என்னும் பகுதிக்கண், 'எல்லும் . . . ஒருவன்' எனத் 'தலைவன் இரவுக்குறி வேண்டியதனைத் தோழி கூறியவாறு காண்க' என்றும் 5'எளித்த லேத்தல்'


1. தொல். சொல். உரி, அஎ. 2, தொல். சொல். எச். ௬எ, 3. தொல்.அகத். ௫. 4. தொல். கள, கக. 5. தொல். பொருளி, க௩.