உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௩௦அகநானூறு[பாட்டு


பிரிதல் எண்ணினை யாயின் நன்றும்
1அரிதுதுற் றனையாற் பெரும உரிதினிற்
கொண்டாங்குப் பெயர்தல் வேண்டுங் கொண்டலொடு
குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
2பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்
மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி யன்னஇவள் நலனே.

-அம்மூவனார்.

(சொ - ள்.) ௧-௪. வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய = பெரிய கடற்பரப்பில் எழும் திரைத் திவலைகளை ஏற்றுக் கொண்ட, மீன் கண்டன்ன = விண்மீனைக் கண்டாலொத்த, மெல் அரும்பு ஊழ்த்த = மெல்லிய அரும்புகள் மலர்ந்த, முடவு முதிர் புன்னை = முடம்பட்ட முதிர்ந்த புன்னை மரத்தின், தடவு நிலை மா சினை = பெரிய நிலையையுடைய கரிய சினையில், புள் இறைகூரும் மெல் அம் புலம்ப = புட்கள் மிகத் தங்கியிருக்கும் மென்னிலமாகிய கடற்கரைக்குத் தலைவனே!

௭. பெரும - பெருமானே!

௫-௭. நெய்தல் உண்கண் பைதல கலுழ = நெய்தற் பூவை ஒத்த மையுண்ட இவள் கண்கள் வருந்தினவாய் அழ, பிரிதல் எண்ணினையாயின் = இவளைப் பிரிந்து செல்லுதலை நினைத்தாயாயின், நன்றும் அரிது துற்றனை = பெரிதும் அரியதனை மேற்கொள்வாயாயினை;

௭-௧௩. கொண்டலொடு குரூஉ திரைப் புணரி உடைதரும் எக்கர் - கீழ்காற்றால் விளக்கம் பொருந்திய கடலின் அலைகள் உடைக்கும் மணல் மேட்டிற் (கிடக்கும்), பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர் = பழைய படகின் சிதைவு போக்கிப் புதுக்கிய புதிய வலையினை யுடைய பரதவர்கள், மோட்டு மணல் அடைகரை கோட்டுமீன் கொண்டி = உயர்ந்த மணலை யுடைய அடைகரையில் வந்து கிடக்கும் சுறா மீனின் கொள்ளையினை, மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும் = மணம் நாறுகின்ற பாக்கத்தின்கண் பலர்க்கும் பகுத்துக் கொடுக்கும், வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலன் = வளம் மிக்க தொண்டி என்னும் பட்டினத்தை யொத்த இவளது அழகு, உரிதினில் கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும் = இவட்கே உரித்தாக நின்னூர்க்கு வரைந்துகொண்டு போதல் வேண்டும்.

(முடிபு) புலம்ப! பெரும! பிரிதல் எண்ணினையாயின் அரிது துற்றனை தொண்டி அன்ன இவள் நலன், உரிதினில் கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும்.

(வி - ரை.) எதிரிய ஊழ்த்த புன்னை என்க. தூவற்கு - தூவலை; வேற்றுமை மயக்கம். மாச்சினை: மா- கரிய எனலுமாம். பைதல-வினையெச்ச முற்று. கொண்டி - கொள்ளப்பட்டவை. பாக்கம் - பரதவர்


(பாடம்) 1. அரிதுற்றனை. 2. பழந்திமில் சென்ற.