உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௩௮அகநானூறு[பாட்டு


மாலையும் உள்ளா ராயிற் காலை
யாங்கா குவங்கொல் பாண வென்ற
மலையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன்

௧௫) செவ்வழி நல்யாழ் இசையினென் பையெனக்
கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந்நிறுத்
தவர்திறஞ் செல்வேன் கண்டெனென் யானே
விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்
கல்பொரு திரங்கும் பல்லார் நேமிக்

௨௦)கார்மழை முழக்கிசை கடுக்கும்
முனைநல் லூரன் புனைநெடுந் தேரே.

-ஒக்கூர் மாசாத்தனார்.

(சொ - ள்.) ௧-௧௨. அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி = செவ்வரக்கினை யொத்த சிவந்த நிலத்திற் செல்லும் பெரு நெறியில், காயா செம்மல் தாஅய் = காயாவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்க, ஈயல் மூதாய் பல உடன் வரிப்ப = தம்பலப் பூச்சிகள் பலவும் ஒருங்கே வரிவரியாக ஊர்ந்து செல்ல, பவளமொடு மணி மிடைந் தன்ன குன்றம் கவைஇய = (அவை) பவளத்தொடு நீலமணி நெருங்கி யிருந்தா லொக்கும் குன்றம் சூழ்ந்த, அம் காட்டு ஆர்இடை = காட்டின் அகத்தே அரிய இடங்களில், மடப்பிணை தழீஇ = மடப்பத்தை யுடைய பெண்மானைத் தழுவி, திரிமருப்பு இரலை = திரித்து விட்டாற் போன்ற கொம்பினையுடைய ஆண்மான், புல் அருந்து உள்ள = புல்லை அருந்தித் தாவிச் செல்ல, முல்லை வியன்புலம் பரப்பி = (ஆவினங்களை) அகன்ற முல்லை நிலத்திலே பரவி மேயவிட்டு, கோவலர் குறும்பொறை மருங்கின் நறும்பூ அயர = ஆயர்கள் சிறிய குன்றுகளிடத்தே நறிய பூக்களை மாலையாகக் கட்டி மகிழ்ந்திருக்க, பதவுமேயல் அருந்து மதவுநடை நல்ஆன் = அறுகம்பூல்லாய உணவினை அருந்திய வலிய நடையினையுடைய நல்ல ஆவினங்கள், வீங்குமாண் செருத்தல் = பருத்த மாண்புற்ற மடி, தீம்பால் பிலிற்ற = இனிய பாலைச் சொரிய, கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் = கன்றை நினைந்து அழைக்கும் குரலினவாய் மன்றுகளில் நிறையச் செல்லும், மாலையும் உள்ளாராயின் = இம் மாலைக் காலத்தும் நம் தலைவர் நம்மை நினைத்து வாராராயின்,

௧௨-௪. காலை யாங்கு ஆகுவம் கொல் பாண என்ற = பாணனே இக் காலத்து யாங்கள் எந்நிலை யுறுவேம் என்று கூறிய, மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் = தலைவியின் சொல்லிற்கு மறுமொழி கூற இயலாதவனாகி,

௧௫-௭. செவ்வழி நல்யாழ் இசையினென் பையென = யாழில் நல்ல செவ்வழிப்பண்ணை மெல்லென இசைத்து, கடவுள் வாழ்த்தி = கடவுளை வாழ்த்தி, பையுள் மெய்நிறுத்தி = துயரினைக் கொண்ட மெய்யினனாய், அவர்திறம் செல்வேன் யான் = அவர் மாட்டுச் செல்வேனாகிய யான்,