பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௪௪

அகநானூறு

[பாட்டு
17. பாலை

[மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.]


வளங்கெழு திருநகர்ப் பந்துசிறி தெறியினும்
இளந்துணை யாயமொடு கழங்குட னாடினும்
உயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ
மயங்குவியர் பொறித்த நுதலள் தண்ணென

ரு) முயங்கினள் வதியும் மன்னே இனியே
தொடிமாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்
நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி
நொதும லாளன் நெஞ்சறப் பெற்றஎன்
சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி

க0) வல்லகொல் செல்லத் தாமே கல்லென
ஊரெழுந் தன்ன உருகெழு செலவின்
நீரி லத்தத் தாரிடை மடுத்த
கொடுங்கோ லுமணர் பகடுதெழி தெள்விளி
நெடும்பெருங் குன்றத் திமிழ்கொள இயம்புங்

கரு) கடுங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கல்
பெருங்களி றுரிஞ்சிய மண்ணரை யாஅத்
தருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின்
நீளரை இலவத் தூழ்கழி பன்மலர்
விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்

உ0) நெய்யுமிழ் சுடரில் கால்பொரச் சில்கி
வைகுறு மீனில் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே.

- கயமனார்.


(சொ - ள்.) க-ரு. என் மகள் -, வளம்கெழு திருநகர் - செல்வம் பொருந்திய அழகிய மனையின் கண்ணே , பந்து சிறிது எறியினும் - சிறிது பொழுது பந்து எறிந்து ஆடினும், இளந்துணை ஆயமொடு - தன்னை யொத்த இளையராய ஆயத்தாரோடு, கழங்கு உடன் ஆடினும் - ஒருங்கிருந்து கழங்கு ஆடினும், அன்னை என் மெய் உயங்கின்று என்று அசைஇ - அன்னையே ! என் உடல் வருந்திற்று என்று கூறித் தளர்ந்து, மயங்கு வியர் பொறித்த நுதலள் - செறியும் வியர்வு அரும்பிய நெற்றியினளாய், தண்ணென முயங்கினள் வதியும்-(என் உடல்) தண்ணென்று குளிர என்னைத் தழுவி அமர்வள் (முன்பு), மன் - அந்தோ அது கழிந்ததே!

ரு-எ. இனி - இப்பொழுது, தொடிமாண் சுற்றமும் எம்மும் உள்ளாள் - தொடியையுடைய சிறந்த ஆயத்தாரையும் எம்மையும் நினையாளாய், நெடுமொழித் தந்தை அருங் கடி நீவி - மிக்க புகழை யுடைய தனது தந்தையினது அரிய காவலினைக் கடந்து சென்று,