பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

களிற்றியானை நிரை

௭௫றியாரை யோவெம் அணங்கியோய் உண்கெனச்
சிறுபுறங் கவையின னாக அதற்கொண்

க0) டிகுபெயல் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென்
உள்ளவன் அறிதல் அஞ்சி உள்ளில்
கடிய கூறிக் கைபிணி விடாஅ
வெரூஉமான் பிணையின் ஒரீஇ நின்ற
என்னுரத் தகைமையில் பெயர்த்துப்பிறி தென்வயிற்

கரு) சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்
தினந்தீர் களிற்றிற் பெயர்ந்தோன் இன்றுந்
தோலாவா றில்லை தோழிநாம் சென்மோ
சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே
மாசின் றாதலும் அறியான் ஏசற்

உ0) றென்குறைப் புறனிலை முயலும்
அண்க ணாளனை நகுகம் யாமே.

- 1நல்வெள்ளியார்.

(சொ - ள்.) க-௯. திரு மணி ஒளிர்வரும் பூணன் - அழகிய மணி விளங்கும் பூணினை யுடையான் ஒருவன், நெருநல் எல்லை ஏனல் வந்து தோன்றி - நேற்றைப் பொழுது தினைப்புனத்தின் கண் வந்து தோன்றி, புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள - அரசன் போலும் தனது தோற்றத்துடன் மாறுபட, இரவல் மாக்களிற் பணிமொழி பயிற்றி - இரத்தல் செய்யும் மக்களைப் போலப் பணிந்த மொழிகளைப் பலகாற் சொல்லி, சிறுதினைப் படுகிளி கடீ இயர் - சிறிய தினையிற் பொருந்தும் கிளிகளைக் கடியுமாறு, குளிர் கொள் தட்டை மதன் இல பல் மாண் புடையா - குளிருடன் கூடிய தட்டையாய கிளி கடி கருவிகள் வலியில்லாதன கொண்டு பல முறையும் புடைத்து, சூர் அர மகளிரின் நின்ற நீ - சூரரமகளிர்போல நின்ற நீ, யாரையோ - யாரோ, எம் அணங்கியோய் - எம்மை வருத் தினவளே, உண்கு என - நின்னை நுகர்வேன் என்று கூறி, சிறு புறம் கவையினன் ஆக-எனது பிடரியினை அணைத்துக்கொண்டானாக,

௯- க௪. அதற்கொண்டு - அவ்வுரைக் கருத்தினை மனத்திற் கொண்டு, இகுபெயல் மண்ணின் - மழை பெய்யப் பெற்ற மண் போல, ஞெகிழ்பு அஞர் உற்ற என் உள் அவன் அறிதல் அஞ்சி - நெகிழ்ந்து வருந்திய என் உள்ளத்து நிலையினை - அவன் அறிதலை அஞ்சி, உள் இல் கடிய கூறிக் கைபிணி விடாஅ - மனத்தொடு படாத கடிய சொற்களைக் கூறி அவன் கையை அகற்றி, வெரூஉம் மான் பிணையின் ஓரீஇ நின்ற - அச்சமுறும் பெண் மானைப் போல் விலகிநின்ற, என் உரத்தகைமையில் - எனது வன்னிலையைக் கண்டு (கூசி), பெயர்த்து - தன் காதலை உள்ளடக்கிக் கொண்டு,

க௪- எ. பிறிது என் வயின் சொல்ல வல்லிற்றும் இலன் - பிறிதோர் சொல்லும் என்னிடம் கூற வலியற்றவனாகி, அல்லாந்து -


(பாடம்) 1. நல்லொளியார்.