பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 87


ஏப்புழைகளையுடைய நெடுமதிலையும், நெடுந்தொலைவுக்கு உயர்வுடன் விளங்கும் சிறப்பினையும் உடையது அந்த ஆமூர் என்பது.

அந்த ஆமூரையே தமக்கு உரிமையாக நின் காதலர் பெற்றாராயினும், பூண் அணிந்த நின்னுடைய மார்பகத்தினைத் தழுவுதலை மறந்து அங்கேயே நிலைத்துத் தங்கிவிடுகின்றவர். அல்லர் என்று, பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தினாள் என்க.

சொற்பொருள்: 1. தெண் கழி- தெளிந்த நீரையுடைய உப்பங் கழி 2. கொள்ளை சாற்றுதல் கொள்ளும் விலையைக் கூறி விற்றல், ஒழுகை - வண்டி 3. சுவல் - பிடரி, 5. உயிர்த்து இறந்த உண்டு கைவிட்ட 5. கொடுவில்: வளைந்த வில். 6. நோன் சிலை - வலிய வில். 6. பெரும்புகல் வலத்தர் - பெரிய மனச் செருக்கினையும் வலிமையையும் உடையவர். 10. உவலை - தழை. ஊன்புழுக்கு - ஊன்சமைத்த உணவு 11 இறந்தனர் - சென்றனர். 14. குறும்பொறை - குறும்பொறை நாடு - 37, கொடிமுடி - ஒரு தலைவன்.18. குரூஉக்கண் - ஏப்புழைகள் என்னும் காவலிடங்கள்.

உள்ளுறை: வெற்றிபெற்ற கரந்தையர்கள் மகிழ்ச்சியுடன் புழுக்கயரும் கவலையிடத்தே செல்லுங் காதலர், அவர்களுடைய கலிமகிழ் இருக்கையினையும் காண்பர்.ஆதலின், பொருள் முற்றிய தாமும் விரையவந்து நின்னோடு இல்லறம் நிகழ்த்தி இன்புறுவர்; இவ்வாறு உரைத்தனள் தோழி என்க.

பாடபேதங்கள்: 11, கவலைகாதல், 18. தாக்குங், 19 ஆவூர் எய்தினும்,

160. பகலிலே வந்தது!

பாடியவர்: குமிழி ஞாழலார் நப்பசலையார். திணை: நெய்தல், துறை: தோழி வரைவுமலிந்து சொல்லியது.

(முன்னெல்லாம் இரவு வேளையிலே மெல்லென யாரும் அறியாது வந்துகொண்டிருந்த தலைவனுடைய தேரானது, ஒரு நாள் பகல்வேளையிலே மிகவும் வேகமாக யாவரும் அறிய வந்துகொண்டிருந்ததைக் கண்டாள் தோழி. அந்தமாற்றம் அவன் வரைந்து மணந்து கொள்வதற்காக வருவதனாலேயே நிகழ்ந்ததென அறிந்து தலைவியிடம் வந்து சொல்லுகிறாள்.)

        ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றோ?
        நடுங்கின்று, அளித்தென் நிறையில் நெஞ்சம்
        அடும்புகொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக்