பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

அகநானூறு - மணிமிடை பவளம்


ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப் பால்நாய் துன்னிய பறைக்கட் சிற்றில், குயில்காழ் சிதைய மண்டி, அயில்வாய்க் கூர்முகச் சிதலை வேய்ந்த போர்மடி நல்இறைப் பொதியி லானே! 20

ஒளிசெய்யும் மணிகள் ஒன்றுடன் ஒன்று போராடிக் கொண்டிருக்கும் வகையிலே பலவேறு மணிகள் வைத்துச் செய்ததும், அழகானதும். பசுமையானதுமான சரங்களையுடைய, மேகலைபொருந்திய அல்குல் தடத்தினள், மாமைநிற முடைய நம் தலைவி. அவளுடன் வானோடு பொருதுவது போன்று உயரமானதும், நெடியதுமான மாளிகையிலே, செய்வினைத் தொழில்களால் மிகுதியான வனப்பினைப் பெற்று விளங்கும் புனையப்பெற்ற பூஞ்சேர்க்கையிலே, இற்றைப் பொழுதும் இனிதாகக் கழிந்துவிட்டது.

சுரநெறியினுடே வருகின்ற வாணிகச் சாத்தினரைக் கொன்று, அவர்கள் பொருளைக் கொள்ளையிட்டு உண்பவர் மறவர்கள். வளைந்த வில்லினராக விளங்கும் அவர்கள் பிறருக்கு வருத்தஞ் செய்யும் அம்பினை எய்பவர்கள். அவர்களுடைய பெரிய பகைமைக்கு அஞ்சி, ஊரவர் அனைவருமே வேற்றிடம் போய்விட்டதனால் பாழ்பட்டுக் கிடக்கும் ஊர்; அவ்வூரிலே பீர்க்குப் படர்ந்திருக்கும் ஒரு பாழடைந்த இடம்; பெரிய கையினை உடைய யானை அவ்விடத்தே இருந்த முருங்கையை ஒடித்துத் தின்னும், முதுகுப்புறத்திலே உயர்ந்திருக்கும் பிடர் சொரியெடுக்க, அந்தஇடத்தின் செங்கற் சுவரிலே உராயும்; அதனால் விட்டமாகிய மரம் தளர்ந்து வீழும்; அதனால் அச்சங்கொண்ட மாடப்புறாக்கள் வெளியேறிப்போக, மரஞ் சோர்ந்தவாக மாடங்கள் விளங்கும்; சுவரிலே எழுதி அழகு செய்யப்பெற்ற கடவுளின் உருவமும் மறைந்துபோய் விட்டதனால், பொலிவு இழந்தும், இடையறாது நிகழ்கின்ற பலி இல்லாமற் போனத்தனால் மெழுகப்படாததாகவும் திண்ணை விளங்கும். அதன் அயலே, ஈன்ற அணிமையை உடைய நாயானது தன் குட்டிகளுடன் தங்கியிருக்கும் பரந்த இடம் தோன்றும்; அத்துடன் இயற்றப்பெற்ற கைம்மரங்கள் சிதையுமாறு, வேல்முனை போன்ற கூர்மையான வாயினையுடைய கறையான் மொய்த்துப் பற்றிக் கொள்ளுதலினால், கூரையும் இல்லாதுபோன சிறுவீடாகவும் தோன்றும்; அவ்விடமாகிய பொதுவிடத்திலே,

தனிமைத் துன்பம் வந்து வருந்திக்கொண்டிருக்க, இமை பொருந்தாத கண்களையுடையேமாய், நாளைப்பொழுதில் நாம்