பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 115


உறிஞ்சிவிட விளிந்த காய்ந்த 15. பழங்குழி - பழையதாகிக்கிடந்த கழங்காடு குழிகள்.16. இயல்தேர் - இயற்றப்பட்ட தேரும் ஆம்.

உள்ளுறை: உமணர்களின் கூக்குரலுக்கு அஞ்சி, மானும் பிணையும் நிலைகெட்டு ஒடிக்கலங்குவதுபோல, ஊரவர் பழிக்கு அஞ்சித் தலைவனும் தலைவியும் பிரிந்து வாழ்பவராயினர் என்றனள்.

பாடபேதம்: பாடியவர் முன்னியூர் வழுதியார்.

174. எப்படி ஆவாளோ?

பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். திணை: முல்லை. துறை: பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(தலைமகன் வேந்தனின் படைத்துணையாகச் சென்றவன். நடந்த போரிலே வெற்றியும் பெற்றான். பாசறையிலே, இரவு வேளையிலே, அவன் மனத்திலே அவன் காதலி நிறைந்து நின்றாள்.அவள் நினைவினாலே வருந்திய அவன், தன் நெஞ்சிற்கு இப்படிச் சொல்லுகிறான்.)

        ‘இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து,
        ஒருபடை கொண்டு, வருபடை பெயர்க்கும்
        செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்"எனப்,
        பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
        செல்வேம் ஆதல் அறியாள், முல்லை 5

        நேர்கால் முதுகொடி குழைப்ப, நீர் சொரிந்து,
        காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ
        முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
        பழங்கண் கொண்ட பசலை மேனியள்,
        யாங்குஆ குவள் கொல் தானே-வேங்கை 5

        ஊழுறு நறுவி கடுப்பக் கேழ்கொள்,
        ஆகத்து அரும்பிய மாசுஅறு சுணங்கினள்,
        நன்மணல் வியலிடை நடந்த
        சின்மெல் ஒதுக்கின், மாஅ யோளே?

“இரு பேரரசர்கள் தம்முள் மாறுபாடு கொண்டு போரிடற்கு எழுந்த பரந்த போர்க்களத்திலே, தன்னுடைய ஒப்பற்ற படைக்கலத்தினைக் கைகொண்டு, தன்மேல் வரும் எதிர்ப் படைகளை எல்லாம், புறமுதுகிட்டு ஓடச்செய்யும், போர்க்கள வெற்றியாகிய செல்வத்தை உடையவர்களுக்கு,