பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

அகநானூறு - மணிமிடை பவளம்


        முறுவல் முகத்தின் பன்மலர் தயங்கப்,
        பூத்த தாமரைப் புள்இமிழ் பழனத்து,
        வேப்புநனை அன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு
        இரைதேர் வெண்குருகு அஞ்சி, அயலது
        ஒலித்த பகன்றை இருஞ்சேற்று அள்ளல், 10

        திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
        நீர்மலி மண்அளைச் செறியும் ஊர!
        மனைநகு வயலை மரன்.இவர் கொழுங்கொடி
        அரிமல் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
        விழவுஆடு மகளிரொடு தழுஉ அணிப் பொலிந்து, 15

        மலர்ஏர் உண்கண் மாண்இழை முன்கைக்
        குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது
        உடன்றனள் போலும், நின் காதலி? எம்போல்
        புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து.
        நெல்லுடைநெடுநகர் நின்னின்று உறைய, 20

        என்ன கடத்தளோ, மற்றோ?'தன் முகத்து
        எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி,
        அடித்தென உருத்த தித்திப் பல்ஊழ்
        நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு,
        கூர்நுனை மழுகிய எயிற்றள் 25

        ஊர்முழுது நுவலும்நிற் கானிய சென்மே.

இடம் அகன்றதாக, எங்கும் நீர்ப்பரப்புடன், கடலினைக் காண்பதுபோல வயற்பகுதிகள் எல்லாம். அவ்வயல்களிலே, நிலம் பிளக்குமாறு இறங்கிய வேர்முதிர்ந்த கிழங்கினை உடையவும், மூங்கிலைப்போல உள்துளை பொருந்திய திரண்ட தண்டினை உடையவுமாகத், தாமரைகள் விளங்கும். களிற்றுயானைகளின் காதுகளைப் போல விளங்கும் அதன் இலைகளுக்கு ஊடாகக், கழுவினை உயர்த்திருப்பதுபோலக் கொழுமையான தாமரை மொட்டுக்கள் காணப்படும். அவற்றுக்கு இடையிடையே, புன்சிரிப்புடன் விளங்கும் முகத்தைப்போல, அழகுடன் மலர்ந்த தாமரை மலர்கள் பலவாக விளங்கும். புள்ளினங்களும் அங்கே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்.

அவ்விடத்தே, தனக்குரிய இரையினை ஆராய்ந்து கொண்டிருந்த வெண்மையான நாரைக்கு, வேம்பின் அரும்பினைப் போன்ற நீண்ட கண்களையுடைய நீர் நண்டானது அஞ்சித், தழைத்த பகன்றைக் கொடிகளையுடைய வயலுக்கு