பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 163



        தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
        விடியல் வைகறை இடுஉம் ஊர!
        தொடுகலம்; குறுக வாரல்-தந்தை
        கண்கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
        ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண்போகிய, 1O

        கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை
        அன்னி மிஞ்லியின் இயலும்
        நின்நலத் தகுவியை முயங்கிய மார்பே

கள் மலிந்த பாக்கத்திலே, எடுத்த நெடுங்கொடிகள் பலவும் அசைந்துகொண்டிருக்கும். வேட்டத்தின் கண்ணே, துறைக் கண்ணேயே பெரிய வராஅல் மீன் அகப்பட்டது; துடியின் கண்போன்ற அதன் கொழுவிய இறைச்சித் துண்டுகளை விற்றனர்; அந்த விலையினைக் கொடுத்துக் கள்ளுண்டு ஆடினர்; மீண்டும் மீன்வேட்டைக்குப் போவதையும் மறந்து கிடந்து உறங்கினர், பரதவருட்சிலர்! அப்படி உறங்கிக் கிடந்ததம் கொழுநர்க்கு, அவர்களுடைய மனைவியராகிய பாண்மகளிர், ஆம்பலது அகன்ற இலைகளிலே திரளையான வெம்மையுடைய சோற்றினைப், பிரம்பின் இனிப்பினையுடைய புளிப்பான திரண்ட பழத்தினைப் பெய்து ஆக்கிய புளிக்கறியுடன், இருள்புலரும் விடியற்காலத்திலே இட்டு உண்பிப்பர். அத்தகைய தன்மையுடைய ஊரனே!

ஒரே சொல்லே சொல்லும் இயல்புடையவரான கோசர்கள், தன் தந்தையின் கண்ணின் எழிலைக் கெடுத்ததாகிய தவற்றிற்காக, விரைந்த தேரினை உடையவனான தித்தனது அழுந்துர் என்னுமிடத்தே, அவன் உதவியால்,அவர்கள் அஞ்சியோடுமாறு அவரைக் கொல்வித்துத், தன் மாறுபாடு தீர்ந்தவள், வளைந்த குழையினை உடையவளான அன்னி மிஞ்சிலி என்பவள். அந்த வெற்றிச் செருக்கினாலே நடக்கும் அவளைப்போல, நின் நலத்திற்குத் தக்கவளான பரத்தையும் இன்று செம்மாந்து நடப்பவளாயினாள்.அவளைத் தழுவிய நின் மார்பினை யாம் தொடவே மாட்டோம். எம் அருகேயும் நீதான் வராதிருப்பாயாக!

என்று, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகற்குக் கிழத் சொன்னாள் என்க. -

சொற்பொருள்: 1. நுடங்கும் - அசைந்தாடும். நறவு - கள். பாக்கம் - கடற்கரைக் குடியிருப்புப் பகுதிகள்.2.மோட்டிருவரால் - பெரிய அகட்டினையுடைய வரால். 3. குறை கறித்துண்டு. நொடுத்தல்-விலைக்கு விற்றல்,4.பாட்டி-பாண்மகள்.5.அமலை