பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

அகநானூறு - மணிமிடை பவளம்


ஆற்றல் உடையவர்கள். அவர்கட்கு உரியது வீரை முன்துறை என்னும் இடம். அதன்கண், உப்பின் அளவற்ற குவியல்கள் வெண்மையாக நெடுகக் கிடக்கும். பெருமழைக்கு அவை கரைந்து ஓடினாற் போல, எனது பரந்த மென்மையான தோள்களும் வளமழிந்து மெலிந்த, அதனால் திருத்தமான என் தோள் வளைகளும் நெகிழ்ந்தன. இனி, என் நிலைமை என்னவென்று ஊரிற் சொல்லப்படுமோ? யானே அறியேன்!

என், வாயில் வேண்டிச்சென்ற விறலிக்குத் தலைமகள் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 2. பேடிப் பெண் கொண்டு - பேடியாகப் புனைந்து ஆடும் பேடிக்கூத்து. 3. நகுவர வணங்குதலுற.4.இரும் புறம் - பெரிய புறமும் ஆம். 5. சிறுதொழில் மகா அர் - குற்றேவல் செய்யும் சிறுவர்கள். 6. துறுகல் - வட்டக்கல். 7.ஈங்கை - ஈங்கைச் செடி அலர் முலை - பணைத்துப் பெருத்த முகிழ்த்த முலைகள். 12 வதுவை மேவலன் - மணம் பொருந்துதலை உடையவன். 14. நிரம்பாக் குப்பை - அளவற்ற குவியல்கள்; விளையாத குவியல் களுமாம். உப்பு எடுத்து இவ்வளவு காலங்கழித்தே பயன்படுத்தலாம் என்ற நியதியுண்டு; அதுவரை அதனைக் கடற்கரையிலே குவித்து வைத்திருப்பார்கள்; அவையே நிரம்பா உப்பு ஆகும். 15. உப்பு உருகியாங்கு - உப்பு கரைந்து போதலைப் போல.16. திருந்திழை - திருத்தமான ஆபரணங்கள்.

விளக்கம்: அவன், பரத்தையரோடு கூடி மகிழும் ஆரவாரம் ஓயாமல் கேட்கின்றதனால், அவனோடு சேர்வதையே நான் வெறுத்தேன் என்றனள். உப்புக் கரைதல்போல அவள் நலன்களும் அழிந்தன என்க.

பாடபேதங்கள்: 3. நகுவரப் படைத்த, 4. மயிர் கவின். 5. சேணார்க்கும்.

207. முகவை உண்டாளோ?

பாடியவர்: மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார். திணை: பாலை. துறை: மகட்போக்கிய தாய் சொல்லியது: மகட் போக்கிய செவிலி சொல்லியது எனவும் பாடம்.

(தன் மகள் தலைவனுடன் உடன்போக்கிலே சென்றுவிட்ட வருத்தம் தாளாது புலம்பும் தாய், “அவள் அந்த வேனிற்காட்டிலே வேகையால் வாடி வருந்துவாளே எனவும் நினைக்கின்றாள். தேனும் பாலும் கலந்து வேண்டி வேண்டி ஊட்டவும் உண்ணாது ஒதுக்கும் தன் மகளின் பழைய நிலையும், தலைவன் வறண்ட கூவலைத் தோண்ட அதன்பால் கிடைத்த உவர்நீரை வியத்துக்