பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

அகநானூறு - மணிமிடை பவளம்


சாய்க்கானம் ஆகிய ஊர்களின் சிறப்புக்களும், பரசுராமன் மனனர்களின் மரபையே அறுப்பேன் என்று தமிழ்நாட்டில் வந்து செய்த பெருவேள்வியும் பற்றிய செய்திகள்.

(இற்செறிக்கப்பட்ட தலைவியுடன் இரவுக்குறியிடத்தே வந்து கூடிச் செல்லும் தலைமகனைக் கண்டு, தலைவியின் தோழி இங்ஙனம் கூறி, விரைந்து மணவினை மேற்கொள்ளுதலின் கடமையை வற்புறுத்துகின்றாள்.) -

        ஊருஞ் சேரியும் உடன்இயைந்து அலர்எழத்,
        தேரொடு மறுகியும், பணிமொழி பயிற்றியும்,
        கெடா அத் தீயின் உருகெழு செல்லுர்க்,
        கடாஅ யானைக் குழுஉச் சமம் ததைய,
        மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் 5

        முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
        கயிறுஅரை யாத்த காண்தகு வனப்பின்,
        அருங்கடி நெடுந்துண் போல, யாவரும்
        காண லாகா மாண் எழில் ஆகம்
        உள்ளுதொறும் பனிக்கும் நெடுஞ்சினை, நீயே 10

        நெடும்புற நிலையினை, வருந்தினை ஆயின்,
        முழங்குகடல் ஒதம் காலைக் கொட்கும்,
        பழம்பல் நெல்லின் ஊணுர் ஆங்கண்
        நோலா இரும்புள் போல, நெஞ்சு அமர்ந்து
        காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், 15

        இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை
        முடங்குபுற இறவோடு இனமீன் செறிக்கும்
        நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க் கானத்து
        யாணர்த் தண்பனை உறும் எனக் கானல்
        ஆயம் ஆய்ந்த சாய்இறைப் புனைத்தோள் 2O

        நல்எழில் சிதையா ஏமம்
        சொல்லினித் தெய்ய, யாம் தெளியு மாறே.

ஊரும் சேரியும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு, பழிச் சொற்கள் மேலெழுந்து நிற்குமாறு தேரோடுவந்து சுற்றியும், பணிவான சொற்கள் பலவற்றைக் கூறியும் வருகின்றனை, தலைவனே!

என்றும் அவியாத வேள்வித் தீயினை உடையது அழகு விளங்கும் செல்லூர். அதன்கண்