பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

அகநானூறு - மணிமிடை பவளம்


உங்கள்களவு உறவும் இவள் மேனியின் புதுப்பொலிவால் ஊர் அறிந்ததாயிற்று என்றாள். சேவலோடு கூடப்பெறாத பேடை அன்றில் இரவெல்லாங் கூட்டிலே கிடந்து வருந்துமாறு போல, இவளும் நின்னுடன் கூடுதலற்று, இரவெல்லாம் இல்லிற்கிடந்து உறக்கமின்றிப் புலம்பிக் கிடப்பாள் என்றாள். இவற்றால் எல்லாம், பிரியாத உறவான மணம் பெறுதலையே வற்புறுத்தினாள் எனலாம்.

பாடபேதங்கள்: 5. சேயிறா முகந்த 6. சினைத்தொடுத்த 10. தொன்னலம் சிதைய. 14. இன்னாது உயவும். 15. நும்மூர் உள்ளுவை.

271. மருந்தும் உண்டோ?

பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார். திணை: பாலை. துறை: செலவுணர்த்திய தோழி தலைமகளது குறிப்பறிந்து தலைமகனைச் செலவழுங்கச் சொல்லியது. சிறப்பு: களிமலி கள்ளில் நற்றேர் அவியனை பற்றிய செய்திகள்.

(தலைமகனது பிரிவைப்பற்றிய செய்தியைத் தலைமகளிடம் வந்து சொல்லிய தோழி அதனைக் கேட்டு அவனின்றி அவள் வாழாள் எனத் தெளிந்தாள். தலைமகனிடம் வந்து, தான் கண்ட நிலையைக் கூறி, அவன் போவதைத் தடுத்து நிறுத்த இப்படிச் சொல்லுகின்றாள்.)

        பொறிவரிப் புறவின் செங்காற் சேவல்
        சிறுபுன் பெடையோடு சேண்புலம் போகி,
        அரிமணல் இயவில் பரல்தேர்ந்து உண்டு,
        வளிமரல் வாடிய வறன்நீங்கு நனந்தலைக்
        குறும்பொறை மருங்கின் கோட்சுரம் நீந்தி, 5

        நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
        செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்
        பல்காய் அஞ்சினை அகவும் அத்தம்
        சென்று, நீர் அவனிர் ஆகி, நின்றுதரும்
        நிலைஅரும் பொருட்பிணி நினைந்தனிர் எனினே, 1O

        வல்வதாக, நும் செய்வினை! இவட்கே,
        களிமலி கள்ளின் நல்தேர் அவியன்
        ஆடியல் இளமழை சூடித் தோன்றும்
        பழம்துங்கு விடரகத்து எழுந்த காம்பின்
        கண்ணிடை புரையும் நெடுமென் பனைத்தோள், 15